Monday, February 24, 2014

மனிதமா அறிவுசீவித்தனமா எது முக்கியம் (தவ்ஹீத் ஜாமாத் தீர்மானத்திற்கான பதில்)


தவஹீத் ஜமாத் தனது 15வது மாநில மாநாட்டில் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில் பல நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை சார்ந்ததாக இருக்கிறதா என்பது பார்க்கப்பட வேண்டும். தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் மற்றும் இந்தியத்தின் கீழாக அரசியல் செய்யும் அமைப்பு, ஆனால் இந்த அரசியல் அமைப்பு இஸ்லாமியர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டதால் அவர்கள் இஸ்லாம் குறித்த பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். அதைத் தாண்டி வரும்பொழுது ஓரினச்சேர்க்கை, மரண தண்டனை என்பதையும் தங்களின் மதம் சார்ந்த அடிப்படையின் கீழாகவே பார்த்திருக்கின்றனர். இதில் இவர்கள் மதம் சொல்லும் கருத்தைக் கூட மதித்ததாக தெரியவில்லை இல்லை புரியவில்லையா இவர்களின் மதக் கோட்பாடு என்ன சொல்கிறது என்பது  இந்த இடத்தில் என்பது தெரியவில்லை... 

மரணதண்டனை எனும் தண்டனை இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற மேம்போக்கான வாதத்தை வைக்கும் பொதுசனம் போன்றே இவர்கள் கட்சியின் கருத்தும் அமைந்திருக்கிறது இதில் இவர்கள் தலைவர் இந்த நூற்றாண்டி தலைச்சிறந்த இஸ்லாமிய ஆய்வளராக அறிவித்துக் கொள்கிறார். ஒரு இயக்கம் என்பது மக்களுக்கன அரசியல் பேசும் பொழுது அனைத்து பார்வைகளையும் விமர்சித்து விவாதித்து பேசவேண்டும். ஆனால் தவ்ஹீத் அப்படி விவாதித்திருந்தால் இப்படி தவ்வி குதித்து மரணதண்டனைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்காது. இந்தியாவின் இறையான்மை என்ற பெயரில் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்படி அரைகுறையாக குதிப்பதன் நோக்கம் அவர்கள் மதம் சார்ந்ததாகவே கருத வேண்டிய தேவையுள்ளது, அவர்களின் மதத்தின் அடிப்படையில் மரணதண்டனை என்பதை சரியானதாக கூறப்படுகிறது. அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன ஆனால் அவைகளே கொடியவன் என்று அழைக்கப்படும் ஒருவருக்கு மரனத்தையே பரிசாக கொடுக்கின்றனர். சரி இஸ்லாத்தின் அடிப்படையிலேயே எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மதக் கருத்தின் அடிப்படையில் மரணதண்டனை பெற்ற ஒருவரை அவரின் குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரண தண்டனை வேண்டாம் என்று அறிவுறுத்தினால் மரண தண்டனை கொடுக்க கூடாது என்று சொல்கிறது இஸ்லாம். 

2000ம் ஆண்டே சோனியா அவர்கள் அன்றைய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்று எழுதியிருந்தார். ஆதாவது இஸ்லாமியச் சட்டத்தின் படி பாதிக்கப்பட்டவர் வேண்டாம் என்று சொல்லும் பொழுது இதை எப்படி நீங்கள் எதிர்க்றீர்கள் என்பது புரியவில்லை. சரி அந்த சம்பவத்தில் இன்னும் பலர் இறந்துள்ளனர் அவர்களும் சொல்ல வேண்டும் என்றால் கோகில வாணியும் அவரின் தாயார் லதாகண்ணனும் இறந்தார்கள் அவரின் அக்கா இவர்களை தூக்கிலடக் கூடாது என்று குரல் கொடுத்துள்ளார், அதுவாது உங்களுக்கு தெரியுமா. மேலும் அந்த குண்டுவெடிப்பில் அடிபட்ட மற்றொருவர் சுலைமான் சேட், உங்கள் இஸ்லாத்தை சேர்ந்தவர் தான் அவர் இவர்களை நிரபராதிகள் இவர்களை தூக்கிலடக் கூடாது என்று சொல்கிறார். இவர் தான் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் மேடை அமைப்பில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்ட காங்கிரஸ் காரர். இப்படி பலர் இவர்களை தூக்கிலிடுவதை எதிர்த்துள்ளனர்.



காவல்துறையை சேர்ந்தவர்கள் பலர் இந்த குண்டுவெடிப்பில் இறந்துள்ளார்கள், அவர்கள் இந்த நிகழ்விற்கு தங்களின் வேலையின் கீழாக வந்தனர். அவர்களின் வேலை ராஜிவ்காந்தியை பாதுகாப்பது, அப்பொழுது தங்களின் கடமையை செய்ய உயிரை விடவேண்டும் என்றால் உயிரைவிட உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்கள். இவர்கள் தியாகிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இவர்களுக்கு கடமையை செய்யும் பொழுது தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் என்ற மரியாதை செலுத்தப்பட வேண்டும். அதற்கான மரியாதையும் செய்யப்பட்டது செய்து கொண்டும் இருக்கிறார்கள் தமிழக மக்கள். ராஜிவ் கொலை என்பது சரியான நடவடிக்கை இல்லை,

தாங்கள் இஸ்லாத்தை சேர்ந்தவர் உங்கள் மதத்தின் கூற்றின் படியே எடுத்துக் கொண்டாலும் பாதிக்கப்பட்ட லதா கண்ணன் குடும்பத்தினர், சரோஜா தேவி குடும்பத்தினர், சுலைமான் சேட் ஏன் ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாவே யாரையும் தூக்கிலிட விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் அவர்களை தூக்கிலட துடிப்பது எந்த சட்டத்தின் கீழாக. இஸ்லாத்தில் இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தண்டனை தேவையில்லை என்று சொன்னாலும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இஸ்லாத் அறிஞர் உங்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது.

சரி விடுங்கள் உங்கள் மதம் உங்கள் கண்களை மறைக்கிறது ஆனால் மனிதனாக அதுவும் நீங்கள் உங்களை அறிவித்துகொள்வது போல் படிப்பாளியாக ஏன் உங்களுக்கு தண்டனைகள் குற்றங்களை குறைப்பது இல்லை என்பது புரியாமல் போனது. ஒரு சிறு குழந்தையை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்றால் தன் முனைப்பாக அதைத் தான் செய்யும். எனென்றால் அதை செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு எண்ணமே அதற்கு முதன்மையாக இருக்கும். அதே போல் குற்றவாளிகள் என்பவர்கள் பெரும்பாலோனோர் குற்றம் செய்யும் பொழுது தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற நினைப்புடன் செய்வதில்லை தப்பித்துக் கொள்வோம் என்றோ இல்லை உணர்ச்சி வயப்பட்ட நிலையிலோ தான் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களை திருத்துவது தான் சரியான நடவடிக்கை அவர்களை அழித்தொழிப்பதால் அடுத்து யாரும் குற்றம் செய்யாமல் இருக்கப் போவதில்லை மன்னராட்சி காலத்தில் இருந்து மரணதண்டனை இருக்கத் தான் செய்கிறது குற்றங்களும் இருந்து கொண்டு தான் உள்ளது.

மனு நீதிச் சோழன் தேர்க்காலில் கன்றை இழந்த பசுவுக்காக தன் மகனை தேர்காலில் இட்டான்.. ஆனால் இன்று வரை ஆடு, மாடு, கழுதை, பன்னி ஏன் மனிதன் மீது வாகனங்கள் ஏற்றப்படுவது நடந்து கொண்டு தான் உள்ளது. மரண தண்டனை கிடைக்கும் என்பதற்காக விபத்துகள் நடக்காமல் இருப்பதில்லை குற்றங்களும் விபத்துகளும் சூழ்நிலையின் அடிப்படையில் நிகழ்வது அதை ஒரு சட்டம் போட்டு மக்களிடம் பயத்தை உருவாக்கி தடுத்து விட எக்காலத்திலும் முடியாது.

உங்கள் தீர்மானங்களில் பலவற்றை விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது கருணைமனு குறித்த தீர்மானத்தில் இருந்து அனைத்தையும் அவைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் குற்றவாளிகளை மனிதர்களாக பார்க்க பழகிக் கொள்ளுங்கள், இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் நம்மைப்போல சக உயிரினம் அவர்களுடைய உயிருக்கும் மதிப்புள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆட்டிற்கு ஹலால் செய்வது போல் மனிதனுக்கும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தின் இந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞராக இருப்பதற்கு முன்னால் மனிதனாக நடக்க கற்றுக் கொள்ளுங்கள்....

No comments:

Post a Comment