தோழர் கொளத்தூர் மணி அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது தான்Achimuthu Shankar (சவுக்கு சங்கர்) அவர்களின் இன்றைய குடும்பம்.. சரி எதுக்கூடா இந்த படத்தை எடுத்து பகிர்ந்தேன் அதுவும் கொளத்தூர் மணி அண்ணனுடன் இருக்கும் படத்தை போட்டேன் என்பது தானே கேள்வி..
ஆம் இந்த படத்திற்கு அடுத்தப்படம் அண்ணா பிறந்தநாள் விழாவில் செப்டம்பர் 11, 2011ம் அன்று இவர் அண்ணனுடன் எடுத்துக் கொண்டது. அதற்கடுத்து இவர் பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து கொண்டது போல் இணையத்தில் உதார்விட்டார், ஆனால் அதற்கடுத்து ஒரு மாதம் கூட இருக்காது என்னை தொடர்பு கொண்டார் அதன் பின்னார் தோழர் ஒருவரிடம் தொடர்பு கொடுத்தேன் அப்பொழுது. 2009ல் நடந்த முத்து குமார் ஊர்வலத்தில் நடந்த ஒரு அடிதடியைப் பற்றி பேசியிருக்கிறார். பேசி முடித்தவுடன் தோழர் என்னிடம் சொன்னது இவருடன் தொடர்பை முடித்துக் கொள் என்பது தான். எனென்றால் முத்துகுமார் ஊர்வலத்தில் எங்களுடன் இருந்த தோழர்களை அடித்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் நீங்கள் நினைப்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அன்று அடிவாங்கி இன்று வரை சிறுநீரக கோளாறு வரை அனைத்தையும் அனுபவிப்பவர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் அதுவும் அந்த இடத்தில் இருந்தவர்கள் யார் யார் என்பது தெரியாமல், இவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தாரோ அநத இயக்கதைப் பற்றியே குறை சொன்னார். இது தான் இவர் வேலை.. இதன் பிறகு மாணவர் போராட்டத்தின் போது மிகப்பெரும் கூக்குரல் எழுப்பினார் இவர்.. அதாவது மே 17 இயக்கம் மாணவர் போராட்டத்தை தனதாக்கிக் கொள்ள முயல்கிறது என்று.. ஆனால் லயோலா மாணவர்கள் போராட்டத்திற்கான தனது ஆதரவை தவிர வேறு எதையும் செய்யவில்லை மே 17 இயக்கம் ஆனால் அன்று மாணவர் போராட்டத்தை திசை திருப்பிய ஊடகங்களுடன் சேர்ந்து நின்ரு அதாவது மாணவர் போராட்டம் “அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்” என்று சொன்னதை ஊடகங்கள் திரித்ததை தவிர சிலரின் மாணவர் இயக்கங்களும் திரித்தது அந்த இயக்கம், இந்தியாவின் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சொன்னது அதனுடன் சேர்ந்து தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு என்ற அமைப்பும் இன்று தமிழ்நாடு மக்கள் கட்சியுடன் சேர்ந்து நிற்கிறது. அது எப்படி என்பதை பற்றி மட்டும் பேசமாட்டார் ஆனால் ஊரில் இருக்கும் மற்ற இயக்கங்களின் மீது மட்டும் பழி சொல்வார்.
லயோலா மாணவர்கள் தனியாகத் தான் இன்றும் இருக்கின்றனர். ஆனால் அன்று உருவான தமிழீழத்திற்கான மாணவர் போராட்டகுழு எங்கிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்...
குறிப்பு - இதில் இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி போராடியதை ஏற்கெனவே பதிந்துள்ளேன் புகைப்பட ஆதாரங்களுடன்...
No comments:
Post a Comment