சில வருடங்களாக சென்னையில் சொகுசு பேருந்துகளும் குளிர்சாதன பேருந்துகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் பயணசீட்டின் விலை அதிகமாக இருப்பினும் கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த வகை பேருந்துகளை உபயோகிக்கிறார்கள். சென்னை கோவை என்று இன்று தமிழ்கத்தில் அனைத்து மக்களும் இப்படிபட்ட சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் இந்த பேருந்துகள் மக்களின் உபயோகத்திற்கு அறிமுகப்படுத்தும் பொழுது அமைச்சர் பெருமக்களில் இருந்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுகிறார்கள். பேருந்தின் முகப்பில் முதல்வரின் படத்தை வைப்பதற்கும் மறப்பதில்லை..
சிறந்த முறையில் இந்த பேருந்துகள் சேவை செய்து கொண்டிருக்கின்றன. வேலூரில் இருந்து ஒரு முறை சென்னைக்கு இத்தகைய பேருந்து ஒன்றில் வந்தேன். மிகவும் அருமையான பயண் அனுபவம். கருணாநிதியின் தமிழக அரசின் சாதனைகளில் ஒன்றாக இதுவும் இருக்கும் என்றென்றும்..
சில நாட்கள் முன்பு தான் ஒரு வித்தியாசத்தை இத்தகைய பேருந்துகளில் பார்த்தேன் இதில் JN nuram என்று எழுதப்பட்டிருந்தன அனைத்து பேருந்துகளிலும். சரி இது டாடா போன்ற நிறுவனங்களின் மாடலாக இருக்கும் என்று நினைத்தேன். இன்று தீடிரென்று தோன்றி இத்தகைய பேருந்துகளின் விலை என்ன வரும் என்று பார்க்க JN nuram என்று தேடினால் தெரிய வந்தது ஒரு விசயம்..
இது வேறு ஒன்றுமில்லை Jawaharlal Nehru National Urban Renewal Mission. எனும் மத்திய அரசு நிறுவனம் பற்றி தெரிந்தது. நகரங்கள் மற்றும் கிராமங்களை முன்னேற்ற மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.
(இந்த இரண்டுபடங்களிலும், படி ஏறும் இடத்திலும், பின் சக்கரத்தின் அருகிலும் JN nuram என்று எழுதப்பட்டிருப்பதை இனிமேலாவது பாருங்கள்)
JN nuram என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நிதிகளை கொண்டே இந்த பேருந்துகள் வாங்கப்பட்டு மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கேராளவிலும் கூட வழங்கப்பட்டுள்ளது அங்கு எங்கும் முதல்வரின் படத்தை பேருந்தின் முன்னால் வைத்து பயன்பாட்டை தொடங்கி வைக்கவில்லை.. கீழே படங்களை பாருங்கள்..
ஆந்திரா
கேரளா
அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு தன் பெயரை இன்ஷியலாக போடுவது என்பார்களே அது இது தானோ.....
நம்ம என்னதான் சொன்னாலும் திருந்த மாட்டேங்றாங்களே பாஸ். மக்களும் சரி அரசியல்வாதிகளும் சரி..இவங்கள என்ன செய்ய
ReplyDeleteசொல்லுவதை சொல்லிகிட்டே தான் இருக்கனும், என்றாவது ஒரு நாள் உணருவார்கள். என்ன இருந்தாலும் அவர்களும் நம் சகோதரர்களே.. தங்கள் வருகைக்கு நன்றி..
ReplyDelete