Thursday, January 16, 2014

தேசியத் தலைவர் பெயரில் ஒரு வியபாரம் 2



இது ஒரு இயக்கத்தின் இணையம் ஆச்சிமுத்து சங்கரின் பெயரில் பதியப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் முதலில் சங்கரை ஆதாரித்து அவர் காவல்துறைக்கு எதிராக போராடுவதாக நினைத்து உதவி செய்தார்கள் என்று சொல்கிறார்கள். “புலிகளுக்கு அப்பால்” எனும் புத்தகத்தை தோழர் தியாகு, மற்றும் தோழர் விடுதலை ராஜேந்திரனை வைத்து ஆச்சிமுத்து சங்கர் வெளியிட்டார். அந்த மேடையிலேயே தோழர் விடுதலை ராஜேந்திரன் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கிழித்தெறிந்தார். அதன் பிறகு ஒரு புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தாரான ஆச்சிமுத்து சங்கர் நான் புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை என்று வழிந்தார். 

இவர் தான் இங்கு சில புத்தக பதிப்பாளர்களை விமர்சிக்கிறார்.. இவரால் விமர்சிக்கப்படும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா எனபதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்ன புத்தகம் போடுகிறோம் எதை தமிழில் மொழிமாற்றம் செய்கிறோம் என்பதைப் பற்றிய சிறிது அறிவுகூட இல்லாமல் ஒரு விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அதுவும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை தான் நடத்திய ப்ளாக்கில் இருந்து சவுக்கு இணையதளமாக பதியும் வரை தொடர்ந்து முகப்பில் வைத்துக் கொண்டு இருக்கும் இந்த மாபெரும் பதிப்பாளர், தான் மொழிமாற்றம் செய்து பதிவிட்ட புத்தகத்தை முழுதாக படிக்கவில்லை என்று சொன்ன மாபெரும் புத்திசாலி தான் இவர். சரி ஒரு வேளை இவர் பதிப்பகத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 புத்தகங்கள் பதிவிட்டு வெளிவருகிறது போலும்.. எனக்கு தெரிந்து இந்த ஒரு புத்தகம் தான் சவுக்கு வெளியிட்டது.. 



இப்படி ஆரம்பத்தில் இருந்தே அனைத்து உட்டாலங்கடி வேலையையும் செய்து கொண்டே வருகிறார். சரி இவரின் பெயரில் பதியப்பட்டிருந்த இந்த இணையம் யாருடையது என்பதை பார்ப்போம்.. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதல இயக்கம் என்ற பெயரில் இயங்கி வருபவர்கள், தோழர் பொழிலம் முதற்கொண்டு வளர்த்தெடுத்த இயக்கம். இன்று இது சிதறியுள்ளது பல பெயர்களில் பலர் இயங்கி வருகின்றனர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயரில். ஆனால் இந்த இயக்கத்தின் இணையத்தை Prisoners Forum என்ற பெயரில் ஆச்சிமுத்து சங்கர் என்பவர்தான் உரிமையாளராக பதியப்பட்டுள்ளது. 

எனக்கு இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை சுப்பிரமணிய சுவாமியை நீதிமன்றத்தில் வைத்து தாக்கியவர்கள் இவர்கள். அதற்கான வழக்கையும் இன்று வரை சந்தித்தே வருகின்றனர் ஆனால் இவர்களுக்குள்ளும் ஊடுருவி நின்றவர் தான் இந்த ஆச்சிமுத்து சங்கர் என்பதற்கான ஆதாரம் இது தான். 

No comments:

Post a Comment