Saturday, October 30, 2010

10 வருட போராட்டம் ஒரே ஒரு சட்டததை எதிர்த்து..

 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பெயரை போன்றே மணியான ஒரு மாநிலம், இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் ஒரு நந்தவன உலகம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலக்குரல் ஓங்கி ஒழித்தால் அதை தீவிரவாதம் என்று வர்ணித்து அதன் குரல்வலையை கடித்து உலகத்திற்கு அவர்களின் குரல் கேட்காமல் செய்வது உலக அதிகார வர்க்க அரசுகளின் மரபு. அதற்கு மணிப்பூரும் விலக்கு அல்ல, அங்கும் தீவிரவாதத்தத ஒடுக்குகிறேன் என்ற பெயரில் 1958ம் வருட அவசரகாலசட்டம(Armed Forces Special Powers Act (AFSPA)). முதன் முதலாக 1990 அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரக்காரணமாக உல்பா தீவிரவாதிகள் மணிப்பூரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்புகிறார்கள் என்று சொல்லி சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தனர். இந்த சட்டம் மக்களுக்கு அமைதியாக வாழ உதவியதோ இல்லையோ, இராணுவபடையினருக்கும் துணை இராணுவப்படையினருக்கும், மாநிலகாவல் துறைக்கும் மிகவும் உதவியது. யாரை வேண்டுமானாலும் எந்த காரணமும் இன்றி கைது செய்யலாம். வாரண்ட் தேவை இல்லை எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பின் பற்ற வேண்டியதில்லை, சந்தேகப்படும் நபர்களை சுட்டுக் கொள்ளலாம். இத்தனைக்கும் மேலாக எந்த நேரத்திலும் யாரு வீட்டுக்குள்ளும் நுழையலாம் தங்கள் உடல் திணவிற்கு அந்த வீட்டு பெண்களை உபயோகித்துக் கொள்ளலாம், இது சட்டத்தின் வரையறையில் எழுதப்படவில்லை ஆனால் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் தன் உடல் திணவை தீர்த்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ இல்லை, பாலியல் வன்முறை என்று புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர் வந்தால் AFSPA பாயும்.

ஆம் ஒரு சிரூடைப் பணியாளன் கையில் ஒரு குண்டூசியை கொடுத்தால் அதை அவன் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறானோ இல்லையோ, அதை வைத்து தான் எந்த மக்களை பாதுகாக்க வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறோமோ அந்த மக்களை மிரட்டுவதற்கு பயன் படுத்துவான். அப்படித் தான் AFSPAவும் இந்திய இராணுவப் படைகளுக்கும், துணை இராணுவப்படைகளுக்கும் தாங்களே இங்கே அனைத்துக்கும் உரிமை படைத்தவர்கள் என்று மணிப்பூரின் அனைத்தையும் ஆண், பெண் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அஃறிணை பொருள் வரை தங்களுடையதாக பாவிக்க ஆரம்பித்து தங்களின் கொலைவெறி ஆட்டத்தை 1990ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றனர். நாம் எல்லாம் அஸ்ஸாமை முதன் முதலாக திரும்பி பார்க்க காரணமாக இருந்தவர்கள் அஸ்ஸாமிய பெண்களே இந்திய இராணுவமே வா வந்து என்னை பாலியல் வன்முறை செய்து கொள் என்று ஓங்கி கூவிய குரல், இந்த குரல் AFSPA அமுல் படுத்தி 14 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு ஒலித்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே தன்னை உலகத்திற்கு அஹிம்சையையும் சத்யாகிரகத்தையும் கண்டுபிடித்த காந்தியின் தேசமாக காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு அதன் வழியிலேயே 2000ம் ஆண்டு முதல் பத்து வருடமாக தொடர்ந்து நடந்து வரும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நமது கண்ணுக்கு முன்னால் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல், ஒரு மிகப்பெரிய அஹிம்சாவழி போராட்டம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துபவர் ஐரோம் சர்மிளா என்ற ஒரு பெண், இவர் பள்ளி படிப்பிற்கு மேல் படிக்க முடியாமல் குடும்ப வறுமையால் படிப்பை கைவிட்டவர். நவம்பர் 2ம் தேதி  2000 ஆண்டு மல்லோம் என்ற இடத்தில் துப்பாக்கி சூட்டில் ஒரு நடுத்தரவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் இறந்தனர். இதை கண்டித்து முதன் முதலாக இல்லை இல்லை அன்று உண்ணாவிரதததை ஆரம்பித்தார் சர்மிளா அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது இவரின் உண்ணாவிரதப் போராட்டம். 2000ம் ஆண்டு ஆரம்பித்தவுடன் இரண்டு நாள் கழித்து தற்கொலை முயற்சி என்று கைது செய்தனர். சிறையிலும் இவர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது, 21ம் தேதி நவம்பர் அன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூக்குவழியாக உணவு கொடுக்கப்பட்டது, வலுகட்டாயமாக. அதன் பிறகு ஒருவருடம் மருத்துவமனை அறையே சிறையானது அதிலும் தொடர்ந்தது இவரது போராட்டம்.

சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து வெளியே வருவார், வந்ததும் திரும்பவும் உண்ணாவிரத்தை தொடர்வார். இப்படி சென்று கொண்டிருந்தது இவரது உண்ணாவிரதப் போராட்டம். ஒரு சமயத்தில் சிறையிலும் உண்ணாவிரத்ததை தொடர்ந்தார், உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திரவ உணவு மருத்துவ முறையில் ஊட்டப்பட்டது வலு கட்டயமாக. இவரின் நிர்பந்தத்தாலும், மணிப்பூரை நாம் அனைவரும் திரும்பி பார்க்க வைத்த பெண்களின் நிர்வாண போராட்டத்தாலும், 2004ம் ஆண்டு 7 மாவட்டங்களில் மட்டும் அவசரகால சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதிலும் இரோம் சர்மிளா சமதானம் அடையவில்லை மொத்தமாக திரும்பபெற வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளார்இவரின் உண்ணாவிரத ஆயுதத்துடன். இவருக்காக மருத்துவமனையில் ஒரு அறையை சிறைக்கூடமாக மாற்றி வைத்துள்ளனர்.

தென்கொரிய அரசு மனித நேயத்திற்கான விருது வழங்கி இவரை கவுரவித்துள்ளது, ஏன் இரவீந்தர்நாத் தாகூர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர் பிரிவினை கேட்க்கவில்லை அடக்கு முறை சட்டத்தை திரும்ப பெற கோருகிறார். இவருக்கு ஆதரவாக டிசம்பர் 10, 2008ல் இருந்து மணிப்பூர் பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த வருடம் மார்ச் மாதம் விடுதலை ஆன பொழுது சிறையில் இருந்து நேரடியாக தொடர் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்களுடன் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.

ஏன் இவர் போராட்டத்திற்கு பாசம் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் இவரின் 70 வயது தாயார் இது வரை போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இவரை சென்று பார்க்கவில்லை.

http://manipurfreedom.org/call4action2009 எனும் இணையதளத்தில் இருந்து.

Tuesday, October 19, 2010

ஏன் தனி தமிழ்நாடு தேவை?? பகுதி 2

தற்கொலைபடை தாக்குதல், என் உயிரே போனாலும் பரவாயில்லை எதிரியின் இராணுவகூடாரம் அழியவேண்டும் என்பதே விடுதலைகாக போராடும் வேங்கைகளின் முதற் குறிக்கோள். இப்படி பட்ட தாக்குதல்களை உலகிற்கு முதலில் அறிமுக படுத்தியது யார்?

1799ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் வீரபாண்டியகட்ட பொம்மன் தூக்கிலடப்பட்ட நாள் அதற்கு முன்பே கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். போரில் படுகாயமுற்ற ஊமைத்துரை ஒரு அம்மையாரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார். பாஞ்சால குறிச்சியில் ஆரம்பித்த போர் முடிந்துவிட்டதா அன்றோடு இல்லை தொடர்ந்தது. சுற்று வட்டாரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனையும் படைவீரர்களையும் தேடிக் கொண்டிருந்தது கும்பினிபடை.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் கட்ட கருப்பணன் என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம். தூத்துகுடியை அடுத்த கவர்னகிரியை பிறப்பிடமாக கொண்ட ஒரு மாவீரன். ஊர் காக்கும் காவலானக வாழ்ந்து கொண்டிருந்த சுந்தரலிங்கத்தின் வீரத்தை கேள்விபட்ட கட்டபொம்மனும், ஊமைத்துரையும் கவர்னகிரி வந்தனர், நாங்கள் கள்வர்கள் என்று சொல்லி உங்கள் ஊரில் ஒரு வீட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்று கேட்டனர். அடிக்கும் கொள்ளையில் உனக்கும் பங்கு தருகிறோம் என்று வெகுண்டெழுந்தான் சுந்தரலிங்கம் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துவந்து சண்டையிட தொடங்கினான் சுந்தரலிங்கம். சிறிது நேரத்திற்கு பின் சண்டையை நிறுத்திய கட்டபொம்மன் தாங்கள் யார் என்பதை சொன்னார் மேலும் தனது படையில் வந்து இணைந்து கொள்ள சுந்தரலிங்கத்தத அழைத்தார். சுந்தரலிங்கமும் சம்மதித்து அவர்களின் படையில் இணைந்தார், இணணந்த சிறிது காலத்திலேயே துணை தளபதி பதவியை அடைந்தார், ஊமைத்துரைக்கு இவர் தான் வலது கை இடது கை என்று எல்லாமே ஆனார்.

ஆங்கிலேயேனுக்கு எதிரான போர் தொடங்கியது, வீரபாண்டியகட்டபொம்மன் பிடிபட்டார், ஊமைதுரை சிவகங்கை சீமையை சென்றடைந்தார். ஆனால் வீரன் சுந்தரலிங்கம் கலங்கவில்லை தொடர்ந்து ஒரு சிறுபடையுடன் போராடினார். ஆங்கிலப்படை இவர்களுக்கு இடுகொடுக்க முடியாமல், இவர்களை பிடிக்கமுடியாமல் திணறியது. திருச்சியில் இருந்து புதிய படையணி வந்தது ஆயுதங்கள் பிரங்கிகளுடன், சுந்தரலிங்கம் இதை அறிந்திருந்தார். அவர்கள் பிரங்கியையும் வெடிகுண்டுகளை உபயோகித்தால் தாக்கு பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து இருந்தார். அவரது முறைப்பெண் வடிவைக் கூப்பிட்டுக் கொண்டு ஆடு மேய்ப்பது போல் ஆங்கிலேயனின் ஆயுதகிடங்கை அடைந்தார். வடிவை வெளியில் இருக்க சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்தார் ஆனால் அவர் உள்ளே போவதை ஆங்கிலேயே சிப்பாய்கள் பார்த்துவிட்டு சுற்றி வளைக்க ஆரம்பித்தனர். வடிவும் செய்வதறியாது ஆயுதகிடங்கிற்குள் சென்றார்.

அங்கு உள்ளே என்ன நடந்தது என்பது ஆண்டவனுக்கே தெரியும். ஆனால் சில நொடிகளில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது அந்த மாவீரனின் உயிர் அவரது முறைப்பெண்ணுடன் சென்றது. 1799ம் வருடம் செம்ப்டம்பர் மாதம் இவர் உயிர் இப்பூவுலகை விட்டு பிரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு மாதத்தில் அக்டோபர் மாதம் 16ம் நாள் உயிரிழந்தார்.

ஆம் முதலாம் சுதந்திர போராட்ட வீரர் வீராங்கனை என்று இந்தியவரலாற்றில் சென்னம்மா, ஆயிரம் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் வேலுநாச்சியாரோ, சுந்தரலிங்கமோ, பீரங்கியின் வாயில் கட்டி வைத்து வெடித்து சிதறடிக்கப்பட்ட வீரன் அழகு முத்துவோ யாருக்கும் தெரியாது. கேட்டால் இந்தியா என்ற ஒரு நாட்டிற்காக அவர்கள் போராடவில்லை அவர்கள் வாழ்ந்த ஆண்ட பகுதிகாகவே போராடினார்கள் என்று. ஜான்சி ராணிக்கு ஏன் மரியாதை என்று கேட்டால், பன்றிகரியும், பசுவின் கொழுப்பையும் தடவியதால் கொதித்து எழுந்த பார்பனர் பாண்டே போன்றவர்கள் நடத்திய சிப்பாய்கலகத்தை (ஆங்கிலேயேன் அப்படிதான் வர்ணிக்கிறான்) முதல் இந்திய சுதந்திர போர் என்றும். அதே சமயத்தில் வாரிசு இல்லாததால் பறிக்கப்பட்ட தன் சொத்தை காப்பாற்ற போராடிய ஜான்சி ராணி முதலாம் சுதந்திர போராட்ட வீரங்கனன என்று வர்ணிக்கிறார்கள். அப்படி பார்த்தால் வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இரண்டு துண்டுகளாக வெட்டுபட்டு கொல்லப்பட்ட மாடு மேய்க்கும் பெண்ணே முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை என்று சொல்லலாம். வேலு நாச்சியார் அவருக்கு நடுக்கல் நட்டார் அது இன்று சிவகங்கை அடுத்த கொல்லங்குடியில் வெட்டுடைய காளியாகிவிட்டார்.

நெற்கட்டான் சேவலை ஆண்ட புலிதேவன், இவரின் வீரத்திற்கு முன் ஈடுஇணை என்பது யாருக்கு இருக்கிறது. பீரங்கியின் முன் வாயில் கட்டிவைத்து மன்னிப்பு கேட்டால் இழந்த நாடு திரும்ப கிடைக்கும் என்று சொன்ன பொழுதும். மாட்டேன் என்று சொல்லி பிரங்கியை தழுவிக்கொண்டு தன் உடலை சுக்கு நூறாக சிதைத்துக் கொண்ட இந்த மாவீரனை என்னவெண்று சொல்லுவது. இவரும் வேலு நாச்சியாரின் ஆட்சிகாலத்திலேயே நெற்கட்டான் சேவலில் ஆங்கிலேயேனை எதிர்த்து போராடியவர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆங்கிலேயனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவர்.

இப்படி வரலாற்றை மறைத்து உலக மக்களுக்கு முன்னால் இவர் தான் முதல் வீரர் அவர் தான் முதல் வீராங்கனை என்று. இவர்கள் மூலம் தான் இந்தியா என்ற நாடு உருவானது என்று சொல்லிக்கொள்ளும் இந்த இந்தியம் தேவையா. ஆங்கிலேயேனை எதிர்த்து முதன் முதலில் போராட தொடங்கியவர்கள் தமிழன் என்பது மட்டும் இல்லை கடைசி வரை போராடியம்வனும் தமிழர்களே.

தன் மண் தன் சொந்தம் என்று வாழ்ந்த தமிழன் இன்று இந்தியம் என்னும் கூட்டுக்குள் சருகாய் இருக்கின்றான்.

Sunday, October 17, 2010

அரசு மருத்துவமனைகள் தரமானவை அல்ல... சாட்சியம் - கலைஞர் காப்பீட்டு திட்டம்

கலைஞர் காப்பீட்டு திட்டம் சென்ற ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் முழுவதுமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்தவர்கள் ஓரு லட்சத்து ஐம்பத்தும் மூவாயிரத்து இறநூற்று ஐம்பத்து ஏழு நோயாளிகள் இந்த காப்பீட்டு திட்டத்தினால் பயன் படும் குடும்பங்கள் ஒரு கோடியே நாப்பத்து நாலு லட்சத்து நாப்பத்து ஐயாயிரத்து நூற்றிபதினெழு குடும்பங்கள். இவர்களின் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு வருடத்திற்கு 517 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டுகிறது.

மிகவும் சிறந்த திட்டம் மிகவும் பயனளிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ஊரை அடித்து உலையில் போடும் கலைஞரின் களவாணி தனம் இங்கு யாருக்குமே தெரியவில்லை. நமக்கு தான் நூறு ரூபாய் நாகர்கோயிலில் இலவசமாக கொடுக்கிறான் என்றால் சென்னையில் இருந்து செலவழித்து ஓடி போய் வாங்க தயாராய் இருக்கோமே.

இதில் என்ன கிடைக்கிறது என்று மட்டும் தான் யாருக்கும் தெரியவில்லை, இத்தனை பேர் பயனடைந்தது என்று கணக்கு கொடுத்தவர்கள் தெரியாத்தனமாக அந்த நிறுவணம் எவ்வளவு கொடுத்தது என்பதையும் சொல்லிவிட்டார்கள் 415 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட நிதியாக சொல்லியுள்ளார்கள். அதாவது 517 கோடி ரூபாய் பெற்று கொண்டு 415 கோடிரூபாய் செலவு செய்துள்ளது. மிச்சம் 102 கோடி ரூபாய் அந்த நிறுவணத்தின் மொத்த லாபம், அதாவது அவர்கள் நிறுவணத்திற்கான வேலையாட்களின் ஊதியம், மற்ற இதர செலவுகளுக்கு முன். அவைகளை நீக்கினால் கூட குறைந்த பட்சம் 80 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு அந்த நிறுவணத்திற்கு லாபம். லஞ்சமாக எவ்வளவு கொடுத்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுவும் எப்படி அரசு 517 கோடி ரூபாய் பணத்தை சென்ற வருடமே கொடுத்துவிட்டது பணம் கூட அந்த நிறுவணம் இந்த திட்டத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை.

முழுதாக 517 கோடி ரூபாய் கையில் ஒரு வருடம் முன்பாகவே வாங்கிக் கொண்டு அதிலிருந்து செலவு செய்கிறது அந்த நிறுவணம். அந்த பணத்திற்க்கு வங்கி வட்டி 1.5 சதவீதம் போட்டல் கூட 517 கோடிக்கு 7கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம். இத்தனை கணக்கையும் போட நம்ம ஊரு பாமரமக்களுக்கு எப்படி தெரியும். பத்திரிக்கையில் வெளிவறுவதையும் கூட்டம் போட்டு பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பதை பார்த்தும், ஒரு ஓட்டுக்கு ஏவ்வளவு கொடுப்பார்கள் என்று கணக்கு பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு எப்படி தெரியும் இந்த கணக்கை பார்க்க.

சரி அதெல்லாம் பரவாயில்லை சேலத்தில் ஒரு பெரிய பிரச்சனை நடந்தது, மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை திறந்தது சம்பந்தமாக யாரு கொண்டு வந்தாங்க என்பது குறித்து. அதாவது திமுக அமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சரும் அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டார்கள். சேலத்தில் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை வர காரணம் யார் என்று.

அந்த மருத்துவமனை கொண்டு வர செலவு மொத்தம் 139.3 கோடி ரூபாய் நிலத்தை கணக்கில் கொள்ளாமல் அரசாங்க புறம்போக்கு நிலத்தில் கொண்டு வரலாம் இப்படி பட்ட மருத்துவமனைகளை. சேலத்தில் நிலத்துக்கு ஆன செலவு 200 கோடி ரூபாய். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 350 கோடி என்றால் கூட, வருடத்திற்கு 517 கோடி என்பதை கொடுத்து இருக்கும் பொழுது, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது புதிதாக மருத்துவமனைகள் கட்டினால் இன்னும் 10 இல் இருந்து 50 வருடங்களுக்குள், சேலத்தில் ஆரம்பித்தது போல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மருத்துவமனை என்று 234 தொகுதிக்கும் ஒரு மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை இருக்கும். அப்புறம் எதற்கு இந்த இடை தரகர்கள் திமுக அரசு இதை நினைத்துப் பார்க்குமா இல்லை சட்டபேரவை, நூலகம் என்று திறந்து விட்டு கட்டிக் கொண்டிருக்கும் இடைக்கால லாபம் மட்டும் போதும் என்று இருக்குமா..

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இத்தனை வருட ஆட்சியில் நாங்கள் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் கலைஞர். என்ன பார்கிறீர்கள் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையை ஏழை எளிய மக்கள் பெற்றுக் கொள்ளலாம், அரசாங்க மருந்தகத்தில் இப்படி திறமையான மருத்துவ சேவை கிடைக்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் நாளை உங்கள் வீட்டில் பேறு காலைத்தில் இருக்கும் பெண்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் தரமான சிகிச்சை கிடைக்காது.