நிலவரசு கண்ணன் இவர் நேற்றில் இருந்து விட்டுக்கொண்டு இருக்கும் உதாரு உங்கவூட்டு உதாரு எங்கவூட்டு உதாரு இல்ல, மாபெரும் உதார்கள். இவரை கொலை செய்ய போவதாக மிரட்டல் வருகிறதாம், அப்படி இப்படினு பல உதார்கள். இது வரை கேணை கிருக்கன் ஒருவனை பார்த்து வந்தோம் அதே அளவிற்கு அடுத்து ஒரு ஆள் உருவாகி இருக்கிறார். இவரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த பதிவு.
நமது போராட்டங்களின் நோக்கங்கள் அரசு பலவிதமாக திருப்பும், அதில் ஒன்று தான் இன்று ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் செய்தியான 4 மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பிரதமர் காமென்வெல்த் மாநாட்டுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று வரும் செய்திகள். ஆனால் களத்தில் போராடி கொண்டிருப்பவர்களையும் திசை திருப்ப வேண்டும் போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க வேண்டும் என்று ஊடகங்கள் மட்டும் அல்ல பல்வேறு உத்திகளை கொண்டு நிறைவேற்றும். இந்த நிலவரசு கண்ணன் அந்த அளவிற்கு ஒர்த் கிடையாது ஆனால் இவரால் முடிந்த அளவு இங்கு போராடிய ஒரு இயக்கத்தின் நோக்கத்தை சிதைத்து இருக்கிறார்.
திராவிடர் விடுதலை கழகம் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று போராடியதாக திரிக்கிறார். ஆனால் அவர்கள் 20-10-2013 அன்று சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் தெளிவாக தங்கள் கோரிக்கையை முன்னுறுத்தி இருக்கின்றனர்.
இந்த துண்டறிக்கையில் மிகத் தெளிவாக தங்கள் கோரிக்கையை அதுவும் முதன்மை கோரிக்கையை மிகவும் சரியாக இனப்படுகொலை நடந்த இலங்கையில் கமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமல்ல அவர்கள் நிகழ்வில் எடுத்த படத்தில் பின்னால் இருக்கும் பேனரிலும் அவர்கள் கோரிக்கையை தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். பேனரில் கோரிக்கை தான் மிக முக்கிய இடம் வகிக்கிறது அவர்கள் இயக்கத்தின் பெயர் கீழே ஒரு மூலையில் உள்ளது.
இப்படி அவர்கள் தங்கள் கோரிக்கையில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். அவர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்படி அவர்கள் கோரிக்கையில் தெளிவாக இருக்கும் பொழுது. நிலவரசு கண்ணன் திராவிடர் விடுதலை இயக்கம் கோரிக்கையை திரிக்கிறது போராட்டத்தை திசை திருப்புகிறது என்று ஒப்பாரி வைக்கிறார். அதாவது அவர்கள் செய்யாத ஒன்றை அதுவும் முழுப் பொய்யை திரும்ப திரும்ப வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தான் சொல்லும் பொய்யை உண்மை என்று நம்ப வைக்க முயற்சிக்கிறார்.
திராவிடர் விடுதலை கழகம் தாங்கள் நடத்திய போராட்டத்தில் மட்டுமில்லை மே 17 இயக்கம் இங்கிலாந்து, இந்திய அலுவலகங்களை முற்றுகையிட்ட போராட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்த போராட்டமும் காமென்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி நடத்தப்பட்டது தான். இப்படி எந்த போராட்டத்திலும் தங்கள் கோரிக்கையை மாற்றிக் கொள்ளாத திராவிடர் விடுதலை கழகம் போராட்ட நோக்கத்தை திசை மாற்றுகிறது வடுகர்கள் அது இது என்று ஒரு படத்தை தரவேற்றுகிறார். அந்த படம்
இதில் இடது புறம் இருப்பது தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரயில் மறியல் இரண்டாவதாக வலது புறம் இருப்பது திராவிடர் விடுதலை கழக தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை எந்த உயிர்சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படாவண்ணம் தாக்கிய பிறகு அவர்கள் காவல் துறையினர் மத்திய புழல் சிறைக்கு அழைத்து செல்லும் முன்பாக எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை திராவிரடர் விடுதலை கழக நண்பர்கள் முகநூலில் நவம்பர் ஒன்றாம் தேதியே பதிவேற்றி இருக்கின்றனர்ர் அங்கிருந்து தான் இவரும் எடுத்திருப்பார். அதில் மிகவும் தெளிவாக போராட்டம் எதற்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி நவம்பர் ஒன்றாம் தேதி தரவேற்றப்பட்ட படத்தை எடுக்கும் பொழுது படத்தின் மேல் சொல்லப் பட்ட செய்தியை படிக்கவில்லையா இவர் என்று தெரியவில்லை. ”சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில் இலங்கையில் காமென்வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்று எதிர்வினையாற்றினார்கள் என்பதால் கைது செய்யப்பட்ட திராவிட விடுதலை கழகத்தின் தோழர்களின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர் போராட்டத்தை திராவிட இயக்கமான இவர்கள் திசை திருப்புவதாகவும் அவர்கள் பெயர் எடுக்க முயல்வதாகவும் ஓவென்று கூக்குரலிட்டு அழுகிறார். நேற்று இரவு வரை முதல் இன்று முழுவதும் இவர்களை அம்பலப்படுத்திவிட்டேன் என்று அடை மொழி வேறு, இவர் இப்படி அம்பலப்படுத்தியதால் கொலை மிரட்டல் வருவதாக செய்தி தொடர்ந்து பதிந்து வருகிறார். இப்பொழுது கூட தன் நிலைத்தகவலில் பதிந்துள்ளார்.
https://www.facebook.com/nilavarasu/posts/561431063909944
இதில் இவர் திராவிடர் விடுதலை கழகத்தினர் மத்திய அரசு அலுவலகத்திற்கு எதிரான போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் முயன்றார், போராட்டத்தை மட்டுமல்ல போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளையும் அசிங்கப்படுத்தினார். அதையும் இங்கு பலர் பகிர்ந்துள்ளீர்கள் இது மாபெரும் வெட்க கேடு. திராவிடர் விடுதலை கழக தோழர்களுடன் இந்த போராட்ட களத்திற்கு வந்தது முதல் பழகி வருகிறேன், அவர்கள் ஆட்டு மந்தை கூட்டமல்ல தலைமை சொல்வதை கேட்பது மட்டும் தங்கள் வேலை என்று செய்ய. தலைமையின் கருத்து தங்களுக்கு பிடிக்காவிடில் நேரடியாகவே விவாதிப்பார்கள், அதே போல் தாங்கள் முன்னெடுக்க விரும்பும் போராட்டங்களை தலைமையின் அனுமதிக்காக காத்திருந்து செய்பவர்கள் இல்லை தங்கள் மனதிற்கு சரி எனப்பட்டதை செய்யும் போராளிகள். அங்கிருக்கும் தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் சரியாக வழி நடத்திக்கொள்வார்கள். அவர்கள் போராடுவதற்காக வந்தவர்கள் இல்லை வாழ்க்கையை போராட்டமாக அமைத்துக் கொண்டவர்கள். தலைமையில் இருந்து கடைசி தொண்டர் வரை சொல்வார்கள் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று..
நிலவரசு கண்ணன் முதலில் எந்த இயக்கத்திலும் இல்லாமல் இருந்தார் பின்னால் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார் இவருக்கு ஊடக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று முகநூலில் பதிந்திருந்தார் அவர்கள் கொடுத்தார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதன் பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டார் என்று தகவல் வந்தது. இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை ஆனால் தன்னை தமிழ் தேசியவாதி, தமிழ் உணர்வாளர் என்று கூறிக்கொள்கிறார். ஆனால் இவர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை, சிறிது காலம் தலித்தியமும் பேசினார். நானும் இவரும் பல விவாதங்களில் ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக விவாதித்து இருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு இயக்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையும் அதன் போராட்ட நோக்கத்தையும் திசை திருப்பும் இவரைப் போன்ற புல்லுறுவிகள் நமக்கு தேவையா என்று சிந்திக்க வேண்டும்.
இவர்களைப் போன்றவர்கள் பேசுவதை உண்மை என்று எண்ணிக் கொண்டு உண்மையிலேயே திராவிடர் விடுதலை கழகத்தின் போராட்ட நோக்கம் என்ன என்பதை தெரியாமல், விசாரித்து தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால் ஏற்படும் அநாகரீக தகவல்களை மற்றவர்களுக்கும் பகிர்வதை செய்து வருகிறோம். இனிமேலாவது இவரை போன்றவர்கள் மட்டுமல்ல நான் பதிவு செய்தால் கூட என்ன ஏது என்பதை ஆதாரம் இல்லாமல் பதிந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இங்கு நான் அனைத்து ஆதாரங்களையும் தேதி வாரியாக பதிவு செய்துள்ளேன். எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும் தகவல்களை தர தயாராக உள்ளேன்..
இன்று தி.வி.க. பொதுச்செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் நிலவரசு கண்ணன் சொன்னது உண்மை என்பது தெளிவாய்கியுள்ளது. இந்தியா மாநாட்டை புறக்கணிக்க வெண்டும் என்றே ராஜேந்திரன் சொல்லியிருக்கிறார். இதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை எதற்கு? அவரது விமரிசினம் ஒரு கோரிக்கை திரிக்கப்படுகிறது என்பதே, அப்படி இல்லையெனில் அப்படி இல்லை என்று சொல்லிவிட்டுப் போகலாம்.
ReplyDeleteவிடுதலை இராஜேந்திரன் அண்ணனிடம் தொடர்பு கொண்டேன் செய்தி தவறாக பகிரப்பட்டுள்ளது என்று சொன்னார். அவர் கொடுத்தது இலங்கையில் மாநாடு நடக்க கூடாது என்பதை முதலில் வலியுறுத்தி தானாம்.... இது ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் திரிபு வேலையில் ஒன்று..
ReplyDeleteநிலவரசு உண்மையை சொல்லி இருக்கிறார்,இதில் என்ன திரிபு.
ReplyDeleteஎன்ன உண்மையை சொன்னார் அதன் ஆதாரம் என்ன.. நான் ஆதாரம் கொடுத்துள்ளேன் முடிந்தால் பதில் சொல்லுங்கள்...
ReplyDeleteஅவர் வெளியிட்ட அறிக்கையிலேயே பங்கேற்பு புறக்கணிப்பு என்றுதான் உள்ளது.
ReplyDeletenilavarasu thalitiyam pesinaaraa :) haa haa
ReplyDelete