(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதில் சொல்வது ஒன்று தான் தமிழீழத்தில் வாழும் மக்கள் சிங்கள அரசின் கீழ் வாழும் தமிழ் மக்களைப் போன்று இல்லாமல் எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் காலம் காலமாக வாழும் சிங்களவர்கள் அவர்களின் முழு மொழி மற்றும் மத உரிமையுடன் வாழ வழி வகை செய்ய வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையுடனும் சிங்களர்களுக்கும் வாழும் வகையை ஏற்படுத்திக் கொடுப்பது.
இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழீழ சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. ஆனால் அந்த தமிழீழ சுதந்திரப் போராட்டம் நசுக்கப்பட்ட பொழுது அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இப்பொழுது பேசுவது இனவாதமாக மாறிக் கொண்டுள்ளது. எப்படி சிங்கள பெளத்த பேரின வாதம் தமிழர்களை ஒடுக்கியதோ அதே போன்ற கருத்தியலாக்க்கங்கள் உருவாக்கப்பட்ட வருகிறது. தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் என்பது அல்ல தமிழ் தேசியம் தமிழ் தேசிய இனம் எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளானதோ அந்த ஒடுக்குமுறைகளை உடைத்து எரிந்து மேல் வருவதும். ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் அந்த ஒடுக்கு முறையை உணர்ந்து மற்றவர்களையும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்காமல் அமையும் இறையாண்மையே தமிழ்த் தேசியம்.
தமிழ்த் தேசியம் என்பதன் வரையறை திராவிடத்தை எதிர்ப்பதிலோ இந்தியத்தை எதிர்ப்பதிலோ இல்லை. தமிழ்த் தேசியத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்டமைகக்பட வேண்டும். அப்படி ஒரு அடிப்படை கட்டமைப்பு அதன் அடிப்படை கருத்தியலாக்கம் அனைவருக்குமான உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அமையவேண்டும். அதைவிடுத்து ஆழ்ந்த கருத்தாலமில்லாத தமிழனை தமிழன் ஆண்டால் போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மேம்போக்கான கருத்தியலாக்கம், நம்மையும் ஒரு பேரினவாதியாக கொண்டு நிறுத்தும்.
தமிழனை தமிழன் பல்லாண்டுகாலமாக ஆண்டு வந்துள்ளான், கிமு கிபி என்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் ஆட்சியில் தான் ஆரிய கட்டமைப்பு நமக்குள் செலுத்தப்பட்டு சாதியமாகவும் பிரிந்து நிற்கிறோம். வலங்கை இடங்கை சாதி சண்டைகளே கிமுவில் தொடங்கி கிபி வரை நீண்டு இருந்திருக்கிறது. இது வரி வசூழிக்கும் வேலை செய்தவர்களுக்கும் வரி கொடுப்போருக்கும் இடையிலான சண்டை, பின்னர் ஆண்டான் அடிமை சண்டையாக பிற்காலத்தில் வடிவமெடுத்தது அதில் அடிமையாக இருந்த சாதிகள் எல்லாம் மேலே வந்தும் இருக்கின்றன ஆண்ட சாதிகள் எல்லாம் கீழேயும் தள்ளப்பட்டு இருக்கின்றன. இப்படி நம்மை ஒடுக்க நமக்குள் பிரிவினைகள் தோற்றுவித்து அதை வளர்த்தெடுத்த பொழுது ஆண்ட மன்னர்களும் தமிழர்களே.
கருத்தியலாக்கம் என்பது காலத்திற்கும் நிற்கும் கருத்துகளின் அடிப்படையில் அமைய வேண்டியதுள்ளது அதைவிடுத்து முதலில் தமிழனை தமிழன் ஆள வேண்டும் அடுத்து அடுத்த படி என்று செல்வது அல்ல. முதலில் முடிவெடுக்க வேண்டியது தமிழ்த் தேசியத்தின் அடிப்படை வரையறைகள். இவைகள் இல்லாமல் அடுத்தப்படியை பற்றி நாம் யோசித்தாலும் அதை நம்பி நம்மோடு இருப்பவரே வரத் தயங்குவர். தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கான தேசியம் அதை ஆள்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் தமிழனாக இருப்பது மட்டுமே முக்கியம் இல்லை. ஒரு தமிழன் ஆள வேண்டும் என்பதற்கு தமிழர்கள் ஆளவேண்டும் என்பதற்கு பல்வகை வேறுபாடுகள் உண்டு,
ஹிட்லரைப் மனப்பாங்கை கொண்ட ஒரு தமிழனும் ஆள வரலாம் என்பது அல்ல தமிழ்த் தேசியம், தமிழர்களுக்கானது தமிழ்த் தேசியம். அதில் ஒடுக்கப்பட்ட தமிழன் மற்றவர்களை ஒடுக்குவது அல்ல தமிழ் தேசியம் அனைவருக்குமான தமிழகத்தை கட்டி அமைப்பதே தமிழ்த் தேசியம்.. இதற்கான வரையறையை ஈழத்தமிழர்கள் 1976ம் ஆண்டே நமக்கான வழி காட்டியாக அளித்து இருக்கின்றனர். இதை விடுத்து யார் தமிழன் யார் திராவிடன் என்று தேடி ஒதுக்குவது அல்ல தமிழ் தேசியம். இன்று திராவிட இயக்கம் தன்னுடைய மேலான பணியை செய்திருக்கிறது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் முன்பாகவே, இன்றைய திராவிட இயக்கத்தின் கட்சிகளாக அடையாளம் காணப்படுபவை சந்தர்ப்பவாத கட்சிகள் திராவிடத்தை தன் பெயரில் மட்டும் தாங்கி நிற்பவை.
மேலும் மிகவும் முக்கியமானது வர்ணபேதங்களினால் பிரிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களை சரிநிகரில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய வரையறையும் இதில் வேண்டும். இவைகள் இல்லாமல் வெறும் தமிழன் தமிழனை ஆள வேண்டுமென்பதல்ல தமிழ்த் தேசியம் தமிழருக்காக அமைவதே தமிழ்த் தேசியம். இதைத் தான் சிங்களர்களுக்கும் முழு உரிமை கொடுத்து அமைந்தது வட்டுக்கோட்டை தீர்மானத்தில்... சிங்களவன் தமிழீழத்தை ஆளக்கூடாது என்று எங்குமே வரையறைக்கவில்லை வட்டுக்கோட்டை தீர்மானம். இதனடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டியது. சிங்களர்கள் பலரும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவும் அளித்துள்ளனர் போராடவும் செய்துள்ளனர். இன்று இலங்கை நடத்தியது இனப்படுகொலை என்பதை வெளியுலகிற்கு தெரியவைத்துக் கொண்டிருப்பதும் சில சிங்களவர்களே..

தமிழ்த் தேசியத்தின் சண்டை நாம் போட வேண்டியது இந்திய தேசியம் என்ற இல்லாத ஒன்றை கட்டமைத்து அனைவரின் மனதிலும் வேருண்றி இருக்கும் கருத்தியலுடன் தானே ஒழிய, ஒன்றாக இருக்கும் சகோதர்களுடனானது இல்லை. இங்கு திராவிடத்தை பெயரில் மட்டும் தாங்கி நிற்கும் கட்சிகளில் சக தமிழனும் இருக்கிறான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் பலநூற்றாண்டுகளாக நம்முடன் வாழ்ந்து தன் தாய்மொழியை எழுதப்படிக்க கூட தெரியாமல் இருப்பவர்களை நாம் வந்தேறிகள் என்று ஒதுக்கினால் உலகில் அனைத்து மூலைகளிலும் ஏன் தென்னிலங்கையில் தமிழகத்தில் இருந்து குடியமர்த்தப்பட்டு அந்த நாட்டின் வளத்திற்கு நூற்றாண்டுகளாக உழைத்த மலையகத் தமிழர்களையும் சேர்த்து அனைவரையும் அவர்கள் வந்தேறிகள் என்று சொல்வதை ஒத்துக் கொண்டு திரும்ப அழைத்து வரவேண்டும். இதற்கு நாம் தயராக இருக்கலாம் ஆனால் ஆண்டாண்டுகளாக தன்னுடைய இடம், மண் என்று பிறந்து வளர்ந்த அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
தமிழினம் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை... உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்தவர்கள் இன்று தமிழர்கள் அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தான் தமிழ்த் தேசியம் அதை செய்ய முன்னுதரணமாக தமிழகத்தில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சக மொழிபேசும் தமிழகத்தில் வாழ்பவர்களை தூற்றுவதல்ல தமிழ்த் தேசியம்.
முழுமையா வட்டுக்கோட்டை தீர்மனத்தை படிக்க கீழே இருக்கும் இணைப்பை உபயோகிக்கவும்...
http://www.tamilvalg.dk/tamil/?page_id=15

மிக நேர்த்தியான பதிவு.........
ReplyDelete