இன்றைய இலவச கலாச்சாரத்தில் அது வாங்கினால் இது இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என்பது போல். 1991ல் பேட்டரி வாங்கினால் தூக்கு தண்டனை இலவசம் என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்லி இருக்கிறது..
1991ல் திரும்பெரும்புதூரில் ஒரு வெடிகுண்டு வெடித்தது அப்பொழுது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் முதற்கொண்டு 18 பேர் மரணமடைந்தார்கள். இந்த வழக்கை மத்திய குற்றப்புலாணாய்வு அமைப்பு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, இதன் தலைவராக கார்த்திகேயன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அப்பொழுது ஐதராபாத்தில் இருந்தார். விசாரனைகுழுவிற்கான தலைவர் பொறுப்பை டெல்லி சென்று ஏற்றுக்கொண்டார். அதை பற்றி 1999ல் Rediff.com எனும் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்த கருத்து
""In fact, let me tell you that when I was asked by the (Union) government to take on the investigation on May 22, 1991 (the day after Gandhi's assassination), I was heading the Central Reserve Police Force in Hyderabad. As I was flying from Hyderabad to Delhi, there was only one thought in my mind, that please, let it not be the LTTE. Because, I had dealt with them before, and I knew how difficult it would be to catch any suspects alive.""
தலைமை பொறுப்பை ஏற்கும் முன்பே அவர் முடிவு செய்துவிட்டார் இது LTTE செய்த ஒரு செயலாக இருக்க கூடாது என்று.. ஏன் என்றால் அவர்களாக இருந்தால் குற்றவாளிகளை உயிருடன் பிடிக்க முடியாது என்பதால்.. இத்துடன் முடிக்கவில்லை
""But when I reached the scene at Sriperumbudur, I realised fairly soon that it was in fact the LTTE that had killed Rajiv, and at the end of my investigations, I also concluded that it was only the LTTE and nobody else that was involved.""
இவர் வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்த்தவுடன் முடிவு செய்துவிட்டார் இந்த கொலை விடுதலைபுலிகள் செய்தது தான் என்று. எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் இவர். ஒரு விசாரணை அதிகாரி சாட்சியங்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒரு இடத்தை பார்த்தவுடன் இப்படி முடிவெடுக்க காரணம் என்ன. அதற்கு முன்பாக எத்தனை வெடிகுண்டு தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கிறார்கள் அதை எல்லாம் இவர்தான் விசாரித்தாரா.. ஏன் இந்தியாவில் இல்லை தமிழகத்தில் முதன் முதலாக ஒரு அரசியல் மேடையில் வெடிகுண்டு வெடிப்பது என்பது அது தான் முதல் முறை. அப்படி இருக்கும் பொழுது புலிகள் என்னவோ தமிழகத்தில் வாரம் ஒரு குண்டு வெடித்தது போலவும் அதை பார்த்து இருந்ததால் இந்த வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்த்தவுடன் இவர் புலிகள் தான் இதை செய்திருப்பார்கள் என்று முடிவெடுத்தது போலவும் இருக்கிறது இவரின் முடிவெடுக்கும் திறமை.
இங்கு ஆரம்பிக்கிறது கதாசிரியர் கார்த்திகேயனின் திரைக்கதை எழுதும் பணி இந்த பணியில் திறம்பட செயல்படுவதாக நினைத்து, நமது தமிழ்பட திரைகதை ஆசிரியர்கள் போல் ஏகப்பட்ட ஓட்டைகளை விட்டிருக்கிறார். இதை புரிந்து கொள்ள பேரறிவாளன் விசயத்தில் இவர் எழுதிய திரைகதையில் அறிந்து கொள்ளலாம். கதாசிரியராக மே 22ம் தேதி பொறுப்பெற்றுக்கொண்ட இவர் விசாரணையின் கீழ்நடவடிக்கையாக ஜூன் 14ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நளினியும் அவரது கணவர் முருகனும் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் பேரறிவாளனும் கைது செய்யப்பட்டதாக சிபிஐயின் தகவல் தெரிவிக்கிறது.
ஆனால் சூன் 10ம் தேதி ஜோலார்பேட்டையில் விசாரணை என்ற பெயரில் தமிழீழ ஆதரவாளர்கள், திராவிட கழகத்தவர்கள் வீடுகளில் ஏறி இறங்கியவர்கள் பேரறிவாளனின் வீட்டிற்கும் சென்று வந்திருக்கின்றனர். அப்பொழுது அவரின் தந்தை மற்றும் தாய் மூலமாக இவர் பெரியார் திடலில் கணீணி பிரிவில் வேலை செய்வதையும் அங்கு தங்கியிருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவரது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தவர்கள் சூன் 11 அன்று இரவு 10.30க்கு விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என்ற பெயரில் திராவிடர் திடலில் இருந்து அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அதன் பிறகு சட்ட விரோதமாக 14ம் தேதி வரை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக 26 பேரை அறிவிக்கிறார்கள். ஆனால் காவலறிக்கையில் 19.06.1991 அன்று பேரறிவாளனை கைது செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் பேரறிவாளன் அவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் 18.06.1991 என்று கூறப்படுகிறது. 19ம் தேதி கைது செய்தவரிடம் 18ம் தேதி எப்படி வாக்குமூலம் பெற்றார்கள் என்பது தெரியவில்லை. மேலும் ஒட்டுமொத்தமாக 26பேரை கைது செய்ததாக் 14ம் தேதி என்று குறிப்பிடுகிறார்கள். 11ம் தேதி இரவு கைது செய்தப்பட்ட பொழுது கூடவே பேரறிவாளனின் தாயாரும் தந்தையும் இருந்து இருக்கின்றனர். பெரியார் திடலிலும் ஆப்பொழுது நிறைய பேர் அங்கு இருந்து இருக்கின்றனர். இப்படி ஏகப்பட்ட ஓட்டைகளுடன் ஒரு வாக்குமூலம்.
காவல் துறையினர் ஒருவரை கைது செய்தால் அவரை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் ஆனால் தடா சட்டத்தின் கீழ் செய்யப்பட்டவர்களுக்கு இந்த விதிமுறை கிடையாது.அதே போல் அனைவரையும் 60 நாட்கள் தடா சட்டத்தில் வைத்திருந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 17 பேர் விசாரணை முடியும் ஒரு நாளுக்கு முன்பாகதான் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். நடுவில் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவல் நீடிப்பு எனும் நாடகம் நடத்தப்பட்டது . கார்த்திகேயனுக்கு தேவைப்பட்டது திரைகதையை வடிவமைக்க கால அவகாசம் தான் அந்த அறுபது நாட்கள். எனென்றால் அவரின் கூற்றுப்படி இது புலிகளின் செயல், அப்படி புலிகளாக இருக்கும் பொருட்டு இந்த செயலை செய்தவர்களை உயிருடன் பிடிக்க முடியாது என்பதும் தெரியும் அவருக்கு, அவ்வாறு நடந்து ஒரு குற்றவாளியை கூட நாட்டிற்கு அடையாளம் காட்டமுடியாமல் போய்விட்டால் இந்தியாவின் புலாணாய்வு திறமைக்கு பெருத்த அவமானமாக போய்விடுமே எனவே தான் இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் கிடைத்த அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்றி தண்டனை வாங்கி கொடுத்தால் இந்தியாவின் காவல் துறையை ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு நிகராக கூறுவதை நிருபித்துவிடலாமே.
நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி தான் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கலாம். இதை பல வழக்குகளில் பார்த்து வருகிறோம், இப்பொழுது கூட தில்ஷான் வழக்கில் ராமராஜ் தான் கொடுத்த வாக்குமூலத்தை மறுத்துள்ளார். இது குற்றவாளியிடம் காவல்துறையினர் பலவந்த படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் நடைமுறையில் உள்ள ஒரு விதிமுறை. ஆனால் இந்த ராஜிவ் வழக்கு தடா சட்டத்தின் கீழாக போடப்பட்டதால் அவ்வாறு மறுக்க இயலாது இதற்கென தனியாக மனு செய்து மறுக்க வேண்டும். அப்படி இரண்டு முறை காவல்துறையினர் பலவந்தபடுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி வாக்குமூலம் வாங்கினார்கள் என்று 11.2.1992 மற்றும் 26.8..1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுதும். 313 குற்றவியல் நடைமுறைச்சட்டம். கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர் எனபதை சொல்லியுள்ள போதும். நீதிபதி வாத்வா உடபட மூன்று பேர் பெஞ்சின் தீர்ப்பில் இவ்வாறு எந்த குற்றவாளியும் வாக்குமூலத்தை மறுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எந்த உலக நீதிமன்றத்திலும் இல்லாத 26 பேருக்கு ஒட்டுமொத்தமாக தூக்கு என்று சிறப்பு தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நல்லவேளை இந்த தீர்ப்பு மட்டும் அமுல் படுத்தப்பட்டிருந்தால் அது இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்ற படுகொலையாக கருத்தப்பட்டிருக்கும்.
இதன் பிறகு இப்படி திரைகதை எழுதபட்டு வரலாறு காணத 26 பேருக்கு தூக்கு எனும் தீர்ப்பு வழங்கப்பட்டபின் இந்த தீர்ப்பு தடா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால், இதை மேல் முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் செல்ல முடியாமல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அங்கு எழுதப்பட்ட திரைகதையில் ஓட்டைகளை பார்த்தார்களா என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19பேரை விடுவித்து அதாவது தூக்கு தண்டனை மட்டும் அல்ல ஒட்டுமொத்தமாக அவர்களுக்கும் குற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று விடுவித்தனர். அதாவது 26 பேர் குற்றம் சாட்டப்பட்டு அதில் 19 பேர் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். ஒரு நீதிமன்றத்தில் 26 பேர் குற்றவாளிகள் என்று தண்டனை விதிக்கப்பட்டு அதுவும் ஒரே வழக்கில் மட்டும் தண்டனை பெற்றவர்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றால் அந்த வழக்கு எந்த அளவிற்கு பொய்யாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் 7 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது அதுவும் 4 பேருக்கு தூக்கு மூவருக்கு ஆயுள் தண்டனை என்று. ஒரு திரைக்கதையில் எத்தனை எத்தனை ஓட்டைகள் என்பது போல் அத்தனை ஓட்டைகள் இந்த வழக்கில்.. இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக வழக்கின் ஓட்டைகள்.
பேரறிவாளன் 19 வயதில் பட்டயபடிப்பை முடித்த ஒரு இளைஞன் அதுவரை காவல்நிலைய அலுவலகத்திற்கு தனது சைக்கிள் தொலைந்து போய்விட்டது என்று கூட புகார் கொடுக்க கூட செல்லாத ஒரு இளைஞனை கைது செய்து அவரின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக மாற்றி இவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக மாற்றியிருக்கின்றனர். அதுவும் ஒரு பேட்டரி வாங்கியதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. அதுவும் அவர் பட்டய படிப்பில் மின்னணுவியலை ஒரு பாடமாக எடுத்து படித்தார் என்பதற்காக வெடிகுண்டு தயாரிப்பில் அவர் உதவியிருக்கிறார் என்று திரைகதை எழுதி அதற்கு வசனமாக இவரிடம் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அதுவும் கையெழுத்து போடாவிட்டால் தப்பி செல்ல முயன்று சுட்டு கொன்றதாக கதை கட்டுவோம் எனவே கையெழுத்து போடு என்று கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்த வாக்குமூலத்தை மறுத்து நீதிமன்றத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அதையும் மறைத்து தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார் திரைகதை வசன கர்த்தா கார்த்திகேயன்.
அந்த திரைகதையிலும் பெரிய ஓட்டை இவர் பேட்டரி வாங்கியதாகவும் அதற்கான ரசீதை பேரறிவாளனிடம் இருந்து கைப்பற்றியதாகவும் கதை எழுதியுள்ளார்கள். எந்த கடையில் பேட்டரி வாங்கியதற்கு ரசீது கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நாமும் சென்று வாங்கி வருமானவரி கணக்கில் சமர்ப்பிக்கலாம். சரி அந்த ரசீதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் பேட்டரிக்கு இத்தனை காலம் உத்தரவாதம் அது வரை அதில் பிரச்சனை வந்தால் மாற்றி தருவோம் என்பதற்கா அந்த ரசீது. அப்படி ஒரு உத்தரவாதத்துடன் எங்குமே பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி விற்பதில்லை (வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கு உத்தரவாதம் உண்டு, ஆனால் அதை இடுப்பில் கட்டும் வெடிகுண்டுக்கு பயன் படுத்த முடியுமா??) அப்புறம் எதற்கு ரசீது. இந்த ரசீது மே மாதம் முதல் வாரத்தில் வாங்கியதாகவும் அதை பேரறிவாளன் அவருடைய வாக்குமூலத்தில் மே முதல் வாரமே வாங்கியதாக ஒப்புகொண்டுள்ளதாகவும் காட்டுகிறார்கள் திரைகதையில். ஆனால் பேட்டரியை விற்ற கடைக்காரர் அவரது சாட்சி வாக்குமூலத்தில் மே மாதம் இரண்டாம் வாரம் வாங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். அது எப்படி ரசீது போட்டவர் அதன் நகல் அவரிடம் இல்லையா, மே மாதம் முதல் வார வாங்கியதை இரண்டாம் வாரம் என்று சொன்னார் நகலை சரியாக பார்க்கவில்லையா. நீதிமன்றங்களும் ஏன் இந்த வித்தியாசத்தை பார்க்கவில்லை.
அப்படியே பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்தார் என்று எடுத்துக்கொண்டால் கூட. ஒரு கொலையில் நேரடியாக பங்கு பெற்றவருக்கு தூக்கு என்றால் கூட பரவாயில்லை. கொலை குற்றம் நடக்க காரணமாக இருந்த வெடிகுண்டிற்கான பேட்டரி வாங்கி கொடுத்தார் இவருக்கு பேட்டரி வாங்கி கொடுக்கும் பொழுதே இப்படி ஒரு குற்றம் நடக்க போகிறது என்று தெரியுமா என்ன. அதற்கு வழிவகை இல்லாமல் செய்துள்ளனர் விசாரணையில் இந்த கொலை பற்றிய விவரம் சிவராசன் எழுதிய ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்ததாகவும் அதில் இந்த சதியை பற்றி மொத்தமே 3 பேருக்கு தான் தெரியும் அவர்கள் சிவராசன், தனு மற்றும் சுபா என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மூவருமே உயிருடன் இல்லை எனவே அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது எனும் பொழுது எப்படி இவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஒரு கொலை சதியில் நேரடியாக பங்கு எதுவும் இல்லாதவர்களுக்குமா தூக்கு தண்டனை.
இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த கொலை குற்றத்தில் இருக்கும் ஓட்டைகளை.. இல்லை இல்லை இந்த திரைகதையில் வசனகர்த்தா கார்த்திகேயன் சரியான அனுபவம் இல்லாததால் விட்ட ஓட்டைகளை.. ஆனால் நாம் எல்லாம் இனிமேல் சிறிது எச்சரிக்கை உணர்வுடனே இருக்க வேண்டும் வீட்டில் இருக்கு டார்ச் லைட்டுக்கு பேட்டரி வாங்குவதாக இருந்தால் கூட ரசீது மற்றும் அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை குறிப்பிட்டு வாங்க வேண்டும் இல்லாவிடில் நமக்கும் இலவசமாக தூக்கு தண்டனை வழங்கிவிடுவார்கள் இந்திய நீதிமான்கள்..

http://perarivalan.blogspot.com/ |