Sunday, January 26, 2014

தேசியத் தலைவர் பெயரில் வியாபாரம் 3


1. The petitioner herein has been considered to be the only person response for leakage of information and for the telecast and publication of the information. He has also adverted to, that one Dr.Subramanian Swamy, on 12.05.2008 had addressed the press conference and released to the press an audio CD containing a conversation between Tmt.Poongothai Aladi Aruna, the then Social Welfare Minister and Thiru.S.K.Upadhyay who had been recording all incoming telephone calls in his official telephone No.24612561. He has canvassed that the conversation which was released by Dr.Subramanian Swamy was one of those conversations including the one recorded by Thiru S.K.Upadhyay since 2005.

இங்கு ஆச்சிமுத்து சங்கர் ஒரு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது அதற்கான நீதிமன்ற தீர்ப்பை கொடுத்துள்ளேன்.. இதில் பெட்டிசனர் என்பது ஆச்சிமுத்து சங்கரை குறிக்கும். இவர் 2008ல் சூனா சாமியுடன் அதாவது தமிழினத்தின் மிகப்பெரும் எதிரியுடன் கைகோர்த்து நின்று அமைச்சர் திருமதி பூங்கோதை ஆலடி அருணாவும் அன்றைய விஜிலென்ஸ் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான காவல் துறை அதிகாரியான உபாத்யாயவுடன் பேசிய  தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். அது என்ன உரையாடல் என்பதற்கு முன் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை திமுக ஆட்சி காலத்தில் இருந்தவர் என்பது முக்கியமானது, இவர் எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை...

ஆச்சிமுத்து சங்கர் ஒரு காவல் துறையில் பணியாற்றிய பணியாளர், அதாவது சம்பளத்தை மட்டும் நம்பாத நேர்மையான வாழ்க்கை வாழ விரும்பாத, அதிகமாக சம்பாதிக்க விரும்பும் துறையை தேர்ந்து எடுத்து அதில் பணியாற்றியவர். சிலர் வாய்ச்சவடலாக்கு வேண்டும் என்றால் காவல் துறையை திருத்த போகிறேன் என்று சொல்லலாம் ஆனால் அது நாய் வாலை நிமிர்த்துவதை விடக் கடினமானது என்பது இவர்கள் அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு தேவையானது கிம்பளம் தான் அதற்காக காவல்துறையில் சேர்ந்தவர் தான் ஆச்சிமுத்து சங்கர். எந்த ஒரு அலுவலகம் ஆனாலும் அதுவும் கிம்பளம் புரளும் துறையில் உட்பூசல் என்பது சர்வ சதாரணம், அந்த உட்பூசலில் பூத்த காவாளி தான் இந்த ஆச்சி முத்து சங்கர், தனக்கு பிடிக்காத அதிகாரிகளைப் பற்றி எழுத உபயோகிக்கும் தளம் தான் சவுக்கு.. இதைப் புரியாமல் நம்மவர்கள் அவரை புரட்சியாளராக நினைக்கின்றனர். அப்படி புரட்சியாளராக நானும் நினைக்க தயார் ஆனால் எட்டு அவலட்சணமும் பொருந்திய இவர் இது வரை காவல்துறை தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வைத்திருக்கும் பல நூற்றுக்கணக்கான சிறைவாசிகளுக்காக எதையாவது செய்துள்ளாரா... இல்லை..



ஏன் சிறைவாசிகளில் பலர் நிரபராதிகள் வேலூர் சிறையில் ஒரு ஆயுள் தண்டனை கைதி இருக்கிறார் அவர் நிரபராதி தான் ஆனால் ஆயுள் சிறையை அனுபவிக்கிறார்.. அவர் யார் என்ன என்று டபுக்கு டப்பா டம் என்று சொல்வாரா இவர்... 

கிம்பளத்தை நம்பியே காவல்துறை பணியில் சேர்ந்த ஆச்சிமுத்து சங்கர் எப்படி உண்மை சொல்வார்.. காவல்துறையில் உத்தமர்களே இல்லையா என்று கேட்கலாம் நீங்கள்?? என் பதில், இல்லை உத்தமனாக யாரும் காவல் துறை பதவியை ஏற்பதில்லை அப்படியே ஏற்றாலும் அவர்கள் உத்தமர்களாக இருப்பதில்லை..

Thursday, January 16, 2014

தேசியத் தலைவர் பெயரில் ஒரு வியபாரம் 2



இது ஒரு இயக்கத்தின் இணையம் ஆச்சிமுத்து சங்கரின் பெயரில் பதியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் முதலில் சங்கரை ஆதாரித்து அவர் காவல்துறைக்கு எதிராக போராடுவதாக நினைத்து உதவி செய்தார்கள் என்று சொல்கிறார்கள். “புலிகளுக்கு அப்பால்” எனும் புத்தகத்தை தோழர் தியாகு, மற்றும் தோழர் விடுதலை ராஜேந்திரனை வைத்து ஆச்சிமுத்து சங்கர் வெளியிட்டார். அந்த மேடையிலேயே தோழர் விடுதலை ராஜேந்திரன் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கிழித்தெறிந்தார். அதன் பிறகு ஒரு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தாரான ஆச்சிமுத்து சங்கர் நான் புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை என்று வழிந்தார். 

இவர் தான் இங்கு சில புத்தக பதிப்பாளர்களை விமர்சிக்கிறார்.. இவரால் விமர்சிக்கப்படும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா எனபதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்ன புத்தகம் போடுகிறோம் எதை தமிழில் மொழிமாற்றம் செய்கிறோம் என்பதைப் பற்றிய சிறிது அறிவுகூட இல்லாமல் ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அதுவும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை தான் நடத்திய ப்ளாக்கில் இருந்து சவுக்கு இணையதளமாக பதியும் வரை தொடர்ந்து முகப்பில் வைத்துக் கொண்டு இருக்கும் இந்த மாபெரும் பதிப்பாளர், தான் மொழிமாற்றம் செய்து பதிவிட்ட புத்தகத்தை முழுதாக படிக்கவில்லை என்று சொன்ன மாபெரும் புத்திசாலி தான் இவர். சரி ஒரு வேளை இவர் பதிப்பகத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 புத்தகங்கள் பதிவிட்டு வெளிவருகிறது போலும்.. எனக்கு தெரிந்து இந்த ஒரு புத்தகம் தான் சவுக்கு வெளியிட்டது.. 



இப்படி ஆரம்பத்தில் இருந்தே அனைத்து உட்டாலங்கடி வேலையையும் செய்து கொண்டே வருகிறார். சரி இவரின் பெயரில் பதியப்பட்டிருந்த இந்த இணையம் யாருடையது என்பதை பார்ப்போம்.. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதல இயக்கம் என்ற பெயரில் இயங்கி வருபவர்கள், தோழர் பொழிலம் முதற்கொண்டு வளர்த்தெடுத்த இயக்கம். இன்று இது சிதறியுள்ளது பல பெயர்களில் பலர் இயங்கி வருகின்றனர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயரில். ஆனால் இந்த இயக்கத்தின் இணையத்தை Prisoners Forum என்ற பெயரில் ஆச்சிமுத்து சங்கர் என்பவர்தான் உரிமையாளராக பதியப்பட்டுள்ளது. 

எனக்கு இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை சுப்பிரமணிய சுவாமியை நீதிமன்றத்தில் வைத்து தாக்கியவர்கள் இவர்கள். அதற்கான வழக்கையும் இன்று வரை சந்தித்தே வருகின்றனர் ஆனால் இவர்களுக்குள்ளும் ஊடுருவி நின்றவர் தான் இந்த ஆச்சிமுத்து சங்கர் என்பதற்கான ஆதாரம் இது தான். 

தேசியத்தலைவர் பெயரில் ஒரு வியபாரம்..


நம்முடன் சிலர் இருக்கிறார்கள் அவர்களை புரட்சிக்காரர்களாகவும் அவர்கள் தான் நம் இனத்தின் மீட்சியாகவும் நினைக்கிறோம். ஆனால் நம்மை பிரித்தாளும் ஆரிய சாதிய வர்க்கத்தை தொடர்ந்து பின்பற்றும் வெங்காயங்கள் இவர்கள்… இந்த வெங்காயங்களை அடையாளம் கண்டு கொள்ளவேண்டியது நமது முதல் பணியாக இருக்க வேண்டும். அதை விடுத்து இவர்கள் தான் தமிழ் சமுகத்தின் ஒரு சாதி பிரிவினர் இல்லை மன்னிக்கவும் ஒரு குடும்ப பிரிவினர் என்றால் நம்மை நாமே செறுப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்….

சரி யார் இவர் என்பதை தெரிந்து கொள்ளும் முன் அவர் செய்தது என்ன என்பதை பார்க்க வேண்டும்… அதற்கு உதாரணமாக இந்த நீதிமன்றத் தீர்ப்பை படியுங்கள்… புரியும் இவர் யார் என்பதும் எந்த தமிழின எதிரியுடன் நின்றார் என்பது..

1. Why Dr.Subramanian Swamy and Tmt.V.S.Chandralekha were not examined by the investigating officer so as to ascertain the source of telephonic conversation between Tmt Poongothai and Tr.S.K.Upadhyay which was released by the later to the press ?

2. Why the investigating officer has not seized the computer used by Tr.S.Pattan, who is the Personal Assistant to Mr.S.K.Upadhyay at his residence and sent the same for analysis to find out whether he could be the person who had leaked the conversation in question to the press and Television ?

3. Why theinvestigating agency has not seized the server in building No.23 of the DVAC with a view to find out as to whether any person sitting in the office of the confidential branch of DVAC could have accessed the laptop of Thiru S.K.Upadhyay ?

22. This Court has carefully considered the submissions made on behalf of both sides. The submissions made on behalf of the petitioner hinges around both questions of fact and question of law. In so far as the questions raised by the learned counsel for the petitioner this Court is of the considered view that it could very well be agitated before the trial court during the course of trial. In so far as the question of law relating to non granting of sanction of prosecution in respect of Section 72 of Information Technology Act is concerned, the charge sheet levelled against the petitioner cannot be quashed on this ground alone.

23. With regard to the question of facts are concerned, the High Court will not enter into an enquiry of disputed facts or thereafter, hold in favour of the accused. The inherent power cannot be invoked to quash the charge only on the ground of question of facts. This principle is laid down in Maheshwari Oil Mill v. State of Bihar reported in 1978 CrLJ 659.
24. Further the High Court has also no jurisdiction to interfere with the prosecution at the preliminary stage by prejudging the question without affording reasonable opportunity to the prosecution to substantiate the allegations. This principle has been laid down by the Hon'ble Supreme Court of India in State of Bihar v. Raj Narain Singh reported in AIR 1991 SC 1308.

25. Besides this in State of Maharashtra v. Ishwar Piraji Kalpatri reported in 1996 CrLJ 1127 the Hon'ble Supreme Court of India has also observed that;

"The Court should not except in extraordinary circumstances exercise its jurisdiction under Section 482 Cr.P.C. so as to quash the prosecution proceedings after they have been launched. The power of quashing a criminal proceedings should be exercised very sparingly and with circumspection and that too in the rarest of rare cases; the Court will not be justified in embarking upon an enquiry as to the reliability or genuineness or otherwise of the allegations made in the FIR/complaint, the extraordinary or inherent power does not confer an arbitrary jurisdiction on the Court to act according to its whim or caprice."

26. With regard to the arguments relating to the lodging of complaint by an incompetent person i.e.; by the Principal Secretary Home Department Government of Tamil Nadu as advocated to by the learned counsel for the petitioner, this Court is of the considered view that this piece of arguments can also be not countenanced for the simple reason as it is left open to the petitioner to put forth before the trial Court during the course of trial.

27. Keeping in view of the observations made above, the decision in M.S.M.Haneefa and others vs. The Forest Ranger, Shencotta Range reported in 1991 Crl.L.J. 712 which is relied upon by the learned counsel for the petitioner is not made applicable in this case.

28. Having regard to the submissions made on either side, and on cursory perusal of the materials available on record, this Court is of firm view that, the question of sanction of prosecution can be taken during the conduct of trial or any such of the proceedings and therefore, the proceedings i.e.; the charge sheet at this stage cannot be quashed on the ground of want of sanction in respect of the Section 72 of Information Technology Act 2000. With this observation, the petition is dismissed. Consequently connected miscellaneous petitions are also closed.

இது மட்டுமல்ல இன்னும் இருக்கிறது..









பிராபகரன் பெயரில் ஒரு பித்தலாட்டம்..



தோழர் கொளத்தூர் மணி அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது தான்Achimuthu Shankar (சவுக்கு சங்கர்) அவர்களின் இன்றைய குடும்பம்.. சரி எதுக்கூடா இந்த படத்தை எடுத்து பகிர்ந்தேன் அதுவும் கொளத்தூர் மணி அண்ணனுடன் இருக்கும் படத்தை போட்டேன் என்பது தானே கேள்வி..

ஆம் இந்த படத்திற்கு அடுத்தப்படம் அண்ணா பிறந்தநாள் விழாவில் செப்டம்பர் 11, 2011ம் அன்று இவர் அண்ணனுடன் எடுத்துக் கொண்டது. அதற்கடுத்து இவர் பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து கொண்டது போல் இணையத்தில் உதார்விட்டார், ஆனால் அதற்கடுத்து ஒரு மாதம் கூட இருக்காது என்னை தொடர்பு கொண்டார் அதன் பின்னார் தோழர் ஒருவரிடம் தொடர்பு கொடுத்தேன் அப்பொழுது. 2009ல் நடந்த முத்து குமார் ஊர்வலத்தில் நடந்த ஒரு அடிதடியைப் பற்றி பேசியிருக்கிறார். பேசி முடித்தவுடன் தோழர் என்னிடம் சொன்னது இவருடன் தொடர்பை முடித்துக் கொள் என்பது தான். எனென்றால் முத்துகுமார் ஊர்வலத்தில் எங்களுடன் இருந்த தோழர்களை அடித்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் நீங்கள் நினைப்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அன்று அடிவாங்கி இன்று வரை சிறுநீரக கோளாறு வரை அனைத்தையும் அனுபவிப்பவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் அதுவும் அந்த இடத்தில் இருந்தவர்கள் யார் யார் என்பது தெரியாமல், இவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தாரோ அநத இயக்கதைப் பற்றியே குறை சொன்னார். இது தான் இவர் வேலை.. இதன் பிறகு மாணவர் போராட்டத்தின் போது மிகப்பெரும் கூக்குரல் எழுப்பினார் இவர்.. அதாவது மே 17 இயக்கம் மாணவர் போராட்டத்தை தனதாக்கிக் கொள்ள முயல்கிறது என்று.. ஆனால் லயோலா மாணவர்கள் போராட்டத்திற்கான தனது ஆதரவை தவிர வேறு எதையும் செய்யவில்லை மே 17 இயக்கம் ஆனால் அன்று மாணவர் போராட்டத்தை திசை திருப்பிய ஊடகங்களுடன் சேர்ந்து நின்ரு அதாவது மாணவர் போராட்டம் “அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்” என்று சொன்னதை ஊடகங்கள் திரித்ததை தவிர சிலரின் மாணவர் இயக்கங்களும் திரித்தது அந்த இயக்கம், இந்தியாவின் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சொன்னது அதனுடன் சேர்ந்து தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு என்ற அமைப்பும் இன்று தமிழ்நாடு மக்கள் கட்சியுடன் சேர்ந்து நிற்கிறது. அது எப்படி என்பதை பற்றி மட்டும் பேசமாட்டார் ஆனால் ஊரில் இருக்கும் மற்ற இயக்கங்களின் மீது மட்டும் பழி சொல்வார்.

லயோலா மாணவர்கள் தனியாகத் தான் இன்றும் இருக்கின்றனர். ஆனால் அன்று உருவான தமிழீழத்திற்கான மாணவர் போராட்டகுழு எங்கிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்...

குறிப்பு - இதில் இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி போராடியதை ஏற்கெனவே பதிந்துள்ளேன் புகைப்பட ஆதாரங்களுடன்...

Thursday, January 9, 2014

தமிழக அரசியல்.. முந்தாநாளும், நேற்றும், இன்றும் மற்றும் நாளையும்...


ரொம்ப சிம்பிளுங்க தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டியது...

மக்களுக்கான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்து அரசியல் செய்வது..
அடுத்து மக்களுக்கான அரசியலை சமரசம் செய்வது... இது இன்று நேற்றல்லா அய்யா ஜீவா காலத்தில் இருந்து தொடர்வது...

சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி என்று பல பெயர்களை கேட்டிருப்போம், ஆனால் ஜீவா அண்ணனும் பெரியார் அப்பாவும் ஒன்றாக வேலை பார்த்த காலங்கள் அது. அவர்கள் இருவரும் பிரிந்தனர் எதற்காக ஜீவா அண்ணன் நினைத்தார் வர்க்கம் என்ற ஒன்றை வைத்து பொதுவுடமையின் கீழ் மக்களை ஒன்றிணைத்தால் போதும் சாதியப் பிரச்சனையில் இருந்து அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்று நினைத்தார். அதானல் தந்தை பெரியாரை விட்டு வந்து சாதிய ஒழிப்பு இந்து மத எதிர்ப்பின் முதல் கட்டம் எனபதை விடுத்து மக்களில் இருப்பவர்கள் அனைவரிலும் வர்க்கம் இருக்கிறது, அதாவது தொழிலாளி முதலாளி இருக்கிறான் இதை வைத்து மக்களை ஒருங்கிணைக்கலாம் என்று நினைத்து தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்.. ஆனால் இன்று பொதுவுடமை கொள்கை என்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு எதிரியாகவே நினைக்கும் அளவுக்கு அடைபட்டு நிற்கிறது. பொதுவுடமை எந்த மண்ணில் பேசப்படுகிறதோ அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு பேசவேண்டும் அதை விடுத்து நான் ரஸ்யாவில் பேசினேன் க்யுபாவில் பேசினேன் வெற்றி பெற்றது என்றால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், கொல்வார்கள் என்பதை புரிந்து கொள்ளாத பகுத்த்தறிவுவாதம் இந்த மார்க்சிய லெனின்ய மாவோஸ்யிய தத்துவம் தமிழினத்திற்கு....

ஜீவாவை பொதுவுடமை கட்சிக் காரர்களே இன்று தூக்கி எறிந்துவிட்டனர்...... நினைத்துக் கூட பார்ப்பதில்லை...

அதே போல் தான் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியில் வந்த திரவிட முன்னேற்றே கழகம் என்ற பெயரில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணாவும் கருணாநிதியும். அதாவது தங்களுடைய ஆசான் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மறந்து மக்களில் பெரும்பாலனவர்கள் கடவுளை நம்புகிறார்கள் அவர்களுக்கான அரசியலை செய்வோம் அவர்களை அரசியல் மயப்படுத்துவோம் என்ற கொள்கையை அடகு வைத்துவிட்டு மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதன் கீழான அரசியலை செய்வோம் என்று தாங்கள் இது வரை செய்து வந்த பணிகளை மறந்து மக்களுக்காக மாறினர். இங்கு தான் ஆரம்பித்தது இன்றைய அவலம்.. 

இதன் பிறகே எம்.ஜி.ஆர் என்பவரும் தமிழகத்தின் முதல்வராக வர முடிந்தது அவர் அனைவரையும் அரவணைத்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் தாண்டி சென்றார். ஆனால் இவை எல்லாம் வெற்றியா இல்லை மக்களை அரசியல் படுத்துவதற்கு பதில் மக்களின் தேவைக்கு அரசியலை மாற்றிக் கொண்ட மண்ணாங்கட்டி தனம். மக்களை என்று அரசியல் மயப்படுத்த முடியாது என்று நினைத்தார்களோ அன்றே இவர்கள் போராளி என்ற தகுதியை இழந்து வெறும் சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இப்படி மக்களை அரசியல் மயப்படுத்த முயலாமல், மக்களுக்கான அரசியல் என்பதின் அடுத்தக்கட்டமே இன்று சில இளைஞர்கள் இங்கிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கிறேன் என்ற பெயரில், சாதியாக பிரிந்திருக்கும் தமிழனை அது சாதிப் பெயர் இல்லை  தனது குடும்ப பெயர் என்று சொல்லும் நிகழ்வு.. சாதியம் எந்த அளவு தன் உடலோடும் உணர்வோடும் ஒண்றிப்போயிருக்கிறது எனபதினை உணராத கருத்தியலாக்கம்.

இவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்றால் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்ளும் சாதிய அடையாளங்கள் நாம் தமிழர் என்று சொல்வதற்கான அடையாளமாக நினைத்துவிட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் சொல்ல விரும்புவது சாதியத்தை மறுக்கும் திராவிடர் கொள்கை திராவிட கொள்கையாக மாறும் பொழுதே இது வரை நம் மீது சுமத்தப்பட்ட சாதிய அடையாளம் இந்து மதம் என்ற ஆணிவேரின் கீழ் தான் என்பத உணராமல் செய்தவர்கள். அதாவது திராவிடம் என்பது கடவுள் மறுப்பை முதலில் கொண்டது, இதை பேசிய அதாவது பெரியாருக்கு முன்பே பேசிய அயோத்திதாச பண்டிதரும் இதையே செய்தார் என்ற நினைப்பு. ஆனால் அவர் பெளத்தம் என்பதை ஏற்றுக்கொண்டு அதாவது ஒரு மனிதன் தனது கையாலகத் தனத்தின் அத்தனை பலியையும் அடுத்தவர் மேல் போடுவான் அப்படி சுலபமாக போட முடிந்தது கடவுள் என்பவன் மேல்... தான் தோல்வி அடைந்தவுடன் கடவுள் அனுக்கிரகம் இல்லை அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று தனது இயலாமையை அடுத்தவர் மேல் சுமத்தும் ஓர் கருவி தான் கடவுள். என்பதை மறந்து பெளத்தத்தை எடுத்தார் அது தன் மக்களுக்கு அடுத்த வழியை அதாவது எஸ்கேபிசம் எனும் தப்பிக்கும் கலையைய் தான் சொல்லிக் கொடுக்கிறது என்பதை புரியாமல்..

இந்த கடவுளை வைத்து நம்மில் பிரிவினை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தவரக்ளை எதிர்ப்பது என்றால் இல்லை என்று சொல்லித் தான் எதிர்க்க வேண்டும். அது தான் மக்களுக்கான அரசியல், அதை விடுத்து மக்களில் பெரும்பான்மையினோர் கடவுளை நம்புகிறார்கள் அவர்களுக்காக நான் வளைந்து கொடுப்பேன் என்பது மக்களுக்கான அரசியல் இல்லை. மக்களுக்கான அரசியல் என்பது அவர்களை அரசியல்மயப்படுத்துவது அதாவது இந்த அரசில் அவர்களுக்கன உரிமையை உணர்ந்து கொள்ள வைப்பது அதை விடுத்து மக்கள் கடவுளை நம்புகிறான், சாதியை மதிக்கிறான் என்பதற்காக நாம் மாறுவது முற்போக்குவாதி மற்றும் இனவிடுதலையை மதிக்கும் ஒருவர் செய்யும் செயல் இல்லை...

மக்களே முதலில் முடிவு செய்யுங்கள் மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்ற அரசியலை கையில் எடுத்துக் கொண்டு, அதில் சமரசம் செய்துகொள்வது மக்களுக்கான அரசியல் இல்லை.. உங்கள் பேச்சை அனைத்தையும் எடுத்துக் கொண்டு புரட்சி உருவாகும் காலம் எங்குமே இல்லை.. கொயாபல்ஸ் என்ற பேச்சாளியை வைத்து ஹிட்லரை உருவாக்கிய நிலை தான் நமக்கும் ஏற்பட்டு அதன் கீழாகவே நாம் பிரிந்து நிற்கிறோம்.. முதலில் மக்களுக்கான அரசியலை கையில் எடுங்கள், அது மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை போராடுங்கள் அது தான் போராட்டம்.. வலிக்காமல் எந்த வெற்றியையும் நாம் அடைய முடியாது.. பெரியாருக்கு தெரியும் தன்னால் தான் ஏற்றுக் கொண்ட விசயத்தை தன் காலத்தில் முடிக்க முடியாது என்பது, ஆனால் வாழும் வரை போராடினார்.. அது தான் போராட்டம்...

Tuesday, January 7, 2014

அரிஜனங்களின் தந்தை - பி. கக்கன்


இந்த கட்டுரையை எழுதியவர் கக்கன் அவர்கள் தனது தந்தையாக அவர் நினைத்த வைத்திய நாத அய்யரைப் பற்றி.. இதை மட்டும் படித்து தெரிந்து கொள்ளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து சென்றது யார் என்பது புரியும்... இந்த நிகழ்வின் மிச்சப் பகுதிகள் விரைவில்...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.
தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார். ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.
முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.
அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர். அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.
அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.
அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.