திராவிடம் என்றால் என்ன? என்பதை அறியாத சிலர் வீரமணியும், கருணாநிதியும் தான் திராவிடத்தின் அடையளமாக நினைத்துக் கொண்டு, அவர்களை அளவுகோளாக எடுத்துக் கொண்டு திராவிடம் தான் எங்களை அழித்தது என்ரு பிதற்றித் திரிகிறார்கள். ஆனால் 1973 பெரியார் இறந்தபின் பெரியாரின் சொத்தை தமிழனுக்காக இல்லாமல் தனக்காக என்று ஒரு வியபார நிறுவனமாக மாற்றிக் கொண்டவர் வீரமணி. பெரியார் இருக்கும் பொழுதே திமுக மேடைகளில் பெரியாரையும், மணியம்மையையும் “மைனர்” மற்றும் “கிளியோபட்ரா” என்று அசிங்கமாக திமுக மேடையில் விபூதி வீரமுத்து, தீப்பொறி ஆறுமுகம் போன்று பேசினவர் தான் கருணாநிதி. இவர்கள் தான் திராவிடத்தின் அடையாளம் என்று நினைத்தால் நினைப்பவர்களின் தவறு.
சரி எது திராவிடம்? சென்னை தி.நகர் வந்தவர்கள் அனைவரும் அறிந்தது இரண்டு ஒன்று ரங்கநாதன் தெரு அடுத்து உஸ்மான் ரோடு. இதில் உஸ்மான் ரோடு யார் பெர்யரால் அழைக்கப்படுகிறது என்பது இங்கு பலருக்கு தெரியாது. ஒரு காலத்தில் சென்னை மாகணத்தின் கவர்னராக இருந்த சர். முகமது உஸ்மான் அவர்களின் நினைவாகவே தி.நகர் உஸ்மான் ரோட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பார்ப்பனியம் கோலோட்சி தமிழனை ஆட்டிப்படைத்தப் பொழுது நீதிக்கட்சி “பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு” என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஆரம்பித்தவர்களுள் ஒருவராக நின்றவர் தான் சர். முகமது உஸ்மான்.
அவரது சமகாலத்தில் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியில் கோலோட்சியவர் தீரர் சத்தியமூர்த்தி என்று அழைக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யர். இவர் ஒரு தீவிர இந்திய தேசியவாதி என்பதைவிட தீவிர இந்துத்துவவாதி என்பதே சரியாக இருக்கும். ஆம் தேவதாசி முறை இருக்க வேண்டும் ஆண்களுக்கு பொழுது போக்க ஒரு இடம் வேண்டும் அதற்கு தேவதாசி முறையை நீக்க கூடாது என்று வாதிட்டவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபொழுதே சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார். மேலும் “பெண்கள் சொர்கத்திற்கு செல்ல இது ஒன்று தான் வழி” என்றார். அதற்கு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியார் எங்கள் சமூகப் பெண்கள் நிறையபேர் சொர்க்கம் சென்றுவிட்டனர் இனிமேல் உங்கள் சமூகப் பெண்களை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் என்று சொன்னபிறகே வாயை மூடினார்.
இது மட்டுமல்ல இன்று பார்ப்பனியம் இந்திய தேசியத்தை மறைமுகமாக இந்து தேசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றால் இவர் சென்னை மைலாப்பூர் கோயிலில் இந்திய தேசிய கொடியை ஏற்ற முயன்று, இந்தியா இந்துக்களுக்கானது என்பதை சொல்லாமல் சொன்ன மாகனுபாவர். சென்னை மாகணத்தின் ஆளுகைக்குள் இல்லாமல் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியில் தனித்தே செயல்பட்டு வந்தது அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானுக்கு ஆஸ்திரேலிய மனைவி வழிப் பிறந்த இளவரசுக்கு வாரிசு உரிமை தரக்கூடாது எனவும் போராட்டம் செய்தார். சுத்தரத்தம் பார்த்து வாரிசுரிமை அரசியல் பேசினார், அதாவது இந்து ரத்தத்துடன் அந்நியரத்தம் கலந்தவர் புதுக்கோட்டையின் மன்னராக வரக்கூடாது என்று பேசினார்.
தமிழக காங்கிரஸில் மட்டுமல்ல தேசிய அளவிலும் காங்கிரஸில் மிகச் செல்வாக்கு படைத்தவர் சத்தியமூர்த்தி. அதாவது இந்தியாமுழுவதும் காங்கிரஸின் அடையாளம் காந்தி என்றால் தமிழ் நாட்டின் அடையாளம் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலச்சாரியும்.. அதில் ராஜகோபலச்சாரியை வெற்றிகொண்டவர் சத்தியமூர்த்தி. சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜ்ரை தேர்ந்துடுக்க வைத்து அவருக்கு கீழாக செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டவர். இவர் முகமது உஸ்மான் தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவுடன் சொன்னார் “எனது சூ கயிறை கட்டக்கூட தகுதியற்றவன் உஸ்மான்” என்று.
ஆனால் அந்த சூ கயிறைகட்டக்கூட தகுதியில்லாதவன் என்று சொன்ன வார்த்தைகளுக்காக ஒரே ஒரு கூட்டம் தான் போடப்பட்டது, அதில் எம்.கே.குப்தா என்ற பெரியார் தொண்டர் பேசினார். அவர் சொன்னது இது தான் உஸ்மான் சூவை கழட்டி அல்ல என் சூவை கழட்டி உன்னை அடிப்பேன் என்று பகிரங்கமாக பொது மேடையில் அறிவித்தார்.. வாலைச் சுருட்டிக் கொண்டு சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டார். இது நடந்தது எல்லாம் திராவிடர் கழக மேடையில். நடந்த கால கட்டம் 1930களில் ஆனால் இன்று திராவிடர் கழகத்தில் இபப்டி யாராவது இருக்கிறார்களா.. எம்.கே குப்தா போல் காந்திக்கும் இந்தியத்திற்கும் சவால் விடக்கூடியவர் எங்கே என்று தேடுவோமா...
இன்னும் வரும் எம்.கே.குப்தாவைப் பற்றியும் திராவிடர் கழகம் வீரமணி என்ற வியபாரியின் கீழ் சோரம் போனதைப் பற்றியும்..
No comments:
Post a Comment