Wednesday, August 3, 2011

இனப்படுகொலையும் இந்தியாவும் - போபால்


ராஜிவ் காந்தி என்பவர் ரத்தமும் சதையுமாக பிறந்த ஒரு மனிதன் என்றாலும் பதவிக்கு வந்ததில் இருந்து ரத்தத்தை குடித்த ஒரு ரத்த காட்டேரி என்றே சொல்லலாம். ஆம் பதவிக்கு வந்த முதல் மூன்று நாட்களில் 4000த்துக்கும் மேலான சீக்கியர்களின் ரத்தத்தை குடித்த இவர். அடுத்த ஒரு மாதத்தில் டிசம்பர் 2ம் தேதி போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தை குடித்தான்.. 

போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த கோரம் ஒரு விபத்து என்றாலும் அதன் பிறகு அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் தண்டனைகள் என்ற பெயரில் கண்துடைப்பாக தப்பிக்க காரணமாக இருந்தவன் இந்த ரத்தகாட்டேரி ராஜிவ். அதுவும் பதவிக்கு வந்த 32ம் நாளே இவனது இரத்த பசியை போக்கும் வகையில் அமைந்தது போபால் விவகாரம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதலாளி வாரன் ஆண்டர்சன் விபத்து நடந்தபிறகு இந்தியாவிற்கு வந்து மத்தியபிரதேசத்தில் போபாலுக்கும் சென்று தனது நிறுவனத்தை பார்வையிட்டான். அப்படி பார்வையிட வந்த பொழுது இந்தியா இவனை சிவப்பு கம்பளம் இட்டு வரவேற்றது, தன் நாட்டு மக்கள் 20000 பேர் இறப்பதற்கு காரணமானவனை வரவேற்று உபசரித்து திரும்பவும் அமெரிக்கா அனுப்பி வைத்தது.

இந்த விபத்தினால் பழியானவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நிறுவனத்தின் தலைவர் மீது எந்த விதமான சட்ட முறையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வளவு ஆபத்தான ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்து சம்பாதித்தவன் மிகவும் அழகாக எதோ ஒரு இழவு வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு செல்வது போல் வந்து சென்றான். இந்த விபத்திற்கு பலகாரணங்கள் சொல்லப்பட்டன ஏன் வேலை பார்த்த சாதரண சுத்தம் செய்யும் தொழிலாளி அஜாக்கிரதையாக தண்ணீரை உபயோகித்ததால் அங்கிருந்த வேதிபொருள் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் புகுந்து விபத்து ஏற்பட்டது என்று கூட சொன்னார்கள். 

இந்திய அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைப்படி நான்கு காரணங்களை பட்டியலிட்டது.

* அறிவுறுத்தப்பட்ட அளவிற்கு அதிகமாக வேதியல் பொருளை சேர்த்து வைத்திருந்தனர். 
*  மிகவும் மோசமான பராமரிப்பு
* பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வேலை செய்யவில்லை சரியாக பராமரிக்காததால்.
* பாதுகாப்பு உபகரணங்கள் அணைத்துவைக்கப்பட்டன மின்சார செலவை குறைப்பதற்காக. 

இந்த நான்கு காரணங்களும் நமக்கு உணர்த்துவது நிறுவனத்தின் லாபநோக்குடன் இவைகளுக்கு ஆகும் செலவுகளுக்காக இந்த அத்தியாவசிய தேவைகளை கவனிக்காமல் விட்டிருக்கின்றனர். இப்படி மிச்சப்படுத்துகிறேன் என்று வேதியல் பொருள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு கொள்கலனை குளிர்விக்கும் குளிர்சாதனத்தைக்கூட நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதனாலேயே வெப்ப நிலை அதிகமாகி வேதிப்பொருள் காற்றுடன் கலந்து மிகப்பெரிய ஒரு படுகொலையை நடத்தியது. ஆனால் ரத்தகாட்டேறி ராஜிவ் காந்தியின் அரசு இந்நிறுவனத்தை இங்கு நடத்தி லாபத்தை சம்பாதித்து கொளுத்த பணமுதலையை ரத்தின கம்பளம் விரித்து அவன் நாட்டுக்கு தப்பித்து செல்ல அனுமதித்தான். 


இப்படி தன் நாட்டுமக்கள் பல்லாயிரக் கணக்காணோர் மரணம் அடைந்தும் நிரந்தரமான ஊணமாக்கப்பட்டும், ஏன் இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகு பல வருடங்கள் இந்த நச்சுவாயுவின் பாதிப்பின் காரணமாக இறந்தவர்கள் கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமானவர்கள் என்று அரசு தகவலே கூறுகிறது. இப்படி அத்தியாவசிய பாதுகாப்பைக்கூட சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கவனிக்காமல் இருந்ததால் கிடைத்த லாபத்தை எல்லாம் சுருட்டிய அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிவாரணம் வெறும் 500$ தான். ஏன் அந்த நிறுவனத்தில் மேலாண்மையில் இருந்த இந்தியர்களுக்கு கூட கிடைத்த தண்டனை 2 வருடம் அதுவும் 2006ம் வருடம். இடைப்பட்ட காலத்தில் விசாரணைக்காக இவர்களை சிறையில் வைத்திருந்த காலம் போக ஒரு மாதம் கூட இவர்கள் சிறையில் தண்டனை அனுபவிக்காமல் விடுதலை செய்யப்பட்டனர். 

1984ல் நடந்த விபத்திற்கு 2006ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, தமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதி தான். இப்படி தன் நாட்டுமக்களின் நலன்களை வெளிநாட்டு முதலாளிக்கு அடகுவைத்தவனை தான் நாம் இன்று நவீன இந்தியாவை நிர்மாணித்தாவன் என்கிறோம்.. 


இத்துடன் இவனது ரத்த வேட்கை குறைந்ததா என்றால் இல்லை மேலும் தொடர்ந்தது இந்த ரத்தகாட்டேரி உயிருடன் இருந்த வரை.. அடுத்து அவைகளைப் பற்றி பார்ப்போம்..

2 comments:

  1. தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் - ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் -- மாபெரும் பேரணி.
    ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 - 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் - அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.

    ReplyDelete
  2. இந்த படுகொலைக்கு முக்கிய காரணம்... குளிரூட்டி வைக்க பட வேண்டிய வேதி பொருட்களை... செலவாகும் என பொது வெளியில் வைத்ததே... செலவை குறைக்க சொன்ன அமெரிக்க முதலாளி ஆண்டர்சன்... போபால் வந்து செய்த கொலைகள் பற்றி சொல்லும் போது... இறந்த மக்கள் கடவுளிடம் போய் விட்டார்கள் என்றான்... பின்னர் போபால் காவல் துறை கண்காணிப்பளரின் பாதுகாப்புடன் டெல்லிக்கு விமானம் ஏற்றி விட்டது முதல் அமைச்சர் அர்ஜுன் சிங்... டெல்லி சென்று சனாதிபதி ஜெயில் சிங்கை பார்த்து ஒரு மணி நேரம் பேசி விட்டு... தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்தவன்... நவீன நீரோ மன்னன்... ராஜிவ்...

    ReplyDelete