ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா எனும் சட்டாம்பிள்ளை கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் வரைவு நகல் வெளியில் வந்துவிட்டது. அதன் மீதான விமர்சனங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. 2012ம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்க வெளியுறவுத் துறை வாயை திறக்கிறது, இலங்கையைப் பற்றி அப்பொழுது தான் அமெரிக்க தீர்மானம் கொண்டு வருவதை சொல்கிறது அது இலங்கைக்கு எதிரானது என்றும் பெரிதாக பேசப்படுகிறது. தீர்மானத்தை எடுத்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை சர்வதேசம் பேசும் மனித உரிமைகளை இலங்கையில் நிலைநாட்ட வேண்டும் அதற்கான உதவிகள் அதுவும் இலங்கை அமைத்துள்ள உள்நாட்டு அமைப்புகளின்(LLRC) மூலமாக நிறுவ வேண்டும் என்பதைத் தான் வழியுறுத்துகிறது. அந்த தீர்மானம் என்னவோ 2009க்கு பிறகு உலக அரங்கில் இலங்கையின் செயல்பாடுகள் குறித்த எந்த விவாதமும் நடைபெறாதது போலவும், இத் தீர்மானத்தின் கீழாக விவாதங்கள் ஆரம்பமானதாகவும் மிகப்பெரிய ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளனர் நம்மவர்கள். நம்மவர்கள் தானே நமக்கு முதலில் எதிராக இருப்பார்கள்..
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அமர்வின் பின்னாலேயே இத்தகைய நகர்வுகள் நடக்க தொடங்கின. நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் கீழாக மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது அது இலங்கைக்குள் அனுமதிக்கப்படாமலேயே வெளியில் இருந்தே தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் பின்னாலேயே அமெரிக்க முதல் தீர்மானத்தை கொண்டு வந்தது, அதன் பிறகு சார்லஸ் பெட்ரியின் அறிக்கை ஐ.நாவின் மீதான புனித பிம்பத்தை உடைத்தெறிய உதவியது, அதன் கீழாகவே தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க தீர்மானம் என்ற நாடகம்.
ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்து வரும் விவாதம் எந்த தலைப்பின் கீழ் நடந்து வருகிறது என்று கூடத் தெரியாமல் தான் இங்கு சிலர் ஐ.நாவிடம் நமது உரிமையை கேட்டு பெற வேண்டும், அமெரிக்காவிடம் சால்ஜாப்பு செய்து நமக்கான தீர்மானத்தை பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமை ஆணையம் HRC to consider report of the OHCHR on promoting reconciliation and accountability in Sri Lanka எனும் தலைப்பின் கீழ் தான் வரும் மார்ச் 26ம் தேதி விவாதிக்கப் போகிறது. எந்த குற்றச்சாட்டின் அடிப்படையின் கீழும் இல்லை. இதையும் தாண்டி அமெரிக்க தீர்மானம் அது தான் நமக்கிருக்கும் ஒரே வழி வேறு யாரும் தீர்மானம் கொண்டு வரத் தயாரில்லை இதை வைத்து நாம் முன்னேற வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன தான் தீர்மானத்தில் இருக்கிறது என்று பார்க்கலாம்..
தீர்மானத்தின் பக்கம் ஒன்றில் 12வது பத்தியை முழுவதுமாக அடித்திருக்கிறார்கள் அது சொல்வது என்னவென்றால் சென்ற வருடம் 2013ல் செப்டம்பர் மாதம் வட மாகாணத் தேர்தலை நடத்த முடிவெடுத்தமைக்காக இலங்கை அரசை வரவேற்கிறார்களாம். சென்ற வருடம் தேர்தல் நட்ந்து மாகண சபையும் அமைக்கப்பட்ட பின்னர் ஏன் தேர்தல் நடத்த் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்கிறார்கள் இப்பொழுது. வரவேற்க வேண்டியது நடைபெற்ற தேர்தலையும் மாகண சபை அமைந்ததையும் தானே என்று நமக்கு தோன்றும், அதையே தான் இந்த பத்தியை அடித்துவிட்டு மாற்றி 13வது பத்தியாக சேர்த்து தேர்ந்தல் நடந்தையும் மாகணசபை அமைந்ததையும் வரவேற்று இருக்கிறார்கள். இந்த தீர்மானம் இப்பொழுது தயார் செய்யப்படவில்லை என்றோ தயாரிக்கப்பட்டது அதை இப்பொழுதைய ஐ.நா மனித உரிமைகளுக்கான 25வது அமர்வில் சமர்பித்திருக்கிறார்கள் என்பதை போகப்போகப் பார்ப்போம்.
இரண்டாவது பக்கத்தை படித்தவுடன் நடிகர் விவேக் சொன்னது தான் நியபகம் வருகிறது நோட் பண்ணாதீங்கப்பா நோட் பண்ணாதீங்க என்பது தான். அதாவது தீர்மானத்தின் இரண்டாது பக்கத்தில் கடைசி இரண்டு பத்திகளில் சொல்வது என்னவென்றால்
Reiterating
Noting that the national plan of action does not adequately address all of the finding and constructive recommendations of the Commission, and encouraging the Government of Sri Lanka to broaden the scope of the plan adequately address all elements of the Commission report,
Also reiterating
Noting with concern that the national plan of action and the Commission's report don adequately address serious allegations of violations of international human rights law and international humanitarian law,
Reiterating என்பதன் அர்த்தம் திரும்ப திரும்ப சொல்லி இலங்கை அரசங்காத்தின் தேசிய செயல் திட்டத்தை LLRC அறிக்கையின் கீழாக நடைபெற வைக்க வேண்டும். இதில் Noting என்பதை அடிக்க காரணம் திரும்ப திரும்ப சொல்லி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க கூடாது, அதாங்க நோட் பண்ணக் கூடாது என்று சொல்லி ஐ.நா மனித உரிமை ஆணையம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியோ கெஞ்சியோ இல்லை கொஞ்சியோ தான் இலங்கை அரசின் செயல் திட்டத்தை செயல்படுத்த சொல்ல வேண்டும் அதற்காக அது செய்கிறதா இல்லை என்பதை நோட் பண்ணக்கூடாது என்கிறது தீர்மானம்.
மூன்றாவது பக்கத்தில் மூன்றாம் பத்தியில்
Recalling
Reaffirms the responsibility of states to comply with their relevant obligations to prosecute those responsible for gross violations of human rights and serious violations of international humanitarian law constituting crimes under international law, with a view to impunity;
Reaffirms எனும் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த பத்தி சொல்வது என்னவென்றால் சர்வதேச அளவுகோலில் மனித உரிமையும், மனித உரிமை சட்டங்களும் மதிக்கப்பட்டு போர் குற்றம் புரிந்தவர்களை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் அதை திரும்ப திரும்ப இலங்கை அரசுக்கு வழியுறுத்த வேண்டும் அனால் அதை உறுதிப்படுத்தக் கூடாது என்கிறது Reaffirms என்ற வார்த்தையை அடித்ததன் மூலமாக. அதாவது recall செய்யலாம் reaffirm பண்ணக்கூடாது. திரும்ப திரும்ப நினைவு படுத்தலாம் ஆனால் சட்டங்கள் முறையாக பின் பற்றப்படுகிறதா என்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உறுதிசெய்யக் கூடாது என்கிறார்கள்.
மற்றும் நான்காம் பத்தியில்
Recalling the High Commissioner's conclusion that national mechanisms have consistently failed to establish the truth and achieve justice, and her recommendation that the Human Rights Council establish an international inquiry mechanism to further investigate the Noting the calla made by the High Commissioner for an independent and credible international investigation into alleged violations of international human rights law and international humanitarian law and monitor any domestic accountability process,
இந்த பத்தியில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை இலங்கை அரசு நீதியை நிலைநாட்டுவதில் தோற்றுவிட்டது என்றும் அதனால் அவர் வலியுறுத்திய சர்வதேச போர் குற்ற விசாரணையை,ஆதரிப்பது போல் ஆதரித்து ஆனால் சர்வதேச போர் குற்ற விசாரணை தேவையில்லை என்பதற்கான கால அவகாசத்தை கொடுக்கும் வார்த்தை ஜாலங்களை நடத்தி முடித்திருக்கிறார்கள்..
மூன்றாவது பக்கத்தில் கடைசியாக தீர்மானம் கோரும் பத்து கோரிக்கைளாக முதல் இரண்டு கோரிக்கையிலேயே தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதியை கட்டவிழ்த்து விடுகிறார்கள். முதல் கோரிக்கை
1. Welcomes the oral update of 25th September 2013, and the report of 24th February 2014 of the Office othe United Nations High commissioner for Human Rights
on advise and technical assistance for the Government of Sri Lanka on promoting reconciliation and accountability in Sri Lanka and the recommendations and conclusions contained therein,
in particular including on the establishment of a truth-seeking mechanism and national reparations policy as an integral part of a more comprehensive and inclusive approach to transitional justice;
நவிப்பிள்ளை அவர்களின் சென்ற வருட செப்டம்பரில் கொடுத்த வாய்மொழி அறிக்கையையும் இந்த பிப்ரவரியில் கொடுத்த எழுத்துப்பூர்வமான அறிக்கையையும் வரவேற்ப்பதாகவும் அதன் கீழாக ஐ.நா இலங்கைக்கு மனித உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும் அதிலும் நடந்து முடிந்த படுகொலைகளுக்கன நீதி கிடைப்பதையும் சேர்த்து உதவ வேண்டும் என்கிறார்கள். இதில் கூட மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை குறிப்பாக in particular எனும் வார்த்தை அடித்து மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் சேர்த்து including என்ற வார்த்தையை திணித்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறி மனித உரிமை ஆணையம் Particularஆக அதாவது முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி, முதல் கோரிக்கையிலேயே எப்படி எல்லாம் இலங்கையை மயிலிறகால் தடவிக்கொடுத்து அதற்கு வலிக்காமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருதலில் மிகக் கவனமாக இருக்கின்றனர்.
அடுத்த இரண்டாவது கோரிக்கையில்
2. Calls upon
Encourages the Government of Sri Lanka: to implement the recommendations made in the reports of the office of the Commissioner, and also calls upon the Government to conduct and independent and credible investigation into allegations of violations of international human rights law and international humanitarian law, as applicable; to hold accountable those responsible for such violations; to end continuing incidents of human rights violations and abuses in Sri Lanka; and to implement the recommendations made in the reports of the Office of the High commissioner;
இலங்கை அரசை அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்று கோருகிறார்கள், மனிதர்களாக இல்லாமல் சிங்கத்துக்கு பிறந்தவர்களிடம் மனித உரிமையை சர்வதேச அளவுகோலுடனும், சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழும் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதில் முக்கியமாக முதலில் ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கை வெளிவந்திருக்கிறது அதில் இலங்கை அரசின் அனைத்து நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது அதன் கீழாக இலங்கை நடந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தவர்கள் பின்னால் அதை அடித்துவிட்டு கடைசியாக கொசுறாக மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளையின் அறிக்கையையும் செயல்படுத்துங்கள் என்று முடிக்கின்றனர். இதில் கூட ஒரு வார்த்தையை அடித்துள்ளார்கள், சென்ற வருட தீர்மானத்தில் இலங்கை அரசை Encourage செய்ய வேண்டும் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறியவர்கள் அதாவது ஊக்குவிக்க சொன்னவர்கள் இந்த முறை ஊக்குவித்தல் என்ற வார்த்தையைகூட நீக்கி அதற்கான தலையீடு கூட இல்லாமல் Calls upon அதாவது இலங்கை அரசிடம் நேரடியாக சொல்லி விட்டு விலகிக் கொள்கிறார்கள்.
மூன்றாவது கோரிக்கை LLRC அறிக்கையை நடைமுறைப் படுத்த கூறுகிறது. நான்காவது தற்பொழுது நடந்து கொண்டுள்ள மசூதி மீதான தாக்குதல், சர்ச் மீதான தாக்குதல்கள் அதைப்போல் லொட்டு லொசுக்கு தாக்குதல்கள் அதாவது இது வரை 1983ம் ஆண்டில் இருந்து இனப்படுகொலையெல்லாம் விட்டுவிட்டு தற்கால பிரச்சனைகளை மட்டும் முதலில் தீர்க்கவேண்டும் என்கிறது. ஐந்தாவது கடந்த வருடம் ஆகஸ்ட் 1ம் தேதி அறவழியில் போராடிய மக்கள் மீதான தாக்குதலின் விசாரணை அறிக்கையை அளிக்க கோருகிறது. ஆறாவதாக 13 வது சட்ட திருத்தத்தை அமுல் படுத்த கோருகிறது, எதை தமிழர்கள் வேண்டாம் என்று கிழித்தெரிந்தார்களோ அதன் கீழான தீர்வே தான் வேண்டுமாம் அமெரிக்க சட்டாம்பிள்ளைக்கு. ஏழாவது இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக்களின் நிலையை பார்க்க மனித உரிமைகள் குழுவை இலங்கை தன் நாட்டுக்கு வருமாறு அழைத்திருப்பதை வரவேற்று அதற்கான தேதி மற்றும் இடங்களை முடிவு செய்து செயல்படுமாறு கூறுகிறது, அதாவது இலங்கையை மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல ஒரு நாடக மேடையை தயார் செய்து அந்த நாடகத்தைப் பார்க்க சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களை கூப்பிட்டு குஷிப்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள்.
எட்டாவது தீர்மானம் அடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
8. Welcomes the High Commissioner's recommendations and conclusions on the need for an independent and credible international investigation in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner to assess progress toward accountability and reconciliation, to monitor relevant national process and to investigate alleged violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka, with input from relevant special procedures mandate holders as appropriate, and to present an oral update to the Human Rights council at its twenty seventh
fourth session, and a comprehensive report followed by a discussion on the implementation of the present resolution at its twenty eighth
fifth session.
மனித உரிமை ஆணையாளரின் தற்சார்புடைய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை வரவேற்கிறோம் அதை தேசிய அளவிலான விசாரணை தோற்கும் பட்சத்தில் கொண்டு வரலாம். தேசிய அளவிலான விசாரணை செய்வதையும் தண்டனைகள் வழங்குவதையும் மனித உரிமை ஆணையம் உதவி செய்ய வேண்டும், இதைப் பற்றிய வாய்மொழி அறிக்கையை 24வது கூட்டத்திலும் விரிவான எழுத்துப் பூர்வமான அறிக்கையை 27வது கூட்டத்திலும் வைக்க வேண்டும் என்று கூறி இலங்கை அரசுக்கும் இன்னும் 18 மாதங்கள் கால அவகாசத்தை அளிக்கிறது போர்குற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க.. இது முழுக்க முழுக்க ஒரு மக்களை தங்கள் அடக்குமுறையின் கீழாக வைத்துக் கொண்டு அவர்களுக்கான நீதியை வழங்கச் சொல்லும் கோரிக்கை. இதனால் எந்த பயனும் ஏற்படாது என்பது தெரியும். முழு தீர்மானத்திலும் மக்கள் பகுதியில் இருந்து இராணுவத்தை நீக்குவதைப் பற்றியோ மக்கள் வாழும் சுதந்திரமான சூழ் நிலைக்கோ, ஏன் அனைத்து நாடுகளில் உள்ளது போல் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக சென்று வரவோ சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சுத்ந்திரமாக செயல்படும் உரிமையையோ எங்கும் மிகவும் அதிகமாக வலியுறுத்தவோ அல்லது அதற்கான கால அளவையோ நிர்ணயிக்காமல் கண்துடைப்பாக தான் உள்ளது.
இதில் இன்னுமொரு ஒரு முரண்பாடு என்னவென்றால் இந்த பத்தியிலும் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டுள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருப்பது 25வது கூட்டம் ஆனால் அறிக்கை தயாரிக்கபப்ட்ட பொழுது 24 வது கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையையும் 25வது கூட்டத்தில் அதாவது தற்பொழுது நடக்கும் கூட்டத்தில் விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யும் படி கூறியுள்ளார்கள். இதே போன்று தான் 23வது கூட்டத்தில் ஒரு தீர்மானம் அதாவது அமெரிக்காவின் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதில் 24 மற்றும் 25வது அமர்வில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபட வேண்டுமென்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது பழைய அறிக்கையை எடுத்து அதில் மாற்றங்கள் செய்தார்கள் என்றால் முழுமையாக அனைத்தும் இருக்க வேண்டும் ஆனால் இந்த தீர்மானத்தில் முதலில் தேர்தல் நடத்துவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என்று சொல்லிவிட்டு அதன் பிறகு தேர்தல் நல்லமுறையில் நடத்தியிருக்கிறீர்கள் வரவேற்கிறோம் என்று திருத்தி இருக்கிறார்கள் முதல் பக்கத்தில். இதையெல்லாம் பார்க்கும் பொழுது தீர்மானம் பல வருடம் முன்பாகவே தயாரிக்கப்பட்டு அதாவது ஒரு திரைக்கதை எழுதப்பட்டு அதன் காட்சிகள் காலத்திற்கேட்ப அரங்கேற்றப் படுகிறது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
சென்ற தீர்மானத்தில் நமக்கு திரியும் நான்கு முறை திருத்தப்பட்டது என்பது அது என்ன திருத்தங்கள் என்னவென்றால் இதே போல் இப்பொழுது சில வார்த்தைகளை நீக்குவது போல் தான் அதுவும், ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் அதை அடித்துவிட்டு அந்த நாடு கொடுக்கும் புது வார்த்தையை சேர்ப்பார்கள். இது தான் தீர்மான நடைமுறை அதன் கீழாகவே இத்தனை திருத்தங்களும் முதல் வரைவிலேயே நடந்துள்ளது. அதுவும் தெளிவாக உறுப்பினர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அடித்துவிட்டு புது வார்த்தையை சேர்ப்பார்கள் ஒட்டுமொத்தமாக வார்த்தையை நீக்க மாட்டார்கள் அதன் கீழாகவே இந்த தீர்மானத் திருத்தங்களை பார்க்கும் பொழுது இது இன்று தயாரிக்கப்பட்டதில்லை எப்பொழுதோ தயாரிக்கபப்ட்டு இப்பொழுது நமக்குமுன் வைக்கப்பட்டுள்ளது என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இத்தகைய நாடகங்களை நம்பி தானே தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது என்ன செய்வது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது தீர்மானத்தை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை ஒன்பது ஐ.நாவை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுமாறு பார்த்துக் கொள்ளவும், பத்தாவது இலங்கை அரசை இந்த தீர்மானத்தின் படி நடக்கவும் வழியுறுத்துகிறது.
இப்படி அரசியல் சதிராட்டத்தில் வார்த்தைகளால் விளையாடும் இந்த அமெரிக்க தீர்மானத்தை தான் எரிக்க கூடாது எதிர்க்க கூடாது என்று சொல்கிறார்கள் சிலர். அதிலும் இதை எதிர்த்தால் நாம் ராஜபக்சேவுக்கு துணை போகிறோமாம், இப்படி அப்பட்டமாக ராஜபக்சேவுக்கு சாதகமாக இருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ராஜபக்சேவுக்கு துணை போகிறார்களா இல்லை நாம் துணை போகிறோமா என்று அவர்களே சிந்தித்து பார்த்து முடிவெடுத்துக் கொள்ளட்டும்..