Saturday, June 26, 2010

பெட்ரோல் பூனைக்கு மணிகட்டுவது யார்??

மகாபாரதக் கதை அனைவரும் அறிந்ததே, நான் அதை நம்புவன் இல்லை, மகாபாரதம் என்பது கதைக்குள் கதையாக இருக்கும் ஒரு கதை அவ்வளவே. ஆனாலும் மகாபரத போருடன் இக்கதைகள் முடிவடியவில்லை அதன் பின்னும் தொடருகிறது. அப்படி ஒரு கதை தான ;இப்பொழுது நான் சொல்லுவது.

போர் முடிந்தது தருமன் அரசனாக பதவி ஏற்றான், காலம் சென்றது அதன் வழியே. ஒரு நாள் கிருஷ்ணன் தருமனைப் பார்க்க தருமனின் அரண்மணை வந்தான். தருமன் வரவேற்று உணவளித்தான், தன் ஆட்சியின் பெருமையை கண்ணனுக்கு காட்ட ஊர்வலம் போக அழைத்தான். கண்ணனும் தருமனும் ஊர் வலம் சென்றனார், ஊர் முழுவதும் ஆங்காங்கே தர்ம சத்திரங்கள், 24 மணி நேரமும் உலை கொதிக்கும் அடுப்புகள். மக்கள் அங்காங்கே தருமசத்திரத்தில் அமர்ந்து அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். ஆடை அணிகலன்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது.

அரண்மனை திரும்பியவுடன் தருமன் சொன்னான் பார்த்தீர்களா ஏன் நாட்டில் பசி பட்டினி என்பதில்லை, ஆடை அணிகலன்களிலில் இருந்து அனைத்தும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். கண்ணன் ஒன்றும் சொல்லாமல் தன் அரண்மனைக்கு தருமனை வரும்படி அழைப்பை வைத்துவிட்டு சென்றான்.

அடுத்த சில நாட்களிலேயே கண்ணன் கூப்பிட்டாரே போகாமல் இருந்தால் நல்ல இருக்காது என்று தருமன் கண்ணனின் நாட்டிற்குப் புறப்பட்டான். கண்ணன் தருமனை வரவேற்று உணவருந்த செய்து, நகர்வலத்திற்கு அழைத்து சென்றான் மக்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். அனைவரும் கடினமாக உழைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது தாண்டவமாடியது.

அரண்மனை வந்ததும் கண்ணன் சொன்னான் தருமா, இலவசங்கள் மக்களை மகிழ்சியாக வாழ வைக்காது. அப்படி இலவசங்களால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்கால மகிழ்ச்சி தான். உழைப்பு என்பது தான் மக்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி தரும். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றான்.

யோசித்து பாருங்கள் இன்று கிடைக்கும் இலவசங்கள் எல்லாம் நிரந்தரமானவையா. சிலர் சொல்லுவார்கள் ஏழை குழந்தைகள் பார்க்க தொலைக்காட்சி கிடைக்கிறது, இதுவே அவர்கள் உழைப்பால் வாங்குவது என்றால் 20வயதுக்கு மேல் தான் வாங்கமுடியும். சிறு குழந்தைகள் பொழுது போக்கே இல்லாமல் வாழ்கிறார்கள் என்று. ஆனால் தேவை இது இல்லை ஏழைமக்களும் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். விலைவாசி என்னும் பூதம் கட்டுபாட்டுக்குள் இருந்தால் தான் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதற்கு முதல் தேவை என்ன விலைவாசி கட்டுகடங்காமல் அனைத்து இடங்களிலும் அதிகரிக்க காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் ஒரு நாட்டின் இரத்த ஓட்டம் இதன் விலை அதிகரிக்க அதிகரிக்க அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா என்னும் திருநாட்டில் பெட்ரோல் விலை மாநிலத்திற்கு ஒரு விலை ஆனால் வரி விதிக்கும் முறை மட்டும் இந்தியா முழுவதும் ஒரே முறை (VAT). டெல்லியில் பெட்ரோல் 40 ரூபாய்க்கும் கீழே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ள இடமான சென்னையில் விலை 56ரூபாய். இதை இந்தியா முழுவதற்கும் ஒரே விலை என்று கொண்டு வந்தால் அனைவருக்கும் 50 ரூபாய்க்கு கொடுக்கலாமே. ஏன் இந்த விலை வித்தியாசம் மாநிலத்திற்கு மாநிலம். ஏன் பாண்டியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை ஆனால் அங்கு தமிழகத்தை விட 2ரூபாய் விலை குறைவு. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள மாநிலங்களிலிருந்து இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு போகும் செலவு அதிகமாகும், அந்த செலவையும் கணக்கிட்டால் டில்லி, புதுவை போன்ற இடங்களில் விலை அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் டில்லியிலும் புதுவையிலும் விலை குறைவாக உள்ளது.

சமீபத்திய விலையேற்றத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள், டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் சென்னை.

பெட்ரோல்
டெல்லி  - 47.93
மும்பாய்  - 52.50
கொல்கத்தா - 51.65
சென்னை  - 55.92

டீசல்
டெல்லி  - 38.10
மும்பாய்  - 39.88
கொல்கத்தா - 31.99
சென்னை  - 43

சமையல் எரிவாயு
டெல்லி  - 319.20
மும்பாய்  - 348.45
கொல்கத்தா - 363.70
சென்னை  - 350.95

ஏன் இந்த விலை வித்தியாசம் என்று கேட்டால் மாநில அரசுகள் கொடுக்கும் மானியம். இந்த மான்யங்களை நிறுத்திவிட்டு அனைத்து ஊர்களுக்கும் ஒரேவிலை என்று கொண்டு வந்தால் மான்யமாக அதாவது இலவசமாக கொடுக்கப்படும் பணவிரயத்தை தடுத்து சரிசமமான நிலை என்று வரும்.

இந்த பூனைக்கு யார் மணிகட்ட போகிறார்கள். கட்டயமாக காங்கிரஸ் அரசு இதை செய்யாது செய்தால் அவர்களின் வடமாநில ஓட்டு வங்கிகள் சரிந்து விடும். அனைத்து எதிர்கட்சிகளும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை. இலவசமாக கொடுத்தால் தான் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.

No comments:

Post a Comment