Monday, September 16, 2013

Lynching வக்கிரகொலை (2)



Lynching எனப்படும் கொலைகளை பற்றி பார்த்தோம். இதில் அரசு இதே போன்ற கொலைகளை நடத்தும் அதைப் பற்றியும் பார்க்கலாம். 

அரசுகள் தங்களுடைய அடக்கு முறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னால் செய்யும் கொலைகளும் உண்டு, அரசே சட்டத்திற்கு புறம்பாக செய்யும் கொலைகளும் உண்டு அப்படிப் பட்ட கொலை என்கெளண்டர் என்ற பெயரில் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மக்களை வைத்து தனக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்யும் அப்படிப் பட்ட கொலைகள் நிறைய நாம் பார்த்து இருக்கிறோம் உணர்ந்தது இல்லை. இப்படி நம் கண்ணெதிரேலேயே கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2013 அன்று ஜார்கண்டில் ஒரு மாணவத் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


முகேஸ் சிங்க் (35), இவர் ஜார்கண்ட் மாநில மாணவர் சங்கத்தின் (AJSU) மாவட்ட தலைவர். இவரும் இவரது டிரைவரும் ஒரு பகுதியை கடந்து செல்லும் பொழுது பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களிடம் கேட்டால் இவர்களை மாவோயிஸ்ட் என்று நினைத்ததாகவும், மேலும் அந்த பகுதியில் நடக்கும் திருவிழாவில் ஏகப்பட்ட திருட்டுகள் நடப்பதாகவும் அதற்காக நாங்கள் காவல் இருந்த பொழுது இவர்களை திருடர்கள் என்று நினைத்து அடித்துக் கொலை செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஒரு SUVயில் வந்த இவர்களை திருடர்களாக கருதக்கூடிய அளவிற்கு மக்கள் முட்டாள் இல்லை. மேலும் அவர்களின் காரில் அவர் மாணவர் தலைவர் என்பதை சொல்லும் பாதகையும் உள்ளது யாரும் அதை படிக்கவில்லை என்று சொல்வது நம்பகூடியதாக இல்லை. 

கண்டிப்பாக அரசு இங்கு திருடர்கள் வருவதாகவோ இல்லை மாவோய்ஸ்ட்கள் வருவதாகவோ வதந்தியை பரப்பியுள்ளது, அதுவும் ,முகேஸ் குமார் சிங் இந்த பகுதியை கடந்து செல்ல போகிறார் என்பதை தெரிந்து கொண்டு. மேலும் மக்களும் கடந்த ஒரு மாதமாக காவல் காத்து வந்துள்ளனர், என்ற அவர்களுக்கு தெரிந்த விசயத்தை வைத்து யாருக்குமே தெரியாமல் கதையின் கதாபாத்திரங்களுக்கு கூட நாம் சில சூத்திரதாரிகளின் விரலசைவிற்கு ஆடுகிறோம் என்பது தெரியாமல் இரண்டு கொலைகளை நடத்தி முடித்துள்ளனர். 


இந்த செய்தியை பார்த்தபொழுது நமக்கு நியாபகம் வருவது தோழர் பொன்பரப்பி தமிழரசன். ஆம் இவரும் ஒரு வங்கியை கொள்ளை அடித்து தனது இயக்கத்துக்கான பொருளாதர தேவைகளை நிறைவேற்ற சென்றபொழுது திருடர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் பொது மக்களால். அந்த மக்களுக்கு தமிழரசன் அவர்களை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவர் செய்து வந்த நல்ல காரியங்கள் அனைத்தையும் அறிந்தவர்களே. ஏன் அவரால் பயன் பெற்றவர்களும் கூட கூலி உயர்வில் இருந்து அனைத்து வகையிலும் ஆனால் அங்கும் அரசு இயந்திரம் காவல்துறையினரை வைத்து இவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி கொலை செய்தது. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் அவர்களிடம் துப்பாக்கி இருந்தது ஆனால் ஒரு மக்கள் கூட தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் தன் இன்னுயிரை எந்த மக்களுக்காக பாடுபட்டாரோ அவர்களிடமே கொடுத்துவிட்டார்.

ஜார்கண்ட் கொலையை பார்க்கும் பொழுது ஏற்கெனவே தமிழரசன் தோழருக்கு நடந்ததை தெரிந்து வைத்திருந்ததால் சந்தேகம் வரும். ஆனால் ஒரு மாநிலச் செய்தி இன்னொரு மாநிலத்திற்கு செல்லாமல் இருக்கும் இந்த ஊடக வியாபாரிகளால் நமக்கு எப்படி தெரிய வரும் இத்த கைய வக்கிரக் கொலைகள்.

இதன் பின் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டனர் என்று. அத்துடன் இந்த வழக்கும் அதன் விசாரணையும் முடிந்து கலவரத்தில் கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்து வைப்பார்கள். ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் தனது கொள்கைகாக கொலை செய்யப்பட்டனர் என்று அரசியலும் அரங்கேறும், எதற்காக கொலை செய்யப்பட்டவர்கள் போராடினார்களோ அந்த மக்கள் நலன் எனும் நோக்கம் மட்டும் நிறைவேறேவே நிறைவேறாது.  

இதுவும் ஒரு வக்கிரக்கொலையே அதாவது தனக்கு எதிராக நிற்கும் ஒருவரை அரசு மக்களின் பொது புத்தியை தூண்டிவிட்டு அதன் மூலமாக அவர்களின் ஆழ்மன வக்கிரங்களாக வெளிப்படும் வெறியை உபயோகித்து தனது எதிரிகளை அழித்தொழிப்பது..

Lynching வக்கிரக் கொலைகள்

Lynching – இது நம் அனைவருக்கும் அறிமுகமான வார்த்தையே ஆனால் இதை நாம் இதன் முழுமையான வலி தெரியாமல் கலவரம், சாதி சண்டை, மதக் கலவரம் என்று பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறோம்.

ஒரு கூட்டமோ அல்லது ஒரு குழுவோ சட்டத்தினை மீறி ஒருவரை கொலை செய்வதையும், அல்லது சட்டத்தின் அடிப்படையில் கொலை செய்வதும் இந்த வார்த்தையின் கீழ் அடங்கும். இப்படிபட்ட கொலைகளை காட்டுமிராண்டி தனம் என்று பொத்தம் பொதுவாக சொல்லலாம் ஆனால் அதன் வேதனையை இப்படிப் பட்ட படுபாதக கொலைக்கு உட்பட்டவரின் வார்த்தைகளில் நம்மால் சொல்லவும் இயலாது. 

இதை போன்ற கொலைகள் உலகெங்கிலும் நடந்து வருகிறது அது இந்தியாவில் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம். உலகில் மற்ற எங்கும் இருப்பதை விட சட்டத்தின் கீழ் இந்திய நீதிமன்றத்தினாலேயே இப்படிப்பட்ட கொலை பாதக மரணதண்டனைகள் கொடுக்கப்படுவது அரிதினும் அரிது அல்ல மிகவும் சுலபமாக கொடுக்கப்படுவது. 

இந்திய சட்டம் அப்சல்குருவை இப்படிப்பட்ட சட்டத்தின் கீழான ஒரு கொலையின் கீழேயே கொன்று முடித்திருக்கிறது இந்திய அரசாங்கம் பொதுமக்களின் ஒட்டுமொத்த அபிப்ராயம் என்ற பெயரில். இந்த நேரத்தில் இப்பொழுது அடுத்து உத்திரபிரதேசத்தில் இத்தகைய கொலை பாதகசெயல்கள் அரங்கேறியிருக்கின்றன. இது எப்பொழுது முடியும், உத்திரபிரதேசத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் காட்டுமிராண்டி தனம் இன்றோ நாளையோ அடக்கப்பட்டுவிடலாம் ஆனால் இனி இத்தகைய ஒன்று நடவாது என்பது நிச்சயம் இல்லை.

(வீரபாண்டிய கட்டபொம்மன் சட்டத்தின்கீழ் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார்)

இத்தகைய கொலைகள் பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில் நடைபெறுவது தான் அதாவது ஒரு குழுவினர் மற்றொரு குழுவின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் கீழ், எதிர் குழுவில் ஒருவர் செய்த ஒரு சிறு தவறுக்காவோ இல்லை செய்யாத தவறுக்காகவோ கொல்லபடுவது தான் இந்த கொலைகளின் அடிப்படை. ஆனால் இப்படி நடைபெறும் ஒவ்வொரு கொலையில் இருக்கும் குரூரம் என்பது யாராலும் சகித்துக் கொள்ளவியலாத ஒரு விசயமாக இருக்கும்.
 (வில்லியம் ப்ரெளன்)


1919ல் இருந்து 1925 வரை நிறவெறி அமெரிக்காவில் தாண்டவமாடிய சமயம், அப்பொழுது ஆக்னஸ் லியோபெக் எனும் பெண்மணி தன்னை ஒரு கருப்பின இளைஞன் தாக்கியதாக சொன்னார். அது காட்டு தீ போல் பரவியது, காவல் துறையினரும் சந்தேகத்திற்கு குரிய நபர் என்று வில்லியம் ப்ரெளன் என்ற 41வயதுள்ள ஒருவரை பிடித்து நீதிமன்ற காவலில் வைத்தனர். ஆனால் இளைஞர்களும் பெருவாரியான வெள்ளை இனமக்களும் கிட்டத்தட்ட 5000 முதல் 15000 வரையிலானவர்கள் ஒன்று கூடி வில்லியம் ப்ரெளனை அடைத்து வைத்திருந்த கட்டத்திற்கு வரும் வழியில் இருந்த கடைகளில் கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கூடினர். அவர்களிடம் பேச்சு நடத்த வந்த மேயரை அடித்து, பக்கத்தில் இருந்த விளக்கு கம்பத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். மேயர் பலத்த சிகிச்சைக்கு பின் பிழைத்துக் கொண்டார். ஆனால் வில்லியம் ப்ரெளனை காப்பாற்ற முயன்ற காவல்துறையினரால் முடியவில்லை. மக்கள் முதலில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தனர் அத்துடன் நிற்காமல் தீயணைப்பு வண்டியையும் அனுமதிக்காமல் தடுத்தனர்.
 (வில்லியம் ப்ரெளன் கைது செய்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம்)

அதன் பிறகு வில்லியம் ப்ரெளன் தான் ஒரு நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை என்று அவலக் குரல் எழுப்பியதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் அவனை அடித்தனர், ஆயுதங்களால் தாக்கினர், தூக்கில் போட்டனர், சுற்றி நின்று அவன் உடலை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அதன் பிறகு வில்லியம் ப்ரெளனை ஒரு காரின் பின்னால் கயிறுகளால் கட்டி அடுத்து இருந்த ஒரு தெரு முனைக்கு இழுத்து சென்று, தீயணைப்பு வண்டியில் இருந்த எரிபொருளை கொண்டே அவன் உடலை எரித்தனர். இது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லிவிட முடியாத ஒரு நெஞ்சில் சிறிதும் ஈவு இரக்கமற்ற மனிதம் என்ற சொல்லாடலைக் கூட புரிந்து கொள்ளாத ஈனத்தனமாக நிறைவேற்றப்பட்ட கொலை.
(வில்லியமின் எரிக்கப்பட்ட உடல்)

இதில் ஈடுபட்ட மக்கள் அனைவருக்கும் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் எழுப்பட்ட வெறியின் கீழாகவே இதை செய்தனர், அவர்களுடைய நிதானம் இழந்த தன்மை இதை செய்ய தூண்டியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதை செய்த இவர்களுக்கும் இன்று நாம் சிலரை கொடுங்கோலர்கள், சர்வாதிகரிகள் என்று சொல்கிறோமோ அவர்களுக்கும் என்ன வித்தியாசம். இவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து ஒருவனை கொலை செய்தார்கள், சர்வாதிகாரி ஒருவன் தன் படைகளை உபயோகித்து ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தான் ஆனால் இரண்டு பேருமே மனித தன்மை என்பதை இழந்தவர்கள் தான்.

இன்று முசாபர் நகரில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தின் தோற்றமும் இதே போன்று ஒரு பெண்ணை ஒரு இஸ்லாமிய இளைஞன் கிண்டலடித்துவிட்டான் என்று ஆரம்பித்து அந்த இளைஞனை பெண்ணின் சகோதரர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்ததில் ஆரம்பித்து இன்று இது வரை 40 பேர் உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ எனக்கு ஸாநவாஸ் என்பவரை தெரியாது என்கிறார். ஆனால் இன்று ஸாநவாஸ் உயிருடன் இல்லை என்பதையும் தாண்டி 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கொலைகளை வெறும் கலவரம் என்ற ஒற்றை வார்த்தையுடன் இதன் பின்னால் இருக்கும் காரணிகளை ஆராயாமல் கடந்து சென்று கொண்டுள்ளோம். ஒரு கொலை நடந்தால் அதை யார் செய்தார்கள் என்பதை நிருபிக்க சாட்சிகள் வேண்டும் ஆனால் ஒரு கலவரத்திற்கு அப்படி அல்ல, மக்களின் மனசாட்சி என்பது செத்து போனதாலேயே நடப்பது அவர்களின் மனசாட்சி மட்டுமல்ல அத்தனை நாட்களாக அவர்கள் அடிமனதில் இருந்த வக்கிரங்கள் அனைத்தின் வெளிப்படே இத்தகைய வக்கிரகொலைகள்.. 

தொடரும்.....