Friday, March 4, 2011

108

கலைஞரின் மாபெரும் சாதனைகளாக பெருமை அடித்துக்கொள்ளப்படும் 108 ஆம்புலனஸ் சேவை. இதை நாட்டின் முன்னோடி திட்டம் மக்களுக்கு பயன் தரும் மாபெரும் திட்டம் என்று எல்லாம் இந்த தேர்தலில் மார்தட்டப்படும். ஆனால் இந்த திட்டத்தின் பின்னால் இருப்பவர்களை எல்லாம் மறைத்துவிட்டு தான் மட்டும் தான் சாதித்தேன் என்று சொல்வது தான் ஆளும் திமுக கூட்டணியின் மாபெரும் சாதானை..

EMRI இதை நீங்கள் ஒவ்வொரு 108 வாகனத்திலும் பார்க்கலாம்.

Posted Image

Emergency Management Research Institute. எனும் நிறுவனம் தான் இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் அவசர சிகைச்சைகான ஊர்திகளை இயக்கும் ஓர் அமைப்பு. www.emri.in. இந்த நிறுவனம் தற்பொழுது GVK. ரெட்டி அவர்களின் தலமையிலான குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த அமைப்பு சத்யம் நிறுவனத்தின் இராமலிங்கராஜுவின் மூளையில் உதித்த ஒரு குழந்தை. இதற்கான மென்பொருள் வடிவமைப்பில் இருந்து தொழில்நுட்ப தேவைகள் அனைத்தையும் முடித்து ஒரு முழு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது சத்யம் நிறுவனமே. இந்த நிறுவனம் முதன்முதலாம் 2005ம் ஆண்டே ஆந்திராவில் செயல்பாடுகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டியது அதன் பிறகே மற்ற மாநிலங்களுக்கு ஆந்திராவில் வெற்றிகரமாக செயல்படுவதை காட்டி தனது விற்பனையை தொடங்கியது.

சத்யம் ராஜு மிகப்பெரிய கில்லாடி என்பது நாம் அறிந்ததே, இந்த முறையில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஆம்புலனஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு அது ஒரிடத்தில் கொண்டுவரப்பட்டது. அதாவது மாநிலம் முழுவதற்கும் கட்டுப்பாட்டு அறையாக ஒரே இடத்தில் தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு நோயாளிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள். இதற்கான மொத்த ஆம்புலனஸ் ஊழியர்கள் மற்றும் அனைத்தையும் இந்த EMRI நிர்வாகமே வழங்கும். இதற்காக மாநில அரசு 3 மாதத்திற்கு ஒரு முறை செலவுத்தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஆகும் செலவை அந்த மாநில அரசு ஏற்றுக்கொள்ளும், நிரந்தரமான வருமானம் உள்ள ஒரு தொழிலாக மாற்றிவிட்டார் ராமலிங்கராஜு. இதில் நன்மை இருக்கின்றது ஓட்டுநரில் இருந்து முதலுதவி அளிப்பவர் வரை இந்த நிறுவனமே பயிற்சி அளிக்கிறது. மேலும் நோயாளிக்கான சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே தொடங்கிவிடுகிறது.

அரசு மருத்துவமனைகள் இலவசமாக வழங்கிகொண்டிருந்த சேவையை தனது நிறுவனத்திற்கு வருமானம் வரக்கூடிய ஒரு தொழிலாக மாற்றிக்கொண்டார் ராமலிங்க ராஜு. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மிகச்சிறப்பான மருத்துவ உதவி கிடைக்கிறது. ஆனால் கருணாநிதியின் திமுக அரசு விளம்பரம் செய்வது போல் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் 2008 மே மாதம் தான் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் 2005ம் ஆண்டு ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2008 மார்ச் மாதம் குஜராத்திலும் 2008 மே மாதம் உத்தர்காண்ட்டிலும், இவர்களுக்கு எல்லாம் முதலாக 2007ம் ஆண்டே மத்தியபிரதேசத்தில் தான் செயல்படுத்தப்பட்டது.

2008ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டாலும் செயல்பாட்டுக்கு 15ம் தேதி செப்டம்பர் மாதம் 2008ல் தான் வந்தது.

Posted Image

இந்த அழைப்பிதழில் அரசின் இலவச அவசர ஊர்தி சேவை என்று குறிக்கப்பட்டுள்ளது அதற்கு முன் இச்சேவை இல்லையா. இருந்தது அரசின் நேரடி கட்டுபாட்டில் நாம் அழைக்கும் தொலைபேசி அழைப்பு மாவட்ட கண்காணிப்பகத்திற்கு செல்லும் அவர்கள் ஊர்தியை அனுப்புவார்கள். அதை தனியாரின் கைக்கு தாரைவார்த்ததே இந்த 108 அவசர ஊர்தி சேவை திட்டம்.

இந்த திட்டத்தை ஏன் அரசே நடத்த முடியாதா அப்படி என்ன பெரிய விசயங்கள் இருக்கின்றன இத்திட்டத்தில். இந்த திட்டத்தின் அடிப்படை தேவை எவை.

CCT - கணிணி தகவல்பறிமாற்ற தொழில்நுட்பம். (பயப்படாதீர்கள் ஒன்றும் இல்லை கால்சென்டர்கள் உபயோகிக்கும் மென்பொருள்)

GIS - புவியியல் வரைபட தகவல்

GPS/ AVLT - புவியியல் வரைபட வழியில் இடத்தை கண்டுபிடிப்பது (வாகனங்களில் பொருத்தி இருப்பிடத்தை அறிவது)

இந்த மூன்றின் வேலை, முதலவதான CCT 108க்கு வரும் அழைப்பை கால்சென்டர்களில் இருக்கும் தொழிலாளி யார் வேறு தொலைபேசி அழைப்பை பேசாமலிருக்கிறார் என்று பார்த்து அவருக்கு அழைப்பை கொண்டு சேர்க்கும். அவர் அழைப்பில் பேசுபரிடம் தகவலை பெற்று அவர் சொல்லும் தகவலை வைத்து எந்த இடம் என்பதை GIS மூலம் உறுதி செய்து. ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் GPS மூலமாக தொலைபேசி அழைப்பில் சொன்னவர் சொல்லும் இடத்துக்கு அருகில் இருக்கும் வாகனத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கு வாகனத்தை கொண்டு சேர்ப்பது.

இந்த மூன்றும் மிகப்பெரிய தொழில் நுட்ப சேவை கிடையாது, தெருவுக்கு மூன்று கால்சென்டர்கள் வைத்து சர்வதேச அளவில் வணிகம் செய்து கொண்டிருக்கிறோம். GIS, GPS, AVLT மூன்றும் சென்னை மாநகராட்சி ஊர்திகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது கடந்த 10 வருடங்களாக. இதை அரசு கணிணி நிறுவனமான எல்காட் செய்ய முடியாதா. இதை விட மிகப்பெரிய அளவில் கணிணி தொழில் நுட்பத்தை அரசு அலுவலகங்களில் நிர்மானித்து நடத்தி வருகிறது எல்காட். இதை ஒரு தனியார் நிறுவனத்திற்கு அள்ளி கொடுத்துள்ளனர்.

முதலில் சத்யம் நிறுவனத்தின் கீழ் இருந்தாலும் EMRI நிறுவனம் இப்பொழுது GVK எனப்படும் GV. கிருஷ்ணாரெட்டியின் கீழ் இயங்கும் GVK நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2008 -09 ஆண்டுக்கான சேவைக் கட்டணமாக ரூ 29.29 கோடி ரூபாயும் 2009 - 10ம் ஆண்டுக்கு 55.13 கோடியும் நிதி ஒதுக்க்ப்பட்டுள்ளது. முதலாண்டு தொகையினை விட இரட்டிப்பு மடங்கு தொகை இரண்டாம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதல் ஐந்தாண்டுகளுக்கு மேலும் எந்த மாற்றங்கள் இன்றி தொடரும் அதன்பிறகு வேண்டுமானால் புதுபித்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் அனைத்து பொருள்களும் ஒப்பந்தகாலத்தில் நிறுவனத்திற்கும் அரசுக்கும் பொதுவான சொத்தாக இருக்கும். ஒப்பந்தகாலம் முடிந்தபிறகு ஒப்பந்தம் புதுபிக்கபிடவில்லை என்றால் அரசுக்கு அனைத்தும் சொந்தம். இதற்காக உபயோகிக்கும் மென்பொருள்கள், தொழில்நுட்ப பொருள்கள் அந்த நிறுவனத்தையே சேரும். மேலே குறிப்பிட்ட மிகப்பெரிய தொழில்நுட்பத்தை நிறுவனத்திற்கு சொந்தம், அதற்காக கோடி கோடியாக அரசு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொட்டி கொடுக்கிறது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு செலவு செய்யும் தொகை மத்திய அரசின் சுகாதர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்டு செலவு செய்யப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு வேலைக்கு ஆட்கள் அரசு வேலைவாய்ப்பு துறை மூலம் பதிவு செய்த மூப்பு அடிப்படை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஊதியம் அனைத்தும் தனியார் நிறுவனமே வழங்கி வருகிறது இவர்கள் அரசு ஊழியர்களாக கருத முடியாது. இவர்கள் தனியார் நிறுவன ஊழியர்களே, மூப்பு அடிப்படையில் எடுக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்த இவர்கள் பதிவு செய்த மூப்பையும் இழந்துவிடுகிறார்கள்.

108 க்கு தினமும் 30000 தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அதற்கு விளம்பரங்களே காரணம் என்று சொல்லி கலைஞர், சன் மற்றும் பல தொலைகாட்சிகளுக்கு விளம்பரம் வழங்கி அதில் தனது சொந்த வீட்டுக்கு பணம் வர வழிசெய்து விட்டார்.

108யை பிரபலபடுத்துவது பெரிய கம்பசூத்திரமா இதற்கு முன் அவசர அழைப்பிற்கு 100,101,102னு நாம் விளம்பரம் பார்த்து தான் தொலைபேசியில் அழைத்தோமா.. வாழ்க பணநாயகம்..

ஆனால் இதை தட்டச்சு செய்யும் பொழுது ஒன்று திரும்ப திரும்ப நியாபகம் வந்தது. அழைப்பிதழில் கருணா ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா அடுத்து இருக்கும் பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த மரணம்..

Posted Image

Posted Image

தனது முன்னிலையில் அவரின் தலைவர் துவக்கி வைத்த 108 அவசர ஊர்தி வருவதற்கு முன்னால் தன் வண்டியில் ஏற்றி சென்று காப்பாற்றினால் தானை தலைவரை அவமதித்தது போலாகிவிடும் என்று எண்ணியதால் குடிக்கப்பட்ட உயிர்..

No comments:

Post a Comment