Friday, February 28, 2014

முற்றுகை போராட்டமும் காங்கிரஸின் பூஸ்வா மனப்பான்மையும்


இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயக வழிப் போராட்டமா என்ற கேள்வியும், எப்படி நீங்கள் அடுத்தவர்களின் அலுவலகத்தின் முன் நின்று போராடலாம் இது தவறல்லவா என்ற அறிவுறுத்தலும், எல்லாவற்றையும் தாண்டி முற்றுகை போராட்டம் என்பது வன்முறை போராட்ட வடிவம் என்று சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணம் தமிழில் இந்த போராட்டத்திற்கான சரியான சொல் வடிவம் இல்லாமல் போனதே. ஆங்கிலத்தில் இந்த போராட்டத்தை Picket என்றும் நடத்துபவர்களை Picketers என்றும் அழைப்பார்கள். ஆனால் தமிழில் இது முற்றுகை என்றே அழைக்கப்படுகிறது முற்றுகை என்பது இராணுவத்தில் சொல்லப்படும் ஒரு வடிவம் Siege என்பது ஆனால் தமிழில் அரசியல் ரீதியாக் ஜனநாயக வழிமுறையில் ஒர் அமைப்பு அல்லது நிறுவனம் எடுத்திருக்கும் நிலைப்பாடு தவறானது என்பதை அவர்களுக்கு சொல்ல அந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் முன்பாக நின்று எதிர்ப்பை தெரிவிக்க சரியான வேறு ஓர் சொல் இல்லாததாலேயே முற்றுகை என்று வார்த்தையை பயன் படுத்துகிறோம். 

(1930ல் அந்நிய துணிகள் எதிப்பிற்காக துணிக்கடையை முற்றுகைக்கு கிளம்பும் பெண்கள்)

தமிழகத்தில் இத்தகைய முற்றுகை போராட்டங்கள் பல நடந்துள்ளன சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே. அயல் நாட்டு துணிகளை வியாபாரம் செய்யும் கடை முன்னால் நின்று முற்றுகையிட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் அன்று கடைகளை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தான் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஒதுக்கப்படும் இடங்களில் தான் போராட வேண்டும். மற்ற இடங்களில் செய்யக் கூடாது முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயக வழிப் போராட்டம் இல்லை என்கிறது. 1947ல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக இவர்கள் தான் அறிவிக்கிறார்கள் ஆனால் தனது உரிமை மறுக்கப்படும் பொழுது மக்கள் எதிர்த்து நின்று போராட ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் உபயோகிக்க வேண்டும் என்று மக்களின் போராட்ட உரிமையை பறித்துவிட்டு என்னவோ போராட உரிமை கொடுக்கிறோம் சுதந்திரமாக போராடுங்கள் என்று டில்லியில் ஜந்தர் மந்தர், மும்பையில் ஆசாத் மைதானம், பெங்களூரில் டவுன் ஹால், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கலெக்டர் ஆபிஸ் என்று ஒதுக்கிவிட்டு அங்கு தான் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சொல்வது தான் சுதந்திர இந்திய நாடாம்.. ஆங்கிலேயன் ஆட்சிகாலத்தில் கள்ளுக் கடைகளுக்கு முன்னால் போராடியது, துணிக் கடைகளுக்கு முன்பு போராடியது எல்லாம் சுதந்திரம் இல்லாமல் செய்தார்களாம் இவர்கள், சரி விடுங்க நம்ம முற்றுகை போராட்டத்திற்கே வருவோம். 


இங்கு முற்றுகை போராட்டம் என்பது உலக அளவில் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு போராட்ட வழிமுறையே அதுவும் ஜனநாயக வழிமுறையே. தங்களது எதிர்ப்பை தெரிவிக்க இத்தகைய போராட்டத்தை செய்யலாம் என்று பல நாடுகளில் அனுமதியுள்ளது அதுவும் நிபந்தனைக்கு உட்பட்டது தான் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நடத்துவது மட்டும் தான் அந்த நிபந்தனை. இதே போன்று தான் இந்தியாவிலும் இந்த முற்றுகை போராட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது அதன் கீழாக முற்றுகை போராட்டங்கள் நாடு முழுவது நடைபெற்று வருகிறது. இதில் விதிமுறைகளை மீறாமல் செயல்படும் வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது ஆனால் விதிமுறைகள் மீறினால் அதிகபட்ச தண்டனையாக 6 மாதம் சிறைத் தண்டனையும் அல்லது அபராதத் தொகையும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

சரி முற்றுகை போராட்டத்தின் விதிகள் என்ன குறிப்பிட்ட அலுவலகம் வீடு முன்பாக கூடி ஒரு எல்லைக்குள் நின்று அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்வது தான் முற்றுகை போராட்ட வழிமுறை. இதை யார் எதிர்க்கப்படுகிறார்களோ அவர்கள் அதற்கான தீர்வை சொல்வது தான் ஜனநாயக நடைமுறை அதை விடுத்து முற்றுகை இட்டு போராடுபவர்களை நோக்கி நீ முற்றுகை இடக் கூடாது என்று சொல்வதோ இல்லை அவர்களை விரட்ட முற்படுவதோ தான் வன்முறை. ஜனநாயக ரீதியாக போராடும் மக்களின் குரல்களுக்கு செவிமடுக்காமல் அவர்களின் குரல்வளையை நெறிக்கும் முயற்சிகளை வன்முறையாகவே கருத வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் ராஜாஜியின் வீடு முற்றுகையிடப்பட்டது ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட குழுக்களாக வந்தவர்கள் தனித்தனியாக கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. 



அது போன்றது தான் நாம் தமிழர் அமைப்பு அழைத்த சத்திய மூர்த்தி பவன் முற்றுகை போராட்டமும் இதில் நாம் தமிழர் அமைப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முற்றுகை போராட்டத்தை நடத்தினர் அப்பொழுது சத்திய மூர்த்தி பவனுக்குள் இருந்து எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர் காங்கிரஸார் வன்முறையாக நாம் தமிழர் அமைப்பின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல். அதன் பிறகு நாம் தமிழர் அமைப்பினர் கைது செய்யப்பட்டு சென்ற பிறகு அங்கு தாமதமாக வந்த நாம் தமிழர் அமைப்பினரின் ஒரு வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள். அந்த வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும் காவல்துறையினர் காப்பாற்றி ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து சமூகநலக் கூடத்தில் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.



இதன் பிறகே அடுத்த இயக்கமான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் வந்திருக்கின்றனர் அவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் ஆனால் காங்கிரஸ் காரர்கள் உள்ளே இருந்து கூச்சல் போடுவதும் ஏற்கெனவே ஒரு காரை தாக்கியதில் ஏற்பட்ட்ட களிப்பில் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். தனியாக வந்த ஒரு காரை அடித்து வீரத்தை காட்டியவர்கள் இப்பொழுது தங்கள் அலுவலக சுற்று சுவருக்குள் இருந்து கொண்டு கற்களை வீசியுள்ளனர். இதை பொறுத்துக்கொள்ளாத தமிழர் முன்னேற்ற படையினரில் சிலர் திரும்ப தாக்க முயல காவல் துறை அவர்களை தடுத்திருக்கிறது இந்த வேளையில் தான் காங்கிரஸினர் வெளியில் வந்தும் தாக்குதலை தொடுத்துள்ளனர் அவர்களை தடுக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டது. 

இங்கு வன்முறை என்பது முற்றுகை போராட்டம் என்ற ஜனநாயக வழியில் ஒரு கட்சியின் அலுவலகத்தின் முன்பு தங்களின் எதிர்ப்பை முழக்கங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் இல்லை. ஜனநாயக ரீதியாக கோரிக்கை முழக்கங்கள் இட்ட தோழர்களின் குரல் வளையை நெறிக்க முயன்ற காங்கிரஸினரே வன்முறையாளர்கள். இதை உணராமல் இங்கு ஊடகத்தை சேர்ந்த சிலர் இந்த போராட்ட அறிவிப்பே வன்முறையை தூண்டுகிறது என்று பேசுகிறார்கள். இது வரை 2009ல் இருந்து மூன்று முறை மே 17 இயக்கம் சத்திய மூர்த்தி பவனை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தியுள்ளது இதில் இரண்டு போராட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். கடைசியா சென்ற வருடம் மார்ச் மாதம் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தி நின்று கோசங்கள் கூட போடாமல் இருந்த பொழுதே காங்கிரஸினர் உள்ளிருந்து ஓடிவந்தனர் எங்களை அடிக்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் எங்களுடன் நின்ற தோழர்கள் உணர்ச்சி வசப்பட்ட பொழுது அதை தடுத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தி முழக்கங்கள் இட்டு காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தோம்.

ஆனால் அங்கு வைக்கப்படும் கோரிக்கைகளை கேட்க கூட மனமில்லாமல் ஜனநாயகரீதியாக போராடுபவர்களை அடிக்கத் தான் காங்கிரஸினர் முயன்றனர் இவர்கள் தான் வன்முறையாளர்கள். முற்றுகை போராட்டம் என்பது ஜனநாயகரீதியான போராட்டமே அதை வன்முறை போராட்டமாக சித்தரிப்பது தவறான முன்னுதாரணம். இந்தியா என்பது சுதந்திர நாடு என்றால் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியும் உண்டு அதற்கான தண்டனை சட்ட வரையறையும் உள்ளது இதை மறுத்துக் கொண்டு தவறான போராட்ட வழிமுறை என்று பிதற்றுபவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடத்திய முற்றுகை போராட்டங்களை தாங்கள் நடத்தவில்லை என்று சொல்லிவிட்டு முற்றுகை போராட்டம் ஜனநாயக போராட்டம் இல்லை என்று கூவட்டும்..  முற்றுகை போராட்டத்தை வன்முறை அரசியல் என்று சொல்வதில் காங்கிரஸின் பூஸ்வா மனப்பான்மை தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. 

Thursday, February 27, 2014

சூனா பானா வீணா... திரிக்காதே திரிக்காதே மணலில் கயிறு திரிக்காதே...

சூனா பானா வீணாப் போனவர் தி இந்து தமிழ் நாளிதழில் வந்த அற்புதம் அம்மாள் பேட்டியை வைத்து புதுக்கதை திரித்து இருக்கிறார். அதாவது தொடக்க காலத்தில் இருந்து உதவியவர்கள் என்று தலைவர்கள் பெயரை சொல்லியதாகவும் அதில் சீமான் பெயரும் இடம் பெற்றுள்ளது என்றும் திரித்துள்ளார். அவர் திரித்த கேள்வியும் அதன் பதிலும். 

ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா. அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில. ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோஅந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமாஅறிவு கைதுசெய்யப்பட்ட உடனே,இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு. சீக்கிரமேபகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு. அவசர நிலைக் காலகட்டத்துலகலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போஎதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டுஊரையே திரட்டிக்கிட்டுப்போய், “தலைவா! நாங்க இருக்கோம் உன்கூடனு நின்ன குடும்பம் எங்களோடது. ஆனா,அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை. இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை. வேதனையாதான் சொல்றேன். இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம். ஆனாலும்நெடுமாறன்நல்லகண்ணுதியாகுகொளத்தூர்  மணி, வைகோ,சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே

இதை திரித்து அவரது வழைப்பூவில் எழுதியிருக்கிறார்..




மேலே இருப்பதற்கும் அவரின் பதிவிற்கும் கீழே உள்ள இவரின் பதிவிற்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா.. தொடக்க காலத்தில் இருந்து சீமான் உதவியதாக அற்புதம் அம்மாள் சொன்னதாகவும், அதற்கு சீமானை பாரட்டுவதாகவும் வஞ்சபுகழ்ச்சி அணி என்ற பெயரில் தனது காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்து இருக்கிறார் சூனா பானா வீணா...


அதாவது அதற்கு மேலே குற்றம் கூட சாட்டவில்லை தனது வேதனையை வீரமணி பற்றியும் கருணாநிதி பற்றியும் கூறியதை மறுக்கவோ இல்லை எதிர் வாதம் வைக்கவோ எந்த வக்கும் இல்லாமல் அவர்கள் இருவருக்கும் தலை வணங்கி தனது பிழைப்பை பார்க்கும், இவர் இங்கு இணைந்திருப்பவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் நோக்கில் நெடுமாறனுக்கும் வைக்கோவிற்கும் சீமானும் சரிநிகர் இடத்தை அற்புதம் அம்மாள் கொடுத்திருக்கிறார் என்று சிண்டு முடியும் பார்ப்பனீய புத்தியை காட்டியுள்ளார். நீங்க நடத்துங்க எசமான் நடத்துங்க....

இந்த சூனா பானா வீணாவிற்கு இந்த போராட்டத்தின் பல கட்டங்களில் பலருடன் பணியாற்றியவர் அதை எடுத்துச் சொல்வாரா வெளியுலகிற்கு. அதே சமயத்தில் மீசையை பெருசா அழகா வச்ச மட்டும் ஆண்மகன் கிடையாது ஒரு கருத்தியலை ஏற்றுக் கொண்டவர் அதுவும் பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர் எங்கும் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்ல தயராக இருக்கிறாரா.. திராவிடர் கழகத்தில் எந்த வருடம் வரை அற்புதம் அம்மாளும் குயில் தாசனும் பணியாற்றினார்கள் என்ற விசயத்தில் ஆரம்பித்து.. அப்பொழுது நீங்கள் திராவிடர் கழகத்தில் இல்லை இருந்தாலும் கேட்டுச் சொல்லலாமே.. அத்தனை வருடம் இருந்தவர்களுக்கு ஏன் திராவிடர் கழகம் உதவவில்லை என்று.. அப்புறம் முக்கியமாக பேரறிவாளன் வழக்கு நிதி என்று ஒன்று திரட்டினார்களே அது எங்கே என்ன செலவு செய்யப்பட்டது என்று கேட்டுச் சொல்லுங்கள்.

இதே ராஜிவ் வழக்கில் விசாரணைக்காக திருச்சி வீரசேகரன் அழைத்துச் சென்ற பொழுது ஆயிரம் வக்கீல்கள் அணிவகுப்பு நடந்ததே அதே போல் ஏன் பேரறிவாளன், ஆவடி மனோகரன் போன்றவர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபொழுது நடக்கவில்லை என்று கேட்டு சொல்லுங்கள்.. 


மற்றும் பழ. நெடுமாறன், ஆனா.ரூனா ஆகியோருடனும் இருந்திருக்கிறீர்கள் அவர்களின் பங்கு இந்த போராட்டத்தில் என்னவென்று எடுத்துச் சொல்ல முடியுமா.. சூனா பானா வீணா....

அப்புறம் இதுக்கு நீங்கள் பதில் சொல்லமாட்டீர்கள் என்பது நன்றாக தெரியும்.. உங்கள் வார்த்தைகளில் யாரையோ சிறுமை படுத்திவிட்டதாக ஒரு நினைப்பில் இருக்கிறீர்கள் தாய் என்பவள் சின்னதாயாக இருந்தாலும் சரி பெரிய தாயாக இருந்தாலும் சரி தாய் தான்..

Monday, February 24, 2014

மனிதமா அறிவுசீவித்தனமா எது முக்கியம் (தவ்ஹீத் ஜாமாத் தீர்மானத்திற்கான பதில்)


தவஹீத் ஜமாத் தனது 15வது மாநில மாநாட்டில் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதில் பல நாட்டின் முக்கியமான பிரச்சனைகளை சார்ந்ததாக இருக்கிறதா என்பது பார்க்கப்பட வேண்டும். தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் மற்றும் இந்தியத்தின் கீழாக அரசியல் செய்யும் அமைப்பு, ஆனால் இந்த அரசியல் அமைப்பு இஸ்லாமியர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டதால் அவர்கள் இஸ்லாம் குறித்த பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். அதைத் தாண்டி வரும்பொழுது ஓரினச்சேர்க்கை, மரண தண்டனை என்பதையும் தங்களின் மதம் சார்ந்த அடிப்படையின் கீழாகவே பார்த்திருக்கின்றனர். இதில் இவர்கள் மதம் சொல்லும் கருத்தைக் கூட மதித்ததாக தெரியவில்லை இல்லை புரியவில்லையா இவர்களின் மதக் கோட்பாடு என்ன சொல்கிறது என்பது  இந்த இடத்தில் என்பது தெரியவில்லை... 

மரணதண்டனை எனும் தண்டனை இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற மேம்போக்கான வாதத்தை வைக்கும் பொதுசனம் போன்றே இவர்கள் கட்சியின் கருத்தும் அமைந்திருக்கிறது இதில் இவர்கள் தலைவர் இந்த நூற்றாண்டி தலைச்சிறந்த இஸ்லாமிய ஆய்வளராக அறிவித்துக் கொள்கிறார். ஒரு இயக்கம் என்பது மக்களுக்கன அரசியல் பேசும் பொழுது அனைத்து பார்வைகளையும் விமர்சித்து விவாதித்து பேசவேண்டும். ஆனால் தவ்ஹீத் அப்படி விவாதித்திருந்தால் இப்படி தவ்வி குதித்து மரணதண்டனைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்காது. இந்தியாவின் இறையான்மை என்ற பெயரில் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்படி அரைகுறையாக குதிப்பதன் நோக்கம் அவர்கள் மதம் சார்ந்ததாகவே கருத வேண்டிய தேவையுள்ளது, அவர்களின் மதத்தின் அடிப்படையில் மரணதண்டனை என்பதை சரியானதாக கூறப்படுகிறது. அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன ஆனால் அவைகளே கொடியவன் என்று அழைக்கப்படும் ஒருவருக்கு மரனத்தையே பரிசாக கொடுக்கின்றனர். சரி இஸ்லாத்தின் அடிப்படையிலேயே எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மதக் கருத்தின் அடிப்படையில் மரணதண்டனை பெற்ற ஒருவரை அவரின் குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரண தண்டனை வேண்டாம் என்று அறிவுறுத்தினால் மரண தண்டனை கொடுக்க கூடாது என்று சொல்கிறது இஸ்லாம். 

2000ம் ஆண்டே சோனியா அவர்கள் அன்றைய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்று எழுதியிருந்தார். ஆதாவது இஸ்லாமியச் சட்டத்தின் படி பாதிக்கப்பட்டவர் வேண்டாம் என்று சொல்லும் பொழுது இதை எப்படி நீங்கள் எதிர்க்றீர்கள் என்பது புரியவில்லை. சரி அந்த சம்பவத்தில் இன்னும் பலர் இறந்துள்ளனர் அவர்களும் சொல்ல வேண்டும் என்றால் கோகில வாணியும் அவரின் தாயார் லதாகண்ணனும் இறந்தார்கள் அவரின் அக்கா இவர்களை தூக்கிலடக் கூடாது என்று குரல் கொடுத்துள்ளார், அதுவாது உங்களுக்கு தெரியுமா. மேலும் அந்த குண்டுவெடிப்பில் அடிபட்ட மற்றொருவர் சுலைமான் சேட், உங்கள் இஸ்லாத்தை சேர்ந்தவர் தான் அவர் இவர்களை நிரபராதிகள் இவர்களை தூக்கிலடக் கூடாது என்று சொல்கிறார். இவர் தான் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் மேடை அமைப்பில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்ட காங்கிரஸ் காரர். இப்படி பலர் இவர்களை தூக்கிலிடுவதை எதிர்த்துள்ளனர்.



காவல்துறையை சேர்ந்தவர்கள் பலர் இந்த குண்டுவெடிப்பில் இறந்துள்ளார்கள், அவர்கள் இந்த நிகழ்விற்கு தங்களின் வேலையின் கீழாக வந்தனர். அவர்களின் வேலை ராஜிவ்காந்தியை பாதுகாப்பது, அப்பொழுது தங்களின் கடமையை செய்ய உயிரை விடவேண்டும் என்றால் உயிரைவிட உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்கள். இவர்கள் தியாகிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இவர்களுக்கு கடமையை செய்யும் பொழுது தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் என்ற மரியாதை செலுத்தப்பட வேண்டும். அதற்கான மரியாதையும் செய்யப்பட்டது செய்து கொண்டும் இருக்கிறார்கள் தமிழக மக்கள். ராஜிவ் கொலை என்பது சரியான நடவடிக்கை இல்லை,

தாங்கள் இஸ்லாத்தை சேர்ந்தவர் உங்கள் மதத்தின் கூற்றின் படியே எடுத்துக் கொண்டாலும் பாதிக்கப்பட்ட லதா கண்ணன் குடும்பத்தினர், சரோஜா தேவி குடும்பத்தினர், சுலைமான் சேட் ஏன் ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாவே யாரையும் தூக்கிலிட விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் அவர்களை தூக்கிலட துடிப்பது எந்த சட்டத்தின் கீழாக. இஸ்லாத்தில் இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தண்டனை தேவையில்லை என்று சொன்னாலும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இஸ்லாத் அறிஞர் உங்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது.

சரி விடுங்கள் உங்கள் மதம் உங்கள் கண்களை மறைக்கிறது ஆனால் மனிதனாக அதுவும் நீங்கள் உங்களை அறிவித்துகொள்வது போல் படிப்பாளியாக ஏன் உங்களுக்கு தண்டனைகள் குற்றங்களை குறைப்பது இல்லை என்பது புரியாமல் போனது. ஒரு சிறு குழந்தையை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்றால் தன் முனைப்பாக அதைத் தான் செய்யும். எனென்றால் அதை செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு எண்ணமே அதற்கு முதன்மையாக இருக்கும். அதே போல் குற்றவாளிகள் என்பவர்கள் பெரும்பாலோனோர் குற்றம் செய்யும் பொழுது தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற நினைப்புடன் செய்வதில்லை தப்பித்துக் கொள்வோம் என்றோ இல்லை உணர்ச்சி வயப்பட்ட நிலையிலோ தான் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களை திருத்துவது தான் சரியான நடவடிக்கை அவர்களை அழித்தொழிப்பதால் அடுத்து யாரும் குற்றம் செய்யாமல் இருக்கப் போவதில்லை மன்னராட்சி காலத்தில் இருந்து மரணதண்டனை இருக்கத் தான் செய்கிறது குற்றங்களும் இருந்து கொண்டு தான் உள்ளது.

மனு நீதிச் சோழன் தேர்க்காலில் கன்றை இழந்த பசுவுக்காக தன் மகனை தேர்காலில் இட்டான்.. ஆனால் இன்று வரை ஆடு, மாடு, கழுதை, பன்னி ஏன் மனிதன் மீது வாகனங்கள் ஏற்றப்படுவது நடந்து கொண்டு தான் உள்ளது. மரண தண்டனை கிடைக்கும் என்பதற்காக விபத்துகள் நடக்காமல் இருப்பதில்லை குற்றங்களும் விபத்துகளும் சூழ்நிலையின் அடிப்படையில் நிகழ்வது அதை ஒரு சட்டம் போட்டு மக்களிடம் பயத்தை உருவாக்கி தடுத்து விட எக்காலத்திலும் முடியாது.

உங்கள் தீர்மானங்களில் பலவற்றை விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது கருணைமனு குறித்த தீர்மானத்தில் இருந்து அனைத்தையும் அவைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் குற்றவாளிகளை மனிதர்களாக பார்க்க பழகிக் கொள்ளுங்கள், இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் நம்மைப்போல சக உயிரினம் அவர்களுடைய உயிருக்கும் மதிப்புள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆட்டிற்கு ஹலால் செய்வது போல் மனிதனுக்கும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தின் இந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞராக இருப்பதற்கு முன்னால் மனிதனாக நடக்க கற்றுக் கொள்ளுங்கள்....

Monday, February 10, 2014

மரணதண்டனை என்பது மனித உரிமை மீறல்


மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துக்கு வாழ்த்துக்கள்..

இந்திய அரசும் ஊடகங்களும் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒரு பகுதியில் நடப்பதை மற்ற பகுதிகளுக்கு தெரிய அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக தமிழகத்தில் சுவரொட்டி கொண்டு வந்தது மிகவும் பாராட்டுக்குறியது. தமிழக ஊடகங்கள் இந்த கிராமப் பஞ்சாயத்தைப் பற்றியும் அதில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை பற்றியும் பெரிதாக செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. அத்தகைய நிலையில் சுவரொட்டிகள் மூலமாக சாதாரண மக்களுக்கும் செய்தி சென்றடையும் வகையில் நீங்கள் எடுத்த நடவடிக்கை முன்னுதாரணமாக திகழ்கிறது.

ஆனால் சுவரொட்டியில் தங்கள் கோரிக்கைகள் தான் தவறானதாக இருக்கிறது. மனித உரிமை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்பு ஒரு மனிதனின் உயிரை பறிக்க நினைப்பது, அந்த மனிதனின் வாழும் உரிமையை பறிக்கும் செயல் என்பதை கவனிக்க தவறிவிட்ட்தாகவே தோன்றுகிறது. இந்த குற்றத்தின் தன்மையை கருதி அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி மனிதர்களாக மாற்றுவது தான் மனித நேயத்தின் அடிப்படையிலான செயல். தங்களின் கோரிக்கையின் அடிப்படையில், தூக்கிலிடுவதால் இனிமேல் இப்படிப் பட்ட குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்குமா. எனென்றால் மேற்கு வங்கத்தில் வழக்கு நடத்தி தூக்கிலடப்படும் இவர்களைப் பற்றிய செய்தி ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களும் மக்களுக்கு கொண்டு சேர்க்காது. அவர்களுக்கு தேவையானது Sensational News.

நமது தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேன் கடத்தப்பட்ட பொழுது தான் தமிழக ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வட மாநிலங்களில் இந்திய அரசு பச்சை வேட்டையை பற்றிய எழுதினார்கள். இந்த பச்சை வேட்டையை தொடங்கியது ப. சிதம்பரம் என்பது கூட தெரியாமல் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட பொழுது நம்ம வீட்டு பிள்ளையை யாரோ கடத்திவிட்டார்களாம்பா, என்று யார் கடத்தினார்கள் எதற்காக என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு தான் நம் மக்களை அரசுகளும் ஊடகங்களும் வைத்துள்ளது. ஏன் தமிழ்நாட்டு பிரச்சனையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனை என்ன என்பது வடமாநில மக்களுக்கு தெரியாது, காவிரி பிரச்சனை என்னவென்று தென் மாவட்ட மக்களுக்கு தெரியாது. இப்படித் தான் இங்கு செய்திகள் பகிரப்படுகின்றன.
மரண தண்டனை என்பதன் நோக்கம் குற்றம் செய்தவருக்கு கொடுக்கப்படும் இந்த தண்டனை இனி யாரும் அத்தகைய குற்றத்தை செய்யக் கூடாது என்பதற்காக. ஆனால் இங்கு முழுமையாக பகிரப்படாத தூக்கில் போட்ட செய்திகள் தெரியாமல், நீங்கள் நினைப்பது போல் பயம் வர வாய்ப்புகளே இல்லை, அப்படி இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பும் பிறகும் மரணதண்டனை வழங்கப்பட்டே வருகிறது  ஆனால் ஒவ்வொரு வருடமும் கொலைகளும் கற்பழிப்புகளும் அதிகரித்து தான் வருகிறது. இன்றைய தேதியில் தூக்கு தண்டனை அறிவிக்கபப்ட்டு தூக்குமர நிழலில் என்று நமக்கு மரணம் வரப்போகிறது என்று காத்திருப்பவர்கள் மட்டும் இந்தியாவில் 544 பேர்.


மேலே இருப்பது 1953ம் ஆண்டும் 2012ம் ஆண்டும் இந்தியாவில் நடந்த குற்றங்கள் இதில் பாலியல் குற்றங்களுக்கான தகவல்கள் 1971ல் இருந்து தான் NCRB (National Crime Record Bureau) பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது

1971ல் நடந்த பாலியல் குற்றங்கள் 2487,
2012ல் நடந்த பாலியல் குற்றங்கள் 24,923

அதாவது கிட்டத்தட்ட 900% பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. இதில் பாலியல் குற்றங்களுக்கு 7வருடம் கடுங்காவல் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்டுள்ளது ஆனால் இந்த தண்டனைகள் எதுவும் குற்றவாளிகளுக்கு பயத்தை உருவாக்கவில்லை. இதைவிட முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இப்படி குற்றங்களின் எண்ணிக்கை ஏன் கூடியுள்ளது என்பதைத் தான். கூட்டமாக சேர்ந்து கொள்ளை அடிப்பதும், திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களும் குறைந்துள்ளது, இது சமூகத்தின் மாற்றத்தினை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இன்று பொருளாதர நிலையிலும், கல்வியிலும் சில அடிகள் 1953யை விட முன்னால் வந்திருக்கிறோம் அதனாலேயே திருட்டு போன்ற குற்றங்கள் குறைந்திருக்கின்றன.

கொலைக்கு கொலை தான் தண்டனை என்று மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது ஆனால் கொலை 1953க்கும் 2012க்கும் இடையில் 251.3% அதிகரித்துள்ளது. இது பாலியல் குற்றத்தின் அளவை விட குறைவு தான் ஆனால் இங்கு நடக்கும் கொலைகள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடப்பவை தான் அதிகம். அவர்கள் உணர்ச்சி வயத்தில் இருக்கும் பொழுது தண்டனைகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். திட்டமிட்டு நட்த்தப்படும் கொலைகளும் அரசியல் கொலைகளும் இங்கு பெரும்பாலும் மரணதண்டனைக்கு உட்படுவதில்லை. கொலை செய்துவிட்டு சரணடைந்தால் தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்ற விதியின் கீழாக இவர்கள் தூக்கு கயிறில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். மரணதண்டனை கிடைக்கும் அதனால் குற்றம் செய்யவில்லை என்று எந்த குற்றவாளியும் சொல்வதில்லை, எந்த குற்றவாளியும் தண்டனை கிடைக்கும் என்பதால் குற்றம் செய்யாமல் இருப்பதில்லை மாட்டாமல் தப்பிவிடுவோம் என்ற நினைப்பில் தான் செய்கிறார்கள் திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள்.

மேற்கு வங்க பெண்ணிற்க்கு நடந்த கொடுமை என்பது, ஆணாதிக்க சமூகமாக வளர்க்கப்பட்ட ஆண்களால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் 900% அதிகரித்துள்ளது இதை குறைக்கவேண்டும் என்றால் இங்கு ஒட்டுமொத்தமாக சமூகத்தின் போக்கை மாற்றவேண்டும் வருங்கால சந்ததியினருக்கு பெண் ஒன்றும் போகப்பொருள் அல்ல, குழந்தை பெற்று தரும் இயந்திரமும் அல்ல, பெண் ஒரு சக மனிதப் பிறவி என்பதை உணரவைக்க வேண்டும். இதை நோக்கிய பயணமே மனித உரிமைகளை காக்கும் பயணமாக அமையும்.

சாதிவெறி ஆதிக்க மனப்பான்மையை அழித்தொழிக்க வேண்டும் என்று கூட நீங்கள் மரணதண்டனை வேண்டும் என்று வழியுறுத்தியிருக்கலாம். ஆனால்  சமூகத்தின் சிந்தனைகளை செயல்களையும் மாற்றும் பொழுது சாதியம் என்பதை அழித்தொழிக்க முடியும். சாதியத்தின் கூறுகளை அறுப்பது என்பது மிகவும் கடினமான விசயம் ஆனால் அதை நோக்கிய பயணத்தை தான் நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தான் ஒரு மனிதனின் பெயரை வைத்து அவன் இந்த சாதி என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது தான் இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான வழி.

மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது ஒரு மனிதன் இந்த சமுகத்தில் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது. இங்கு சாதிகளின் கீழாக மனிதனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்து வைத்திருக்கும் கொடுமையை என்று உடைத்தெரிகிறோமோ அன்று தான் உண்மையான மனித உரிமையை நோக்கிய பயணமாக இருக்கும். இல்லாவிடில் ஆளும் வர்க்கம் அடிக்கும் பொழுது மட்டும் மனித உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று அரசை நோக்கி குரல் கொடுக்கும் ஒரு விசயமாகி விடும். அரசும் நமது குரலை உரிமைக் குரலாக பார்க்காது ஊடகங்கள் இங்கு அரசின் தயவில் தான் நடக்கிறது என்பதால், அரசும் ஊடகமும் நமது மனித உரிமை பறிப்பிற்கு எதிரான குரலை வெறும் வெற்றுக் கூச்சலாகவே கடந்து செல்லும்.

ஒரு மனித உயிரை தவறு செய்தான் என்பதற்காக பறிப்பதும் மனித உரிமை மீறல் தான். ஒரு தவறு செய்தவனை திருத்தி நல்வழிப்படுத்துவது தான் மனித நேயம் மிக்க செயல்.

வாருங்கள் கை கோற்போம் மரணதண்டனையை ஒழித்து மனித நேயம் காப்போம்.



Sunday, February 9, 2014

மாமுலுக்காக ஒரு மதக்கலவரம் - Tamil Aman


TK மார்க்கெட் இல் அதிகமாக வியாபாரம் செய்வது முஸ்லிம்கள்... அங்கே ஒரு போலிசுக்கு மாமுல் வசூலித்து கொடுப்பவன் இந்து முன்னணி நபர்... ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் அமைப்பாக ஒன்று சேர்ந்தவுடன் மாமுல் கொடுப்பதை நிறுத்தினர். அது போலிசுக்கு பெரும் இழப்பக மாறியது. முஸ்லிம்கள் நோக்கி அவர்களின் மூர்க்கதனம் வெளிப்பட்டது.... அதிகமாக கஞ்சா கேஸ்  போட்டு முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பினார்கள்.. தடா சட்டங்கள் கூட பயன்படுத்தப்பட்டன... மாறாக இந்து முன்னணி அமைப்பிடம் நட்பு பாராட்டினர். விநாயகர் சத்ருதி விழாக்களை அதிகமகா கொண்டாட பாதுகாப்பு அளித்தனர். இந்த நிலையில் போலீஸ் தனக்கு எதிரி என்று முஸ்லிகள் போலிசை வெறுத்தனர்...  இரு பக்கமும் தொடர் கொலைகள் மாறி மாறி நடந்தது....

அல் உமா அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் பலம் பெற தொடங்கியது.. ஒப்பணகார வீதி, ராஜ வீதி, கூலி மூக்கு, ஐந்து முக்கு , மரக்கடை, உக்கடம், TK மார்க்கெட், உக்கடம் மார்கெட் போன்றவை முஸ்லிம்கள் வசம் இருந்து வந்தது. இந்த இடங்களில் இருந்து போலிசுக்கு மாமுல் கிடைக்காத ஆத்திரத்தில் சிலர் இருந்து வந்தனர்.  இந்த நிலையில் காவலர் செல்வராஜ் வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து அபராதம் விதித்தார். அவர்களும் கட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது செல்வராஜ் ஏதோ கெட்ட வார்த்தை பேசியதாக சொல்லி மூவரில் இரண்டு பேர் கத்தியை எடுத்து கொண்டு வந்து குத்தி விட்டனர். இதில் இறந்து விட்டார். இந்த கொலைக்காக அன்சாரி அவர்கள் உடனே காவல் நிலையம் சென்று கொலையாளிகளை நாங்க ஒப்படைக்கிறோம். மேற்கொண்டு நடந்த சம்பவத்திற்கு நீங்கள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுங்கள் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று சொல்ல .. அங்கே அன்சாரி காவல் அதிகாரிகளால் தாக்கப்பட வன்முறை ஆரம்பிகிறது...

போலிஸ் நடைவண்டி தெருவோர வியாபாரிகள் அனைவரையும் கண்ட படி அடிக்கிறது. அவர்களின் கடைகளை எரிக்கிறது. இந்த கலவரத்தில் இந்து முன்னணி போலீஸ் கூட கூட்டு வைக்கிறது கிட்ட தட்ட 200 கோடிக்கு மேல் பொருளாதரத்தை சூறை யாடுகிறார்கள்..  போலீஸ் வேலை நிறுத்தம் செய்கிறது. துப்பாக்கி சூடு நடத்துகிறது வாகனங்களை போய்கொண்டு இருந்தவர்களை கண்டபடி சுடுகிறது. பதினேழு பேரை கொள்கிறது காவல்துறை. அவர்கள் அனிவரும் முஸ்லிம்கள்.. இந்து முன்னணி முஸ்லிம்கள் வீடுகளுக்குள் செல்கிறது அனைவரையும் அடித்து உதைக்கிறது... மானபங்கம் படுத்துகிறது. மருத்துவமணைக்கு சிகிச்சைக்கு சென்றவரை கூட பெட்ரோல் ஊற்றி எரிக்கிறது.....

மிகபெரும் அவலங்களை முஸ்லிம் சமுகம் எதிர்கொள்கிறது. அந்த இயலாமை கோபமாக வளருகிறது. அல் உமா பெரும் எதிர்வினை வன்முறையை செய்ய ஆயுத்தம் ஆகிறது. பொருளாதாரம் சேர்க்கிறது. வெடி குண்டுகளை தயார் செய்கிறது. போலீஸ் அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறது. தமுமுக அமைப்பு காவல்துறையிடம் புகார் தெரிவிக்கிறது. முஸ்லிம்கள் ”தமுமுக”வை புறக்கணிகிறார்கள்.  பிப்ரவரி நாள் குறிக்கிறார்கள்,  அத்வானிக்கு குறி வைகிறார்கள், அனைத்தும் போலிசுக்கு தெரிகிறது. ஏகப்பட்ட பேர் போலிசுக்கு தகவல் சொல்லுகிறார்கள்.  இன்று மாலை குண்டு வெடிக்க போகிறது எப்படியவது தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லுகிறார்கள். போலிஸ் அந்தகைய நிகழ்வு நடைபெற வேண்டும் என்று விரும்பியதோ என்னமோ தெரியவில்லை கண்டுகொள்ளாமல் இருந்தது... குண்டு வெடித்தது.. போலிஸ் மீண்டும் தன்னுடைய  வேட்டையை ஆரம்பித்தது...

ஆனால் போலிசுக்கு குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. மேற்கொண்டு அவர்கள் எந்த வித வன்முறை போக்கையும் கடைபிடிக்காமல் அமைதியாக பல பேரை கைது செய்தது. சில இடத்தில் கேள்வி யே இல்லாமல் சிலரை கொன்றது.  தீவிரவாதிகள் என்று சொல்லி அனைத்தையும் மூடி மறைத்தது....  காவலர் குடியிருப்பு வெடிகுண்டு எல்லாம் நாடகம்..  அதே போல் ஆர் எஸ் புரம் கார் வெடி குண்டும் ஒரு நாடகம்.. மேற்கொண்டு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்த செயல்கள் அவை... வெடிகுண்டு புதையல் என்று சொல்லி கைப்ற்றிய குண்டுகள் எத்தனை என்று கூட சொல்லாமல் மறைத்து விட்டு, போகும் இடம் எல்லாம் வெடி குண்டுகள் கைபற்றினோம் என்று முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடத்தையும் காவல்துறை வசம் கொண்டுவந்தனர்.......

இவை அனைத்தும் சுருங்க பதிவே..... குண்டு வெடிப்புகள் எந்த வகையிலும் நியாயம் இல்லையோ அதே போன்று தான் நவம்பர் கலவரமும் நியாயம் இல்லை....  போலிஸ் மற்றும் சமுக விரோத கும்பல் கைகோர்த்தால் என்ன ஆகும் என்பதற்கு எடுத்துகாட்டு தான் கோவை குண்டு வெடிப்பு சம்பவம்... இது நடக்கும் போது நான் இங்கே நின்று கொண்டு இருந்தேன்.. அங்கே நின்று கொண்டு இருந்தேன். ஒரு குழந்தையின் தலை வந்து விழுந்தது என்று கதை அளந்து விடுவார்கள். அவர்களிடம் அவர்களிடம் நேரடியாக பேசினால் அவர்கள் சொல்லுவது அனைத்தும் பொய் எனபது தெளிவாகும்.... ஒரு அமைதியை கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... இந்துத்துவவாதிகளின் அமைதி எனபது  மயான  அமைதி ...

நன்றி தோழர் Tamil Aman எழுதியவை..