Saturday, July 10, 2010

பழையபேப்பர்... பழையபேப்பர்...

பழைய பேப்பர் போடுங்க என்று டில்லியில் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் தவமாய் தவம் இருக்கிறாராம் ஒரு ஏமாந்த சோனகிரி. அவரிடம் விசாரித்தபொழுது தமிழக முதல்வர் கடிதம் மேல் கடிதம் போடுகிறார். அதை எல்லாம் பிரதமர் என்றாவது ஒரு நாள் எடைக்கு போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். சரி இதற்காக மற்ற வீடுகளுக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு சொன்னார் நாலு தெரு சுத்தினால் தான் 100 கிலோ பேப்பர் கிடைக்கும். ஆனால் இந்த கடிதங்கள் எப்படியும் பத்து டன் எடையாவது இருக்கும். நாலு தெரு சைக்கிளை தள்ளிக்கிட்டு சுத்துவதை விட இங்க நாலு நாள் உட்கார்ந்து தேத்திடலாமே என்று சொன்னார். பாருங்கப்ப வடநாட்டுகாரனின் விவரமான புத்தியை.

இது தெரியாம இங்க ஒருத்தர் பேனாவை கையில் வைத்துக்கொண்டு ஆட்டு ஆட்டுனு ஆட்றார்பா. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவரை செத்து போனவர்கள் 400க்கும் மேல் இன்று வேகமாக கடிதம் எழுதுகிறார், அவரின் மீனவர் அணி போராட்டம் நடத்துகிறது(சனிக்கிழமை இலங்கை தூதரகத்துக்கு விடுமுறை நாளாமே), 3லட்சம் ரூபாய் நிதியுதவி. அப்ப மிச்சம் இருக்கும் 400 சொச்சம் பேருக்கு சொம்புதானா.

400க்கும் மேல FIR இருக்காம் தமிழக காவல் துறையிடம், அனைத்திலும் முதல் குற்றவாளி இலங்கை இராணுவம் என்று போட்டு இருக்கிறார்களாம். 7 கேஸுக்கு மேலே போனாலே குண்டர் தடுப்பு சட்டம், 10 கேஸ் இருந்தாலே என்கவுண்டர் நடத்தும் தமிழக காவல் துறை 400க்கும் மேல் கேஸ் இருக்கும், இலங்கை இராணுவத்தின் மேல் என்கவுண்டர் நடத்துமா. அட்லீஸ்ட் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமா??

No comments:

Post a Comment