Thursday, July 22, 2010

ஏன் தனி தமிழ்நாடு தேவை?? பகுதி 1

இந்திய துணை கண்டம் அங்கிலேயேன் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்பதற்காகவே இந்த் பதிவு.

இந்திய துணைகண்டம் அடிமைசிறையிலிருந்து விடுபட்டது 1947ல். அன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தமிழர்களும் தான் வட இந்தியர்களும் தான். ஆனால் இங்கு நினைவில் கொள்ளப்படுபவர்கள் யார்? யார்? இந்தியாவின் முதல் சுதந்திர போராக ஜான்சி ராணி கலந்து கொண்ட 1857 வருடம் நடந்த போரே நினைவு கொள்ளப்படுகிறது. இதை சிப்பாய் கலகம் என்று வர்ணித்தார்கள் ஆங்கிலேயேர்கள்.

ஜான்சி ராணியின் குழந்தை இறந்து விட்டது, இவர் மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அன்று தத்து எடுப்பது என்பது இந்திய துணைகண்டத்தில் காலகாலமாக இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆங்கிலேயனிடம் அப்படி ஒரு நடைமுறை இருந்ததா இல்லை வேண்டும் என்றே வாரிசு இல்லாத அரசு என்று அறிவித்து ஜான்சியில் ஆங்கிலேயேன் உரிமை கொண்டாடினானா என்பது தேவை இல்லை. அதுவரை ஆங்கிலேயேனுக்கு கப்பம் கட்டிதான் வந்தது ஜான்சி அரசு.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தனது சொத்தை காப்பாற்ற வாள் ஏந்தினார். சொத்தை காப்பாற்றா களம் கண்டவர் முதல் சுத்ந்திர போராட்ட வீராங்கனை. சொத்தை காப்பாற்ற இன்று இந்தியா என்று என்ன என்பதை பற்றி சுத்தமாக ஒன்று தெரியாதவர் எல்லாம் கட்சி தலைவியாக இருந்து கைப்பொம்மையை வைத்து ஆட்சி செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா.. என்று தான் சொல்லுவீர்கள். ஆனால் இன்று இந்த லக்ஷ்மி பாய் குமரியில் இருந்து காஷ்மீரம் வரை அனைவரும் பாடத்தில் படித்து வருகிறோம். இதுவே உண்மையான ஒன்றாக நிலைநாட்டப் பட்டுவிட்டது.

ஆங்கிலேயேனை எதிர்த்து பிரஞ்சு படை உதவியுடன் போராடினார் மைசூர் புலி திப்பு சுல்தான். இவரின் ஆதரவைப் பெற்று தென்கோடியில் இராமநாத புரத்தில் பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், சொத்தை காப்பாற்றவா களம் கண்டார். இவரின் கணவன் ஆங்கிலேயேனை எதிர்த்தார் கப்பம் கட்ட மறுத்தார், நாங்கள் அடிமை இல்லை என்பதை கூறி ஆங்கிலேயேனிடம் சண்டையிட்டார். போரில் இவர் கணவன் இறந்தவுடன். தனது ஒரே மகளை விட்டுவிட்டு வாள் ஏந்தி போராடினார் தன் கணவன் இடத்தில் இருந்து. இவர் போராடியது தனது சிவகங்கை சீமையை காப்பற்றதான் ஆனால் ஆங்கிலேயேன் வாரிசு இல்லாத சொத்து என்று அபகரிக்க நினைத்த பொழுது இல்லை.

நாங்கள் உங்களுக்கு அடிமை இல்லை என்று ஆங்கிலேயேனுக்கு உணர்த்த. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முதல் வீராங்கனையா ஜான்சி ராணியா. வேலு நாச்சியார் போராடியது 1780 ம் வருடம் அதாவது 77 வருடங்களுக்கு முன். ஜான்சி சொத்துகாக போராடினால் அது சுதந்திர போர், ஆங்கிலேயேனுக்கு அடி பணிய மாட்டேன் என்று போராடியவருக்கு ஒன்றும் இல்லை. ஒரு வீராங்கனை. ஒருவர் பெயர் இந்தியா முழுமைக்கும் தெரியும். மற்றவர் பெயர் சொந்த இனத்துக்கே தெரியாது.

இப்படி சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து போராடிய என்னற்ற வீரர் வீராங்கனைகளின் பெயரை மறைத்து. ஏன் நமது பக்கத்து மாநிலம் சென்று கேட்டு் பாருங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா என்று. உதட்டை பிதுக்குவார்கள்.

சேர்ந்தே போராடினோம் சேர்ந்தே சுதந்திரம் பெற்றோம். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கேட்டால் திலகரும், காந்தியும், நேருவும் என்று சொல்லுகிறார்கள் இங்கு செக்கிழுத்தவன் மாடாகி போனான் வருபவனுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாய்.

தொடரும்...

Thursday, July 15, 2010

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்



வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர்.

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity)இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய்.

Saturday, July 10, 2010

பழையபேப்பர்... பழையபேப்பர்...

பழைய பேப்பர் போடுங்க என்று டில்லியில் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் தவமாய் தவம் இருக்கிறாராம் ஒரு ஏமாந்த சோனகிரி. அவரிடம் விசாரித்தபொழுது தமிழக முதல்வர் கடிதம் மேல் கடிதம் போடுகிறார். அதை எல்லாம் பிரதமர் என்றாவது ஒரு நாள் எடைக்கு போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். சரி இதற்காக மற்ற வீடுகளுக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு சொன்னார் நாலு தெரு சுத்தினால் தான் 100 கிலோ பேப்பர் கிடைக்கும். ஆனால் இந்த கடிதங்கள் எப்படியும் பத்து டன் எடையாவது இருக்கும். நாலு தெரு சைக்கிளை தள்ளிக்கிட்டு சுத்துவதை விட இங்க நாலு நாள் உட்கார்ந்து தேத்திடலாமே என்று சொன்னார். பாருங்கப்ப வடநாட்டுகாரனின் விவரமான புத்தியை.

இது தெரியாம இங்க ஒருத்தர் பேனாவை கையில் வைத்துக்கொண்டு ஆட்டு ஆட்டுனு ஆட்றார்பா. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவரை செத்து போனவர்கள் 400க்கும் மேல் இன்று வேகமாக கடிதம் எழுதுகிறார், அவரின் மீனவர் அணி போராட்டம் நடத்துகிறது(சனிக்கிழமை இலங்கை தூதரகத்துக்கு விடுமுறை நாளாமே), 3லட்சம் ரூபாய் நிதியுதவி. அப்ப மிச்சம் இருக்கும் 400 சொச்சம் பேருக்கு சொம்புதானா.

400க்கும் மேல FIR இருக்காம் தமிழக காவல் துறையிடம், அனைத்திலும் முதல் குற்றவாளி இலங்கை இராணுவம் என்று போட்டு இருக்கிறார்களாம். 7 கேஸுக்கு மேலே போனாலே குண்டர் தடுப்பு சட்டம், 10 கேஸ் இருந்தாலே என்கவுண்டர் நடத்தும் தமிழக காவல் துறை 400க்கும் மேல் கேஸ் இருக்கும், இலங்கை இராணுவத்தின் மேல் என்கவுண்டர் நடத்துமா. அட்லீஸ்ட் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமா??

Tuesday, July 6, 2010

பாவமும் நாம் பலியும் நாம்

பெட்ரோல் விலை ஏன் ஏறியிருக்கிறது என்பதற்கு தெளிவான காரணம் சொல்லுகிறார்களா இந்த மத்திய மாநில அரசுகள். நம்மைவிட ஏழ்மை நாடுகளில் பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது.

பாகிஸ்தான் - 26
பங்களாதேஷ் - 22
கூயுபா - 19
நேபாள் - 34
பர்மா - 30
ஆப்கானிஸ்தான் - 36
கத்தார் - 30

பெட்ரோலுக்கு வரி மட்டுமே நாம் முப்பத்து மூன்று ரூபாய் கொடுக்கிறோம்.

மத்திய அரசு வரி - 11.80
சுங்க வரி - 9.75
மாநில வரி - 8.00
விற்பனை வரி - 4.00

மேலே இருப்பவற்றில் முதல் இரண்டும் மத்தியரசுக்கும் மற்ற இரண்டும் மாநில அரசுக்கும் செல்கிறது. இவ்வளவு வரிகட்டி நாம் எல்லாம் பெட்ரோல் போட்டு வேலைபார்த்து சம்பாதிப்போம், இவர்கள் வருட கடைசியில் திரும்பவும் வந்து வருமான வரி என்று மேலும் நம்மை சுரண்டிவிடுகிறார்கள். சம்பாதிக்க வேலைபார்க்க செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் போடவும் வரி கட்டுகிறோம், சம்பாதித்தபின்னும் வரி கட்டுகிறோம். இது இரட்டை வரி முறை அல்லவா??? இதை கேட்க யாருமே இல்லையா???

ஒரு நாட்டை நிர்வகிக்க வரி வருமானம் மிகவும் முக்கியமானதே, ஆனால் நம்மை விட பின் தங்கிய நாடுகள் வரிவிலக்கு அளித்து பெட்ரோல் கொடுக்கும் பொழுது, இந்தியாவில் ஏன் இந்த நிலை. சரி விட்டு தொலைவோம் என்றால் இந்த வரியை பற்றி விசாரிக்கும் பொழுது தான் இன்னும் ஒன்று தெரிந்தது. பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் முகவர்களாக இருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றி. அவர்களுக்கு இதில் என்ன கிடைக்கிறது லாபம் என்ற பெயரில் பார்த்தால் ஒரு லிட்டருக்கு 25 பைசாவில் இருந்து 35 பைசாவரை அனைத்து எரிபொருள் வகையிலும். ஒரு பெட்ரோல் நிலையம் வைத்து யாரும் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமை.

தமிழக மக்கள் மங்குனிகள் என்பதற்கு முழு அடைப்பு போராட்டமே ஒரு சிறந்த உதாரணம்.

ஜூலை 7ம் தேதி அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் என்பது, ஒரு அறவழி போராட்டம். இந்த அறவழி போராட்டம் தமிழகத்தில் கழுத்து நெறிக்கப்பட்டது ஆளும் திமுக அரசால் அல்ல, திருட்டு முண்டங்கள் கலகத்தால். இவர்கள் யார் ஒரு கட்சி மக்களிடம் பெட்ரோல் விலையேற்றத்திற்காக கடைகளை அடையுங்கள், பேருந்துகளை நிறுத்துங்கள் என்று கேட்டால். இந்த திமுக கட்சியினர் அறவழியில் போராடுபவர்களை அடித்து நொறுக்க.

காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது, கருணாநிதியின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்து கொண்டு இருந்ததா??? மதுரை திருமங்கலத்தில் கடை அடைக்க சொன்ன கம்யூனிஸ்ட் தோழர்களை காவல் துறை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அது தான் சட்டம் ஆனால் நடந்தது என்ன திருட்டு முண்டங்கள் கலகம் செய்கின்றன, காவல் துறை கைகட்டி வாய் போத்தி வேடிக்கை பார்க்கிறது. திண்டுக்கல்லில் சகோதரி பாலபாரதி ஆர்ப்பாட்டம் செய்தார், கத்தி கபடாவை எடுத்து கொண்டா சென்றார் இல்லையே கொடியையும், பேனர்களையும் கொண்டு தானே சென்றார். இவரை தடுத்து நிறுத்த வேண்டியது யார், ஆனால் அங்கு வந்து கலாட்டா செய்கிறது சொம்பு தூக்கும் கூட்டம்.

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் கலவரமானதுக்கு காரணம் யார்?? முதலிலேயே காவல் துறை வந்து இருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது. ஆனால் திருட்டு முண்டங்கள் வந்து குதிக்கிறது அவர்கள் முழு அடைப்பு நடத்தும் போது இவர்களுக்கு யார் தடுத்து நிறுத்தும் உரிமையை கொடுத்தார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரர்கள் என்றால் காவல் துறையை காதல் துறை என்று பெயர் மாற்றி அவர் வீட்டு வாசலிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

இவ்வளவு நடக்கிறது நாம் என்ன செய்கிறோம் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

Saturday, June 26, 2010

பெட்ரோல் பூனைக்கு மணிகட்டுவது யார்??

மகாபாரதக் கதை அனைவரும் அறிந்ததே, நான் அதை நம்புவன் இல்லை, மகாபாரதம் என்பது கதைக்குள் கதையாக இருக்கும் ஒரு கதை அவ்வளவே. ஆனாலும் மகாபரத போருடன் இக்கதைகள் முடிவடியவில்லை அதன் பின்னும் தொடருகிறது. அப்படி ஒரு கதை தான ;இப்பொழுது நான் சொல்லுவது.

போர் முடிந்தது தருமன் அரசனாக பதவி ஏற்றான், காலம் சென்றது அதன் வழியே. ஒரு நாள் கிருஷ்ணன் தருமனைப் பார்க்க தருமனின் அரண்மணை வந்தான். தருமன் வரவேற்று உணவளித்தான், தன் ஆட்சியின் பெருமையை கண்ணனுக்கு காட்ட ஊர்வலம் போக அழைத்தான். கண்ணனும் தருமனும் ஊர் வலம் சென்றனார், ஊர் முழுவதும் ஆங்காங்கே தர்ம சத்திரங்கள், 24 மணி நேரமும் உலை கொதிக்கும் அடுப்புகள். மக்கள் அங்காங்கே தருமசத்திரத்தில் அமர்ந்து அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். ஆடை அணிகலன்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது.

அரண்மனை திரும்பியவுடன் தருமன் சொன்னான் பார்த்தீர்களா ஏன் நாட்டில் பசி பட்டினி என்பதில்லை, ஆடை அணிகலன்களிலில் இருந்து அனைத்தும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். கண்ணன் ஒன்றும் சொல்லாமல் தன் அரண்மனைக்கு தருமனை வரும்படி அழைப்பை வைத்துவிட்டு சென்றான்.

அடுத்த சில நாட்களிலேயே கண்ணன் கூப்பிட்டாரே போகாமல் இருந்தால் நல்ல இருக்காது என்று தருமன் கண்ணனின் நாட்டிற்குப் புறப்பட்டான். கண்ணன் தருமனை வரவேற்று உணவருந்த செய்து, நகர்வலத்திற்கு அழைத்து சென்றான் மக்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். அனைவரும் கடினமாக உழைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது தாண்டவமாடியது.

அரண்மனை வந்ததும் கண்ணன் சொன்னான் தருமா, இலவசங்கள் மக்களை மகிழ்சியாக வாழ வைக்காது. அப்படி இலவசங்களால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்கால மகிழ்ச்சி தான். உழைப்பு என்பது தான் மக்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி தரும். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றான்.

யோசித்து பாருங்கள் இன்று கிடைக்கும் இலவசங்கள் எல்லாம் நிரந்தரமானவையா. சிலர் சொல்லுவார்கள் ஏழை குழந்தைகள் பார்க்க தொலைக்காட்சி கிடைக்கிறது, இதுவே அவர்கள் உழைப்பால் வாங்குவது என்றால் 20வயதுக்கு மேல் தான் வாங்கமுடியும். சிறு குழந்தைகள் பொழுது போக்கே இல்லாமல் வாழ்கிறார்கள் என்று. ஆனால் தேவை இது இல்லை ஏழைமக்களும் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். விலைவாசி என்னும் பூதம் கட்டுபாட்டுக்குள் இருந்தால் தான் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதற்கு முதல் தேவை என்ன விலைவாசி கட்டுகடங்காமல் அனைத்து இடங்களிலும் அதிகரிக்க காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் ஒரு நாட்டின் இரத்த ஓட்டம் இதன் விலை அதிகரிக்க அதிகரிக்க அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா என்னும் திருநாட்டில் பெட்ரோல் விலை மாநிலத்திற்கு ஒரு விலை ஆனால் வரி விதிக்கும் முறை மட்டும் இந்தியா முழுவதும் ஒரே முறை (VAT). டெல்லியில் பெட்ரோல் 40 ரூபாய்க்கும் கீழே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ள இடமான சென்னையில் விலை 56ரூபாய். இதை இந்தியா முழுவதற்கும் ஒரே விலை என்று கொண்டு வந்தால் அனைவருக்கும் 50 ரூபாய்க்கு கொடுக்கலாமே. ஏன் இந்த விலை வித்தியாசம் மாநிலத்திற்கு மாநிலம். ஏன் பாண்டியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை ஆனால் அங்கு தமிழகத்தை விட 2ரூபாய் விலை குறைவு. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள மாநிலங்களிலிருந்து இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு போகும் செலவு அதிகமாகும், அந்த செலவையும் கணக்கிட்டால் டில்லி, புதுவை போன்ற இடங்களில் விலை அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் டில்லியிலும் புதுவையிலும் விலை குறைவாக உள்ளது.

சமீபத்திய விலையேற்றத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள், டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் சென்னை.

பெட்ரோல்
டெல்லி  - 47.93
மும்பாய்  - 52.50
கொல்கத்தா - 51.65
சென்னை  - 55.92

டீசல்
டெல்லி  - 38.10
மும்பாய்  - 39.88
கொல்கத்தா - 31.99
சென்னை  - 43

சமையல் எரிவாயு
டெல்லி  - 319.20
மும்பாய்  - 348.45
கொல்கத்தா - 363.70
சென்னை  - 350.95

ஏன் இந்த விலை வித்தியாசம் என்று கேட்டால் மாநில அரசுகள் கொடுக்கும் மானியம். இந்த மான்யங்களை நிறுத்திவிட்டு அனைத்து ஊர்களுக்கும் ஒரேவிலை என்று கொண்டு வந்தால் மான்யமாக அதாவது இலவசமாக கொடுக்கப்படும் பணவிரயத்தை தடுத்து சரிசமமான நிலை என்று வரும்.

இந்த பூனைக்கு யார் மணிகட்ட போகிறார்கள். கட்டயமாக காங்கிரஸ் அரசு இதை செய்யாது செய்தால் அவர்களின் வடமாநில ஓட்டு வங்கிகள் சரிந்து விடும். அனைத்து எதிர்கட்சிகளும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை. இலவசமாக கொடுத்தால் தான் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.