Saturday, March 29, 2014

இனம் என்ற பெயரில் ஒரு ஈனச் செயல் - பகுதி 1



இனம் - The mob 

நேற்று வெளியானது, அந்த படத்தை எடுக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்பது மிகவும் முக்கியம். ஆம் 2009ம் ஆண்டே என்னிடம் 20 மில்லியன் பணம் இருக்கிறது இந்த படத்தை எடுக்க, ஆனால் மொத்த பட்ஜெட் 50 மில்லியன் என்று பிச்சை எடுத்து இருக்கிறான் சந்தோஷ் சிவன்.. அப்பொழுது படத்தின் கதையாக என்ன சொல்லியிருக்கிறான் என்பதை நீங்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. 

The Ceylon Story on 2009


Ceylon is the story of a country caught in strife, told through the voice of a young Lankan Tamil girl- Killi.. She sees, experiences and recollects instances from her disturbed life that act as a canvas to the socio-political turmoil in Sri Lanka. The story is set against the backdrop of the last few years in Prabhakaran’s life and the LTTE’s recruitment of child soldiers. The entire film is told through the perspective of Killi who is scribbling constantly in a little black diary. She custod writes with a blue ink.

The basic premise of the film weaves itself around the life of Sita(16), Ranga(15), Subbu(15) and Killi(16) who because of various circumstances find themselves in a shelter home run by Athai (late 50’s). Killi is brought to the home by her brother Jeeva after witnessing the rape and death of her mother. Jeeva kid mysteriously disappears soon after and it is assumed that he is dead. Killi slowly acclimatises with her new life as she and the rest of the teenagers get used to living with Athai’s . Athai is a bold, outspoken, disciplined, stern yet very loving woman who treats all these children like her own. Through her life stories and memories, she recounts incidents and is vital in establishing the basic issues that Sri Lankan Tamils have lived with. 


Athai provides all the basic needs for these children, wants them to all be educated and live in a free and equal environment free from war, turmoil and bloodshed. She sends all of them to turmoil and bloodshed. She sends all of them to school and keeps stressing on the fact that they need to build their own lives. The kids mockingly call her “tsunami” because of her ability to sweep into any situation and dampen their spirits right away. Ranga is like the leader of the pack - very hero like, always mouthing film dialogues. Sita is a typical girl always looking at herself in the mirror and wants to be like Aishwarya Rai. Subbu is the most timid. He was orphaned at the tsunami, is very quiet and always lives in the shadow of Ranga. Killi is lost in her own world...almost aloof from the rest of the events happening around her. Ranga treats her like his own sister and is very protective of her. In school, the kids are constantly dealing with issues of the war, LTTE Truth Tigers show them propaganda videos as the first step to even recruit them. They watch young girls and boys constantly being questioned and taken under custody by the Sri Lankan Army to produce documents. All of this becomes part of their day to day life.


At a village celebration, there is a firing that happens between the SLA and the LTTE, where a lot of people die. That’s when Athai decides that the four children should be married to each other. Ranga with Sita, and Killi with Subbu. The kids protest, but they cannot disobey Athai. Immediately after the wedding, on the first night, a LTTE Soldier breaks into the room where the four kids are...and looks for a hiding spot ..he is being followed by the SLA. And there is a shootout that happens right in front of the eyes of the children. Athai instructs them to bury the dead. And is herself shattered at what is happening to the lives of people around her. 

While walking on the fields one day Athai gets caught in a crossfire and loses her life. The children are orphaned once again. This time, Ranga decides to be the man of the moment and look after the girls. They are given an option to set sail to India, but choose against it to stay back in the country and do what Athai always wanted them to do - live in what rightfully belongs to them.


The film then moves to Ranga and Subbu joining the LTTE, and the girls managing by themselves in all sorts of situations. They meet Ranga once, who comes back to tell them that all is well with them, just that Subbu has been injured and now plays the drums for Prabhakaran. Ranga now has become an expert gunman and has shot over 13 people in the last few months after training. He soon returns back, only leaving his uniform back for his wife Sita. Sita later gets caught holding the uniform by the SLA, gets raped and eventually dies in front of Killi’s eyes. Killi goes and takes the uniform which lies next to Sitas maligned body. Hugs it and weeps. She gets maligned body. Hugs it and weeps. She gets of the SLA. He finds her diary.

This is point when it is revealed that everything we have seen till now has been read by Captain Prasanna in Killi’s diary. He decides to find Ranga and Subbu for her. Meanwhile his associate, Captain Surya has already raped Killi. Ranga and Subbu, in turn come looking for her and notice the bite marks on Killi’s arm and decide that they must escape. While escaping Subbu and Ranga get shot by Captain Surya. And Killi is taken back into custody. They need her. Alive. She is Jeeva’s sister. Jeeva is LTTE’s brain behind all their propaganda videos and internet warfare. They propaganda videos and internet warfare. They need to nab him and Surya decides that by torturing Killi, her brother will come to her rescue. And so he does. One night,Jeeva creeps into the SLA camp in search of his sister. Killi is in shock. They barely have a conversation when he is taken under arrest...stripped and shot in his head. Jeeva is dead. This time Killi has seen it for sure.

They take her back into questioning. For the first time in the entire film, she gets reactive and violent. Takes her pen and stabs it violently in  Captain Surya’s groin. The ink turns red.

Director’s Statement

Ceylon is set in the background of the LTTE's last few months of struggle in Sri Lanka. A powerful story told through the perspective of a 15 year old autistic girl. The main vision of the filmmaker lies in the simplicity of telling an intense story in the most honest way, given the socio-political situation. 

இந்த படத்தின் கதை என்பது இப்பொழுது முழுவது திரிந்து இருக்கிறது.. அதைப் பார்க்கும் முன் எந்த அடிப்படையின் கீழ் இந்த படம் எடுக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள, இந்த கதையை படிப்பது நமது அவசியம் சர்வதேச அளவில் புலிகள் குழந்தைகளை போரில் பயன்படுத்தினர், அடுத்து மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்பது குற்றச்சாட்டு இதன் கீழாகவே ஒரு விடுதலை போராட்டத்தை சுபாஸ் சந்திரபோஸ் துப்பாக்கி தூக்கியது தவறு இல்லை அவர் தியாகி, பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு போட்டது சுதந்திரப் போராட்டம் ஆனால் வேறு யாரும் ஆயுதம் என்றா பெயரில் தென்னை விளக்கமாத்து குச்சியை எடுத்தால் கூட அது தீவிரவாதம் என்பதை வலியுறுத்தும் கதையின் கரு.. மற்றும் ஈழத்தில் நடந்தது போர் குற்றம் இருபக்கத்திலும் என்பதை சொல்லி இனப்படுகொலையை மறைக்கு ஒரு படம் இனம் -  The Mob...

Friday, March 28, 2014

இனம் - The mob



முதலில் நன்றி சொல்வது தான் எப்பொழுதும் நமக்கான பாரம்பரிய தமிழின குணத்தின் கடமை என்பதால் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன் சந்தோஷ் சிவனுக்கும் லிங்கு சாமிக்கும். ஒரு இனப்படுகொலை நடந்தது இன்று திட்டமிட்ட இன அழிப்பு நடந்தேறி வருகிறது இந்த சூழ்நிலையில். 2009ல் நடந்த இனப்படுகொலையை இது வரை இந்த அளவு நேர்த்தியாக பொதுமக்களை சென்றடையும் ஊடகம் வழியாக யாரும் சொல்லவில்லை என்பதற்காக. ஆம் ஐ.நா அலுவலகத்தை சிங்கள அரசு ஈழப்பகுதியில் இருந்து வெளியேற சொல்லியது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பொழுது வெளியேறிய ஐ.நா ஊழியர்கள் பேசிக் கொண்டதை மிகவும் அருமையாக சித்தரித்து இருக்கிறீர்கள். அதில் பின்னால் நின்று தொலைபேசியில் பேசுபவர் தனது மேலதிகாரிக்கு இங்கு நடப்பது இனப்படுகொலை இதை நாம் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் பின்னால் நிற்காமல் முன்னால் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஏதோ இந்த அளவிற்காவது உங்களுக்கு செய்யனும் தோன்றியதற்காக நன்றிகள்.

இனம் ஒரு வரி விமர்சனமாக சொல்வதென்றால் படத்தின் பெயரிலேயே ஆரம்பித்துவிடுகிறது.. “இனம்- The Mob" இனம் என்றால் ஒரு கூட்டமாம். The Ethnicity என்று குறிப்பிட்டிருக்கலாம் ஆனால் ஒரு கூட்டமாக சித்தரிக்கிறார்கள். அடுத்து இனம் படத்தின் கதை ஈழத்தில் கடைசிகட்ட போர்காலத்தின் ஊடக அங்கு நடந்த கொடூரங்களை காட்டும் ஒரு முயற்சி, ஆனால் யார் செய்த கொடூரங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதில் தான் சிக்கல். ஒவ்வொரு காட்சியும் நகரும் பொழுது தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை காட்டுவது போல் இருந்தாலும் ஒட்டுமொத்த கட்டமைப்பில் உடைத்து எறிந்து இருக்கிறார்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை.

முழுகதையும் சிலவரிகளில் முடித்துவிட்டு அடுத்து நமக்கு எதிரான கட்டமைப்புகள் எவை என்று பார்க்கலாம். ரஜனி கதையின் நாயகி (இந்த பெயர் ரஜனி திரணகாமவை நியாபகப்படுத்தும் ஒரு சொல்லாடல்) சிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சுனாமி அக்கா என்பவர் நடத்தும் ஒரு காப்பகத்தில் வளர்கிறார் இவருடன் ரவி, முத்து, ஆயிசா, சாவித்திரி, ரூபன் போன்ற பல குழந்தைகளும் வளர்கின்றன, அங்கு ஒரு பாடசாலை அதில் ஸ்டீபன் எனும் வாத்தியார் மற்றும் அவரின் மனைவி வசிக்கிறார்கள். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இனக்கலவரத்தில் பாதிக்கபப்ட்டவர்கள். கடைசி போர் காலகட்டத்தில் இவர்கள் பயணித்து பல்வேறு துன்பங்களை தாண்டி அங்கிருந்து தப்பி அகதியாக ஒரு முகாமுக்கு வந்து சேர்வதாக முடிகிறது கதை.

ஸ்டிபன் வாத்தியார் பாடம் எடுக்கிறார் இது ஒரு காட்சி, இதில் வாத்தியாராக நடித்திருப்பவர் கருணாஸ், மொழி என்பதைப் பற்றி பாடம் எடுக்கிறார், அதில் ஒரு வரி கூட அவர் தமிழில் பேசவில்லை ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது என்னவென்றால் உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மொழி தான் அழுகும் சிரிக்கும் இது மட்டும் தான் மொழி, ஆனால் இந்த உலகத்தில் வாழ முக்கியம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று பாடம் எடுக்கிறார், மேலும் உலகத்தில் அதிகமானவர்கள் பயன் படுத்தும் மொழி என்ன என்று கேள்வி கேட்டு ரஜனி அதற்கு மாண்ட்ரீன் என்று பதில் சொல்வதையும் சேர்த்து மொழியின் கீழாக பெருமைப் பட்டுக்கொள்வது என்ன என்ற கேள்வியுடன் நம்மை தொங்க விடுகிறார்கள். இதில் படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலில் செம்மொழி என்று குறிப்பிட்டுவிட்டு உள்ளே தமிழினம் என்பது மொழியின் கீழாக அமைவதை கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அங்கு போராளிகள் வருவதாகவும் அவர்கள் படம் போட்டு காட்ட விரும்புவதாகவும் சொல்லி கரும்பலகையை மறைத்து வெள்ளைத்திரை போட்டு போராட்ட காட்சிகளை மாணவர்களுக்கு காட்டுவதாகவும், அதை பார்த்த மாணவர்கள் சந்தோசப் படுவதாகவும் காட்டுகிறார்கள். மாணவர்களிடையே போர் குறித்த ஒரு மாயை உருவாக்கும் கட்டமைப்பு இந்த காட்சியில் ஆனால் இவர்கள் யாரும் இந்திய தேசிய மாணவர் படையில் 13 வயது பையன் கையில் துப்பாக்கி கொடுத்து சுடப் பயிற்சி கொடுப்பதை தப்பென்று சொல்லி இது வரை ஒரு படமும் எடுக்கவில்லை என்பது நிதர்சனம். 

ஒவ்வொரு காட்சியின் பிண்ணனியிலும் தங்களுக்கான அரசியலை செய்தே வந்திருக்கின்றனர், ஒட்டுமொத்த கதையமைப்பில் தமிழர்கள் தரப்பில் சிங்களவன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிறுவர் போராளி, மக்களுடன் இருந்து கொண்டு கேடயமாக பயன்படுத்தினர் என்று ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் காட்டியவர்கள். இரண்டு சிங்களவர்களை ரொம்ப நல்லவர்களாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் ஐ.நா அதிகாரிகள் வெளியேறிய பின் காப்பகத்தின் மீது குண்டு விழுந்து சுனாமி அக்காவின் வீடு இடிந்துவிடுகிறது ஒரு குழந்தையும் பழியாகிறாள். அப்பொழுது அனைவரையும் பாதுகாக்க சுனாமி அக்கா ரஜனி, முத்து, ஆயிசா, நந்தன் ஆகியோரை பக்கத்தில் இருக்கும் இன்னொரு வீட்டுக்கு போகச் சொல்கிறார் போகும் வழியில் அவர்கள் ஒரு புத்த பிக்குவை பார்க்கிறார்கள், அவர் ஓடையில் துணியின் மூலமாக தண்ணீர் சேகரிப்பது போலவும் அப்பொழுது மாட்டும் மீனை திரும்பவும் ஓடையில் விடுவது போலவும், ஒரு மாதுளையை இவர்கள் நால்வருக்கும் தருவது போலவும் சித்தரித்து இருக்கிறார்கள். போர் நடக்கும் அந்த பகுதியில் எதற்கு அந்த புத்த பிக்கு வந்தார், எப்படி வந்தார் என்பது எல்லாம் இல்லை. சும்மா போற போக்கில் அவரை திணித்து அதிலும் அவர் போல் நல்லவர் உலகில் வேறு யாருமே இல்லை என்பது போல சித்தரித்துள்ளனர். 

அடுத்து இராணுவ வீரர் ஒருவர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது போலவும், கடைசியில் ரஜனியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் சக வீரர்களை பார்த்து, இவர்கள் என் நண்பர்கள் ஆனால் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்கிறார். ஆம் சிங்களவர்கள் எல்லோரும் நல்லவர்கள் பொது பல சேன, மஹா போதி சொசைட்டியில் இருக்கும் புத்த பிக்குகள் என்றுமே யாரையும் அடித்ததும் இல்லை அடிக்க சொன்னதும் இல்லை, ஏன் இராணுவ வீரர்களும் மிக மிக நல்லவர்கள் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்றும் சொல்லி சிங்கள காடையர்களின் அந்தியந்த தோழர்களாகிவிட்டனர் நம்ம சாமியும் சிவமும். 

இதில் ஒரு மூட நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் அதுவும் எப்படி என்றால் இறந்தவர்கள் கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டே இறந்தார்கள் என்றால் திரும்ப வருவார்கள் என்று சுனாமி அக்கா சொன்னதாக சண்டையில் இறந்த போராளியையும் ஒரு இராணுவ வீரனையும் காட்டி ஒரு வசனம் இருக்கும் எதுக்குடா இந்த காட்சி என்று யோசித்திருக்க கூட மாட்டோம். ஆனால் பல காட்சிகள் கடந்து நந்தன் என்ற சிறப்பு குழந்தையின் (Special Children)  தம்பியை காயங்களுடன் மருத்துவமனையில் காட்டுகின்றனர், அவன் கடைசி போர் காலத்தில் லீடருடன் இருந்தேன் அவர் இறந்தபொழுது கண்களை மூடவில்லை என்கிறார். அப்பொழுது நந்தன் கண்களை மூடாமல் இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்கிறார். இதில் கூட ரவியும் இருப்பான் நந்தன் எனது சகோதரன் பெரிய வீரன் என்று சொல்லியிருப்பான் முன்பே அந்த சிறுவனைப் பார்த்து இவனா வீரன் என்று கேட்கும் பொழுதே லீடர் கடைசி போரில் இறந்துவிட்டார் என்பதை சொல்வான். அதாவது புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் போராளிகளாக இருந்தனர் அதிலும் தலைவரின் அருகில் கடைசி கட்டம் வரை மெய்க்காவல் படையாகக் கூட சிறுவர் போராளிகளை பயன் படுத்தியதாக காட்டியிருக்கிறார்கள். மேலும் தேசியத் தலைவரின் இறந்துவிட்டார் என்பதை ஆவணப்படுத்தும் ஓர் முயற்சி. இத சர்வதேச ஊடகங்களை கூப்பிட்டு அவர்கள் முன்னால் தலைவரின் உடலை காட்டியிருந்தால் அதிகாரப்பூர்வமாக ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே உள்ளன.

கடைசியாக மருத்துவமனையில் தம்பியை பார்த்துவிட்டு ரஜனியை தம்பியிடம் காட்டுவதற்காக ரஜனியை கூட்டி போக ஓடி வரும்பொழுது தான் ஒரு சிங்களவன் ரஜனியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திகொண்டிருப்பான் அப்பொழுது சிறப்பு குழந்தையான நந்தன் தனக்கான உலகத்தில் மட்டுமே வாழும் அந்த குழந்தை கத்தியை எடுத்து அந்த சிங்களவனை கொலை செய்வான். ஏதும் அறியாத தனக்கென ஒரு உலகை அமைத்து அதில் வாழும் ஒரு சிறப்பு குழந்தையின் உணர்ச்சியை நன்றாக படம் பிடித்து காட்டியவர்கள் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கி சண்டை போடுவது சண்டைபிடிக்கும் மோகத்தினால் மட்டுமே எந்த உணர்வின் அடிப்படையிலும் இல்லை என்பது போல் சித்தரித்திருப்பது மிகப்பெரிய முரண்.

படம் ஆங்கிலத்தில் சிலோன் என்ற பெயரிலும் தயராகியுள்ளது, சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்தும், சர்வதேச அரசியலில் இலங்கையில் நடந்தது ஒரு இனக்கலவரம் என்பதைவிட ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான ஒரு போர் என்பதாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இதை தமிழில் நாம் தடை செய்தாலும் சர்வதேச அரங்கில் இந்த படம் தனக்குண்டான அரசியலை தாராளமாக செய்யும். அதை நம்மால் தடுக்க இயலுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டால் ஈழத்தில் நடந்த கொடூரங்களை காட்சிப் படுத்தும் ஒரு ஆவணமாகவும் மாற்றலாம்.

ஆகமொத்தம் இனம் - ஒரு சிங்கள ரவுடி கூட்டத்தினூடாக தமிழர் கதை பேசுவது போல் நடிக்கிறது.

Wednesday, March 19, 2014

அரசியல் இல்லாத அரசியல் - Beating around the bush


Beating around the Bush

இது ஒரு ஆங்கில பழமொழி, இதன் அர்த்தம் ஓர் விவாதத்தில் நேரடியாக கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெவ்வேறு விசயங்களைப் பேசிக்கொண்டு சுற்றி திரிவதை குறித்து, நேரடியாக விவாதக் கருத்தின் கீழாக பேசச் சொல்லிக் குறிப்பது. ஆனால் இந்த Beating around the Bush என்பது மிகவும் பழமையான ஒரு விசயம் அதுவும் வேட்டையாடும் சமூகமாக மனித இனம் இருந்த பொழுதிலிருந்து பயன்படுத்திய ஒரு நடைமுறை. ஒரு காட்டு புதருக்குள் இருக்கும் மிருகங்களை வெளியில் கொண்டு வர புதரை சுற்றி கட்டைகளாலும் குச்சிகளாலும் புதரை சுற்றி அடிப்பார்கள் அப்பொழுது உள்ளிருந்து பயத்தில் வெளியில் வரும் மிருகத்தை வேட்டையாடுவார்கள். இப்படி வேட்டைக்கு உதவிய ஒரு முறை ஆனால்  இன்று வாத பிரதி வாதங்களில் இந்த முறை பயன்படுத்தப் படுகிறது. கேட்கப்படுகின்ற கேள்வி என்ன என்பது புரிந்தாலும் அதன் கீழான விவாதங்களை கொண்டு செல்லாமல் சுற்றி சுற்றி மற்ற விசயங்களை பேசித் திரிவது என்பது தான் நடந்து கொண்டுள்ளது ஐ.நா குறித்த விவாதங்களில்.

இதில் பலர் வாதங்களில் குறிப்பிடும் குற்றச்சாட்டுகள்கள் அதன் கீழான வாதங்கள்.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் தீர்ப்பில் பேர் குற்ற விசாரணை என்று சொல்லிய பொழுது அதை தூக்கி திரிந்த தோழர்கள் இப்பொழுது போர் குற்ற விசாரணை என்ற பதத்தையே எதிர்க்கிறார்கள். 

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் அமர்வு நடந்தது 2010ம் ஆண்டு, 2009ம் ஆண்டு மிகப்பெரும் உயிர்பலிகளை கொடுத்த தமிழ் சமூகமாக நின்றோம் அப்பொழுது சர்வதேச அரங்கில் இருந்து எதோ ஒரு குரல் வராதா என்ற காலகட்டத்தில் தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் மிகப்பெரும் அவலம் நடந்திருக்கிறது அதைப் பற்றிய விசாரணை வேண்டும். போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது அது மட்டுமல்ல இனப்படுகொலை நடந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது என்று சொன்னது. (பக்கம் 13, 3வது பத்தியில்) (1)   அன்றைய நமக்கான குரலாக அதை எடுத்துக்கொண்டோம் ஆனால் அன்றும் நாம் சொன்னது தான் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை தான் அதை இன்று வரை தொடர்ந்து சொல்லி வருகிறோம். 

ஏன் அன்று FICCI விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கான பத்திரிக்கையாளர் செய்தியில் டப்ளின் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளவைகள் என்று குறிப்பிட்டு  சொல்லியிருப்பவை யாவை என்று நீங்களே பார்த்துக் கொள்ளலாம்..  (2)


அன்று டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலை என்றும் சொல்லியிருக்கிறது என்று வலியுறுத்தியவர்கள் இன்று போர்குற்றம் என்று மட்டும் தான் பேசியதாக டப்ளின் தீர்ப்பாயத்தின் மீது பலி போடுவது என்ன குணமோ. அது சரி விடுங்கள் மக்கள் மன்றத்தில் பேசுவது வேறு அரசியலாகவும் நாம் பேசுவது வேறு என்ற அவர்களின் சித்தாந்ததின் அடிப்படையாக இருக்கலாம். 

ஆனால் அவர்களின் கூற்றின் படியே டப்ளின் தீர்ப்பாயம் போர்குற்றத்தை வலியுறுத்தியதை அதைத் தூக்கிக் கொண்டு சுற்றினோம். அதே நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அடுத்தகட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு இனப்படுகொலை நடந்தமைக்கான ஆதாரங்களை சமர்பித்து அடுத்த அமர்வில் பெர்மன், ஜெர்மனியில் இனப்படுகொலை நடந்தமைக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன, இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும் என்று 2013, டிசம்பரில் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கியது.(3) இன்றைய கால கட்டத்தில் இனப்படுகொலை என்பதற்கான விசாரணையை வலியுறுத்தியுள்ள சர்வதேச சமூகம் நாம் கையறு நிலையில் நின்ற பொழுது எந்த தீர்ப்பாயம் நமக்கு ஒரு வெளிச்ச கீற்றை கொடுத்து நம் பயணத்தை ஆரம்பித்து வைத்ததோ அதே தீர்ப்பாயம் அடுத்து ஒரு தீப் பந்தத்தத்தை நம் கையில் கொடுத்திருக்கிறது. அதை ஏந்துவது தானே முறை ஆனால் அதை விடுத்து இன்னும் டப்ளின் தீர்ப்பாயம் மட்டுமே போதும் என்கிறீர்கள்.  பெர்மன், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தூக்கி குப்பையில் எரிந்தது போல் தெரிகிறதே இவர்களின் நகர்வுகள்.

ஒரு சின்ன பின்னூட்டமும் இங்கு அவசியம்.. 

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் அமர்வு - ஜனவரி 2010
இதன் பிறகே பான் கீ மூன் இலங்கை விசயத்தில் தனக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை நியமிக்கிறார். 
ஐ.நா நிபுணர் குழு நியமிப்பு                                  - ஜூன்  2010

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை                                - ஏப்ரல் 2011
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது அதில் குழு கேட்டிருப்பது என்னவென்றால், Sovereign right to every country to end terrorism. But the way had not justified. கடைபிடித்த மார்க்கம், வழி சரியில்லை என்று சொல்கிறது ஐ.நா.அறிக்கை. இதுதவிர, எந்தப் போரானாலும் மக்களை இலக்காக வைத்து தாக்கக்கூடாது என்று சொல்கிறது இந்தக் குழு. ஆனால், இந்தப் போரில் நடந்தது என்னவென்றால், மக்களை இலக்காக வைத்திருக்கிறீர்கள், பார்த்து பார்த்து குண்டு வீசியிருக்கிறீர்கள். மக்களுக்கும் போராளிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் நடத்தியிருக்கிறீர்கள். பொதுமக்கள் வாழும் பகுதிகள் தெரிந்தும் அவர்களை பசியிலும், பட்டினியிலும் வைத்திருந்திருக்கிறீர்கள். உணவு, தண்ணீர், மருத்துவம் எதுவும் சென்று சேராமல் தடுத்திருக்கிறீர்கள். கடைசி 9 மாதமாக இதனை கடைபிடித்திருக்கிறீர்கள்.
முதலாவது அமெரிக்க தீர்மானம்                      - மார்ச் 2012
இந்த அறிக்கையின் பின்னால் இலங்கை குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் எழுகிறது. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்க இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டுவருவதாக கூறுகிறது.
பெட்ரி அறிக்கை                                                        - நவம்பர் 2012
ஐ.நாவின் நடவடிக்கைகளின் உள்விசாரணை செய்து குறைகளை பற்றிய அறிக்கை. இலங்கை விவகாரத்தில் ஐ.நா தவறிய விடயங்களை தெளிவாக எடுத்து சொல்கிறது. சில விசயங்களை மறைத்து வெளியிட்டது ஐ.நா.
இரண்டாவது அமெரிக்க தீர்மானம்                   - மார்ச் 2013
மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை இலங்கைக்கு செல்ல சொல்கிறது அவரின் அறிக்கையை கேட்கிறது. 
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், பெர்மன் அமர்வு  - டிசம்பர் 2013
இது வரை நாம் மட்டுமே இனப்படுகொலை என்று பேசிக்கொண்டிருந்தோம், சர்வதேசம் போர்குற்றம் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. முதன் முதலில் சர்வதேச அரங்கில் ஆணித்தரமாக இனப்படுகொலை என்று பதியப்படுகிறது. 
மூன்றாவது அமெரிக்க தீர்மானம்                    - மார்ச் 2014
இரண்டாவது தீர்மானத்தில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கேட்டவர்கள், அறிக்கையில் போர் குற்ற விசாரணை என்று கூறப்பட்டிருப்பதன் கீழாக அடுத்த நடவடிக்கைகயை எடுக்காமல், இலங்கைக்கு இன்னும் 18மாதங்கள் கால அவகாசம் கொடுத்து தீர்மானத்தை வடிவமைக்கிறார்கள். இந்த தீர்மானமும் வெற்றி பெரும். 

2010ல் இருந்து சிறிது சிறிதாக நமது கோரிக்கைகள் நகர்த்தப்பட்டு வருகின்றன, இதில் நடுவில் தடைகளும் போடப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது இதன் பிறகும் நான் 2010ல் உட்கார்ந்து அங்கிருந்து தான் என் அரசியலை தொடர்வோம் என்றால் அது அரசியல் அல்ல அவியல். 

இவைகள் எதுவும் தெரியாதவர்கள் இங்கு அமெரிக்காவை எதிர்ப்பது தவறு என்று சொல்லவில்லை, இவை அனைத்தையும் உணர்ந்தவர்களே தவறு என்கிறார்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல அல்ல இந்த பதிவு. இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் தோழர்கள், ஏன் இப்படி ஒரு வாதப் பிரதிவாதஙக்ள் நடந்து கொண்டுள்ளது என்று புரியாமல் இருக்கும் தோழர்களுக்கு இதன் பின்னாலான அரசியல் என்ன என்பதை புரிந்துகொள்ளவே.. 

எனென்றால் இதையெல்லாம் புரிந்து கொண்டே சிலர் Beating around the bush என்று புதருக்குள் பாம்பிருக்கிறது அதனால் அடிக்கிறேன் என்று அடித்துக் கொண்டே இருப்பார்கள். எனென்றால் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு தெரியவைக்க வேண்டிய கட்டாயநிலை. சும்மா இருக்கிறார்கள் என்று யாரும் குற்றம் சாட்டிவிடக் கூடாது என்ற நிர்பந்தம். நாமும் புதரை அடித்து பாம்பை அடிக்க வேண்டாம் பாம்பை பிடித்து அடிக்கும் வழிவகையை தேடுவோம். 

    






Monday, March 17, 2014

இலங்கையா?? இடிஅமீனா?? 2016ல் வாக்களிக்க சொல்லி நாம் கேட்டு போராடப்போவது


2012ல் இருந்து அமெரிக்க தீர்மானம் ஆதரிக்கும் நாடுகளும் எதிர்க்கும் நாடுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஐ.நா மனித உரிமை பேரவையில் மொத்தம் 47நாடுகளுக்கு இடம் உண்டு இவர்களின் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 3 வருடம் பேரவையில் இடம் பெறலாம். அதன் கீழாக கடந்த இரண்டு வருடங்களில் சில நாடுகள் விலகியிருக்கின்றன சில சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி இந்த வருடம் ஜனவரி மாதம் மொத்தம் 14 நாடுகள் புது உறுப்பினர்களாக இணைந்து இருகிறார்கள் இதில் ஏற்கெனவே 2012, 13ல் உறுப்பினர்களாக இருந்து பதவிகாலம் முடிந்து திரும்பவும் 2014ல் உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 5 பேர் இதில் நான்கு பேர் அமெரிக்க தீர்மானத்தை 2012ல் எதிர்த்தவர்கள் ஒரு நாடு மட்டும் ஆதரித்தது. 

மிச்சம் இருக்கும் 9 பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், தென் ஆப்ரிக்காவும் அடங்கும் இவர்கள் அமெரிக்காவின் அன்பு தோழர்கள் என்பது உலகிற்கே தெரியும். கடந்தவருடமும் அதற்கு முன்பும் அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்த இந்திய உட்பட 20 நாடுகள் இந்த முறையும் வாக்களிக்கும் அவர்கள் அமெரிக்காவிற்கு ஆதராகவே ஒட்டளிப்பார்கள். மேலும் புதிய உறுப்பினர்களில் இங்கிலாந்து பிரான்ஸ், தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து 2012ல் உறுப்பினராக இருந்து மறுபடியும் 2014ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மெக்சிக்கோவும் வாக்களித்தால் 24 வாக்குகள் அமெரிக்க தீர்மானத்திற்கு கிடைத்துவிடும் மொத்தம் இருக்கும் 47 வாக்குகளில். ஏற்கெனவே வெற்றி பெறப் போகும் தீர்மானத்தை தான் வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். 

இதில் இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் கோரிக்கை வைத்து இந்தியாவிற்கு எதிராக போராட வேண்டுமாம்.. அடுத்த வருசம் என்ன பண்ண போகிறார்கள் என்று தெரியவில்லை இந்த வருடம் டிசம்பருடன் இந்தியாவின் மனித உரிமை பேரவையில் பதவிக் காலம் முடிவடைகிறது. அடுத்த உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடக்கும் அதில் வெற்றி பெற்றால் 2016ல் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம், இல்லாவிடில் பாராளுமன்றத்தில் விரல் சூப்பிக்கிட்டு இருக்கலாம். ஏனென்றால் அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவில் 28வது அமர்வு வரை இலங்கைக்கு நியாமான விசாரணை நடத்த கால அவகாசம் கொடுத்துள்ளனர், அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.. இரண்டாவது வரைவில் அது காணமல் போயிடுச்சு என்பது அடுத்த விசயம் கடைசியாக முதல் வரைவில் சொன்ன போர்குற்ற விசாரணை வந்தால் இந்தியா வாக்களிக்கும் உரிமையுள்ள நாடாக இருக்காது. மறுபடியும் தேர்ந்தெடுக்கபப்ட்டால் மட்டுமே வாக்களிக்க முடியும் அப்பொழுது யாரை நோக்கி ஆதரவாக வாக்களியுங்கள் என்று போராடுவார்கள். இலங்கையை நோக்கியா இல்லை இடி அமீனை நோக்கியா...

இன்று மனித உரிமை ஆணையர் தன்னுரிமையுள்ள சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டும் என்று தனது அறிக்கையை சமர்பித்துள்ளார் அதன் மீதான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லாமல் அமெரிக்கா தீர்மானம் கொடுக்கும் கால அவகாசத்தின் மீதான விவாதங்களை வைத்து இந்த ஈழத்தமிழர் விசயம் சர்வதேச அரங்கில் தொடர்ந்து விவாதிக்க வசதியாக இருக்கிறது அமெரிக்க தீர்மானம் என்பவர்கள். நவநீதம் பிள்ளை கொடுத்த அறிக்கையின் கீழான போர்குற்ற விசாரணையை ஏன் வழியுறுத்தவில்லை அதை தள்ளிப்போட உதவும் அமெரிக்க தீர்மானம் மட்டும் வேண்டும் என்று கேட்பது எதற்காக விசாரணை நடந்து தீர்ப்புகள் வந்துவிட்டால் "இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு" தீர்வு கிடைத்துவிடும் அதன் பிறகு நாம் அரசியல் செய்ய முடியாது அதன் கீழாக வசூல் செய்ய முடியாது போகும் என்பதால் இருக்குமோ... பிழைப்பை பார்க்கவேண்டும் அல்லவா.. அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுக்கவல்ல இனப்படுகொலை மீதான விசாரணையையும் பொது வாக்கெடுப்பையும் வலியுறுத்தச் சொன்னால் அமெரிக்க தீர்மானம் மட்டும் போதும் என்பது இவர்களின் அரசியல் பிழைப்பிற்காக மட்டுமே..

மேலே சிகப்பு நிறத்தில் பயன் படுத்திய வார்த்தைகள் என் உள்மனதை கட்டுபடுத்திக் கொண்டு இங்கிருக்கும் சிலரின் அபிலாசை அது தான் என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே..

Wednesday, March 12, 2014

சேவ் தமிழ்ஸ் செந்தில் - மூவர் தூக்கு

30 நொடி விடீயோ தான் முழுவதும் பாருங்கள்....



பிப்ரவரி 26ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினரால் ஐ.நாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவர் பேசியது இது. அதாவது மக்கள் மன்றத்தில் நம் பேசுவதும் சட்டப்படி நாம் நடந்துகொள்வதும் வேறு அதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று மூவர் தூக்கை எடுத்துக்காட்டி பேசுகிறார். இவர் மக்களை முட்டாளாக நினைப்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் மூவர் தூக்கில் எதோ அவர்கள் குற்றம் செய்து விட்டது போலவும் சட்டத்தில் நமக்கிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தியே வாதிட்டோம் என்று பேசும் இவரின் மீது கோபம் கொண்டு இவர் ஒரு முட்டாள் என்று பதிவிட்டேன். ஆனால் அது தேவையில்லை என்று சொன்ன சில நண்பர்களால் அந்த பதிவை நீக்கினேன். ஆனால் அது இவர்களுக்கு என்னை குத்திக் காட்டும் விசயமாக பார்க்கிறார்கள் என் நிலைப்பாட்டில் நான் இலலை என்று. அதனாலேயே திருமப்வும் இதை பதிவிடுகிறேன். முடிந்த அளவு இவரை திட்டாமல்... நாகரீகமான விமர்சனமாக இதை..

இந்த விடீயோவை பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள் எவ்வளவு நாகரீகமாக இவரை நான் திட்ட வேண்டும் என்று. எனது கோபம் என்னுள் இருக்கிறது இவரை பதிவின் மூலமாக திட்டுகிறேனோ இல்லையோ ஆனால் அடுத்த முறை இவரை பார்க்கும் பொழுது எழும்புகளை எண்ண மாட்டேன் கண்டிப்பாக அவற்றை இரட்டிப்பு செய்யும் வகையில் உடைக்காமல் விடமாட்டேன் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அது என் தார்மீக கோபம் இதிலிருந்து நான் விலக விரும்பவில்லை,

தோழர்களே தியாகராஜன் பேட்டியில் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நாங்கள் வாக்குமூலத்தை வார்த்தைக்கு வார்த்தை மாற்றாமல் பதிவதில்லை என்று சொன்னார். அந்த பேட்டியை கொடுத்த பிறகு பேரறிவாளன் சொன்னது எங்களைப் போல் பல நிரபராதிகள் இருக்கிறார்கள், அவர்களின் வழக்கும் நீதிமன்ற தீர்ப்புடன் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள் இன்று தியாகராஜனின் தீர்ப்பு இந்த ந்டைமுறையை மாற்றி முடிந்து போன வழக்கை அதாவது கடைசி வாய்ப்பு வரை தீர்ப்பு கொடுத்த வழக்கை திரும்பவும் எடுத்து விவாதிக்கும் வாய்ப்பை தியகராஜன் வழங்கியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதன் முதலாக பெரியார் அவர்களின் போராட்டத்தின் கீழாக திருத்தப்பட்டது 1950களில் அதே போல் அவரின் பேரனான எனக்காகவும் இந்தியல் அரசியல் அமைப்பு சட்டம் புதிய சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு வழக்கை திரும்ப நடத்து அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை உதாரணமாக திகழும் பல நாடுகளைப் போல் திருத்தி அறம் செய்யும் என்றார். ஆனால் இவரோ அதற்கு நேர் எதிரிடையாக மேடையில் பேசுகிறார் அதுவும் பலர் கலந்து கொண்ட நிகழ்வில தனது கருத்தை பதிந்துள்ளார். இந்த நிகழ்விற்கு தமதமாக 7மணிக்கு மேல் தான் சென்றேன் நான் இருக்கும் அந்த சமயத்தில் பேசவில்லை அப்படி பேசியிருந்தால் என் எதிர்வினையை நேரிடையாக களத்திலேயே காட்டியிருப்பேன் அதை எழுத்தில் காட்ட முயன்று தோழ்வி அடைந்துள்ளேன். ஆனால் அது நிரந்தர தோல்வி இல்லை இவரின் பேச்சிற்கான எதிர்வினையாக ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்த்தை நிறைவேற்றுகிறேன்.. 

Tuesday, March 11, 2014

நோட் பண்ணாதீங்கப்பா.. நோட் பண்ணாதீங்க....

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா எனும் சட்டாம்பிள்ளை கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் வரைவு நகல் வெளியில் வந்துவிட்டது. அதன் மீதான விமர்சனங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. 2012ம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்க வெளியுறவுத் துறை வாயை திறக்கிறது, இலங்கையைப் பற்றி அப்பொழுது தான் அமெரிக்க தீர்மானம் கொண்டு வருவதை சொல்கிறது அது இலங்கைக்கு எதிரானது என்றும் பெரிதாக பேசப்படுகிறது. தீர்மானத்தை எடுத்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை சர்வதேசம் பேசும் மனித உரிமைகளை இலங்கையில் நிலைநாட்ட வேண்டும் அதற்கான உதவிகள் அதுவும் இலங்கை அமைத்துள்ள உள்நாட்டு அமைப்புகளின்(LLRC) மூலமாக நிறுவ வேண்டும் என்பதைத் தான் வழியுறுத்துகிறது. அந்த தீர்மானம் என்னவோ 2009க்கு பிறகு உலக அரங்கில் இலங்கையின் செயல்பாடுகள் குறித்த எந்த விவாதமும் நடைபெறாதது போலவும், இத் தீர்மானத்தின் கீழாக விவாதங்கள் ஆரம்பமானதாகவும் மிகப்பெரிய ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர் நம்மவர்கள். நம்மவர்கள் தானே நமக்கு முதலில் எதிராக இருப்பார்கள்..

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அமர்வின் பின்னாலேயே இத்தகைய நகர்வுகள் நடக்க தொடங்கின. நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் கீழாக மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது அது இலங்கைக்குள் அனுமதிக்கப்படாமலேயே வெளியில் இருந்தே தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் பின்னாலேயே அமெரிக்க முதல் தீர்மானத்தை கொண்டு வந்தது, அதன் பிறகு சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நாவின் மீதான புனித பிம்பத்தை உடைத்தெறிய உதவியது, அதன் கீழாகவே தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க தீர்மானம் என்ற நாடகம்.

ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்து வரும் விவாதம் எந்த தலைப்பின் கீழ் நடந்து வருகிறது என்று கூடத் தெரியாமல் தான் இங்கு சிலர் ஐ.நாவிடம் நமது உரிமையை கேட்டு பெற வேண்டும், அமெரிக்காவிடம் சால்ஜாப்பு செய்து நமக்கான தீர்மானத்தை பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமை ஆணையம் HRC to consider report of the OHCHR on promoting reconciliation and accountability in Sri Lanka எனும் தலைப்பின் கீழ் தான் வரும் மார்ச் 26ம் தேதி விவாதிக்கப் போகிறது. எந்த குற்றச்சாட்டின் அடிப்படையின் கீழும் இல்லை. இதையும் தாண்டி அமெரிக்க தீர்மானம் அது தான் நமக்கிருக்கும் ஒரே வழி வேறு யாரும் தீர்மானம் கொண்டு வரத் தயாரில்லை இதை வைத்து நாம் முன்னேற வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன தான் தீர்மானத்தில் இருக்கிறது என்று பார்க்கலாம்.. 


தீர்மானத்தின் பக்கம் ஒன்றில் 12வது பத்தியை முழுவதுமாக அடித்திருக்கிறார்கள் அது சொல்வது என்னவென்றால் சென்ற வருடம் 2013ல் செப்டம்பர் மாதம் வட மாகாணத் தேர்தலை நடத்த முடிவெடுத்தமைக்காக இலங்கை அரசை வரவேற்கிறார்களாம். சென்ற வருடம் தேர்தல் நட்ந்து மாகண சபையும் அமைக்கப்பட்ட பின்னர் ஏன் தேர்தல் நடத்த் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்கிறார்கள் இப்பொழுது. வரவேற்க வேண்டியது நடைபெற்ற தேர்தலையும் மாகண சபை அமைந்ததையும் தானே என்று நமக்கு தோன்றும், அதையே தான் இந்த பத்தியை அடித்துவிட்டு மாற்றி 13வது பத்தியாக சேர்த்து தேர்ந்தல் நடந்தையும் மாகணசபை அமைந்ததையும் வரவேற்று இருக்கிறார்கள். இந்த தீர்மானம் இப்பொழுது தயார் செய்யப்படவில்லை என்றோ தயாரிக்கப்பட்டது அதை இப்பொழுதைய ஐ.நா மனித உரிமைகளுக்கான 25வது அமர்வில் சமர்பித்திருக்கிறார்கள் என்பதை போகப்போகப் பார்ப்போம்.


இரண்டாவது பக்கத்தை படித்தவுடன் நடிகர் விவேக் சொன்னது தான் நியபகம் வருகிறது நோட் பண்ணாதீங்கப்பா நோட் பண்ணாதீங்க என்பது தான். அதாவது தீர்மானத்தின் இரண்டாது பக்கத்தில் கடைசி இரண்டு பத்திகளில் சொல்வது என்னவென்றால்

Reiterating Noting that the national plan of action does not adequately address all of the finding and constructive recommendations of the Commission, and encouraging the Government of Sri Lanka to broaden the scope of the plan adequately address all elements of the Commission report,

Also reiterating Noting with concern that the national plan of action and the Commission's report don adequately address serious allegations of violations of international human rights law and international humanitarian law,

Reiterating என்பதன் அர்த்தம் திரும்ப திரும்ப சொல்லி இலங்கை அரசங்காத்தின் தேசிய செயல் திட்டத்தை LLRC அறிக்கையின் கீழாக நடைபெற வைக்க வேண்டும். இதில் Noting என்பதை அடிக்க காரணம் திரும்ப திரும்ப சொல்லி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க கூடாது, அதாங்க நோட் பண்ணக் கூடாது என்று சொல்லி ஐ.நா மனித உரிமை ஆணையம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியோ கெஞ்சியோ இல்லை கொஞ்சியோ தான் இலங்கை அரசின் செயல் திட்டத்தை செயல்படுத்த சொல்ல வேண்டும் அதற்காக அது செய்கிறதா இல்லை என்பதை நோட் பண்ணக்கூடாது என்கிறது தீர்மானம்.


மூன்றாவது பக்கத்தில் மூன்றாம் பத்தியில்

Recalling Reaffirms the responsibility of states to comply with their relevant obligations to prosecute those responsible for gross violations of human rights and serious violations of international humanitarian law constituting crimes under international law, with a view to impunity;

Reaffirms எனும் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த பத்தி சொல்வது என்னவென்றால் சர்வதேச அளவுகோலில் மனித உரிமையும், மனித உரிமை சட்டங்களும் மதிக்கப்பட்டு போர் குற்றம் புரிந்தவர்களை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் அதை திரும்ப திரும்ப இலங்கை அரசுக்கு வழியுறுத்த வேண்டும் அனால் அதை உறுதிப்படுத்தக் கூடாது என்கிறது Reaffirms என்ற வார்த்தையை அடித்ததன் மூலமாக. அதாவது recall செய்யலாம் reaffirm பண்ணக்கூடாது. திரும்ப திரும்ப நினைவு படுத்தலாம் ஆனால் சட்டங்கள் முறையாக பின் பற்றப்படுகிறதா என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உறுதிசெய்யக் கூடாது என்கிறார்கள்.

மற்றும் நான்காம் பத்தியில்
Recalling the High Commissioner's conclusion that national mechanisms have consistently failed to establish the truth and achieve justice, and her recommendation that the Human Rights Council establish an international inquiry mechanism to further investigate the Noting the calla made by the High Commissioner for an independent and credible international investigation into alleged violations of international human rights law and international humanitarian law and monitor any domestic accountability process,

இந்த பத்தியில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை இலங்கை அரசு நீதியை நிலைநாட்டுவதில் தோற்றுவிட்டது   என்றும் அதனால் அவர் வலியுறுத்திய சர்வதேச போர் குற்ற விசாரணையை,ஆதரிப்பது போல் ஆதரித்து ஆனால் சர்வதேச போர் குற்ற விசாரணை தேவையில்லை என்பதற்கான கால அவகாசத்தை கொடுக்கும் வார்த்தை ஜாலங்களை நடத்தி முடித்திருக்கிறார்கள்.. 


மூன்றாவது பக்கத்தில் கடைசியாக தீர்மானம் கோரும் பத்து கோரிக்கைளாக முதல் இரண்டு கோரிக்கையிலேயே தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதியை கட்டவிழ்த்து விடுகிறார்கள். முதல் கோரிக்கை

1. Welcomes the oral update of 25th September 2013, and the report of 24th February 2014 of the Office othe United Nations High commissioner for Human Rights on advise and technical assistance for the Government of Sri Lanka on promoting reconciliation and accountability in Sri Lanka and the recommendations and conclusions contained therein, in particular including on the establishment of a truth-seeking mechanism and national reparations policy as an integral part of a more comprehensive and inclusive approach to transitional justice;

நவிப்பிள்ளை அவர்களின் சென்ற வருட செப்டம்பரில் கொடுத்த வாய்மொழி அறிக்கையையும் இந்த பிப்ரவரியில் கொடுத்த எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் வரவேற்ப்பதாகவும் அதன் கீழாக ஐ.நா இலங்கைக்கு மனித உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும் அதிலும் நடந்து முடிந்த படுகொலைகளுக்கன நீதி கிடைப்பதையும் சேர்த்து உதவ வேண்டும் என்கிறார்கள். இதில் கூட மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை குறிப்பாக in particular எனும் வார்த்தை அடித்து மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் சேர்த்து including என்ற வார்த்தையை திணித்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறி மனித உரிமை ஆணையம் Particularஆக அதாவது முன்னுரிமையாக  எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி, முதல் கோரிக்கையிலேயே எப்படி எல்லாம் இலங்கையை மயிலிறகால் தடவிக்கொடுத்து அதற்கு வலிக்காமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருதலில் மிகக் கவனமாக இருக்கின்றனர்.

அடுத்த இரண்டாவது கோரிக்கையில்
2. Calls upon Encourages the Government of Sri Lanka: to implement the recommendations made in the reports of the office of the Commissioner, and also calls upon the Government to conduct and independent and credible investigation into allegations of violations of international human rights law and international humanitarian law, as applicable; to hold accountable those responsible for such violations; to end continuing incidents of human rights violations and abuses in Sri Lanka; and to implement the recommendations made in the reports of the Office of the High commissioner;

இலங்கை அரசை அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்று கோருகிறார்கள், மனிதர்களாக இல்லாமல் சிங்கத்துக்கு பிறந்தவர்களிடம் மனித உரிமையை சர்வதேச அளவுகோலுடனும், சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழும் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதில் முக்கியமாக முதலில் ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கை வெளிவந்திருக்கிறது அதில் இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது அதன் கீழாக இலங்கை நடந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தவர்கள் பின்னால் அதை அடித்துவிட்டு கடைசியாக கொசுறாக மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளையின் அறிக்கையையும் செயல்படுத்துங்கள் என்று முடிக்கின்றனர். இதில் கூட ஒரு வார்த்தையை அடித்துள்ளார்கள், சென்ற வருட தீர்மானத்தில் இலங்கை அரசை Encourage செய்ய வேண்டும் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறியவர்கள் அதாவது ஊக்குவிக்க சொன்னவர்கள் இந்த முறை ஊக்குவித்தல் என்ற வார்த்தையைகூட நீக்கி அதற்கான தலையீடு கூட இல்லாமல் Calls upon அதாவது இலங்கை அரசிடம் நேரடியாக சொல்லி விட்டு விலகிக் கொள்கிறார்கள்.



மூன்றாவது கோரிக்கை LLRC அறிக்கையை நடைமுறைப் படுத்த கூறுகிறது. நான்காவது தற்பொழுது நடந்து கொண்டுள்ள மசூதி மீதான தாக்குதல், சர்ச் மீதான தாக்குதல்கள் அதைப்போல் லொட்டு லொசுக்கு தாக்குதல்கள் அதாவது இது வரை 1983ம் ஆண்டில் இருந்து இனப்படுகொலையெல்லாம் விட்டுவிட்டு தற்கால பிரச்சனைகளை மட்டும் முதலில் தீர்க்கவேண்டும் என்கிறது. ஐந்தாவது கடந்த வருடம் ஆகஸ்ட் 1ம் தேதி அறவழியில் போராடிய மக்கள் மீதான தாக்குதலின் விசாரணை அறிக்கையை அளிக்க கோருகிறது. ஆறாவதாக 13 வது சட்ட திருத்தத்தை அமுல் படுத்த கோருகிறது, எதை தமிழர்கள் வேண்டாம் என்று கிழித்தெரிந்தார்களோ அதன் கீழான தீர்வே தான் வேண்டுமாம் அமெரிக்க சட்டாம்பிள்ளைக்கு. ஏழாவது இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக்களின் நிலையை பார்க்க மனித உரிமைகள் குழுவை இலங்கை தன் நாட்டுக்கு வருமாறு அழைத்திருப்பதை வரவேற்று அதற்கான தேதி மற்றும் இடங்களை முடிவு செய்து செயல்படுமாறு கூறுகிறது, அதாவது இலங்கையை மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல ஒரு நாடக மேடையை தயார் செய்து அந்த நாடகத்தைப் பார்க்க சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களை கூப்பிட்டு குஷிப்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள்.

எட்டாவது தீர்மானம் அடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
8. Welcomes the High Commissioner's recommendations and conclusions on the need for an independent and credible international investigation in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner to assess progress toward accountability and reconciliation, to monitor relevant national process and to investigate alleged violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka, with input from relevant special procedures mandate holders as appropriate, and to present an oral update to the Human Rights council at its twenty seventh fourth session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty eighth fifth session.

மனித உரிமை ஆணையாளரின் தற்சார்புடைய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை வரவேற்கிறோம் அதை தேசிய அளவிலான விசாரணை தோற்கும் பட்சத்தில் கொண்டு வரலாம். தேசிய அளவிலான விசாரணை செய்வதையும் தண்டனைகள் வழங்குவதையும் மனித உரிமை ஆணையம் உதவி செய்ய வேண்டும், இதைப் பற்றிய வாய்மொழி அறிக்கையை 24வது கூட்டத்திலும் விரிவான எழுத்துப் பூர்வமான அறிக்கையை 27வது கூட்டத்திலும் வைக்க வேண்டும் என்று கூறி இலங்கை அரசுக்கும் இன்னும் 18 மாதங்கள் கால அவகாசத்தை அளிக்கிறது போர்குற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க.. இது முழுக்க முழுக்க ஒரு மக்களை தங்கள் அடக்குமுறையின் கீழாக வைத்துக் கொண்டு அவர்களுக்கான நீதியை வழங்கச் சொல்லும் கோரிக்கை. இதனால் எந்த பயனும் ஏற்படாது என்பது தெரியும். முழு தீர்மானத்திலும் மக்கள் பகுதியில் இருந்து இராணுவத்தை நீக்குவதைப் பற்றியோ மக்கள் வாழும் சுதந்திரமான சூழ் நிலைக்கோ, ஏன் அனைத்து நாடுகளில் உள்ளது போல் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக சென்று வரவோ சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சுத்ந்திரமாக செயல்படும் உரிமையையோ எங்கும் மிகவும் அதிகமாக வலியுறுத்தவோ அல்லது அதற்கான கால அளவையோ நிர்ணயிக்காமல் கண்துடைப்பாக தான் உள்ளது.

இதில் இன்னுமொரு ஒரு முரண்பாடு என்னவென்றால் இந்த பத்தியிலும் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டுள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருப்பது 25வது கூட்டம் ஆனால் அறிக்கை தயாரிக்கபப்ட்ட பொழுது 24 வது கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையையும் 25வது கூட்டத்தில் அதாவது தற்பொழுது நடக்கும் கூட்டத்தில் விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யும் படி கூறியுள்ளார்கள். இதே போன்று தான் 23வது கூட்டத்தில் ஒரு தீர்மானம் அதாவது அமெரிக்காவின் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதில் 24 மற்றும் 25வது அமர்வில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபட வேண்டுமென்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது பழைய அறிக்கையை எடுத்து அதில் மாற்றங்கள் செய்தார்கள் என்றால் முழுமையாக அனைத்தும் இருக்க வேண்டும் ஆனால் இந்த தீர்மானத்தில் முதலில் தேர்தல் நடத்துவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்று சொல்லிவிட்டு அதன் பிறகு தேர்தல் நல்லமுறையில் நடத்தியிருக்கிறீர்கள் வரவேற்கிறோம் என்று திருத்தி இருக்கிறார்கள் முதல் பக்கத்தில். இதையெல்லாம் பார்க்கும் பொழுது தீர்மானம் பல வருடம் முன்பாகவே தயாரிக்கப்பட்டு அதாவது ஒரு திரைக்கதை எழுதப்பட்டு அதன் காட்சிகள் காலத்திற்கேட்ப அரங்கேற்றப் படுகிறது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

சென்ற தீர்மானத்தில் நமக்கு திரியும் நான்கு முறை திருத்தப்பட்டது என்பது அது என்ன திருத்தங்கள் என்னவென்றால் இதே போல் இப்பொழுது சில வார்த்தைகளை நீக்குவது போல் தான் அதுவும், ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் அதை அடித்துவிட்டு அந்த நாடு கொடுக்கும் புது வார்த்தையை சேர்ப்பார்கள். இது தான் தீர்மான நடைமுறை அதன் கீழாகவே இத்தனை திருத்தங்களும் முதல் வரைவிலேயே நடந்துள்ளது. அதுவும் தெளிவாக உறுப்பினர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அடித்துவிட்டு புது வார்த்தையை சேர்ப்பார்கள் ஒட்டுமொத்தமாக வார்த்தையை நீக்க மாட்டார்கள் அதன் கீழாகவே இந்த தீர்மானத் திருத்தங்களை பார்க்கும் பொழுது இது இன்று தயாரிக்கப்பட்டதில்லை எப்பொழுதோ தயாரிக்கபப்ட்டு இப்பொழுது நமக்குமுன் வைக்கப்பட்டுள்ளது என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நாடகங்களை நம்பி தானே தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது என்ன செய்வது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது தீர்மானத்தை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ஒன்பது ஐ.நாவை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுமாறு பார்த்துக் கொள்ளவும், பத்தாவது இலங்கை அரசை இந்த தீர்மானத்தின் படி நடக்கவும் வழியுறுத்துகிறது.

இப்படி அரசியல் சதிராட்டத்தில் வார்த்தைகளால் விளையாடும் இந்த அமெரிக்க தீர்மானத்தை தான் எரிக்க கூடாது எதிர்க்க கூடாது என்று சொல்கிறார்கள் சிலர். அதிலும் இதை எதிர்த்தால் நாம் ராஜபக்சேவுக்கு துணை போகிறோமாம், இப்படி அப்பட்டமாக ராஜபக்சேவுக்கு சாதகமாக இருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ராஜபக்சேவுக்கு துணை போகிறார்களா இல்லை நாம் துணை போகிறோமா என்று அவர்களே சிந்தித்து பார்த்து முடிவெடுத்துக் கொள்ளட்டும்..