Thursday, July 15, 2010

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்



வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர்.

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity)இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய்.

12 comments:

  1. பத்தவச்சிட்டியே தறுதலை.

    ReplyDelete
  2. நன்றி அனானி

    இன்று மாலைக்குள் மேலும் இதைப்பற்றிய் தகவல்களை இன்னுமொரு பதிவில் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  3. What is wrong in that?
    In India, Largest spoken language is Hindi. Telugu is second largest and Tamil is the 3rd largest spoken language.

    In general, we have to accept HINDI.

    Thanks,
    RAMAKRISHNAN V
    M.C.A

    ReplyDelete
  4. These comments are unnecessary. A Tamil has designed the symbol. So be happy about it. That's it. No controversies please.

    ReplyDelete
  5. தலைவா... பேசமா நீங்க கட்சி ஆரம்பித்திடலாம்.

    ReplyDelete
  6. நன்றி சென்னை, அனானி, பாலாஜி,

    ReplyDelete
  7. பாலாஜி,

    நான் அவன் இல்லை.

    ReplyDelete
  8. நமது கடந்த கால தலைவர்கள் செய்த தவறுகளால்தான் நாம் அனைத்தையும் இழந்தோம்.

    ReplyDelete
  9. ராம கிருஸ்ணன் அவர்களே,

    ஆம் ஹிந்தி தான் அதிகமாக பேசப்படும் மொழி. வேற்றுமையில் ஒற்றுமையை தூக்கி கடாசிவிடலாமா. யோசியுங்கள் ராம் ஒரு நாட்டின் பணத்தின் குறியீடாக காட்டப்படும் ஒரு இலட்சினை, அந்த நாட்டில் உள்ள அனைத்தையும் பிரதிபலிக்க வேண்டும், ஒரே ஒரு மொழியை குறிப்பதாக அமைவது சரியா.

    அப்படி அமைந்தால் இந்தியர்கள் அனைவரும் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் என்றாகிவிடும். இந்திய யூனியன் என்பதை நாம் மறந்துவிட்டோமா.

    ReplyDelete
  10. Dear RAMAKRISHNAN V & like minded people, Hindi is the language of respective states, can't be the language of India. What Tamils got to do with Hindi which is spoken 1000 miles away from Tamil Nadu?

    Thamilan

    ReplyDelete
  11. மொழிப்போர் செய்தவர்கள் புறக்கணிக்கப்பட்டும், ரயில் வாராத தண்டவாளத்திலே தலை வைத்துப் படுத்தவர்கள் தமிழனத் தலைவராகப் போற்றப்பட்டும், மக்களாட்சி சவக்குழிக்கு அனுப்பப்பட்டும், அகில இந்திய காங்கிரஸ் ஆதரவோடு தமிழகத்தில் மன்னராட்சி நடந்துவரும் இந்த கருப்பு காலங்களில், நம்முடைய இந்தி எதிர்ப்பை காட்டினால், அண்ணன் மறத்தமிழன் சீமானுக்கு நேர்ந்த கதிதான் உணர்ச்சி உள்ள தமிழர்கள் அனைவருக்கும் ஏற்படும். தமிழ் நெஞ்சங்கள் தற்போதைக்கு சற்றுப் பொறுமையாய் இருந்து, வரும் தேர்தலில் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் பதிவுசெய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் B.Singam

    http://www.kallimalar.blogspot.com

    ReplyDelete
  12. சிங்கம், தமிழன் மாறனுக்கு நன்றி.

    அன்று அவர் ஆட்சியில் இல்லை, இரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்தார். இன்று அவர் ஆட்சி மேலும் பேரம் பேசியதில் மத்திய அரசு என்ன செய்தாலும் சொம்பு தூக்க வேண்டும் என்ற உடன்பாட்டில் கைசாத்திட்டு இருப்பதால் தேமே என்று இருப்பார்.

    ReplyDelete