Thursday, February 27, 2014

சூனா பானா வீணா... திரிக்காதே திரிக்காதே மணலில் கயிறு திரிக்காதே...

சூனா பானா வீணாப் போனவர் தி இந்து தமிழ் நாளிதழில் வந்த அற்புதம் அம்மாள் பேட்டியை வைத்து புதுக்கதை திரித்து இருக்கிறார். அதாவது தொடக்க காலத்தில் இருந்து உதவியவர்கள் என்று தலைவர்கள் பெயரை சொல்லியதாகவும் அதில் சீமான் பெயரும் இடம் பெற்றுள்ளது என்றும் திரித்துள்ளார். அவர் திரித்த கேள்வியும் அதன் பதிலும். 

ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா. அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில. ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோஅந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமாஅறிவு கைதுசெய்யப்பட்ட உடனே,இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு. சீக்கிரமேபகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு. அவசர நிலைக் காலகட்டத்துலகலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போஎதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டுஊரையே திரட்டிக்கிட்டுப்போய், “தலைவா! நாங்க இருக்கோம் உன்கூடனு நின்ன குடும்பம் எங்களோடது. ஆனா,அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை. இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை. வேதனையாதான் சொல்றேன். இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம். ஆனாலும்நெடுமாறன்நல்லகண்ணுதியாகுகொளத்தூர்  மணி, வைகோ,சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே

இதை திரித்து அவரது வழைப்பூவில் எழுதியிருக்கிறார்..
மேலே இருப்பதற்கும் அவரின் பதிவிற்கும் கீழே உள்ள இவரின் பதிவிற்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா.. தொடக்க காலத்தில் இருந்து சீமான் உதவியதாக அற்புதம் அம்மாள் சொன்னதாகவும், அதற்கு சீமானை பாரட்டுவதாகவும் வஞ்சபுகழ்ச்சி அணி என்ற பெயரில் தனது காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்து இருக்கிறார் சூனா பானா வீணா...


அதாவது அதற்கு மேலே குற்றம் கூட சாட்டவில்லை தனது வேதனையை வீரமணி பற்றியும் கருணாநிதி பற்றியும் கூறியதை மறுக்கவோ இல்லை எதிர் வாதம் வைக்கவோ எந்த வக்கும் இல்லாமல் அவர்கள் இருவருக்கும் தலை வணங்கி தனது பிழைப்பை பார்க்கும், இவர் இங்கு இணைந்திருப்பவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் நோக்கில் நெடுமாறனுக்கும் வைக்கோவிற்கும் சீமானும் சரிநிகர் இடத்தை அற்புதம் அம்மாள் கொடுத்திருக்கிறார் என்று சிண்டு முடியும் பார்ப்பனீய புத்தியை காட்டியுள்ளார். நீங்க நடத்துங்க எசமான் நடத்துங்க....

இந்த சூனா பானா வீணாவிற்கு இந்த போராட்டத்தின் பல கட்டங்களில் பலருடன் பணியாற்றியவர் அதை எடுத்துச் சொல்வாரா வெளியுலகிற்கு. அதே சமயத்தில் மீசையை பெருசா அழகா வச்ச மட்டும் ஆண்மகன் கிடையாது ஒரு கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் அதுவும் பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர் எங்கும் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்ல தயராக இருக்கிறாரா.. திராவிடர் கழகத்தில் எந்த வருடம் வரை அற்புதம் அம்மாளும் குயில் தாசனும் பணியாற்றினார்கள் என்ற விசயத்தில் ஆரம்பித்து.. அப்பொழுது நீங்கள் திராவிடர் கழகத்தில் இல்லை இருந்தாலும் கேட்டுச் சொல்லலாமே.. அத்தனை வருடம் இருந்தவர்களுக்கு ஏன் திராவிடர் கழகம் உதவவில்லை என்று.. அப்புறம் முக்கியமாக பேரறிவாளன் வழக்கு நிதி என்று ஒன்று திரட்டினார்களே அது எங்கே என்ன செலவு செய்யப்பட்டது என்று கேட்டுச் சொல்லுங்கள்.

இதே ராஜிவ் வழக்கில் விசாரணைக்காக திருச்சி வீரசேகரன் அழைத்துச் சென்ற பொழுது ஆயிரம் வக்கீல்கள் அணிவகுப்பு நடந்ததே அதே போல் ஏன் பேரறிவாளன், ஆவடி மனோகரன் போன்றவர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபொழுது நடக்கவில்லை என்று கேட்டு சொல்லுங்கள்.. 


மற்றும் பழ. நெடுமாறன், ஆனா.ரூனா ஆகியோருடனும் இருந்திருக்கிறீர்கள் அவர்களின் பங்கு இந்த போராட்டத்தில் என்னவென்று எடுத்துச் சொல்ல முடியுமா.. சூனா பானா வீணா....

அப்புறம் இதுக்கு நீங்கள் பதில் சொல்லமாட்டீர்கள் என்பது நன்றாக தெரியும்.. உங்கள் வார்த்தைகளில் யாரையோ சிறுமை படுத்திவிட்டதாக ஒரு நினைப்பில் இருக்கிறீர்கள் தாய் என்பவள் சின்னதாயாக இருந்தாலும் சரி பெரிய தாயாக இருந்தாலும் சரி தாய் தான்..

No comments:

Post a Comment