Friday, April 8, 2011

ஓட்டு போடுங்க இதை பார்த்துவிட்டு

Posted Image

நம்ம அரசியல்வியாதிகள் எப்ப யாரு கேட்டாலும் தன் சொத்து எவ்வளவுனு யாருக்கும் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்லுவது ஒரிடத்தில் மட்டும் தான் அது தேர்தல் நடக்கும் பொழுது மட்டும் தான். அதுவும் பாதி உண்மை இருக்காது எனென்றால் எல்லாத்தையும் சொன்ன அவனுங்க வச்சிருக்க பொண்டாட்டிகள் அத்தனைபேரும் அதை கொடு என்று பிச்சு எறிந்துவிடுவார்கள்.

இங்க அனைவரின் தகவல்களும் சொத்து தகவல்களும் உள்ளன உங்கள் தொகுதில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து, கடன் அவர்கள் திரும்ப செலுத்தவேண்டியது என்று எல்லாமும். ஏன் அவர்கள் பெயரில் எந்த எந்த செக்ஷனில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது வரை. அனைத்தையும் படியுங்கள் படித்துவிட்டு ஓட்டு போடுங்கள்.

மொத்த தகவலையும் பார்க்க முதலில் தொகுதியை தேர்ந்தெடுக்கவும் அதன்பின் வேட்பாளர்கள் பெயர்கள் ஒரு சுருக்க விவரம் வரும் விரிவாக பார்க்க வேட்பாளரின் பெயரி சொடுக்கினீர்கள் என்றால் சடுதியில் அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்..

தமிழக வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற விவரங்கள் (இங்கே சொடுக்கவும்)

எல்லாத்தையும் பார்த்துவிட்டு 49-0 என்று முடிவெடுக்காதீர்கள், அதனால் எந்த பலனும் இல்லை, ஒரு தொகுதியில் வெற்றிபெரும் வேட்பாளர் 10000 ஓட்டுகள் வாங்கி 49-0வில் 15000 ஓட்டுகள் விழுந்து இருந்தாலும் 10000 ஓட்டுகள் வாங்கிய வேட்பாளரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார். வேட்பாளர் தடை மறுபடியும் தேர்தல் என்பது வெறும் புரளி. இந்தியாவின் 1961ல் தேர்தல் நடைமுறை விதியிலோ அல்லது அதற்கு பிறகு நடந்த மாற்றங்களிலோ எங்கும் இப்படி கூறப்படவில்லை.. ஏன் ஒரு வேட்பாளர் ஒரு ஓட்டு தான் வாங்கியிருந்தார் மற்றவர்கள் ஓட்டு பெறவில்லை அனைத்தும் 49-0 என்றால் கூட ஒரு ஓட்டு வாங்கிய வேட்பாளரே வெற்றி பெற்றதாக் அறிவிக்கப்படுவார். இதை எடுத்துக்கொண்டு அதன் பிறகு நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்..

வாழ்க பணநாயகம்..

4 comments:

  1. TAC - Tamilar Against Corruption - ஊழலுக்கு எதிராக தமிழர்கள் என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. கோவை, மதுரை போன்ற இடங்களிலும் பொது மக்கள் இதில் இணைந்து செயல்படுகிறார்க ள். 5 வருடத்திற்கு ஒருமுறை வாக்கு அளிப்பதோடு எனது கடமை முடிந்தது என்று இருக்காமல் லஞ்ச, ஊழலுக்கு எதிராக மக்கள் மாதம் ஒரு முறையாவது கூட்டம் போட்டு விவாதிக்க வேண்டும். ஆகஸ்ட் 15 க்குள் இந்த "மக்கள் சட்டம்" நிறைவேற, கொள்ளையர்களுக்க ு தண்டனை கிடைக்க, கொள்ளை பணமும், சொத்தும் மக்களுக்கு கிடைக்க தயவு செய்து இந்த இயக்கத்தில் சேருங்கள். தயவு செய்து கிழே தரப்பட்டு உள்ள எண்களுக்கு "Yes We Do " என்று SMS தாருங்கள்.
    9962928069 , 9840852132, 9940066327, 9600041097, 9281000928, 9952316616, 9281000928, 9444020744, 9444961168, 9176657632, 9884269094, 9444321222, 9843677487, 9941292846, 9710201043, 9841429930, 9790909123

    ReplyDelete
  2. நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே 'நாம் ' ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் 'நாம்' ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் -

    ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

    chennai.iac@gmail.com
    iacchennai.org

    சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222


    சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
    9710201043

    சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168


    சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079


    பகத்சிங்

    ReplyDelete
  3. மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..

    ஜனாதிபதி தகுதி :
    முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
    குற்ற பின்னணி உடையவர்.

    பிரதமர் :
    முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் ...

    1) 2G ஊழலா .. தெரியாது

    2) commonwealth games ஊழலா .. தெரியாது

    3) adarsh ஊழலா .. தெரியாது

    4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

    5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

    நிதி அமைச்சர்:

    மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

    உள்துறை அமைச்சர் :
    வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

    முன்னாள் உள்துறை அமைச்சர் :
    தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

    தொலைதொடர்பு துறை :

    முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
    இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

    மத்திய வேளாண் அமைச்சர்:
    இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவர்களின் தலைவர் :
    என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

    முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
    பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
    இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

    கருப்பு பணம் தலைவர் :
    இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

    பாண்டிசேரி ஆளுனர் :
    மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

    தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

    எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

    தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

    ReplyDelete
  4. please read
    http://www.siragu.com

    ReplyDelete