Saturday, October 30, 2010

10 வருட போராட்டம் ஒரே ஒரு சட்டததை எதிர்த்து..

 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பெயரை போன்றே மணியான ஒரு மாநிலம், இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் ஒரு நந்தவன உலகம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலக்குரல் ஓங்கி ஒழித்தால் அதை தீவிரவாதம் என்று வர்ணித்து அதன் குரல்வலையை கடித்து உலகத்திற்கு அவர்களின் குரல் கேட்காமல் செய்வது உலக அதிகார வர்க்க அரசுகளின் மரபு. அதற்கு மணிப்பூரும் விலக்கு அல்ல, அங்கும் தீவிரவாதத்தத ஒடுக்குகிறேன் என்ற பெயரில் 1958ம் வருட அவசரகாலசட்டம(Armed Forces Special Powers Act (AFSPA)). முதன் முதலாக 1990 அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரக்காரணமாக உல்பா தீவிரவாதிகள் மணிப்பூரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்புகிறார்கள் என்று சொல்லி சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தனர். இந்த சட்டம் மக்களுக்கு அமைதியாக வாழ உதவியதோ இல்லையோ, இராணுவபடையினருக்கும் துணை இராணுவப்படையினருக்கும், மாநிலகாவல் துறைக்கும் மிகவும் உதவியது. யாரை வேண்டுமானாலும் எந்த காரணமும் இன்றி கைது செய்யலாம். வாரண்ட் தேவை இல்லை எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பின் பற்ற வேண்டியதில்லை, சந்தேகப்படும் நபர்களை சுட்டுக் கொள்ளலாம். இத்தனைக்கும் மேலாக எந்த நேரத்திலும் யாரு வீட்டுக்குள்ளும் நுழையலாம் தங்கள் உடல் திணவிற்கு அந்த வீட்டு பெண்களை உபயோகித்துக் கொள்ளலாம், இது சட்டத்தின் வரையறையில் எழுதப்படவில்லை ஆனால் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் தன் உடல் திணவை தீர்த்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ இல்லை, பாலியல் வன்முறை என்று புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர் வந்தால் AFSPA பாயும்.

ஆம் ஒரு சிரூடைப் பணியாளன் கையில் ஒரு குண்டூசியை கொடுத்தால் அதை அவன் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறானோ இல்லையோ, அதை வைத்து தான் எந்த மக்களை பாதுகாக்க வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறோமோ அந்த மக்களை மிரட்டுவதற்கு பயன் படுத்துவான். அப்படித் தான் AFSPAவும் இந்திய இராணுவப் படைகளுக்கும், துணை இராணுவப்படைகளுக்கும் தாங்களே இங்கே அனைத்துக்கும் உரிமை படைத்தவர்கள் என்று மணிப்பூரின் அனைத்தையும் ஆண், பெண் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அஃறிணை பொருள் வரை தங்களுடையதாக பாவிக்க ஆரம்பித்து தங்களின் கொலைவெறி ஆட்டத்தை 1990ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றனர். நாம் எல்லாம் அஸ்ஸாமை முதன் முதலாக திரும்பி பார்க்க காரணமாக இருந்தவர்கள் அஸ்ஸாமிய பெண்களே இந்திய இராணுவமே வா வந்து என்னை பாலியல் வன்முறை செய்து கொள் என்று ஓங்கி கூவிய குரல், இந்த குரல் AFSPA அமுல் படுத்தி 14 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு ஒலித்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே தன்னை உலகத்திற்கு அஹிம்சையையும் சத்யாகிரகத்தையும் கண்டுபிடித்த காந்தியின் தேசமாக காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு அதன் வழியிலேயே 2000ம் ஆண்டு முதல் பத்து வருடமாக தொடர்ந்து நடந்து வரும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நமது கண்ணுக்கு முன்னால் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல், ஒரு மிகப்பெரிய அஹிம்சாவழி போராட்டம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துபவர் ஐரோம் சர்மிளா என்ற ஒரு பெண், இவர் பள்ளி படிப்பிற்கு மேல் படிக்க முடியாமல் குடும்ப வறுமையால் படிப்பை கைவிட்டவர். நவம்பர் 2ம் தேதி  2000 ஆண்டு மல்லோம் என்ற இடத்தில் துப்பாக்கி சூட்டில் ஒரு நடுத்தரவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் இறந்தனர். இதை கண்டித்து முதன் முதலாக இல்லை இல்லை அன்று உண்ணாவிரதததை ஆரம்பித்தார் சர்மிளா அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது இவரின் உண்ணாவிரதப் போராட்டம். 2000ம் ஆண்டு ஆரம்பித்தவுடன் இரண்டு நாள் கழித்து தற்கொலை முயற்சி என்று கைது செய்தனர். சிறையிலும் இவர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது, 21ம் தேதி நவம்பர் அன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூக்குவழியாக உணவு கொடுக்கப்பட்டது, வலுகட்டாயமாக. அதன் பிறகு ஒருவருடம் மருத்துவமனை அறையே சிறையானது அதிலும் தொடர்ந்தது இவரது போராட்டம்.

சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து வெளியே வருவார், வந்ததும் திரும்பவும் உண்ணாவிரத்தை தொடர்வார். இப்படி சென்று கொண்டிருந்தது இவரது உண்ணாவிரதப் போராட்டம். ஒரு சமயத்தில் சிறையிலும் உண்ணாவிரத்ததை தொடர்ந்தார், உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திரவ உணவு மருத்துவ முறையில் ஊட்டப்பட்டது வலு கட்டயமாக. இவரின் நிர்பந்தத்தாலும், மணிப்பூரை நாம் அனைவரும் திரும்பி பார்க்க வைத்த பெண்களின் நிர்வாண போராட்டத்தாலும், 2004ம் ஆண்டு 7 மாவட்டங்களில் மட்டும் அவசரகால சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதிலும் இரோம் சர்மிளா சமதானம் அடையவில்லை மொத்தமாக திரும்பபெற வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளார்இவரின் உண்ணாவிரத ஆயுதத்துடன். இவருக்காக மருத்துவமனையில் ஒரு அறையை சிறைக்கூடமாக மாற்றி வைத்துள்ளனர்.

தென்கொரிய அரசு மனித நேயத்திற்கான விருது வழங்கி இவரை கவுரவித்துள்ளது, ஏன் இரவீந்தர்நாத் தாகூர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர் பிரிவினை கேட்க்கவில்லை அடக்கு முறை சட்டத்தை திரும்ப பெற கோருகிறார். இவருக்கு ஆதரவாக டிசம்பர் 10, 2008ல் இருந்து மணிப்பூர் பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த வருடம் மார்ச் மாதம் விடுதலை ஆன பொழுது சிறையில் இருந்து நேரடியாக தொடர் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்களுடன் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.

ஏன் இவர் போராட்டத்திற்கு பாசம் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் இவரின் 70 வயது தாயார் இது வரை போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இவரை சென்று பார்க்கவில்லை.

http://manipurfreedom.org/call4action2009 எனும் இணையதளத்தில் இருந்து.

No comments:

Post a Comment