தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தினமும் ஒரு அறிக்கை அதுவும் துறைக்கு ஒன்றாக தினமும் என்று அறிக்கை விட்டுகொண்டிருக்கிறார் ஈனத்தலைவர். இன்று மருத்துவத்துறையை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
அதில் முதலில் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை என்னமோ தானே ஒதுக்கியது போல் சொல்லி இருக்கிறார்.
//2005 2006 ம் ஆண்டு இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1487 கோடி என்பதற்கு மாறாக 2010 2011 ல் நிதி ஒதுக்கீடு ரூ.3889 கோடியாக உயர்ந்துள்ளது. //
இதில் எங்காவது மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்று தவறிப்போய் கூட சொல்லிவிடவில்லை. இவர் சொன்ன அத்தனை நிதியும் மத்திய அரசு மாநிலத்திற்கு சுகாதர மேம்பாட்டுக்காக ஒதுக்குவது.
// இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் உயர்தர தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்க உதவும் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் கழக அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தில் 7.3.2011 வரை 2,90,291 நோயாளிகளுக்கு ரூ.750.28 கோடி செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.//
அடுத்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பற்றிய பீலாவை விட்டிருக்கிறார். இதில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார். இவர் சொல்லுவதன் படி 1 கோடியே 35 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகிறார்களாம். இதன் மூலம் சொல்லுவது ஒரு குடும்பத்திற்கு ரூ 469 ரூபாய் வீதம் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸுக்கு வழங்குகிறது. அப்படியானால் 633 கோடியே 15 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்கு பீரிமியம் தொகையாக அரசால் செலவழிக்கப்படுகிறது. இது வருடம் ஒரு முறை செலுத்தவேண்டிய தொகையாகும் 2009ம் ஆண்டு 2010 ஆண்டும் தமிழக அரசு ப்ரீமியமாக 1266 கோடியே 30 லட்சம் ப்ரீமியமாக செலுத்தியுள்ளது.
தொடங்கப்பட்ட 2009ம் ஆண்டில் இருந்து 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வரை இதனால் பயணடைந்தவர்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகை 750.28 கோடி என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். இதில் மீதம் 500 கோடிக்கும் மேல் இரண்டு வருடத்தில் லாபமாக ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் நிறுவனம் சம்பாதித்துள்ளது. மொத்தம் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது மொத்தம் 2500கோடி ரூபாய்க்கு மேல் ப்ரீமியம் தொகை செலுத்தப்படும். அரசு விதித்திருக்கும் நிபந்தனை மொத்தமாக இந்த திட்டதின் மூலம் செலவிடப்படும் தொகையைவிட 65% க்கு கீழ் தான் செலவானது என்றால் அந்நிறுவனம் மீதத்தொகையை திரும்ப செலுத்தவேண்டும் என்பது. இதுவரைக்கும் இரண்டாண்டில் செலவழிக்கப்பட்ட தொகை 65% க்கு மேல் சென்று விட்டது அவர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் மிச்சம் உள்ள 500 கோடி அவர்களுக்கு லாபமே.
இந்த திட்டம் மிக அருமையான ஒரு திட்டமே இதை எடுத்து நடத்த இந்த அரசு நிறுவனம் எதுவும் இல்லையா மத்தியரசின் LIC யோ இல்லை மாநில அரசின் ESIC யோ இதற்கான போதுமான முன் அனுபவம் இல்லாதவர்களா. இல்லையே இத்தனை வருடமாக இவர்கள் இருவரும் இதே பணியை தானே செய்து கொண்டுள்ளனர். ஏன் ETA வின் ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் இதே போல் திட்டத்தை எங்கு செயல் படுத்தியுள்ளனர். எந்த முன் அனுபவத்தின் அடிப்படையில் LIC, ESIC இரண்டையும் விட இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தம் உள்ள எடிசாலட் நிறுவனத்திற்கும் ETA நிறுவனத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?? எடிசாலட் இயக்குனரின் ஒர் நிறுவனமே ETA நிறுவனம் அதன் துணைநிறுவனமே ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் இதிலும் ஸ்பெக்ட்ரம் பணம் விளையாடிருப்பது போல் தெரிகிறது.
அதெல்லாம் விடுங்கள் இது நீங்கள் எப்பொழுதும் செய்யும் அறிவியல் பூர்வமான ஊழல் என்று சர்காரியா எப்பொழுதோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நான்கு வருடத்திற்கு 2500கோடி ரூபாய் ப்ரீமியமாக செலுத்துவதற்கு பதில் அந்த தொகையை கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையும் புதிதாக அரசு மருத்துவமனைகளை சிறப்பு மருத்துவசேவையுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக எத்தனை மருத்துவமனைகளை நிர்மானிக்க முடியும். திருச்சியில் அரசு சார்பில் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையை நிறுவ 380 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சில நாட்களுக்கு முன்னர் தான் தெரிவித்தார்கள் சேலத்தில் கூட இன்னுமொன்று வரப்போகிறது என்றும் இப்படி 380 கோடி ரூபாயில் மருத்துவமனை நிறுவப் போதுமானது எனும் பொழுது 2500 கோடி ரூபாயில் ஏழிலிருந்து எட்டு மருத்துவமனைகள் நிறுவலாமே அதை அரசு ஏன் செய்யவில்லை. இவ்வாறு செய்தால் எந்த அட்டையும் இல்லாமல் நேரடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பயனடைவார்களே.
இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனம் அதை நடை முறை படுத்த இன்னொரு தனியார் மருத்துவமனைகள் என்று எல்லாப் பணத்தையும் வாரி இறைத்து தனியார் நிறுவன முதலாளிகள் சம்பாதிக்க மட்டும் தானே இந்த திட்டம் உதவுகிறது.
நீங்களே 166 ஆரம்ப சுகாதர நிலையங்கள் கிராமபுறங்களில் அமைக்க 66.42 கோடி தான் செலவானது என்று சொல்லியிருக்கிறீர்கள் . இந்த 2500 கோடியில் ஒரு 300 கோடி செலவழித்தால் இன்னும் 500 மேற்பட்ட ஆரம்ப சுகாதர நிலையங்களை நிறுவியிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்தால் ஓட்டு கேட்க போகும் பொழுது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று சொல்ல முடியாது. மேலும் அட்டை வைத்திருக்கும் மக்களும் ஒவ்வொரு முறை அட்டையை பார்த்து கலைஞர் தான் தன் சொந்த காசை செலவழித்து நமக்கு வைத்தியம் பார்த்தார் என்று நினைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு, சுகாதரம் என்பது ஒரு அரசு மக்களுக்கு செய்து தரவேண்டிய அடிப்படை கடமையை கூட தங்கள் ஓட்டரசியலுக்கு ஓட்டு சேகரிக்கும் ஓட்டு வங்கியாக மாற்றிவிட்டார்.
2500 கோடியில் நான்கு வருடங்களுக்கு மட்டும் உயிர்காக்கும் சிகிச்சை தொலை நோக்குடையதா இல்லை அதே தொகையில் பல வருடங்களுக்கு சேவை தரக்கூடிய ஏழு எட்டு அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு கட்டுவது தொலைநோக்கு திட்டமா..
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி
ReplyDeleteஅன்புள்ள ஹரிஹரன், எனது "நாயக்கர் ஆட்சியில் தமிழகம்" தொடர் கட்டுரையை தமிழ்நாடுடாக்.காமில் பதிவு செய்தமைக்கு நன்றி. அது குறித்த விவாதத்தில் பங்கேற்க முயன்று Register செய்ய முயன்றால் challenge question-க்கு விடையிடச் சொல்கிறது. சரி. challenge question எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. உதவவும்.
ReplyDeleteஅன்புள்ள ஹரிஹரன், தமிழ்நாடுடாக்.காமில் விவாதங்கள் பார்த்தேன்.
ReplyDelete"நாயக்கர் வேறு, நாயுடு வேறு" என்று ஒருவர் (தென்னவன்?) குறிப்பிட்டிருந்தார். "நாயக்க" என்ற வடசொல் தமிழில் தலைவன் என்ற பொருளுடையது. நாயக்க > நாயக்கடு > நாயுடு என்று ஆனது. ஆக நாயுடு என்பதுவும் ஒரு பட்டமே. கம்மா,பலிஜா,தொட்டியர், கம்பளம், கவரை என்பவை சாதிகள். தமிழர்களாகிய வன்னியரும் வடமாவட்டங்களில் நாயக்கர் பட்டம் தரிப்பர்.
"பலிஜா நாயுடுகளுக்குத் தெலுங்கு மட்டுமே தாய்மொழி; கன்னடமல்ல" என்றும் அவர் கூறியுருந்தார். பலிஜர்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் உண்டு; கன்னடத்தைத் தாயஙமொழியாகக் கொண்டவர்களும் உண்டு. யாவரும் அறிந்த பெரியார் ஈ.வே.ரா. கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜர். பலிஜர் குறித்த மேலதிக விவரங்களுக்கு en.wikipedia.org-இல் Balija (Caste) என்று தேடவும். நன்றி.