திருமதி. சாந்திபாபு அவர்களே தலைப்பை கூட திமுகவின் சாதனைகள் என்று போட்டால் எவனும் திரும்பி கூட பார்க்க மாட்டான் என்பது நன்றாக தெரிந்திருந்து திமுக மீது மொக்கை காரணங்கள் என்று தலைப்பை போட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறீர்கள்.. இதிலேயே நீங்கள் அடுத்து சொல்ல வரும் திமுக பெருமைகள் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது.
நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது....
இதற்கு காரணம் கலைஞரின் ஆட்சியில்லை தமிழக மக்கள் அவர்களிடம் யாரும் மதத்தை பற்றி பேசி அவரகளை கையில் ஆயுதம் ஏந்த செய்ய முடியாது. அனைத்து மதத்தையும் சமமாக மதிப்பவர்கள். ஆறுமுகம் ஏர்வாடி தர்ஹாவுக்கு போவான் அஹமது சமயபுரத்தில் மந்திரித்து கொள்வான். இதனாலே இங்கு மத தீவிரவாதம் பெருமளவு உள்ளே நுழைய முடிவதில்லை. இது உங்கள் கலைஞரின் சாதனை இல்லை அவர் இந்து மதத்தினரை பார்த்து கடவுள் இல்லை நீங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லிவிட்டு ரம்ஜான் நோம்புக்கு போய் கஞ்சி குடித்த பொழுதிலும் இந்து கடவுளை நம்பும் தமிழர்கள் பேசாமல் இருப்பது அவர்களின் சகிப்பு தன்மை. இது அனைத்து மத தர்மத்தையும் பின்பற்றும் தமிழர்களுக்கும் பொருந்தும். வேண்டுமென்றால் மொழிதீவிரவாதம் பேசி ஊரு முழுக்க தொண்டர்களை தீக்குளிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து ஆட்சிகட்டிலில் ஏறியதை சாதனையாக சொல்லி ஓட்டு கேளுங்கள்..
மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்
எந்த ஆற்றில் தண்ணி ஓடுது எல்லாவற்றிலும் சாக்கடை தான் ஓடுது. சாக்கடை இணைத்து என்ன செய்வதாக உத்தேசம், திரும்பவும் கூவத்தை சுத்தபடுத்துகிறேன் என்பது போல் இவைகளையும் சுத்த படுத்த கிளம்புவீர்களா. வேறு என்ன செய்வது இணைப்பதற்கு ஒரு டெண்டர் சுத்தபடுத்த ஒரு டெண்டர் என்று விட்டு சம்பாதிக்க வேண்டுமே..
சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்
இப்படியே சொல்லிகிட்டு தான் இருக்கிறீர்கள் இதுவரைக்கும் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்றி அதன் பிறகு கிடைக்கும் பலனை எல்லாம் அப்புறம் பார்க்கலாம், அந்த திட்ட பகுதியில் வாழும் மீனவர்களுக்கு வாழ்வதாரமான மீன்பிடி உரிமை வாங்கி கொடுக்க முடியவில்லை. அங்கு பிரச்சனை என்று சொன்னால் நமது மீனவர்களுக்கு பேராசை என்று சொல்லுகிறீர்கள், சர்வதேச சட்டப்படி 12 கிமீ நாம் உபயோகப்படுத்தலாம் அது வரை பயன்படுத்துவ்தற்கு அனுமதி வாங்க சொல்லுங்கள்.
240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை
ஒரு வருடத்திற்கு முன்னால் திறக்க பட்ட சமத்துவபுரங்களை சென்று பாருங்கள் திரும்பி வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை ஊருக்கு சொல்லும் தைரியம் இருந்தால்.
தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு
இதனால் எத்தனை குடும்பங்களுக்கு வயிறார சாப்பாடு கிடைத்தது..
திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், கப்பல் கட்டும் தளங்கள், மெட்ரோ ரயில் திட்டம்
இவைகள் அனைத்தும் மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு இதற்கு நீங்கள் எப்படி உரிமை கோருகிறீர்கள். எப்பொழுது நிறுத்த போகிறீர்கள் இப்படி அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு உங்கள் பெயரை இன்ஷியலாக போட்டு கொள்வதை. இதே போல் மற்றவர்கள் செய்தால் சும்மா இருப்பீர்களா..
மற்ற மாநிலங்களில் சொகுசு பேருந்துகள் விடும் பொழுது அந்த மாநில முதல்வரின் போட்டோவை போடுவதில்லை அனால் தமிழகத்தில் மட்டும் இன்னும் தொடர்கிறோம். அதுவும் மத்திய அரசின் JN nrum மூலமாக விடப்படும் பேருந்துகளுக்கு முன்னாள் இவரின் படத்தை போட்டு திரிகிறீர்களே வெட்கமாக இல்லை.. இதே போல் தாயாளு அம்மாளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரை ஸ்டாலினுக்கு இன்ஷியலாக போட்டுக்கொள்வீர்களா...
மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!
இதனால் திருப்பூர் வீரபாண்டியில் வாழும் தமிழனுக்கு என்ன பயன்..
சென்னை சங்கமம் கலை விழா
இதை முன்னின்று நடத்த சிறந்த தமிழ் கலைஞர்கள் யாருமே இல்லையா.. தன் மகளுக்கு விளம்பரம் செய்ய ஒரு விழா அதுவும் அரசின் பெயரில்.. நடக்கட்டும் நடக்கட்டும் எத்தனை நாள்.
24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்
2458411 X 100 X 12 இது என்ன கணக்கு என்று பார்க்கிறீர்களா இது ஒரு டிவிக்கான கேபிள் கட்டணம் ஒரு வருடத்திற்கு. இன்று தமிழகத்தில் கேபிள் என்பது மதுரையில் அழகிரியும் தமிழகம் முழுவதும் தயாநிதி. இந்த கேபிள் தொழிலில் இந்த இலவச டிவிகளால் கிடைக்கும் வருமானம் 295,00,93,200 அதாவது 295 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு இதில் லோக்கல் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு 10 ரூபாயை கொடுத்துவிட்டு மிச்சத்தை தன் குடும்பத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் மாபெரும் திட்டம். தன் குடும்பத்திற்கு வருடத்திற்கு 200 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க அரசு செலவில் மக்களுக்கு இலவச டிவி. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று..
ஈழதமிழர்கள் நலம்.
இதற்க் தனி தலைப்பு போடாமல் ஒரு சின்ன பத்தியாக சொன்னது எதற்காக.. அதுவும் இலங்கை தமிழர் நலனை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், இன்று சொல்லும் நீங்கள் 80களில் ஆயுதம் கொடு பயிற்சி கொடு என்று போராட்டம் நடத்தினேர்களே எதற்கு. தெருவில் சும்மா போகிறவனை கூப்பிட்டு நீ அப்படி இப்படி என்று ஏற்றிவிட்டு சண்டையில் இறக்கிவிட்டு அவன் அடிவாங்கும் பொழுது பார்த்து ரசிக்கவா.. இதற்கு இன்று சொல்லும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பதை அன்றே சொல்லியிருக்க வேண்டியது தானே. எம்.ஜி.ஆர் கூட்டம் போட்டால் அவருக்கு போட்டியாக கூட்டம் போட்டு நான் தான் உங்கொப்பன்டா நல்ல முத்து பேரன்டா ஆட்டம் போடும் நரிக்கூட்டம்.
ஊழல் , குடும்ப அரசியல் ,ஈழதமிழர் விரோதம் , இலவசம் ,87 வயதிலும் பதவியாசை என்று மொக்கை காரணங்கள் சொல்லாமல் மனசாட்சியுடன் ஆக்கபூர்வமாக, தொலைநோக்கு சிந்தனையுடன், திட்டங்களில் எதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் ...
நான் இப்படி எல்லாம் சொல்ல போவதில்லை, ஒன்றே ஒன்று தான் எதிரியை கூட மன்னிக்கலாம், ராஜ பக்சே நாளை தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்தாலும் மன்னிப்போம். ஆனால் துரோகியை மன்னிக்க முடியாது. அதுவும் நான்கு மணிநேர உண்ணாவிரதம், மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொன்ன கொழுப்பெடுத்த நாக்கு, கூட இருந்தே குழி பறித்த துரோகிக்கு என்றும் ஓட்டு போட முடியாது.. முடிந்தால் என் வீட்டு பக்கம் வந்தால் தமிழர்களின் பாரம்பரியத்தின் படி சாணியை கரைத்து ஊற்றுவேன்..
நீங்களே சொல்லுங்கள் நான் சொல்வது சரி தானே..
சரியான சவுக்கடி ....சாந்தி பாபு அவர்களுக்கு .....வெல்டன் ...
ReplyDeleteநன்றி, கோவை நேரம் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்..
ReplyDelete