Thursday, December 30, 2010

ஐந்து தலை நாகம் அருமையான ஒரு விளையாட்டு

Posted Image

கடந்த மே மாதம் 11ம் தேதி கர்நாடகவில் குக்கே என்ற ஊரில் உள்ள சுப்புரமணிய சுவாமி கோயில் ஐந்து தலை நாகம் வந்ததாகவும் அதை பார்த்ததாகவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பல பேர் அக்கம் பக்கம் ஊரில் இருந்தும் படை எடுத்தனர். எனக்கும் இதன் சம்பந்தமாக இமெயில் வந்தது நானும் பார்த்துவிட்டு இருக்கும் போலிருக்கு என்று நினைத்தேன். எனென்றால் அருகில் ஒருவர் நிற்பது போல் எல்லாம் படம் இருந்தது. சரி என்று வேலையை பார்க்க ஆரம்பித்தாகிவிட்டேன்.


ஆனால் நம்ம ஊரு மக்கள் எவ்வளவு பேர் படையெடுத்திருப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும் நமக்கு. நாம் யாரும் இது சாத்தியமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. சேசாங்க் எனும் பாம்பின் தலையில் தான் உலகமே இருக்கிறது என்று இந்த்துவ தத்துவத்தை நம்புபவர்கள் தானே நாம்..

Posted Image

Posted Image

Posted Image

இப்படி இருக்கும் பாம்பு எந்த தலையில் உள்ள மூளை செல்வதை கேட்டு நகரும். அதன் கண்களில் எந்த கண்ணில் தெரியும் காட்சியை வைத்து சுற்று உள்ளவற்றை உணரும் என்று கேள்விகள் எல்லாம் அப்புறம். ஆனால் இதை நம்பும் மக்களின் கண்மூடிதனமான மூளையை என்னவென்று சொல்வது அவர்களுக்கு மூளை இருக்கிறது என்றா இல்லை என்றா??

நேற்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் இதை பற்றி என்னிடம் கேட்டார். தெரியவில்லை நானும் அந்த போட்டோக்களை பார்த்தேன் நேரில் பார்த்தால் தான் தெரியும் என்றேன். அவருடை லேப்டாப்பை எடுத்து அவர் பாங்காங்க் சென்று வந்த படங்களை எடுத்தார் அங்கு ஒரு பாம்பு பண்ணையில் எடுக்கப்பட்ட படத்தை காட்டிவிட்டு அதன் பிறகு இந்த ஐந்து தலை நாகம் படத்தையும் அருகே வைத்து பார்த்தால் அப்படியே தெரிந்தது போலி படங்கள் என்று..

Posted Image

மேலே உள்ள படத்தில் பொதுவான மூன்று விசயங்களை கவனிக்கலாம், முதலில் இரும்பு படிகள், இரண்டாவதாக சுவற்றில் இருக்கும் வேலைப்பாடுகள், மூன்றாவதாக முத்தான கீழே இருக்கும் தண்ணீர் தொட்டியை மூடும் இரும்பு மூடி. இவை மூன்றும் ஒரே இடம் தான் படம் எடுக்கப்பட்ட இடம் என்பதை தெளிவாக சொல்லுகிறது. நம்ம மக்கள் எவ்வளவு விவரமாக ஒரு பண்ணையில் இருக்கும் பாம்பை போட்டோசாப் மூலமாக திருத்தி அமைத்து ஐந்து தலைநாகம் இருப்பதாக கதை கட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம் அந்த கோயிலுக்கு மக்கள் படையெடுத்து இருப்பார்கள், அந்த ஊரை நம்பி வாழ்ந்த மக்கள் பல வியாபரங்களை தொடங்கி நன்றாக காசு பார்த்து இருப்பார்கள்..

இந்த ஊரை பற்றி தெளிவாக விளக்கி ஒரு பதிவு, அதிலும் இந்த நாகத்தை பற்றி சொல்லி.. அட்ரா சக்கை

அசல் படங்கள் போலியாக உருவாக்கபட்ட படங்கள் வாழ்க கூகிள்..

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

இந்த படங்களில் இருந்து இன்னும் தெளிவாக தெரியும் என்ன விளையாட்டு என்று..

போட்டோசாப் மன்னர்களிடம் ஒரு வேண்டுகோள் இந்த மூளையை எதாவது ஆக்கபூர்வமான விசயத்துக்கு பயன்படுத்துங்கப்பா?? நாடாவது முன்னேறும்..

Wednesday, December 29, 2010

சாதி ஒழிப்பு கலப்பு திருமணம் அங்கீகாரம் தேவை

கலப்பு திருமணங்கள், சாதி மறுப்பு திருமணம், சுயமரியாதை திருமணம் என்று சமூக முன்னேற்றத்துக்கு ஆதரமான திருமணங்களுக்கு அடிப்படை சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு செய்யப்படும் திருமணங்கள் என்ற ஒரு மிகப்பெரிய மணிமகுடம் உண்டு இந்த வகை திருமணங்கள் அனைத்திலும். ஆனால் இப்படி நடத்தப்படும் திருமணங்கள் அதன் முதல் நோக்கமான சாதி ஒழிப்பை சரியாக செய்கின்றனவா இல்லையா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டிய கதிக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படி பட்ட கலப்பு திருமணங்களை பற்றி பெரியாருக்கும் காந்திக்கும் இடையையே பற்பல சர்ச்சைகளை உருவாக காரணமாகவும் இருந்தது. காந்தியிடம் வருணாசிரமம் வேண்டுமா வேண்டாமா என்றால் வேண்டும் என்ற கருத்தை உடையவராகவே எடுத்து கொள்ள வேண்டியதாயிருக்கும். ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது என்று தான் வலியுறுத்தினார் ஆனால் அவரே மனித மலத்தை அள்ளுபவர்களை அந்த தொழிலை புனிதமாக கருதவேண்டும் என்று வலியுறுத்தினார், அந்த தொழிலை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்ததாக தெரியவில்லை.

பெரியார் அவர்கள் இந்த விசயத்தில் என்றும் விட்டு கொடுத்ததில்லை, ஏன் காந்தி சிலையை அகற்றும் போராட்டங்கள் வரை செய்தார். ஏன் 1946ல் காந்தி மகாத்மாவாக பார்க்கப்பட்ட காலகட்டம் அவருக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. அப்பொழுது விடுதலையில் எழுதினார்


கலப்பு மணத்தைப் பற்றி ´வழ வழா´ என்று எழுதுகிறாரே தவிர, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் கொடுமையை ஒரே சட்டத்தினால் மண்டையிலடித்து ஒழிக்க வேண்டும் என்று ஏன் தைரியமாகக் கூறக்கூடாது? பல நாட்களாகவே வேருன்றி விட்ட கொடுமைகளைக் கண்டு சிரிக்கக் கூடாது என்றும், பொறுமையினால் தான் வெல்ல வேண்டும் என்றும் கூறுவது வைதீக ஹிந்துக்கள் முதுகில் தட்டிக் கொடுப்பதற்காகத் தானே? “எந்தச் சீர்திருத்தமும் நத்தையின் வேகத்தில் முன்னேற வேண்டும்? என்று கூறுவது எதற்காக? உடன் கட்டை ஏறுதல் என்ற தீயபழக்கமானது அறிவாளி ஒருவர் நினைத்த மாத்திரத்திலேயே ஒழிந்து போகவில்லையா?” 2,000-ஆண்டுகளாக உள்ள ஒரு அக்கிரமத்தை நத்தை வேகத்தில் தான் மாற்றவேண்டும் என்றால், 150-ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆட்சி முறையை மட்டும் மான் வேகத்தில் மாற்ற வேண்டிய அவசியமென்ன? ´தீண்டாமை மெள்ளமெள்ளத் தான் ஒழியும்´ என்றால், வெள்ளைக்காரன் மட்டும் இந்த விநாடியிலேயே மூட்டையைக் கட்ட வேண்டிய அவசியமென்ன? – *[பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ´விடுதலை´, 09.07.1946

இப்படி அனைவராலும் போற்றி வளர்க்கப்பட்ட இந்த கலப்பு திருமணம் இன்றைய நிலை என்ன. தமிழக அரசு கலப்பு திருமணம் செய்பவர்களை இருவகையாக பிரிக்கிறது. முதல் வகை மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் இருந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள். இரண்டாம் வகை பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்களை மணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர் என்று. இதில் முதலாவது பிரிவில் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கு 20000ரூபாய் நிதியுதவி. இரண்டாவது பிரிவினருக்கு 10000ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை தவிர அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி இப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தை எந்த பிரிவு என்ன முன்னுரிமை என்று பார்த்தால் வேதனையே. திரும்பவும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக தாய் தந்தை இருவரில் ஒருவரின் சாதியை வைத்து அவர்களின் வாரிசுக்கு படிப்பிலிருந்து வேலைவாய்ப்பு வரை கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வாங்கப்படுகிறது. இப்பொழுது எங்கு சாதி ஒழிந்தது என்று தெரியவில்லை, திரும்பவும் அந்த குழந்தை வளர்க்கபடும் முறை போன்றவைகளில் சாதி இல்லாமல் இருந்தாலும் அரசின் கணக்கின்படி அதுவும் ஒரு சாதியை சார்ந்த உறுப்பினராகவே கணக்கில் வருகிறது.

எந்த திருமணங்கள் சாதியை ஒழித்துவிடும் என்று நம்பி வருகிறோமோ அவைகள் திரும்பவும் சாதியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் அவர்களை சொல்லி தப்பில்லை. தப்பாக இருப்பது நமது அரசின் சட்டம், பள்ளியில் சேர்க்கும் பொழுது முதலில் கேட்க்கப்படும் கேள்வியே எந்த சாதி என்பது தான். ஏன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு தனியாக சாதி சான்றிதழை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இத்தனை வருடமாக போற்றி வரும் இந்த கலப்பு திருமணங்களுக்கு அங்கிகாரம் இருபதாயிரம் பத்தாயிரம் என்ற ஊக்க தொகையா இல்லை அவர்களும் அவர்கள் சந்ததியும் வாழ அமைத்து கொடுக்க வேண்டிய பாதையா.

ஏன் இன்றைய காலகட்டம் வரை எவ்வளவோ கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன இன்னும் சொல்லப்போனால் 60 ஆண்டுகளில் பலாயிரக் கணக்கான திருமணங்கள் நடந்து இன்று அவர்கள் சந்ததியுடன் சேர்த்து லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை அடைந்திருக்க வேண்டும் ஆனால் எங்கிருக்கிறார்கள் அந்த மக்கள்?? இவர்களும் தனியாக அங்கிகரிக்க படவேண்டும். முக்கியமாக தமிழகஅரசாணையான கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தாய் அல்லது தகப்பன் இருவரின் ஒருவரின் சாதிப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை நீக்க வேண்டும். இது திரும்பவும் சாதியை தான் வளர்க்கும்..

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். இத்தனை வருடமாக சாதி ஏற்றதாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு கொடுத்து அடித்தளத்துக்கு அடித்து தள்ளப்பட்ட மக்களை முன்னேற்ற பாடு படும் அரசு இப்படிபட்ட கலப்பு திருமணம் செய்து அரசின் தோளோடு தோள் கொடுத்த புரட்சியாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் போற்றி பாராட்டினால் போதும். இன்னும் சிறிது காலத்தில் சாதி என்பதிருக்காது.. இனிவரும் அரசுகளாவது இவர்களை அங்கிகரித்து தனி இட ஒதுக்கீடு கொடுக்குமா??

Tuesday, December 28, 2010

குழந்தை பிறந்தால் அதற்கு இன்ஷியல் என்ன

Posted Image

சில வருடங்களாக சென்னையில் சொகுசு பேருந்துகளும் குளிர்சாதன பேருந்துகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் பயணசீட்டின் விலை அதிகமாக இருப்பினும் கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த வகை பேருந்துகளை உபயோகிக்கிறார்கள். சென்னை கோவை என்று இன்று தமிழ்கத்தில் அனைத்து மக்களும் இப்படிபட்ட சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இந்த பேருந்துகள் மக்களின் உபயோகத்திற்கு அறிமுகப்படுத்தும் பொழுது அமைச்சர் பெருமக்களில் இருந்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுகிறார்கள். பேருந்தின் முகப்பில் முதல்வரின் படத்தை வைப்பதற்கும் மறப்பதில்லை..

சிறந்த முறையில் இந்த பேருந்துகள் சேவை செய்து கொண்டிருக்கின்றன. வேலூரில் இருந்து ஒரு முறை சென்னைக்கு இத்தகைய பேருந்து ஒன்றில் வந்தேன். மிகவும் அருமையான பயண் அனுபவம். கருணாநிதியின் தமிழக அரசின் சாதனைகளில் ஒன்றாக இதுவும் இருக்கும் என்றென்றும்..

Posted Image

சில நாட்கள் முன்பு தான் ஒரு வித்தியாசத்தை இத்தகைய பேருந்துகளில் பார்த்தேன் இதில் JN nuram என்று எழுதப்பட்டிருந்தன அனைத்து பேருந்துகளிலும். சரி இது டாடா போன்ற நிறுவனங்களின் மாடலாக இருக்கும் என்று நினைத்தேன். இன்று தீடிரென்று தோன்றி இத்தகைய பேருந்துகளின் விலை என்ன வரும் என்று பார்க்க JN nuram என்று தேடினால் தெரிய வந்தது ஒரு விசயம்..

Posted Image

இது வேறு ஒன்றுமில்லை Jawaharlal Nehru National Urban Renewal Mission. எனும் மத்திய அரசு நிறுவனம் பற்றி தெரிந்தது. நகரங்கள் மற்றும் கிராமங்களை முன்னேற்ற மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.

Posted Image
(இந்த இரண்டுபடங்களிலும், படி ஏறும் இடத்திலும், பின் சக்கரத்தின் அருகிலும் JN nuram என்று எழுதப்பட்டிருப்பதை இனிமேலாவது பாருங்கள்)
Posted Image

JN nuram என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நிதிகளை கொண்டே இந்த பேருந்துகள் வாங்கப்பட்டு மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கேராளவிலும் கூட வழங்கப்பட்டுள்ளது அங்கு எங்கும் முதல்வரின் படத்தை பேருந்தின் முன்னால் வைத்து பயன்பாட்டை தொடங்கி வைக்கவில்லை.. கீழே படங்களை பாருங்கள்..

ஆந்திரா
Posted Image

கேரளா
Posted Image

அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு தன் பெயரை இன்ஷியலாக போடுவது என்பார்களே அது இது தானோ.....

Posted Image

Posted Image

Thursday, December 23, 2010

நாதியற்று போன ஒரு ஊர்...


Posted Image

இன்றிலிருந்து 44 நான்கு வருடங்களுக்கு முன் 1964 வரை ஒரு ரயில் நிலையம், வெளிநாடு செல்ல ஒரு கப்பல் துறைமுகம் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த ஒரு நகரம் இன்று நம்முடன் இல்லை. இங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் இன்று பிறந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள கூட முடியாமல் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தனை வருடமும் எந்த அரசும் இந்த ஊரை ஒரு புராதன் அடையளமாககூட மாற்றி பாதுகாக்க முன்வரவில்லை. இன்று அங்கு சென்றால் நமக்கு காணகிடைப்பதெல்லாம், 44 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரத்தினால் அடிபட்ட மிச்சங்களையும் எச்சங்களையும் தான்..

Posted Image

தனுஷ்கோடி தலைமன்னார் என்றால் அனைவருக்குமே தெரியும் 15கீமீட்டரில் ஒரு வெளிநாட்டுக்கு சென்று அங்கும் நம் மொழி பேசும் மக்களுடன் வியாபாரம் செய்து திரும்பிவந்த காலம் அது. ஏன் இந்தியன் இரயில்வே தலைமன்னார் வரைக்குமே பயணச்சீட்டு விற்றது, தனுஷ்கோடியில் இரயிலைவிட்டு இறங்கி தலைமன்னாருக்கு கப்பலில் சென்று வந்திருக்கிறார்கள். அதே பயணச்சீட்டை வைத்து. ஒரு நாளைக்கு இரண்டு கப்பல்கள் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்று வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று தனுஷ்கோடி வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

Posted Image

தனுஷ்கோடி அப்பொழுது இராமேஸ்வரத்தை விட மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரம். இரயிலில் வருபவர்கள் வியாபாரம் செய்பவர்கள் என்று மட்டும் இல்லாமல் மீனவர்கள் பலர் வாழ்ந்த இடம். ஒரே நாளில் மண்மேடாக மாறியது, ஒரே நாளில் அங்கு வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இறந்தவர்கள் எத்தனைபேர் என்று கணக்கு கூட தெரியாமல் அழிந்துபட்ட ஓர் நகரம். இந்த 44 வருடத்தில் இப்படி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டமைப்பு செய்து கொடுக்க யாராவது முயற்சித்தார்களா என்றால் இல்லை.

Posted Image

அழிந்துபட்டது திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாடோடி தமிழன் கூட்டமல்லவா அவன் வாழ்ந்த நகரம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன இந்த மத்திய மாநில அரசுகளுக்கு.....