மன கன இன கன,
புன மான இன முன,
வின வின முன,
புன ஜன தொன முன,
பென வின முன
யாரும் பதட்டப்படாதிங்க.... யாரையும் நான் திட்டவில்லை "ராஜபக்சேவை தண்டிப்பது" என்று 30 பக்க புத்தகம் போட்ட இயக்கங்களின் பெயர்கள் தான் இவை...
புத்தகத்தின் பதிப்புரையிலே தங்களது புரட்சிகர பார்வையின் கீழ் இங்கு ஈழத்திற்காக போராடும் இயக்கங்களை இனவாதிகள் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார்கள். அதனால் தான் "நான் ஏன் இனவாதி ஆனேன்" என்பதை சொல்ல வேண்டியதாகிறது.
இந்த புத்தகம் இந்த இயக்கங்களின் நிறுவனத் தலைவர் (Founder & Managing Director) வழங்கிய ஒரு நேர்காணலாக தொகுக்கப்பட்டு இருக்கிறது. இவர் முதலில் இன்றைய கோரிக்கைகளாக திமுகவும் அதிமுகவும் வைக்கும் கோரிக்கைகளை இருவகையாக பிரித்து பேசுகிறது ஆனால் எதனால் இந்த புத்தகம் போட்டார்களோ அவர்களின் கோரிக்கையை கொஞ்சம் அராய்ந்தலேயே இந்த புத்தகம் போட வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். அதுக்கு எங்கே அவர்களது புரட்சிகர சித்தாந்தங்கள் சிந்திக்க விடுகின்றன.... குற்றம் கண்டுபிடித்து வாழ்வரே வாழ்வர் என்பது தானே இவர்களின் புரட்சிகர சித்தாந்தமாக இருக்கிறது. அவர்களுக்காக மற்றுமொரு முறை மாணவர்கள் முன்வைத்து போராடும் கோரிக்கைகள்.
- அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
- இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
- சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
- சிங்களஇனவெறி அரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
- தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
- உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
- ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
- தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
- ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா ஐநாவில் தீர்மானமாக கொண்டுவரக் கோருவது, இந்தியாவை தப்பிக்க வைக்கும் நோக்கம். இந்தியாவும் இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதை மறைப்பது என்று கூருகிறார். மாணவர்களின் போராட்டங்களுக்கு பிறகே கருணாநிதி தனது நிலைப்பட்டன அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதில் இருந்து மாறி, திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும் என்று பேசினார். ஜெயலலிதாவும் சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டும் என்று சொன்னார். இதற்கு காரணமான மாணவர் போராட்ட கோரிக்கையை மறந்துவிட்டார்கள்.
ஒட்டுமொத்தமாக இந்த புத்தகத்தின் நோக்கம் என்பது இன்றைய மாணவர் போராட்டங்களை நொட்டை சொல்வதும், தமிழினத்தைப் பற்றி யோசிப்பவர்களை இனவாதிகளாக சித்தரிப்பதுமே. இதை படித்து முடிக்கும் பொழுது ஏன் நான் இனவாதியாக இருக்க கூடாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. 7வது கோரிக்கையாக ஆசியநாடுகள் எவையும் இந்த சர்வதேச போர் குற்ற விசாரணையில் பங்கு கொண்டு விசாரிக்க கூடாது என்று தெளிவாக சொல்லி இருக்கின்றனர். இது இந்தியா போன்ற ஆசிய நாடுகள் தப்பிக்க வைக்கும் நோக்கம் இல்லை அவைகளும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன். இதை கருணாவும் ஜெயாவும் மறப்பது அவர்களின் இந்திய பாசத்தால் ஆனால் இந்த கோரிக்கையை இந்த நிறுவனத் தலைவர் மறப்பது தான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஏன் மாணவர்கள் பல கோரிக்கைகளுடன் இருக்கின்றனர் என்று சொன்னவர் இவர்களின் இயக்கம் சார்பாக தற்பொழுது முளைத்திருக்கும் புதிய காளான் ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி கோரிக்கையாக இல்லாததால், இன்றைய மாணவ போராட்டங்களின் முதல் நெருப்பு துண்டாக இருந்த லயோலா மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை மறந்தது ஏன்???
நீங்களே சொல்கிறீர்கள் மனித உரிமை என்ற பெயரில் தான் அமெரிக்கா அனைத்து இடங்களிலும் மூக்கை நுழைக்கிறது எனவே தான் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கைக்கு அதரவாக வாக்களிக்கின்றன என்று, ஆனால் அதே சமயத்தில் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பக் கூடாது என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா. அமெரிக்கா வந்ததால் நீங்க குளத்திடம் கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாம நீங்கள் போனா ஈழமக்களும் கழுவாம போக முடியுமா?? ஈழமக்களுக்கு தேவை அவர்கள் மக்களின் பாதுகாப்பும் உரிமையும் அதற்காகவே ஆயுதம் தூக்கினர் போராடினர். உங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனைகளுக்காக அல்ல.
அங்கிருந்த பாட்டாளி வர்க்கமான மலையக தமிழர்கள் வெளியேற்றப் பட்ட பொழுது உங்கள் பாட்டாளி வர்க்க தோழர்கள் தோள் கொடுக்க வரவில்லை. தந்தை செல்வா மட்டுமே எதிர்த்து குரல் கொடுத்தார் பொன்னம்பலத்தின் கட்சியைவிட்டு வெளியேறி தனி கட்சி உருவாக்கி போராடினார். ஆனால் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க தோழர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தனர் என்று சொல்வதை விட கொக்கரித்ததாகவே கருத முடியும். ஏனென்றால் குற்றம் செயல்படுத்தப் படும்பொழுது காக்கும் அமைதி அந்த குற்றம் செய்தவனை விட கொடும் குற்றமாகவே அந்த அமைதி கருதப்பட வேண்டும். 1950களில் இருந்து இன்றுவரை நடத்தப் படும் அனைத்து கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் அந்த சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து தமிழர்கள் தங்களின் உரிமையை வென்று எடுக்க வேண்டும் என்று கூறுவது கேவலமாக இல்லையா. ஜெவிபி போன்ற இயக்கங்களில் சில ஆதரவு அளித்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாத கையாலாகத நிலையில் தான் நின்றனர். இன்று தமிழர்கள் இணைந்தால் அதன் பிறகு அவர்கள் பலம் கூடலாம், ஆனால் போராடிய தமிழர்களுடன் இணையாத அவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள் ஏன் 30 வருடமாக இயக்கம் நடத்தும் நீங்கள் தமிழர் போராட்டத்தில் அவர்களை இணைய சொல்லி வற்புறுத்தவில்லை.
இந்திய அரசாங்கமாக இருக்கும் காங்கிரஸ், பிஜேபி போன்ற பல கட்சிகள் பற்றி எல்லாம் இங்கு அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். உங்களுக்கு தான் இன்று உங்கள் மூளையில் கண்டுபிடித்த ரகசியம் போல் பேசுகிறிர்கள். அனால் இங்கு இருக்கும் தமிழினவாத அமைப்புகளும் சரி இன்று எழுச்சியுடன் போராடும் மாணவர்களும் சரி யாரும் ப.ஜ.கவை நம்பி இருக்கவில்லை. வரும் தலைமுறை அவர்களை அழித்தொழிக்கும் அனால் உங்களைப் போன்றவர்களை தான் அவர்கள் முதலில் அழித்தொழிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனென்றால் எதிரியை நேரடியாக களத்தில் சந்தித்து பகையை தீர்த்துக் கொள்ளலாம் உங்களை போன்றவர்கள் கூட இருந்து புரட்சி புண்ணாக்கு என்று கழுத்தை அறுப்பவர்கள். 1,50,000 பேர் உயிர் போனபொழுது காப்பாற்ற வராத உங்கள் புரட்சிகர சித்தாந்தம் இப்பொழுது கப்பாற்ற வரும் என்று நினைக்க நாங்கள் முட்டாள்கள் இல்லை காங்கிரஸ், பாஜக போன்ற மதவாத கட்சிகளுடன் உதவாத உங்க கட்சிகளையும் இயக்கங்களையும் என்றிலிருந்தோ நாங்கள் ஒன்றாக பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்த்து ஒரே நேர்கோட்டில் இணைத்து தான் பார்க்கிறோம்.
குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் உங்கள் புத்தகம், அதைவிட முக்கியமான பாதிக்கப் பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பேச எது தடுக்கிறது. புலிகளை பாசிசவாதிகள் என்று கூறி வந்த நீங்கள் இன்று அவர்களை புகழ முடியாது என்பதாலா, நாங்கள் தெளிவாக இருக்கிறோம் போராடும் மாணவர்களும் தெளிவாக இருக்கிறார்கள் "விடுதலைபுலிகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்பதில்
நீங்கள் தான் விடுதலை போராட்டத்திற்கும் மற்ற இன வெறியாட்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றி திறிகிறீர்கள்.
ஒடுக்கப்பட்ட ஒரு இனம் தன் கால்களில் தானே எழுந்து நிற்க முயல்வது இனவாதம் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே இருந்துவிட்டு போகிறோம்
ஒடுக்கப்படுபவர்களுகாக குரல் கொடுக்க வேண்டிய புரட்சிகர இயக்கங்கள் குரல் கொடுக்காமல் உயிரையும் உடமையும் பறிகொடுத்தவர்களுகாக குரல் கொடுக்கும் எங்களை இனவெறியன் என்றால் நானும் இனவெறியனே..
தேசிய இனவிடுதலையை அங்கீகரிக்கும் கம்யுனிசம் அது கம்யுனிசமாக மட்டும் இருந்தால் தான் குரல் கொடுப்போம் மற்றவர்கள் மூலமாக என்றால் வாயை மூடிக் கொள்ளும் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே எங்கள் மண்ணை மீட்டுக் கொள்கிறோம்.
ஆயிரம் முறை சொல்வோம் நாங்கள் எம் இன மக்களின் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் இனவெறியனாகவே இருக்க விரும்புகிறேன்.
ஒடுக்கப்பட்ட ஒரு இனம் தன் கால்களில் தானே எழுந்து நிற்க முயல்வது இனவாதம் என்றால் நாங்கள் இன வெறியர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.
ReplyDelete