அய்யா இன்னைக்கு கிராமத்துப் பக்கம் போனீர்கள் என்றால் ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் போனுன்னு ஒன்னு சொல்லுகிறார்களே அதை வைத்துக்கொண்டு மக்கள் அலைகிறார்கள். ஏன் மீன்வர்கள் கூட GPSயுடன் கூடிய சேவைகளை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் உயிர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வந்து பதிவுலகத்திலும் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் 2Gனா 3Gனா தெரியாது என்று சொல்வதை கேட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
அடுத்து ஒரு முத்தாய்ப்பான கருத்து, இது யூக அடிப்படையிலான கருத்து என்று சொல்லி இருக்கிறீர்கள். இன்று என்னவோ இந்தியாவை CAG & CWG தான் ஆட்டி படைக்கிறது. அதற்காக CAG என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்கவேண்டாம். அரசும் அரசு சார்பு நிறுவணங்களின் வருடகணக்கை கண்காணிக்கும் நிறுவனம். அதாவது நமது வருமானவரியை கட்டுவதற்கு முன் ஒரு ஆடிட்டரிடம் சென்று அவரின் உதவி பெற்று பதிவு செய்வோம் அப்பொழுது அவர் சொல்லும் அறிவுரைகளின் படி நாம் அனைத்தையும் செய்வோம். இதுவே ஒரு நிறுவணமாக இருந்தால் உள்ளே ஒரு கணக்காளர் Internal Audit, வெளிநிறுவணம் மூலமாக ஒரு கணக்காளர் (External Audit) என்று வைத்து கணக்குகளை தணிக்கை செய்வோம். அதாவது எங்காவது யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்று கண்டுபிடிக்க. உள்ளே இருக்கும் அடிட்டர் தவறு செய்தாலும் வெளி ஆடிட்டர் மூலமாக விசயம் வெளியில் வர வேண்டும் என்பதற்காக. அதே போல் CAG என்பது அரசையும் அரசின் மூலமாக நடத்தப்படும் நிறுவணங்களின் கணக்கை தணிக்கை செய்யும் நிறுவனம்.
அந்த நிறுவணம் அதற்கு முன்பிருந்த முறைகள் இப்பொழுது இருக்கும் முறைகள் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கிறது. மேலும் சந்தை நிலவரத்தையும் அந்த ஏலத்தில் ஏலம் எடுத்த நிறுவணங்கள் உரிமத்தை வைத்து செய்த வியபாரத்தால் அவர்களுக்கு கிடைத்த லாபத்தை வைத்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இது எப்படி யூகம் ஆகும், வேண்டுமென்றால் இப்படி யூகமாக கணக்கு எழுதுபவர்களை வைத்து அடுத்தமுறை உங்கள் வருமாணவரி கணக்கை காட்டி வரி கட்டாமல் இருங்கள்.
என்னவொரு எடுத்துகாட்டு ஒரு ரூபாய் அரிசியும், பதினொரு ரூபாய் அரிசியும், இது தாங்க உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. 11 ரூபாய்க்கு அரிசி விற்பவன் 8 ரூபாய்க்கு ஏன் 5 ரூபாய்க்கு வாங்கி 11 ரூபாய்க்கு விற்கிறான். ஆனால் அரசு நட்டத்துக்கு விற்கிறது, இதில் வெளிமார்கெட் விலையை வைத்து மிச்சம் இருக்கும் 10 ரூபாய் மானியம் என்று எப்படி சொல்லுகிறீர்கள். அரசு என்ன வெளிமார்கெட்டில் இருந்த அரிசியை வாங்குகிறது இல்லையே விவசாயிடம் இருந்து தானே. அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயிப்பது கூட அரசு தானே. எப்படி அய்யா உங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது. ஜெயலலிதாவை பார்த்து யாரும் சிரிப்பார்களோ இல்லையோ இப்பொழுது அனைவரும் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்.
நாங்க வாங்கவில்லை மானியவிலையில் பெட்ரோல், அரிசி எதுவும் வேண்டாம், வருமான வரி கட்டுகிறோம், அந்த வருமானத்தை சம்பாதிக்க வண்டியில் போகிறோம் அப்பவும் வரி வாங்குகிறீர்கள்(Road Tax), அப்படி வண்டியில் போகனும் என்றால் உடம்பில் தெம்பு வேண்டும் அதற்கு சாப்பிடனும் அப்படி சாப்பிட அரிசி பருப்பு என்று எது வாங்கினாலும் விற்பனை வரி கட்டுறோம். இப்படியே அதுக்கு வரி இதுக்கு வரி என்று கட்டி சம்பாதிக்கிறோம். எல்லாம் முடிந்து சம்பாதித்து திரும்பவும் சம்பாதித்த பணத்துக்கு வருமானவரியை கட்டுகிறோம். இதில் எதாவது ஒரு வரியை மட்டும் வைத்துவிட்டு மற்றவைகளை நீக்கலாமே. நாங்களும் மானியத்தில் எதையும் கேட்க மாட்டோம். என்ன ஒரு வாதம் ஒரு ரூபாய் அரிசியும் கோடி கோடியா ஊழலும் ஒன்றாம், இதை பற்றி பேசுபவர்கள் மானியத்தை வேண்டாம் என்று சொல்லனுமாம். இப்படி பேசுகிறவர்களுக்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்.
இதற்கு உங்கள் தலைவரும் ராசாவும் சொன்னதையே நீங்களும் சொல்லி இருக்கலாம், இதற்கு முன்னால் இருந்த அருண்சோரி, பிரோமோத் மகாஜன் கடைபிடித்த முறைகளையே கடைபிடித்தார்கள் என்று. மக்களும் ஆட்டோசங்கர் சம்பாதித்தது போல் இவர்களும் சம்பாதித்தார்கள் என்று பேசாமல் இருப்பது போல் இருப்பார்கள். (இங்கு கூட்டிகொடுத்து என்ற வார்த்தையை யாராவது சேர்த்து கொண்டு படித்தால் நான் பொறுப்பு அல்ல)
ஆனால் தெளிவாகவே இருக்கிறீர்கள் உங்கள் தலைவரைப் போலவே, இப்படி இந்த விசயத்துக்கு எல்லாம் சப்பைகட்டு கட்டி பேசினால் அடி பிரித்து எடுப்பார்கள் என்று ஒரு நண்பரின் மடல் என்று விவரமாக அவர் பெயரில் போட்டு தப்பித்து கொண்டு.
லக்கி நீங்கள் வேண்டுமானால் வாழ்க ஒரு ரூபாய் அரிசி.. வாழ்க 2G... வாழ்க கருணாநிதி... என்று நீங்கள் வாழலாம் அதற்காக நாங்களும் வாழமுடியாது வாழ்த்தவும் முடியாது...