Thursday, December 23, 2010

நாதியற்று போன ஒரு ஊர்...


Posted Image

இன்றிலிருந்து 44 நான்கு வருடங்களுக்கு முன் 1964 வரை ஒரு ரயில் நிலையம், வெளிநாடு செல்ல ஒரு கப்பல் துறைமுகம் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த ஒரு நகரம் இன்று நம்முடன் இல்லை. இங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் இன்று பிறந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள கூட முடியாமல் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தனை வருடமும் எந்த அரசும் இந்த ஊரை ஒரு புராதன் அடையளமாககூட மாற்றி பாதுகாக்க முன்வரவில்லை. இன்று அங்கு சென்றால் நமக்கு காணகிடைப்பதெல்லாம், 44 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரத்தினால் அடிபட்ட மிச்சங்களையும் எச்சங்களையும் தான்..

Posted Image

தனுஷ்கோடி தலைமன்னார் என்றால் அனைவருக்குமே தெரியும் 15கீமீட்டரில் ஒரு வெளிநாட்டுக்கு சென்று அங்கும் நம் மொழி பேசும் மக்களுடன் வியாபாரம் செய்து திரும்பிவந்த காலம் அது. ஏன் இந்தியன் இரயில்வே தலைமன்னார் வரைக்குமே பயணச்சீட்டு விற்றது, தனுஷ்கோடியில் இரயிலைவிட்டு இறங்கி தலைமன்னாருக்கு கப்பலில் சென்று வந்திருக்கிறார்கள். அதே பயணச்சீட்டை வைத்து. ஒரு நாளைக்கு இரண்டு கப்பல்கள் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்று வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று தனுஷ்கோடி வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

Posted Image

தனுஷ்கோடி அப்பொழுது இராமேஸ்வரத்தை விட மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரம். இரயிலில் வருபவர்கள் வியாபாரம் செய்பவர்கள் என்று மட்டும் இல்லாமல் மீனவர்கள் பலர் வாழ்ந்த இடம். ஒரே நாளில் மண்மேடாக மாறியது, ஒரே நாளில் அங்கு வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இறந்தவர்கள் எத்தனைபேர் என்று கணக்கு கூட தெரியாமல் அழிந்துபட்ட ஓர் நகரம். இந்த 44 வருடத்தில் இப்படி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டமைப்பு செய்து கொடுக்க யாராவது முயற்சித்தார்களா என்றால் இல்லை.

Posted Image

அழிந்துபட்டது திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாடோடி தமிழன் கூட்டமல்லவா அவன் வாழ்ந்த நகரம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன இந்த மத்திய மாநில அரசுகளுக்கு.....

5 comments:

  1. அரிய புகைப்படங்களோடு கூடிய கட்டுரை. தனுஷ்கோடி பற்றி முன்னர் அறிந்திருந்தாலும் புகைப்படங்கள் இன்னும் பல செய்திகளைத் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  2. 1961ல் எங்கள் வைஸ் ப்ரின்ஸிபல் கொழும்புக்கு ஒரு சுற்றுலா தனுஷ்கோடி - தலைமன்னார் வழியாக ஏற்பாரு செய்திருந்தார். மறக்க முடியாத ஒரு பயணம். இரண்டாண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் ஒரு ரோட்டரி மீட்டிங்குக்காக வந்த போது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் வந்தோம். அப்போதுதான் சர்ச்சையும் ரயில் நிலையத்தையும் பார்த்தேன்.
    சகாதேவன்

    ReplyDelete
  3. திருவாளர் கும்மி அவர்களுக்கும், சகாதேவன் அவர்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  4. கும்மி அய்யா இந்த புகைப்படங்களை ஒரு இந்தி ப்ளாக்கில் இருந்து எடுத்தேன்..

    ReplyDelete
  5. நானும் சமீபத்தில்தான் தனுஷ்கோடி சென்று வந்தேன்... அந்த கடைசி மணல்திட்டு வரை...அங்கேயும் ஒரு கடை இருக்கிறது நண்பரே இப்போதும்.. சுற்றுலா மக்களுக்காக

    ReplyDelete