இணையப்புலிகள் இது கருணாநிதியை எதிர்த்தவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட பட்டம். ஏன் இது மட்டுமா இவ்வளவு ஆத்திரப்பட்டு கருணாநிதியை திட்டும் நீங்கள் இராமேஸ்வரம் சென்று கடலை நீந்தி கடந்து ஆயுதம் ஏந்தி போராட வேண்டியது தானே? இதைப் போல் இன்னும் எத்தனையோ கிண்டல்கள் அடித்தனர். தமிழக மக்களுக்கு ஈழப்பிரச்சனை மேல் அக்கறை இல்லை அதனாலேயே 2009 ம் ஆண்டு தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது நாம் தான் ஏதோ பைத்தியம் பிடித்தது போல் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி திரிந்தார்கள்.. நாம் ஒவ்வொரு முறையும் கருணாநிதி செய்த தவறை சுட்டிகாட்டிய பொழுது நமக்கு மிஞ்சியது அடிவருடி, இணையபுலிகள் என்ற பட்டம் தான்..
ஆனால் இணையபுலிகள் என்று அவர்கள் சொன்னதை இன்று நிருபித்து காட்டிவிட்டோம். ஆம் இந்த மெழுகுதிரி நினைவேந்தல் சூன் 26, கண்ணகி சிலை அருகில் மெரினாவில் நடக்க காரணம் இணையம் தான். கடந்த மே மாதம் 18ம் தேதிக்கு சிலநாட்கள் முன்பு முகநூலில் ஈழமக்களுக்காக என்ன செய்யலாம் என்று ஒரு கேள்வி எழுந்த பொழுது மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தலாம் என்று முடிவு செய்து ராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் முகநூலில் மட்டும் அறிவித்து மே 18 அன்று அனைவரும் கூடினோம் அன்று முகநூலில் மட்டும் தெரியப்படுத்தப்பட்ட நிகழ்விற்கு 200க்கும் மேலான தோழர்கள் ஒன்று கூடினர்..
இதை முன்னுதரனமாக கொண்டே அடுத்த நிகழ்வை பற்றி பேசக் கூடினோம். இது வரை இரண்டு வருடங்களாக அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் இந்த கொடூரங்களை கண்டித்து எத்தனையோ போராட்டங்களும் கூட்டங்களும் நடத்தியிருந்தாலும். மக்களுக்கு என்று ஒரு மேடை அமைத்து கொடுக்கவில்லை, மக்களும் கட்சிகளின் போராட்டத்தில் தங்களை ஒருங்கிணைக்கவில்லை அவர்களை குறை சொல்ல முடியாது அவர்கள் தங்கள் மேல் ஒரு நிழல் படிவதை விரும்பவில்லை. அவர்களுக்கான ஒர் களமாக மே 18 அன்று நடத்திய நிகழ்வை மேலும் சீர்படுத்தி பெரும்பான்மையான மக்களுக்கான ஓர் நிகழ்வாக மாற்ற வேண்டும் என்று திருமுருகன், மே 17 கூற அனைவரும் முடிவு செய்து இதற்காக உழைக்கவேண்டும் என்று முடிவு செய்து நடத்தப்பட்டதே இந்நிகழ்வு. மே 19ம் தேதி தி.நகரில் ஒரு கூட்டத்தில் இந்த முடிவை எடுத்து அன்றிலிருந்து ஒரு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டு பரப்புரை செய்வது என்று முடிவெடுத்து ஜுன் 26ம் தேதி என்ற தேதியை முடிவு செய்தோம்.
இணையத்தில் வெட்டிபேச்சு, வீராப்பு, வீண்வாதம் என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒன்று இன்று மெரினாவில் அலைகடலேன மக்கள் கூடும் ஓர் நிகழ்வாக மாறியுள்ளது.. இது இணையபுலிகளின் சாதனையே...
இணையப்புலிகள் என்று அவர்கள் கூறியதை மெரினாவின் மணலில் மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து எங்களை இணையப்புலிகள் தான் என்று அடித்து சொல்லிவிட்டனர்... ஆனால் எங்களை இப்படி சொன்னவர்கள் இன்றும் சொல்வது தான் மொத்தமே 3000 மக்கள் தான் கூடினார்கள், பீச்சுக்கு வந்த கூட்டம் தான் படங்களில் இருப்பது என்று கூறி திரிகிறார்கள். இந்த கூட்டத்திற்கு ஐம்பதாயிரம் (50000) மெழுகுதிரிகளை வாங்கி வைத்திருந்தோம். அதில் 27000 மெழுகுதிரிகளை விநியோகித்தோம். இதில் 17500 மெழுகுவர்த்திகளை சின்னப் பைகளில் போட்டு வந்திருந்த அனைவரும் கைகளில் எடுத்துக் கொண்டு சென்றனர், ஒரு மூன்று மூடைகளை நண்பர் ஒருவரின் காரில் கொண்டு சென்று பார்க் செய்து வைத்திருந்தோம், இதைத் தவிர இன்னொரு நண்பர் 7500 மெழுகுதிரிகளை இன்னொரு வாகனத்தில் கொண்டுவந்திருந்தார். ஆம் காவல் துறையின் ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்தனர், சர்விஸ் ரோட்டில் தான் நடத்தவேண்டும், 200 பேருக்கு மேல் ஆட்கள் கூடக் கூடாது, மணலில் இறங்க கூடாது, மெழுகு திரி கொழுத்தக் கூடாது தீவிபத்து ஏற்படலாம் என்று ஏகப்பட்ட கட்டுபாடுகள். காவல்துறையின் கட்டுபாடுகளுக்கு நடுவே காவல் துறையினருக்கு தெரியாமல் மெழுவர்த்திகளை உள்ளே கொண்டு சென்று விநியோகித்தோம். அதுவும் மக்கள் வந்து அமர அரம்பித்த சமயத்தில் இருந்து. ஆனால் அவர்கள் சொல்வதோ 3000 மக்கள் தான் வந்திருந்தனர். கேட்டால் இதற்கு முன்னால் நீங்கள் கூட்டம் நடத்தியதில்லை உங்களுக்கு கணக்கு தெரியாது. மதுரை மங்கையர்கரசி பள்ளியில் 10000 மாணவர்களுள் ஒருவராக படித்தவனுக்கு கூட்டம் தெரியாதாம்.
இவர்களுக்கு தேவை ஒன்று தான் இவர்கள் ஒரு காரியத்தை முன்னின்று நடத்தமாட்டார்கள் அப்படியே ஒருவன் நடத்தினாலும் அதில் அது நொட்டை இது நொட்டை என்பார்கள்.. மக்களுக்காக ஒரு அரங்கம் அமைத்து தராமல் இரண்டு குளிர்சாதன பெட்டியை வைத்துக்கொண்டு காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அடிவருடவதை மட்டும் செய்பவர்கள். ஆம், இந்த பட்டத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும் இதை நிருபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை...
இதோ இந்த தாய் சுற்றி அடிக்கும் கடற்கரை காற்றில் மணல் கலந்து அடித்தாலும் தன் குழந்தையை தன் மடியில் எந்தவித தீங்கும் அணுகாமல் தூங்க வைத்துக்கொண்டே ஈழத்தில் நடந்த கொடூரங்களை விளக்கும் புத்தகத்தை பார்த்துக்கொண்டு தன் இனத்திற்காக வந்து அமர்ந்திருக்கிறாரே எங்களுக்கு இது போதும்.. ஏன் இத்தனை மக்கள் கூடாமல் இவர் மட்டுமே வந்திருந்தாலும் அதுவும் எங்களுக்கு வெற்றி தான்.. எண்ணிக்கைகள் எதையும் பேசப்போவதில்லை எதையும் சாதிக்க போவதில்லை இந்த தாயை போன்றவர்களின் உண்ர்வுகள் தான் நாளை பேசும். இவரை போன்ற தாய்மார்களின் மடியில் உறங்கும் குழந்தைகள் நாளை தன் தாயின் உணர்வுகளை உண்மை நிகழ்வாக மாற்றி காட்டுவார்கள்.....
unmai nanba
ReplyDeletearumaiyana katurai
ReplyDeleteஅங்கே இருபதாயிரத்திற்க்கும் மேற்பட்ட
ReplyDeleteமக்கள் கூடி இருப்பார்கள் என்பது என் கணிப்பு..!
நன்றி மண்வாசனை, அனானி மற்றும் தமிழ் அமுதன் அவர்களே..
ReplyDeleteதமிழமுதன் எத்தனை பேர் கூடினார்கள் என்பது பிரச்சனையில்லை.. இத்தனை சொந்தங்கள் இத்தனை நாள் கழித்து வெளியில் வந்தார்கள் என்பதே போதுமானது..