எளியவர்களில்
சொல் அம்பலம் ஏறாது என்பது ஒரு பழைய வழக்கு, இந்த வழக்கின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டு
அரசியலும் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகு
இந்த பழைய வழக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மிகவும் அருமையான வாய்ப்பாக மாறியது.
அதாவது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள்,
எம்.ஜி.ஆர்
ஆட்சியில் இருந்த வரை அதாவது அவர் ஆட்சியை கைப்பற்றி சாகும் வரை கருணாநிதிக்கு எதிர்
அரசியல் என்பது வெறும் அறிக்கைகள் மட்டுமே. அதாவது தமிழகத்தின் தன்னையும் தன் கட்சியையும்
தக்கவைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் காலையில் எழுந்து காலை கடன் கழிக்கவில்லை என்று செய்தி
வந்தால் கூட அதற்கும் அறிக்கை விடுவார். ”ஒரு மாநில முதல்வர் வாங்கிய கடனை காலையில்
திரும்ப கொடுக்கவிடீல் நாட்டில் எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்” என்று. இது
செய்தி தாள்களில் ஊடகங்களில் வெளிவரும் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் இவர்களை தவிர
வேறு அரசியல் தலைவர்கள் இல்லாத நேரத்தில் அதுவும் எம்.ஜி.ஆர் தன்னை எதிர்க்க வேண்டும்
என்று ஒருவர் நினைத்தாலே ஒன்று வளைத்துப் போடுவார், இல்லையென்றால் போட்டுவிட்டு வளைப்பார்
அவர் குடும்பத்தை.
இத்தகைய
கட்டத்தில் அறிக்கைகள் தான் மக்களுக்கு தமிழகத்தின் வருங்காலத்தை நோக்கிய அரசியலாக
பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவும் இதே அரசியலை
தான் கையில் எடுத்தார். ஜானகியும் இவரும் சேர்ந்து அடித்த கூத்துகள் முடிந்து ஓரமாக
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கருணாநிதி அரியணை ஏறினார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும்
விமர்சிப்பதே தமிழக மக்களுக்கான அரசியல் என்று கடைசி வரை எதிர்கட்சியாக இருந்தபொழுது
எந்த விதமான போராட்டங்களை முன்னெடுக்காமல், வெறும் அறிக்கை போரிலும், ராஜிவ் காந்தியின்
மரணம் எனும் சித்துவிளையாட்டால் கிடைத்த அனுதாபத்தையும் தனதாக்கிக் கொண்டு முதல்வர்
ஆனார் அதுவும் ஆகப்பெறும் எதிர்கட்சியாக இருந்த திமுக இரண்டு இடங்களில் மட்டும் தான்
வெற்றி பெற்றது, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி எதிர்கட்சியாக அமர்ந்தது.
இதன்
பிறகு கருணாநிதியும் அவர் கட்சியின் இருப்பும் திரும்பவும் சந்தேகத்துக்கு இடமானது
தோழர் வைகோ அவர்களை வெளியேற்றியதால் ஆனால் அசராமல் அறிக்கை போரை மட்டும் திரும்பவும்
நடத்தி மறுபடியும் ஆட்சியை பிடித்தார், ஜெயலலிதாவை தோற்கடித்தார். இப்படி தான் கடந்த
22 ஆண்டு காலமாக தமிழக அரசியல் ஒருவர் கையை விட்டு அடுத்தவர் கைக்கு என்று மாறிக் கொண்டிருக்கிறது.
இப்படி அறிக்கை விடுவதையே அரசியலாக மாறிய பின் மக்களும் இந்த தலைவர்களின் அறிக்கைகள்
தான் தங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது என்று இவர்களின் குரல்களை அறிக்கை வாயிலாக
கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
அப்படித்தான்
ஈழத்தில் 2009ல் ஒரு இனப்படுகொலை நடந்த பொழுது அன்று முதல்வராக இருந்தவர் ஈழத் தமிழ்
மக்கள் மீது அக்கரை இருந்தால் இராமஸ்வரம் சென்று நீந்தி போய் அங்கு போராடுங்கள் என்றார்.
ஜெயலலிதாவும் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஒரு இனப்படுகொலையை நியாயைப்
படுத்தினார். சாதரண அப்பாவி மக்களுக்கு என்ன புரியும் அவர்கள் தான் இங்கிருக்கும் தொலைகாட்சியில்
வரும் செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கணிணி மற்றும் இணைய வசதி
படைத்த இளம் தலைமுறை அங்கு நடந்த கோரங்களை பார்த்து வெறுப்புற்று மாற்று அரசியல் படைக்க
கிளம்பிற்று. ஆனால் அப்படி கிளம்பிய இளைஞர் கூட்டம் இன்று தறிகெட்டு தள்ளாடி நிற்கிறது.
இதே வல்லவன் வகுத்ததே சட்டம் என்பது போல் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கொடுக்கும் அறிக்கைகளினால்
தான் எடுக்கும் நடவடிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல்.
தோழர்
தியாகு அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் இதையே தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை
அனைவரும் விரும்பினோம் அவரிடமும் சொன்னோம் ஆனால் அதையெல்லாம் கேட்கவில்லை அவர். போராடுங்கள்
மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுங்கள் என்று தான் கொண்ட கொள்கையில் விடாமல் நின்றார்.
ஆமாம் அவர் வைத்த முதலும் முக்கியமான கோரிக்கை “இலங்கையில் காமென் வெல்த் மாநாடு நடத்தக்
கூடாது இதை இந்திய மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” ஆனால் இந்த கோரிக்கையை திரிக்கும்
வேலை சரியாக செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் அறிக்கையை தமிழர்களின் அரசியலாக பார்த்த
மக்கள் கடந்த மார்ச் மாதமும் அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பாக நடந்த ஐ.நா மனித உரிமை
கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றார்கள். ஆதாவது
அந்த அறிக்கை இலங்கை அரசை கண்டிக்கிறது தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வலியுறுத்துகிறது
என்ற போலி பிம்பம் உருவாக்கியது. கருணாநிதியின் இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க
வேண்டும் என்று கோரி வைத்த வேண்டுதல் அறிக்கை.
ஆனால்
அந்த அமெரிக்க தீர்மானம் நமக்கு தேவையில்லை அது அங்கிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எந்த
நன்மையை கொடுக்காது என்று சென்றவருடமும் சரி இந்த கடந்த மார்ச் மாதமும் சரி எதிர்ப்பு
தெரிவித்தவர்கள் மே 17 இயக்கும் தோழர் தியாகு அவர்களும் தான். கடந்த வருடம் பெரிய அளவில்
இவர்கள் இருவரின் கருத்துக்கள் எடுபடவில்லை எனினும் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கிறேன்
என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை வெற்றி பெறச்செய்தது. அது இந்த வருடமும்
அதே போல் செய்ய நினைத்த பொழுது திரும்பவும் கடுமையாக அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தவர்கள்
மே17 இயக்கமும் தோழர் தியாகுவும் தான். அப்பொழுது தான் மாணவர் போராட்டமும் வெடித்தது
அப்பொழுது கருணாநிதி அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று
தனது பேச்சை மாற்றி தானே தனது வேட்டியை அவிழ்த்துக் கொண்டு அம்பலம் ஆனார்.
இப்படி
சாதனைகள் படைக்க காரணமாக ஒரு காரணியாக இருந்த தியாகுவே இன்று பலிகடாவாகி போனார். ஆம் ஞாயிற்றுக்
கிழமை அனைத்து இயக்கங்கள் கட்சிகள் வேண்டுகோள் வைத்து கேட்ட பொழுது பரிசீலிக்கிறேன்
போராட்டங்களை தொடருங்கள் என்றவர். மறுநாளும் அதற்கடுத்த நாளும் கருணாநிதியின் நாடகத்தில்
ஒரங்க கதாபாத்திரமாக மாறிவிட்டார். ஆம் உண்ணாவிரதம் முடித்தது தாய் தமிழ் பள்ளிக் குழந்தைகள்
கொடுத்த பழரசத்தை அருந்தி தான் என்றாலும் இருபக்கமும் திமுக கூட்டணி அங்கத்தினர்களே
காட்சியளித்து பாமர மக்களிடம் எதோ கருணாநிதி பிரதமரிடம் சொல்லி, பிரதமர் கருணாநிதியிடம்
வேண்டுகோள் வைத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது போல் இந்த புகைப்படம் பல நூற்றாண்டுகளுக்கு
கதை சொல்லும் என்பதை உணராமல் போய்விட்டாரா தோழர் தியாகு.
ஆம்
இவரின் தூக்கு கயிற்றை அறுக்க பல போராட்டங்களை நடத்தினர் இவரின் சகோதரி காந்திமதி,
மேலும் பலரும் இவருடன் நின்று போராடினார்கள். அவர்களில் ஒருவர் தான் (நாளை இவரின் பெயரை
பதிகிறேன், நியாபகம் இல்லை சில புத்தகங்களை பார்க்க வேண்டியது உள்ளது.. ஆனால் இந்த
கட்டுரையை பதிய வேண்டிய தேவை உள்ளது) அன்று ஒரு லட்சம் மக்களை கூட்டி அவர்களிடம் கையெழுத்து
வாங்கி அதை கருணை மனுவாக சமர்ப்பித்தனர் அந்த கருணை மனுவின் அடிப்படையிலேயே மரணதண்டனை
ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதை அப்பொழுது இருந்த முதல்வருக்கு தான் மரணதண்டனையை ரத்து
செய்ய தகுதி இருக்கிறது என்று பொய்யான பரப்புரையை செய்து கொண்டு இருக்கிறார்கள் இதையெல்லாம்
மேடைகளில் பேசிய தியாகு இன்று இதற்கே அடிமையாகிவிட்டாரோ… (இதில் தோழர் தியாகு கருணை
மனு அனுப்பினார் என்பது கொசுறு தகவல்.. இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் அப்படி அனுப்பாமல்
இருந்தது புலவர் கலியப்பெருமாள், செவ்வணக்கம் அவருக்கு)
இன்னும்
தொடரும்…
இந்த
உண்ணாவிரதம் ஒரு மைல் கல் நடந்து முடிந்த வரலாற்றை அதுவும் பலருக்கு தெரியாத வரலாற்றை
சொல்லும்… அது மட்டுமல்ல நாம் நம்புவர்கள் கழுத்தறுக்கும் வரலாற்றை சொல்லும்…
இன்னும்
வர இருப்பவர்கள்..
தோழர் அருண் சோரி
தோழர் மதியவன்
தோழர் ஜெயபிரகாசு நாரயணன்
தோழர் குணா
தோழர் செந்தில்
தோழர் தோழர் என்று மற்றும்
பலர்…
மருதுபாண்டியன் உட்பட… இந்த கடைசி நபரை தோழர் என்று கூப்பிட மாட்டேன்..
No comments:
Post a Comment