Wednesday, January 16, 2013

குரைத்த சிந்தனையும் எழுத்து வியாபாரமும்

(இந்த படத்தில் எங்க பார்க்குறாருனு யோசிக்காமா முதலில் கீழே இருக்கும் விசயத்தை படியுங்கள்)

சாரு நிவேதிதா இது அனைவருக்கும் தெரிந்த பெயர் ஆனால் இவரின் இயற்பெயர் கே. அறிவழகன். 


தினமலரில் இருந்து - 
""நம்முடைய கண்ணம்மா பேட்டையைப் போல்தான், பல பேட்டைகள் அங்கே நிரம்பியிருந்தன. அங்குள்ள மக்களுக்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, நகரை நவீனப்படுத்த எண்ணினார் அப்போதைய பிரதமர், லீ க்வான் யூ. மக்களைக் காலிபண்ணச் சொன்னார்.

அவர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. அப்போது, லீ க்வான் யூ இப்படி அறிவித்தார். "குறிப்பிட்ட தேதிக்குள் நீங்களாக வெளியேறினால், நீங்கள் சொகுசான அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கலாம். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள். அப்போது உங்களுக்கு அரசு வீடும் கிடைக்காது, நீங்களாகவேதான் கட்டிக் கொள்ள வேண்டும்!'இப்போது சிங்கப்பூர் எப்படி இருக்கிறது என்று, நம் எல்லாருக்கும் தெரியும். 1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது,""

மிக அருமையான உதாரணம் சிங்கப்பூர் இன்று இருக்கும் மிகவும் மேன்மையான நிலையை அடைய என்ன செய்தார்கள் என்று சொல்லியிருக்கிறார் இந்த கேணை அறிவழகன். நாட்டை முன்னேற்ற ஒரு பகுதி மக்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமாக இருந்தால் எப்படி பட்டேனும் செய்ய வேண்டும் என்பதை. ஆனால் 1988ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு 2001க்கு பிறகு மிகத்தீவிரமாக பணிகள் நடைபெற்ற கூடங்குளம் அணு உலையை கட்டுவதற்கு என்று சில வரை முறைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்திய அணு சக்தி கழகம் குறிப்பிடும் “அணு உலை பகுதிக்கு 1கிலோமீட்டர் சுற்றளவில் 400 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் குடியிருப்பு இருக்க கூடாது” என்பது ஆனால் 1988ல் ஒப்பந்தம் போடப்பட்டு 2001க்கு பிறகு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் அணு உலைப்பகுதியில் சுனாமிக்கு பிறகு அதாவது 2004ம் ஆண்டு சுனாமி வந்து சென்ற பிறகு அங்கு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பு கட்டித்தரப்பட்டுள்ளது. அதுவும் 500மீட்டர் தொலைவில் அணு உலைக்கு அருகில். இந்திய அணு சக்தி கழகத்தின் விதி மீறப்பட்டுள்ளது என்பதை விட இந்திய அணு சக்தி கழகமும் இந்த விதி மீறப்பட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது. அவர்களின் வழிகாட்டுதலின் படி தான் ஒவ்வொரு பணியும் அணு உலையில் நடக்கிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் அணு உலைக்கு வந்த பொழுது இந்த குடியிருப்பு கட்டப்படுவதை பார்க்கவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு குதிரைக்கு கடிவாளம் கட்டப்பட்டது போல் கட்டப்பட்டிருந்தது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த சுனாமி காலனியில் 450 குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏன் சில காலம் முன்பு கேணை அறிவழகன் சொன்னது போல் அமைதியான காவல் துறை இந்த குடியிருப்பில் சில வாரங்கள் குடியிருந்தது, எப்படி குடியிருந்தது என்றால் அங்கிருந்த மக்களை காலில் விழுந்து கும்பிட்டு நாங்கள் தங்க இடம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் மக்கள் இடிந்த கரையில் மைதானத்தில் சென்று படுத்து உறங்கினர் தங்களுக்கு அரசு கட்டி கொடுத்த வீட்டை அரசு ஊழியர்களும் அமைதிக்கு பெயர் போனவர்களுமான காவல்துறைக்கு விட்டுக் கொடுத்துவிட்டு. தங்கியவர்கள் குடித்து கும்மாளம் போட்டிருந்தால் பரவாயில்லை வீட்டில் இருந்த நகை, பணம் எல்லாம் தங்களுடையது என்பதை, ஆமாம் அரசு கட்டிக் கொடுத்த வீடு, அதில் இருக்கும் பொருள்களும் அரசுக்கு தானே சொந்தம். அதனால் அரசு ஊழியர்களான காவல்துறையினர் அதையும் எடுத்துக் கொண்டனர். பரவாயில்லை அது அவர்களின் உரிமை என்பதை நமது கேணை அறிவழகன் சொல்வது போல் எடுத்துக் கொள்ளலாம். 

ஒரு நாட்டின் மக்களின் முன்னேற்றத்தை விரும்புகிறது எனும் பொழுது அதை செயல்படுத்தும் நிறுவனங்களும் நிர்வாகத்தினரும், அதாவது அரசு ஊழியர்கள் மக்களின் நலனில் அக்கரை செலுத்தவேண்டும் இதில் தவறுவது என்பது அந்த அரசு இயந்திரத்தின் செயல்பாடற்ற தன்மையை தான் சுட்டிகாட்டுகிறது. 2004க்கு பிறகு அணு உலைக்கு 500மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட 450 குடியிருப்புகளை தட்டிகேட்காத கேணை அறிவழகன் நாட்டின் எழுத்தாளர்கள் உதயகுமாரை புகழ்வதை கேட்க சகிக்காமல் போனது அவர் எழுத்தாளர் என்று சில தற்குறிகளால் கூறப்படுவதனால் தான். அதிலும் 35 புத்தகம் எழுதியது பெரிய சாதனையாம், ஒரே ஒரு திருக்குறளை தொகுத்து அளித்த எல்லீஸ் துரையை கூட நாம் எழுத்தாளர் என்று சொல்லலாம், அவரை என்றும் நினைவு கூறலாம் சென்னையில் ஒரு தெருவிற்கு இன்றளவும் அவரின் பெயர் உள்ளது, ஏன் மதுரையில் ஒரு பகுதிக்கே இவரின் பெயரை வைத்துள்ளார்கள். ஆனால் இப்படிப்பட்ட கேணை அறிவழகன்களை நாம் எப்படி எழுத்தாளர் என்று சொல்வது. அதுவும் இவர் எழுதுவது பின்நவீனத்துவம் என்று சொல்கிறார் இவரின் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கு எடுத்துக் காட்டு நடிகை சமந்தாவும், நடிகர் ஜீவாவும் ஒரு படத்தில் பள்ளி மாணவர்களாக நடித்தார்கள் இதில் ஜீவாவை பள்ளி மாணவனாக ஒத்துக் கொள்ள முடியாது ஆனால் சமந்தாவை ஒத்துக் கொள்ளலாம் என்று சமந்தாவின் பின்புறத்தை விமர்சித்து எழுதியிருந்தார் ஒரு வேளை இப்படி பெண்களின் பின்புறத்தை விமர்சிப்பது தான் இவரின் பின்நவீனத்துவமாக இருக்கும் போல.

நானும் கேணை அறிவழகன் எழுதிய 35 புத்தகத்தில் ஒன்று கூட படிக்கவில்லை ஆனால் அணு சக்தி விதிகள் குறித்து சிறிதளவு படித்து இருக்கிறேன், அதில் மீறப்பட்டிருக்கும் விதிமுறையை சுட்டிக் காட்டியுள்ளேன் இந்த விதிமுறை மீறலில் இவர் குறிப்பிட்ட மாநில அரசும் சம்பந்தப்பட்டுள்ளது, அணு உலையில் இருந்து 500மீட்டர் தூரத்தில் இடத்தை ஒதுக்கியது மாநில அரசு தான், அங்கு 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்படுவதை வேடிக்கை பார்த்தது மத்திய அரசும், இந்திய அணு சக்தி துறையும், கூடங்குளம் அணு மின்நிலைய நிர்வாகிகளும் தான். இவர்கள் செய்த தவறை சுட்டிகாட்டி போராடினால் உதயகுமார் இரத்தகளரியாக மக்களை பார்க்க விரும்புகிறார் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும். அந்த மக்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர் உதயகுமார், இவரின் இந்த முட்டாள் தனமான குரைத்த சிந்தனை உதயகுமாரை எதுவும் செய்துவிட முடியாது. 

இந்த குரைத்த சிந்தனையில் தினமலத்தின் குறுக்கு புத்தி மற்றும் கேணையின் எழுத்து வியாபாரமும் தெரிகிறது தேசிய அளவு ஊடகத்தில் இருந்து உள்ளூர் ஊடகம் வரை உதயகுமாரை சிறந்த மனிதன் என்று சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாத பொ........ரிப்பு.

குறிப்பு:-
இதை தினமலத்துக்கு அனுப்பினால் அவர்கள் நிச்சயமாக வெளியிடப் போவதில்லை ஆனாலும் இந்த் கேணை அறிவழகனுக்கு கொண்டு சேர்க்கலாம், அந்த கேணையும்  படித்துவிட்டு நானும் 35 புத்தகங்களில் ஒன்று கூட படிக்கவில்லை பதில் சொல்ல முடியாது என்று சொல்லலாம் அதனால் நமக்கு எந்த குறையும் இல்லை. 

No comments:

Post a Comment