Thursday, January 9, 2014

தமிழக அரசியல்.. முந்தாநாளும், நேற்றும், இன்றும் மற்றும் நாளையும்...


ரொம்ப சிம்பிளுங்க தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டியது...

மக்களுக்கான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்து அரசியல் செய்வது..
அடுத்து மக்களுக்கான அரசியலை சமரசம் செய்வது... இது இன்று நேற்றல்லா அய்யா ஜீவா காலத்தில் இருந்து தொடர்வது...

சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சி என்று பல பெயர்களை கேட்டிருப்போம், ஆனால் ஜீவா அண்ணனும் பெரியார் அப்பாவும் ஒன்றாக வேலை பார்த்த காலங்கள் அது. அவர்கள் இருவரும் பிரிந்தனர் எதற்காக ஜீவா அண்ணன் நினைத்தார் வர்க்கம் என்ற ஒன்றை வைத்து பொதுவுடமையின் கீழ் மக்களை ஒன்றிணைத்தால் போதும் சாதியப் பிரச்சனையில் இருந்து அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்று நினைத்தார். அதானல் தந்தை பெரியாரை விட்டு வந்து சாதிய ஒழிப்பு இந்து மத எதிர்ப்பின் முதல் கட்டம் எனபதை விடுத்து மக்களில் இருப்பவர்கள் அனைவரிலும் வர்க்கம் இருக்கிறது, அதாவது தொழிலாளி முதலாளி இருக்கிறான் இதை வைத்து மக்களை ஒருங்கிணைக்கலாம் என்று நினைத்து தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்.. ஆனால் இன்று பொதுவுடமை கொள்கை என்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு எதிரியாகவே நினைக்கும் அளவுக்கு அடைபட்டு நிற்கிறது. பொதுவுடமை எந்த மண்ணில் பேசப்படுகிறதோ அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டு பேசவேண்டும் அதை விடுத்து நான் ரஸ்யாவில் பேசினேன் க்யுபாவில் பேசினேன் வெற்றி பெற்றது என்றால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், கொல்வார்கள் என்பதை புரிந்து கொள்ளாத பகுத்த்தறிவுவாதம் இந்த மார்க்சிய லெனின்ய மாவோஸ்யிய தத்துவம் தமிழினத்திற்கு....

ஜீவாவை பொதுவுடமை கட்சிக் காரர்களே இன்று தூக்கி எறிந்துவிட்டனர்...... நினைத்துக் கூட பார்ப்பதில்லை...

அதே போல் தான் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியில் வந்த திரவிட முன்னேற்றே கழகம் என்ற பெயரில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணாவும் கருணாநிதியும். அதாவது தங்களுடைய ஆசான் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மறந்து மக்களில் பெரும்பாலனவர்கள் கடவுளை நம்புகிறார்கள் அவர்களுக்கான அரசியலை செய்வோம் அவர்களை அரசியல் மயப்படுத்துவோம் என்ற கொள்கையை அடகு வைத்துவிட்டு மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதன் கீழான அரசியலை செய்வோம் என்று தாங்கள் இது வரை செய்து வந்த பணிகளை மறந்து மக்களுக்காக மாறினர். இங்கு தான் ஆரம்பித்தது இன்றைய அவலம்.. 

இதன் பிறகே எம்.ஜி.ஆர் என்பவரும் தமிழகத்தின் முதல்வராக வர முடிந்தது அவர் அனைவரையும் அரவணைத்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் தாண்டி சென்றார். ஆனால் இவை எல்லாம் வெற்றியா இல்லை மக்களை அரசியல் படுத்துவதற்கு பதில் மக்களின் தேவைக்கு அரசியலை மாற்றிக் கொண்ட மண்ணாங்கட்டி தனம். மக்களை என்று அரசியல் மயப்படுத்த முடியாது என்று நினைத்தார்களோ அன்றே இவர்கள் போராளி என்ற தகுதியை இழந்து வெறும் சந்தர்ப்பவாதிகளாகிவிட்டனர். இப்படி மக்களை அரசியல் மயப்படுத்த முயலாமல், மக்களுக்கான அரசியல் என்பதின் அடுத்தக்கட்டமே இன்று சில இளைஞர்கள் இங்கிருக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கிறேன் என்ற பெயரில், சாதியாக பிரிந்திருக்கும் தமிழனை அது சாதிப் பெயர் இல்லை  தனது குடும்ப பெயர் என்று சொல்லும் நிகழ்வு.. சாதியம் எந்த அளவு தன் உடலோடும் உணர்வோடும் ஒண்றிப்போயிருக்கிறது எனபதினை உணராத கருத்தியலாக்கம்.

இவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்றால் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்ளும் சாதிய அடையாளங்கள் நாம் தமிழர் என்று சொல்வதற்கான அடையாளமாக நினைத்துவிட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் சொல்ல விரும்புவது சாதியத்தை மறுக்கும் திராவிடர் கொள்கை திராவிட கொள்கையாக மாறும் பொழுதே இது வரை நம் மீது சுமத்தப்பட்ட சாதிய அடையாளம் இந்து மதம் என்ற ஆணிவேரின் கீழ் தான் என்பத உணராமல் செய்தவர்கள். அதாவது திராவிடம் என்பது கடவுள் மறுப்பை முதலில் கொண்டது, இதை பேசிய அதாவது பெரியாருக்கு முன்பே பேசிய அயோத்திதாச பண்டிதரும் இதையே செய்தார் என்ற நினைப்பு. ஆனால் அவர் பெளத்தம் என்பதை ஏற்றுக்கொண்டு அதாவது ஒரு மனிதன் தனது கையாலகத் தனத்தின் அத்தனை பலியையும் அடுத்தவர் மேல் போடுவான் அப்படி சுலபமாக போட முடிந்தது கடவுள் என்பவன் மேல்... தான் தோல்வி அடைந்தவுடன் கடவுள் அனுக்கிரகம் இல்லை அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று தனது இயலாமையை அடுத்தவர் மேல் சுமத்தும் ஓர் கருவி தான் கடவுள். என்பதை மறந்து பெளத்தத்தை எடுத்தார் அது தன் மக்களுக்கு அடுத்த வழியை அதாவது எஸ்கேபிசம் எனும் தப்பிக்கும் கலையைய் தான் சொல்லிக் கொடுக்கிறது என்பதை புரியாமல்..

இந்த கடவுளை வைத்து நம்மில் பிரிவினை உருவாக்கி அதில் குளிர் காய்ந்தவரக்ளை எதிர்ப்பது என்றால் இல்லை என்று சொல்லித் தான் எதிர்க்க வேண்டும். அது தான் மக்களுக்கான அரசியல், அதை விடுத்து மக்களில் பெரும்பான்மையினோர் கடவுளை நம்புகிறார்கள் அவர்களுக்காக நான் வளைந்து கொடுப்பேன் என்பது மக்களுக்கான அரசியல் இல்லை. மக்களுக்கான அரசியல் என்பது அவர்களை அரசியல்மயப்படுத்துவது அதாவது இந்த அரசில் அவர்களுக்கன உரிமையை உணர்ந்து கொள்ள வைப்பது அதை விடுத்து மக்கள் கடவுளை நம்புகிறான், சாதியை மதிக்கிறான் என்பதற்காக நாம் மாறுவது முற்போக்குவாதி மற்றும் இனவிடுதலையை மதிக்கும் ஒருவர் செய்யும் செயல் இல்லை...

மக்களே முதலில் முடிவு செய்யுங்கள் மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்ற அரசியலை கையில் எடுத்துக் கொண்டு, அதில் சமரசம் செய்துகொள்வது மக்களுக்கான அரசியல் இல்லை.. உங்கள் பேச்சை அனைத்தையும் எடுத்துக் கொண்டு புரட்சி உருவாகும் காலம் எங்குமே இல்லை.. கொயாபல்ஸ் என்ற பேச்சாளியை வைத்து ஹிட்லரை உருவாக்கிய நிலை தான் நமக்கும் ஏற்பட்டு அதன் கீழாகவே நாம் பிரிந்து நிற்கிறோம்.. முதலில் மக்களுக்கான அரசியலை கையில் எடுங்கள், அது மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை போராடுங்கள் அது தான் போராட்டம்.. வலிக்காமல் எந்த வெற்றியையும் நாம் அடைய முடியாது.. பெரியாருக்கு தெரியும் தன்னால் தான் ஏற்றுக் கொண்ட விசயத்தை தன் காலத்தில் முடிக்க முடியாது என்பது, ஆனால் வாழும் வரை போராடினார்.. அது தான் போராட்டம்...

No comments:

Post a Comment