Monday, March 17, 2014

இலங்கையா?? இடிஅமீனா?? 2016ல் வாக்களிக்க சொல்லி நாம் கேட்டு போராடப்போவது


2012ல் இருந்து அமெரிக்க தீர்மானம் ஆதரிக்கும் நாடுகளும் எதிர்க்கும் நாடுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஐ.நா மனித உரிமை பேரவையில் மொத்தம் 47நாடுகளுக்கு இடம் உண்டு இவர்களின் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால் 3 வருடம் பேரவையில் இடம் பெறலாம். அதன் கீழாக கடந்த இரண்டு வருடங்களில் சில நாடுகள் விலகியிருக்கின்றன சில சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி இந்த வருடம் ஜனவரி மாதம் மொத்தம் 14 நாடுகள் புது உறுப்பினர்களாக இணைந்து இருகிறார்கள் இதில் ஏற்கெனவே 2012, 13ல் உறுப்பினர்களாக இருந்து பதவிகாலம் முடிந்து திரும்பவும் 2014ல் உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 5 பேர் இதில் நான்கு பேர் அமெரிக்க தீர்மானத்தை 2012ல் எதிர்த்தவர்கள் ஒரு நாடு மட்டும் ஆதரித்தது. 

மிச்சம் இருக்கும் 9 பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், தென் ஆப்ரிக்காவும் அடங்கும் இவர்கள் அமெரிக்காவின் அன்பு தோழர்கள் என்பது உலகிற்கே தெரியும். கடந்தவருடமும் அதற்கு முன்பும் அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்த இந்திய உட்பட 20 நாடுகள் இந்த முறையும் வாக்களிக்கும் அவர்கள் அமெரிக்காவிற்கு ஆதராகவே ஒட்டளிப்பார்கள். மேலும் புதிய உறுப்பினர்களில் இங்கிலாந்து பிரான்ஸ், தென் ஆப்ரிக்காவுடன் சேர்ந்து 2012ல் உறுப்பினராக இருந்து மறுபடியும் 2014ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மெக்சிக்கோவும் வாக்களித்தால் 24 வாக்குகள் அமெரிக்க தீர்மானத்திற்கு கிடைத்துவிடும் மொத்தம் இருக்கும் 47 வாக்குகளில். ஏற்கெனவே வெற்றி பெறப் போகும் தீர்மானத்தை தான் வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். 

இதில் இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் கோரிக்கை வைத்து இந்தியாவிற்கு எதிராக போராட வேண்டுமாம்.. அடுத்த வருசம் என்ன பண்ண போகிறார்கள் என்று தெரியவில்லை இந்த வருடம் டிசம்பருடன் இந்தியாவின் மனித உரிமை பேரவையில் பதவிக் காலம் முடிவடைகிறது. அடுத்த உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடக்கும் அதில் வெற்றி பெற்றால் 2016ல் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம், இல்லாவிடில் பாராளுமன்றத்தில் விரல் சூப்பிக்கிட்டு இருக்கலாம். ஏனென்றால் அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவில் 28வது அமர்வு வரை இலங்கைக்கு நியாமான விசாரணை நடத்த கால அவகாசம் கொடுத்துள்ளனர், அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.. இரண்டாவது வரைவில் அது காணமல் போயிடுச்சு என்பது அடுத்த விசயம் கடைசியாக முதல் வரைவில் சொன்ன போர்குற்ற விசாரணை வந்தால் இந்தியா வாக்களிக்கும் உரிமையுள்ள நாடாக இருக்காது. மறுபடியும் தேர்ந்தெடுக்கபப்ட்டால் மட்டுமே வாக்களிக்க முடியும் அப்பொழுது யாரை நோக்கி ஆதரவாக வாக்களியுங்கள் என்று போராடுவார்கள். இலங்கையை நோக்கியா இல்லை இடி அமீனை நோக்கியா...

இன்று மனித உரிமை ஆணையர் தன்னுரிமையுள்ள சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டும் என்று தனது அறிக்கையை சமர்பித்துள்ளார் அதன் மீதான விவாதங்களை முன்னெடுத்துச் செல்லாமல் அமெரிக்கா தீர்மானம் கொடுக்கும் கால அவகாசத்தின் மீதான விவாதங்களை வைத்து இந்த ஈழத்தமிழர் விசயம் சர்வதேச அரங்கில் தொடர்ந்து விவாதிக்க வசதியாக இருக்கிறது அமெரிக்க தீர்மானம் என்பவர்கள். நவநீதம் பிள்ளை கொடுத்த அறிக்கையின் கீழான போர்குற்ற விசாரணையை ஏன் வழியுறுத்தவில்லை அதை தள்ளிப்போட உதவும் அமெரிக்க தீர்மானம் மட்டும் வேண்டும் என்று கேட்பது எதற்காக விசாரணை நடந்து தீர்ப்புகள் வந்துவிட்டால் "இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு" தீர்வு கிடைத்துவிடும் அதன் பிறகு நாம் அரசியல் செய்ய முடியாது அதன் கீழாக வசூல் செய்ய முடியாது போகும் என்பதால் இருக்குமோ... பிழைப்பை பார்க்கவேண்டும் அல்லவா.. அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுக்கவல்ல இனப்படுகொலை மீதான விசாரணையையும் பொது வாக்கெடுப்பையும் வலியுறுத்தச் சொன்னால் அமெரிக்க தீர்மானம் மட்டும் போதும் என்பது இவர்களின் அரசியல் பிழைப்பிற்காக மட்டுமே..

மேலே சிகப்பு நிறத்தில் பயன் படுத்திய வார்த்தைகள் என் உள்மனதை கட்டுபடுத்திக் கொண்டு இங்கிருக்கும் சிலரின் அபிலாசை அது தான் என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே..

No comments:

Post a Comment