TK மார்க்கெட் இல் அதிகமாக வியாபாரம் செய்வது முஸ்லிம்கள்... அங்கே ஒரு போலிசுக்கு மாமுல் வசூலித்து கொடுப்பவன் இந்து முன்னணி நபர்... ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் அமைப்பாக ஒன்று சேர்ந்தவுடன் மாமுல் கொடுப்பதை நிறுத்தினர். அது போலிசுக்கு பெரும் இழப்பக மாறியது. முஸ்லிம்கள் நோக்கி அவர்களின் மூர்க்கதனம் வெளிப்பட்டது.... அதிகமாக கஞ்சா கேஸ் போட்டு முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பினார்கள்.. தடா சட்டங்கள் கூட பயன்படுத்தப்பட்டன... மாறாக இந்து முன்னணி அமைப்பிடம் நட்பு பாராட்டினர். விநாயகர் சத்ருதி விழாக்களை அதிகமகா கொண்டாட பாதுகாப்பு அளித்தனர். இந்த நிலையில் போலீஸ் தனக்கு எதிரி என்று முஸ்லிகள் போலிசை வெறுத்தனர்... இரு பக்கமும் தொடர் கொலைகள் மாறி மாறி நடந்தது....
அல் உமா அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் பலம் பெற தொடங்கியது.. ஒப்பணகார வீதி, ராஜ வீதி, கூலி மூக்கு, ஐந்து முக்கு , மரக்கடை, உக்கடம், TK மார்க்கெட், உக்கடம் மார்கெட் போன்றவை முஸ்லிம்கள் வசம் இருந்து வந்தது. இந்த இடங்களில் இருந்து போலிசுக்கு மாமுல் கிடைக்காத ஆத்திரத்தில் சிலர் இருந்து வந்தனர். இந்த நிலையில் காவலர் செல்வராஜ் வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து அபராதம் விதித்தார். அவர்களும் கட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது செல்வராஜ் ஏதோ கெட்ட வார்த்தை பேசியதாக சொல்லி மூவரில் இரண்டு பேர் கத்தியை எடுத்து கொண்டு வந்து குத்தி விட்டனர். இதில் இறந்து விட்டார். இந்த கொலைக்காக அன்சாரி அவர்கள் உடனே காவல் நிலையம் சென்று கொலையாளிகளை நாங்க ஒப்படைக்கிறோம். மேற்கொண்டு நடந்த சம்பவத்திற்கு நீங்கள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுங்கள் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று சொல்ல .. அங்கே அன்சாரி காவல் அதிகாரிகளால் தாக்கப்பட வன்முறை ஆரம்பிகிறது...
போலிஸ் நடைவண்டி தெருவோர வியாபாரிகள் அனைவரையும் கண்ட படி அடிக்கிறது. அவர்களின் கடைகளை எரிக்கிறது. இந்த கலவரத்தில் இந்து முன்னணி போலீஸ் கூட கூட்டு வைக்கிறது கிட்ட தட்ட 200 கோடிக்கு மேல் பொருளாதரத்தை சூறை யாடுகிறார்கள்.. போலீஸ் வேலை நிறுத்தம் செய்கிறது. துப்பாக்கி சூடு நடத்துகிறது வாகனங்களை போய்கொண்டு இருந்தவர்களை கண்டபடி சுடுகிறது. பதினேழு பேரை கொள்கிறது காவல்துறை. அவர்கள் அனிவரும் முஸ்லிம்கள்.. இந்து முன்னணி முஸ்லிம்கள் வீடுகளுக்குள் செல்கிறது அனைவரையும் அடித்து உதைக்கிறது... மானபங்கம் படுத்துகிறது. மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு சென்றவரை கூட பெட்ரோல் ஊற்றி எரிக்கிறது.....
மிகபெரும் அவலங்களை முஸ்லிம் சமுகம் எதிர்கொள்கிறது. அந்த இயலாமை கோபமாக வளருகிறது. அல் உமா பெரும் எதிர்வினை வன்முறையை செய்ய ஆயுத்தம் ஆகிறது. பொருளாதாரம் சேர்க்கிறது. வெடி குண்டுகளை தயார் செய்கிறது. போலீஸ் அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறது. தமுமுக அமைப்பு காவல்துறையிடம் புகார் தெரிவிக்கிறது. முஸ்லிம்கள் ”தமுமுக”வை புறக்கணிகிறார்கள். பிப்ரவரி நாள் குறிக்கிறார்கள், அத்வானிக்கு குறி வைகிறார்கள், அனைத்தும் போலிசுக்கு தெரிகிறது. ஏகப்பட்ட பேர் போலிசுக்கு தகவல் சொல்லுகிறார்கள். இன்று மாலை குண்டு வெடிக்க போகிறது எப்படியவது தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லுகிறார்கள். போலிஸ் அந்தகைய நிகழ்வு நடைபெற வேண்டும் என்று விரும்பியதோ என்னமோ தெரியவில்லை கண்டுகொள்ளாமல் இருந்தது... குண்டு வெடித்தது.. போலிஸ் மீண்டும் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்தது...
ஆனால் போலிசுக்கு குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. மேற்கொண்டு அவர்கள் எந்த வித வன்முறை போக்கையும் கடைபிடிக்காமல் அமைதியாக பல பேரை கைது செய்தது. சில இடத்தில் கேள்வி யே இல்லாமல் சிலரை கொன்றது. தீவிரவாதிகள் என்று சொல்லி அனைத்தையும் மூடி மறைத்தது.... காவலர் குடியிருப்பு வெடிகுண்டு எல்லாம் நாடகம்.. அதே போல் ஆர் எஸ் புரம் கார் வெடி குண்டும் ஒரு நாடகம்.. மேற்கொண்டு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்த செயல்கள் அவை... வெடிகுண்டு புதையல் என்று சொல்லி கைப்ற்றிய குண்டுகள் எத்தனை என்று கூட சொல்லாமல் மறைத்து விட்டு, போகும் இடம் எல்லாம் வெடி குண்டுகள் கைபற்றினோம் என்று முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடத்தையும் காவல்துறை வசம் கொண்டுவந்தனர்.......
இவை அனைத்தும் சுருங்க பதிவே..... குண்டு வெடிப்புகள் எந்த வகையிலும் நியாயம் இல்லையோ அதே போன்று தான் நவம்பர் கலவரமும் நியாயம் இல்லை.... போலிஸ் மற்றும் சமுக விரோத கும்பல் கைகோர்த்தால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்துகாட்டு தான் கோவை குண்டு வெடிப்பு சம்பவம்... இது நடக்கும் போது நான் இங்கே நின்று கொண்டு இருந்தேன்.. அங்கே நின்று கொண்டு இருந்தேன். ஒரு குழந்தையின் தலை வந்து விழுந்தது என்று கதை அளந்து விடுவார்கள். அவர்களிடம் அவர்களிடம் நேரடியாக பேசினால் அவர்கள் சொல்லுவது அனைத்தும் பொய் எனபது தெளிவாகும்.... ஒரு அமைதியை கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... இந்துத்துவவாதிகளின் அமைதி எனபது மயான அமைதி ...
நன்றி தோழர் Tamil Aman எழுதியவை..
No comments:
Post a Comment