தற்கொலைபடை தாக்குதல், என் உயிரே போனாலும் பரவாயில்லை எதிரியின் இராணுவகூடாரம் அழியவேண்டும் என்பதே விடுதலைகாக போராடும் வேங்கைகளின் முதற் குறிக்கோள். இப்படி பட்ட தாக்குதல்களை உலகிற்கு முதலில் அறிமுக படுத்தியது யார்?
1799ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் வீரபாண்டியகட்ட பொம்மன் தூக்கிலடப்பட்ட நாள் அதற்கு முன்பே கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். போரில் படுகாயமுற்ற ஊமைத்துரை ஒரு அம்மையாரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார். பாஞ்சால குறிச்சியில் ஆரம்பித்த போர் முடிந்துவிட்டதா அன்றோடு இல்லை தொடர்ந்தது. சுற்று வட்டாரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனையும் படைவீரர்களையும் தேடிக் கொண்டிருந்தது கும்பினிபடை.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் கட்ட கருப்பணன் என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம். தூத்துகுடியை அடுத்த கவர்னகிரியை பிறப்பிடமாக கொண்ட ஒரு மாவீரன். ஊர் காக்கும் காவலானக வாழ்ந்து கொண்டிருந்த சுந்தரலிங்கத்தின் வீரத்தை கேள்விபட்ட கட்டபொம்மனும், ஊமைத்துரையும் கவர்னகிரி வந்தனர், நாங்கள் கள்வர்கள் என்று சொல்லி உங்கள் ஊரில் ஒரு வீட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்று கேட்டனர். அடிக்கும் கொள்ளையில் உனக்கும் பங்கு தருகிறோம் என்று வெகுண்டெழுந்தான் சுந்தரலிங்கம் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துவந்து சண்டையிட தொடங்கினான் சுந்தரலிங்கம். சிறிது நேரத்திற்கு பின் சண்டையை நிறுத்திய கட்டபொம்மன் தாங்கள் யார் என்பதை சொன்னார் மேலும் தனது படையில் வந்து இணைந்து கொள்ள சுந்தரலிங்கத்தத அழைத்தார். சுந்தரலிங்கமும் சம்மதித்து அவர்களின் படையில் இணைந்தார், இணணந்த சிறிது காலத்திலேயே துணை தளபதி பதவியை அடைந்தார், ஊமைத்துரைக்கு இவர் தான் வலது கை இடது கை என்று எல்லாமே ஆனார்.
ஆங்கிலேயேனுக்கு எதிரான போர் தொடங்கியது, வீரபாண்டியகட்டபொம்மன் பிடிபட்டார், ஊமைதுரை சிவகங்கை சீமையை சென்றடைந்தார். ஆனால் வீரன் சுந்தரலிங்கம் கலங்கவில்லை தொடர்ந்து ஒரு சிறுபடையுடன் போராடினார். ஆங்கிலப்படை இவர்களுக்கு இடுகொடுக்க முடியாமல், இவர்களை பிடிக்கமுடியாமல் திணறியது. திருச்சியில் இருந்து புதிய படையணி வந்தது ஆயுதங்கள் பிரங்கிகளுடன், சுந்தரலிங்கம் இதை அறிந்திருந்தார். அவர்கள் பிரங்கியையும் வெடிகுண்டுகளை உபயோகித்தால் தாக்கு பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து இருந்தார். அவரது முறைப்பெண் வடிவைக் கூப்பிட்டுக் கொண்டு ஆடு மேய்ப்பது போல் ஆங்கிலேயனின் ஆயுதகிடங்கை அடைந்தார். வடிவை வெளியில் இருக்க சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்தார் ஆனால் அவர் உள்ளே போவதை ஆங்கிலேயே சிப்பாய்கள் பார்த்துவிட்டு சுற்றி வளைக்க ஆரம்பித்தனர். வடிவும் செய்வதறியாது ஆயுதகிடங்கிற்குள் சென்றார்.
அங்கு உள்ளே என்ன நடந்தது என்பது ஆண்டவனுக்கே தெரியும். ஆனால் சில நொடிகளில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது அந்த மாவீரனின் உயிர் அவரது முறைப்பெண்ணுடன் சென்றது. 1799ம் வருடம் செம்ப்டம்பர் மாதம் இவர் உயிர் இப்பூவுலகை விட்டு பிரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு மாதத்தில் அக்டோபர் மாதம் 16ம் நாள் உயிரிழந்தார்.
ஆம் முதலாம் சுதந்திர போராட்ட வீரர் வீராங்கனை என்று இந்தியவரலாற்றில் சென்னம்மா, ஆயிரம் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் வேலுநாச்சியாரோ, சுந்தரலிங்கமோ, பீரங்கியின் வாயில் கட்டி வைத்து வெடித்து சிதறடிக்கப்பட்ட வீரன் அழகு முத்துவோ யாருக்கும் தெரியாது. கேட்டால் இந்தியா என்ற ஒரு நாட்டிற்காக அவர்கள் போராடவில்லை அவர்கள் வாழ்ந்த ஆண்ட பகுதிகாகவே போராடினார்கள் என்று. ஜான்சி ராணிக்கு ஏன் மரியாதை என்று கேட்டால், பன்றிகரியும், பசுவின் கொழுப்பையும் தடவியதால் கொதித்து எழுந்த பார்பனர் பாண்டே போன்றவர்கள் நடத்திய சிப்பாய்கலகத்தை (ஆங்கிலேயேன் அப்படிதான் வர்ணிக்கிறான்) முதல் இந்திய சுதந்திர போர் என்றும். அதே சமயத்தில் வாரிசு இல்லாததால் பறிக்கப்பட்ட தன் சொத்தை காப்பாற்ற போராடிய ஜான்சி ராணி முதலாம் சுதந்திர போராட்ட வீரங்கனன என்று வர்ணிக்கிறார்கள். அப்படி பார்த்தால் வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இரண்டு துண்டுகளாக வெட்டுபட்டு கொல்லப்பட்ட மாடு மேய்க்கும் பெண்ணே முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை என்று சொல்லலாம். வேலு நாச்சியார் அவருக்கு நடுக்கல் நட்டார் அது இன்று சிவகங்கை அடுத்த கொல்லங்குடியில் வெட்டுடைய காளியாகிவிட்டார்.
நெற்கட்டான் சேவலை ஆண்ட புலிதேவன், இவரின் வீரத்திற்கு முன் ஈடுஇணை என்பது யாருக்கு இருக்கிறது. பீரங்கியின் முன் வாயில் கட்டிவைத்து மன்னிப்பு கேட்டால் இழந்த நாடு திரும்ப கிடைக்கும் என்று சொன்ன பொழுதும். மாட்டேன் என்று சொல்லி பிரங்கியை தழுவிக்கொண்டு தன் உடலை சுக்கு நூறாக சிதைத்துக் கொண்ட இந்த மாவீரனை என்னவெண்று சொல்லுவது. இவரும் வேலு நாச்சியாரின் ஆட்சிகாலத்திலேயே நெற்கட்டான் சேவலில் ஆங்கிலேயேனை எதிர்த்து போராடியவர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆங்கிலேயனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவர்.
இப்படி வரலாற்றை மறைத்து உலக மக்களுக்கு முன்னால் இவர் தான் முதல் வீரர் அவர் தான் முதல் வீராங்கனை என்று. இவர்கள் மூலம் தான் இந்தியா என்ற நாடு உருவானது என்று சொல்லிக்கொள்ளும் இந்த இந்தியம் தேவையா. ஆங்கிலேயேனை எதிர்த்து முதன் முதலில் போராட தொடங்கியவர்கள் தமிழன் என்பது மட்டும் இல்லை கடைசி வரை போராடியம்வனும் தமிழர்களே.
தன் மண் தன் சொந்தம் என்று வாழ்ந்த தமிழன் இன்று இந்தியம் என்னும் கூட்டுக்குள் சருகாய் இருக்கின்றான்.
No comments:
Post a Comment