Tuesday, July 6, 2010

பாவமும் நாம் பலியும் நாம்

பெட்ரோல் விலை ஏன் ஏறியிருக்கிறது என்பதற்கு தெளிவான காரணம் சொல்லுகிறார்களா இந்த மத்திய மாநில அரசுகள். நம்மைவிட ஏழ்மை நாடுகளில் பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது.

பாகிஸ்தான் - 26
பங்களாதேஷ் - 22
கூயுபா - 19
நேபாள் - 34
பர்மா - 30
ஆப்கானிஸ்தான் - 36
கத்தார் - 30

பெட்ரோலுக்கு வரி மட்டுமே நாம் முப்பத்து மூன்று ரூபாய் கொடுக்கிறோம்.

மத்திய அரசு வரி - 11.80
சுங்க வரி - 9.75
மாநில வரி - 8.00
விற்பனை வரி - 4.00

மேலே இருப்பவற்றில் முதல் இரண்டும் மத்தியரசுக்கும் மற்ற இரண்டும் மாநில அரசுக்கும் செல்கிறது. இவ்வளவு வரிகட்டி நாம் எல்லாம் பெட்ரோல் போட்டு வேலைபார்த்து சம்பாதிப்போம், இவர்கள் வருட கடைசியில் திரும்பவும் வந்து வருமான வரி என்று மேலும் நம்மை சுரண்டிவிடுகிறார்கள். சம்பாதிக்க வேலைபார்க்க செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் போடவும் வரி கட்டுகிறோம், சம்பாதித்தபின்னும் வரி கட்டுகிறோம். இது இரட்டை வரி முறை அல்லவா??? இதை கேட்க யாருமே இல்லையா???

ஒரு நாட்டை நிர்வகிக்க வரி வருமானம் மிகவும் முக்கியமானதே, ஆனால் நம்மை விட பின் தங்கிய நாடுகள் வரிவிலக்கு அளித்து பெட்ரோல் கொடுக்கும் பொழுது, இந்தியாவில் ஏன் இந்த நிலை. சரி விட்டு தொலைவோம் என்றால் இந்த வரியை பற்றி விசாரிக்கும் பொழுது தான் இன்னும் ஒன்று தெரிந்தது. பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் முகவர்களாக இருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றி. அவர்களுக்கு இதில் என்ன கிடைக்கிறது லாபம் என்ற பெயரில் பார்த்தால் ஒரு லிட்டருக்கு 25 பைசாவில் இருந்து 35 பைசாவரை அனைத்து எரிபொருள் வகையிலும். ஒரு பெட்ரோல் நிலையம் வைத்து யாரும் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமை.

தமிழக மக்கள் மங்குனிகள் என்பதற்கு முழு அடைப்பு போராட்டமே ஒரு சிறந்த உதாரணம்.

ஜூலை 7ம் தேதி அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் என்பது, ஒரு அறவழி போராட்டம். இந்த அறவழி போராட்டம் தமிழகத்தில் கழுத்து நெறிக்கப்பட்டது ஆளும் திமுக அரசால் அல்ல, திருட்டு முண்டங்கள் கலகத்தால். இவர்கள் யார் ஒரு கட்சி மக்களிடம் பெட்ரோல் விலையேற்றத்திற்காக கடைகளை அடையுங்கள், பேருந்துகளை நிறுத்துங்கள் என்று கேட்டால். இந்த திமுக கட்சியினர் அறவழியில் போராடுபவர்களை அடித்து நொறுக்க.

காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது, கருணாநிதியின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்து கொண்டு இருந்ததா??? மதுரை திருமங்கலத்தில் கடை அடைக்க சொன்ன கம்யூனிஸ்ட் தோழர்களை காவல் துறை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அது தான் சட்டம் ஆனால் நடந்தது என்ன திருட்டு முண்டங்கள் கலகம் செய்கின்றன, காவல் துறை கைகட்டி வாய் போத்தி வேடிக்கை பார்க்கிறது. திண்டுக்கல்லில் சகோதரி பாலபாரதி ஆர்ப்பாட்டம் செய்தார், கத்தி கபடாவை எடுத்து கொண்டா சென்றார் இல்லையே கொடியையும், பேனர்களையும் கொண்டு தானே சென்றார். இவரை தடுத்து நிறுத்த வேண்டியது யார், ஆனால் அங்கு வந்து கலாட்டா செய்கிறது சொம்பு தூக்கும் கூட்டம்.

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் கலவரமானதுக்கு காரணம் யார்?? முதலிலேயே காவல் துறை வந்து இருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது. ஆனால் திருட்டு முண்டங்கள் வந்து குதிக்கிறது அவர்கள் முழு அடைப்பு நடத்தும் போது இவர்களுக்கு யார் தடுத்து நிறுத்தும் உரிமையை கொடுத்தார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரர்கள் என்றால் காவல் துறையை காதல் துறை என்று பெயர் மாற்றி அவர் வீட்டு வாசலிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

இவ்வளவு நடக்கிறது நாம் என்ன செய்கிறோம் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

1 comment:

  1. பண்ணாடையும் நாம்

    ReplyDelete