எனது கடைசி பதிவில் நண்பர் ஒருவரின் பின்னூட்டம்.. பிறந்த நாள் விழா சென்னையில் நடப்பதால் சிறு திருத்தங்களுடன்..
நமது கழகத்தின் முப்பெரும் விழாவினை இம்முறை சென்னையில் ஜூன் 3 அன்று என் பிறந்தநாள் அன்று நடத்தலாம் என்று நானும், பேராசிரியர் எனும் உதவி ஆசிரியரும் முடிவு செய்து உள்ளோம். அது என்ன முப்பெரும் விழா ?
ஒன்று - திகார் சிறையில் "தகத்தாய கதிரவனின்" 100 நாட்கள் நிறைவு விழா.
இரண்டு - கழகத்தின் குல விளக்கு ஒப்பில்லா "கவி" அவர்களின் திகார் சிறை நுழைவு விழா.
மூன்று - நமது கழகத்தின் டில்லி பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எனது "பேரன்" அவர்களின் திகார் சிறை வழியனுப்பு விழா .
ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே முன்பதிவு செய்து சென்னை நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.
anbudan,
Duriyal......
நன்றி ஹரிகரன் அவர்களே. கட்டபொம்மு பற்றி நாம் ஏற்கனவே விவாதித்து இருந்தோம். வெள்ளைதுரை பற்றி கூட.. சென்ற மாதம் கொட்டுர்புரம் அண்ணா நூலகத்தில் கட்டபொம்மன் பற்றிய நாட்டுபுற பாடல்களில் படித்தேன். காதில் கேட்ட செய்திகள் அதில் உள்ளன. நன்றி.
ReplyDeleteபுத்தகத்தின் பெயர்கள்.. நானும் சென்று தேடினேன் சில தகவல்கள் தான் கிடைத்தன.. சுந்தரலிங்கம் அவர்களின் தெருகூத்து பாடல்கள் கூட கிடைத்தன. வெள்ளைதுரையின் உறவினர் ஒருவர் சென்னையில் இருப்பதையும் அறிந்தேன். அவரை சந்திக்க செல்ல நேரம் இல்லாமல் இருக்கிறது.. ஜூன் 26 மெரினாவில் ஒரு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் உள்ளேன்.. முடிந்த பிறகு சந்தித்து எழுதுகிறேன்..
ReplyDeleteநேற்றைய (18 , ஜூன் 2011 ) சைதாப்பேட்டை கூட்டத்திற்கு சென்று இருந்தேன். மீண்டும் ஒரு "கருப்பு துண்டு" தோன்றி
ReplyDeleteவிட்டதாக எனக்கு படுகிறது. அறிவுசார்ந்த மூன்றாயிரம் மேற்பட்ட இளையோர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் என்ன பேச
வேண்டும் என்பதை, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விடுத்து வெறுமனே நன்றி தெரிவிக்கும் கூட்டமாக முடிந்தது.
காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வந்த உடன் எப்படி சினிமா நடிகர்கள் செயல் பட்டோர்களோ அது போன்ற
ஒரு நிலை வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.
இந்திய அரசு அமைப்பில் உள்ள நான்கு தூண்களான 1 ) சட்ட நாடாளு மன்றம் 2 ) நிர்வாகம் 3 ) நீதி என்கிற மூன்று
தூண்களில் மூன்றாவது தூணான உச்ச நீதி மன்றம் இவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்று சொன்ன பின்னால்
நாம் போராடி இருக்க வேண்டியது தமிழக நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்களையே அன்றி சினிமா நடிகர்களை அல்ல. முட்டாள்
தமிழன் கன்னட (மராத்திய) சினிமா நடிகன் அதரவு தரவில்லை என்று வெறி கொண்டு திரிந்தான்.
நமக்கு மீனவ , ஈழ குற்ற பிரச்சினைகளில் தமிழக நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்ற
வில்லை.
தொடர்ந்து நாம் அந்த தமிழக நாடாளுமன்ற மன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் இல்லை.