வினவு // பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது // வினவு
இராஜ ராஜனின் ஆட்சி கட்டிய கோயிலினால் பொற்காலம் என்று அழைக்கப்படுவதில்லை, ஆட்சிமுறை, மக்கள் எதிரி மன்னர்களின் பயமின்றி வாழ்ந்ததால் பொற்கால ஆட்சி என்றழைக்கப்படுகிறது. பிரமிடு, சீனச்சுவர் கட்டியதால் யாருடைய ஆட்சியையும் பொற்காலம் என்பதில்லை. குடவோலை முறையில் கிராம தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் நடந்தது இன்னும் நாட்டார்கள் வாழும் கிராமங்களில் நாடு எனப்படும் முறை பின்பற்ற பட்டு வருகிறது இன்று அது வாரிசுரிமையாகிவிட்டது ஆனால் இராஜ ராஜன் ஆட்சியில் அது வாரிசுரிமையால கிடைப்பதாக இருந்தது இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தலைவர்களாக இருந்தனர். ஒரு மன்னனின் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிர்வாகத்தில் இருந்தார்கள், மன்னன் என்பவன் சர்வாதிகாரி எனும் பொழுதும் மக்களால் அவர்களின் நிர்வாகியை தேர்ந்தெடுக்கவைத்தவரை ஆதிக்க சக்தி மன்னன் என்று கூறும் கூற்று மிகவும் முட்டாள்தனமானது.
வினவு // முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?
அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரியகோவில்!
ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. // வினவு
இராஜராஜன் புத்தவிகாரங்களின் பிரம்மாண்டத்தை பார்த்த பிறகு அதைவிட பெரிய கோயில்கள் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டு இருக்க கூடாது. தான் சார்ந்த சமயத்தின் மான்பை உயர்த்த எந்த ஒரு மனிதனும் விரும்புவான் அதையே இராஜராஜனும் செய்திருக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்கள். இராஜராஜனுக்கு முன்பாக நடுக்கல் வழிபாடு என்று எழுதியிருக்கிறீர்கள், பள்ளிபடை கோயில் என்பதை விட்டுவிட்டீர்களே. அதை அடுத்த கட்டுரையில் சேர்ப்பதாக உத்தேசமா.
நடுகல் - போரில் இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பபடுவது. அந்த வீரனை சிறு தெய்வமாக வழிபட்டோம்
பள்ளிபடை - இறந்த அரசனின் நினைவாக எழுப்பபடுவது இது சிறு கோயில் அமைப்புடனே இருக்கும்.
இவைதான் தமிழர்கள் வணங்கிய கடவுள்கள் என்று நீங்கள் கூறும் கூற்றை படித்த பிறகு குத்த வைத்து கும்மியடித்து சிரிப்பதா இல்லை எல்லாம் என் தலையெழுத்து என்று எண்ணி தலையிலடித்துக்கொள்ளுவதா என்று தெரியவில்லை.
வினவு // கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். // வினவு
இந்த கூற்றில் என்ன சொல்லவருகிறீர்கள், சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் சமணர்களை கழுவேற்றினார்கள் என்று இது உண்மையா இல்லையா எனபதற்கு ஆதாரங்கள் இல்லை. கோயில்களில் இருக்கும் ஓவியங்களை தவிர. அப்பர் பெருமான் சமணமதத்தை சார்ந்தவர் அவர் சைவத்தை தழுவியபொழுது கல்லில் அவரை கட்டி கடலில் போட்டது, தீ வைத்து கொழுத்த பார்த்ததும் இதே சமண மாண்புகள் தான் என்பதையும் எடுத்து சொல்லலாமே. அதை சொல்ல ஏன் உங்களால் முடியவில்லை. சமணர்களின் கொல்லாமை உங்களின் வாயை அடைத்துவிடுகிறதோ. அவர்களின் கொல்லாமை எனும் தத்துவத்தால் தான் கல்லை கட்டி விட்டெறிந்தார்களோ, அவர்கள் கொல்லவில்லை கல் தான் கொண்றுவிட்டது என்று சொல்ல வசதியாக இருக்குமென.
இன்னும் கழுவேற்றுதல் என்பது கேரளாவில் நடந்து கொண்டுள்ளது, உண்மையை தான் சொல்லுகிறேன் அய்யா வேண்டுமென்றால் சென்று விசாரித்து பாருங்கள் விளக்குவார்கள். கழுவேற்றுதல் என்றால் என்ன என்று வாதங்கள் நடைபெரும் பொழுது வாதத்தில் தோற்றவர் தன் மேல் தூண்டை எடுத்து பக்கத்தில் இருக்கும் மரக்கழியின் போட்டுவிட்டு செல்லுவாராம் அதன் பெயர் கழுவேற்றுதலாம். திராவிட ஓப்பிலக்கியத்தின் மூலம் இதையும் ஆராய்ந்து கழுவேறுதலுக்கு சரியான அர்த்தத்தை கண்டுபிடித்து சொல்லுங்க்ள் அய்யா.
வினவு // மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின. // வினவு
சாளுக்கியன் இவர் படையெடுத்து செல்லும் முன் தமிழகத்தில் படையெடுத்து வந்து பிடிக்கவில்லையா இங்கிருந்து பொண்ணும் பொருளும் கொண்டு செல்லவில்லையா. அப்படி அவர்கள் செய்யாமல் இருந்து இவர் மட்டும் தனது கோயிலை கட்டிமுடிக்க பணம் பொருள் வேண்டுமென்றா வம்படியாக சென்று வலுச்சண்டைக்கு இழுத்து கொள்ளையடித்து வந்தார். என்னவொரு கூற்று வாழ்க உங்கள் தமிழ் பற்று. உங்களுக்கு தேவையானது போல் தமிழை வளைக்கலாம் ஆனால் அதை மிகவும் அதிகமாக வளைத்தால் உடைந்துவிடும்.
வினவு // ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ // வினவு
காந்தளூர்சாலை என்பது திருவனந்தபுரம் அருகில் இருப்பது என்பதை பெரும்பாலான வரலாற்றாசிரியகள் ஒத்துக்கொண்டுள்ளனர். கலமறுத்தருளி என்பதற்க்கு என்ன அர்த்தம். கலம் என்றால் கப்பல் என்று பொருள் கொள்ளலாம் திருவனந்தபுரம் அருகே எங்கு துறைமுகம் உள்ளது. எங்கு சேரனுடைய கப்பல் படை இருந்தது அந்த கப்பல்படையை இராஜ ராஜன் முறியடித்தான். களமறுத்தருளி என்றால் கூட ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இங்கு கூறப்பட்டிருப்பது கலமறுத்தருளி இதன் அர்த்தம் என்ன. கலம் என்பது ஆயுதங்களையும் குறிக்கலாம். ஏன் சில வரலாற்றாசிரியர்கள் பார்வதிகேசவபுரம் கல்வி சாலை காந்தளூர்சாலையினை முன் மாதிரியாக கொண்டு நிறுவப்பட்டது என்கிறார்கள்.
இந்த பார்வதிகேசவபுரம் கல்விசாலை பார்ப்பனர்களுக்கானது என்பது மிகவும் தெள்ளதெளிவாக வரலாற்றில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பன கல்விசாலையை அழித்தொழித்தற்கு பெருமைதானே பட வேண்டும் தாங்கள். ஏன் இதை எதிர்க்கிறீர்கள் என்பது புரியவில்லை. பார்வதிகேசவபுரத்தை பற்றியும் காந்தளூரைப்பற்றியும் இன்னும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதன் பிறகு வந்து பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தியவன் இராஜராஜன் என்று வந்து சொன்னாலும் சொல்லுவீர்கள்.
வினவு // ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. // வினவு
இவைகளை நான் இல்லை என்று சொல்லவில்லை இதே காலத்தில் தான் ஆசாரகோவையும் தமிழுக்கு கிடைத்தது. திருக்குறளிலும் பார்ப்பனர்களை போற்றும் குறள்கள் உள்ளது ஆசாரகோவையை படித்தீர்கள் என்றால் மொத்தமாக தெரியும் எவன் ஆட்சிகாலத்தில் பார்ப்பனியம் வளர்ந்தது என்று.
யாப்பருங்கால விருத்தி
களப்பிர்ர் பிராமண்ருக்குத் தானங் கொடுத்து ஆதரரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.
பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருபுரி பெரும் அச்சுதர் கோவே’ என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது’
(களப்பிர்ர் காலத் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / குயிலோசை 2005/பக்72,73)
ஆசார கோவை
- கீழ்மக்கள் உடல் தொட்டுவிட்டால், குளித்துவிட வேண்டும் (ஆசாரக் கோவை – 10)
· பார்ப்பாரை இகழ்வோருக்கு ஐம்பூதமும் கெட்டுக் கேடு செய்யும் (15)
· கல்யாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்ய வேண்டும் (48)
· பெரியவர்கள் எதிரே – சிரிப்பு, கொட்டாவி, எச்சில் காறுதல், தும்மல் ஆகியவை செய்தால் பழி சேரும் (73)
· நான்குவேதங்களைக் கற்ற பிராமணரைத் தம் குருவாக ஏற்க வேண்டும் என்பதுதான், கற்றோர் அறிவாளர் முடிவு (61)
இப்படியான பிராமணர்களின் ஆசாரங்களைக் கொண்ட நூல்தான் ஆசாரக் கோவை. ’இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட்து என்பதைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி தெரிவிக்கிறது’ என்றார் முனைவர் ச.வே.சுப்ரமணியன். (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் / மெய்யப்பன் பதிப்பகம் 2007 / பக் 153)
· பார்ப்பாரை இகழ்வோருக்கு ஐம்பூதமும் கெட்டுக் கேடு செய்யும் (15)
· கல்யாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்ய வேண்டும் (48)
· பெரியவர்கள் எதிரே – சிரிப்பு, கொட்டாவி, எச்சில் காறுதல், தும்மல் ஆகியவை செய்தால் பழி சேரும் (73)
· நான்குவேதங்களைக் கற்ற பிராமணரைத் தம் குருவாக ஏற்க வேண்டும் என்பதுதான், கற்றோர் அறிவாளர் முடிவு (61)
இப்படியான பிராமணர்களின் ஆசாரங்களைக் கொண்ட நூல்தான் ஆசாரக் கோவை. ’இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட்து என்பதைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி தெரிவிக்கிறது’ என்றார் முனைவர் ச.வே.சுப்ரமணியன். (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் / மெய்யப்பன் பதிப்பகம் 2007 / பக் 153)
தமிழரின் பல்வேறு குலத்தவரை, ’தீண்ட்த்தகாதோர்’ என்றாக்கிய முதல் நூல் ஆசாரக்கோவைதான் என்பதை மறந்துவிடலாகாது. தீண்டாமைக்கான கருத்து வடிவத்தை ஆசாரக்கோவைக்கு முன், எந்த்த் தமிழ் நூலிலும் காண இயலாது. ஏனெனில், தமிழர்ளின் மரபில் சாதி இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.
இப்படி எழுதப்பட்ட களப்பிரர் காலம் பொற்காலம் என்ற தங்களின் கூற்று மிகமிக அருமை. உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை தொடருங்கள்.
சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்று கூறிக்கொண்டே இங்கு நீங்கள் சாதியை தூக்கிபிடிப்பதும் தெரிகிறது வேளார்களையும் பார்ப்பனர்களுடன் சேர்த்து அவர்களை தாக்கும் நோக்கத்துடனே எழுதப்பட்டதாக தோன்றுகிறது இந்த கட்டுரை. இடை இடையே மரூர் சோழனை இழுப்பதால் எந்த பயனும் இல்லை கருணாநிதியை தாக்க வேண்டும் என்பதற்காக சோழனை இழுத்தீர்களா இல்லை சோழனை தாக்கும் பொழுது கருணாவையும் துணைக்கு இழுத்தீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றை திரிக்க வேண்டியவர்கள் பலவாறாக திரித்து வைத்திருக்கிறார்கள் அதில் அனைத்தையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
அதைவிடுத்து மேலும் சுவையாக பல கதைகளை வடித்து வருங்கால தமிழ் சந்ததியை சந்தியில் நிற்க வைத்துவிடாதீர்கள்.
இந்த கட்டுரையை மேலும் தொடருகிறேன், இன்னும் பதிலளிக்க வேண்டிய கூற்றுகள் உள்ளன. இப்பொழுது இது போதுமானது இன்னும் தங்கள் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் தனிதனியாக பிரித்து அவைகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
ReplyDeleteநான் ஓட்டு போட்டுட்டேன்..
தங்கள் வருகைக்கு நன்றி, நமது வரலாறு ஒவ்வொருவரும் ஒரு நோக்குடன் திரித்து எழுதிவிட்டார்கள். அனைத்தையும் ஒற்றுமைபடுத்தி பார்க்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்..
ReplyDelete//அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
ReplyDeleteநான் ஓட்டு போட்டுட்டேன்..//
நன்றி சக்தி.. நானும் இதையே கேட்டுக் கொள்கிறேன் படித்துவிட்டு பிடித்திருந்தால் ஓட்டையும் போடவும்.
மிக்க நன்றி அரிகரன்... தொடருங்கள் துணை நிற்கிறோம்
ReplyDeleteஇராசராச சோழன்
தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி புரட்டு அவர்களே
ReplyDeleteஅருமையான விளக்கங்கள் மற்றும் வாதங்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteமிக்க நன்றி... தொடருங்கள் துணை நிற்கிறோம்.
ReplyDeleteநன்றி திரு. ராம்நாத் மற்றும் திரு. யோவ் அவர்களுக்கும்..
ReplyDeleteநண்பர் ஹரிஹரன் அவர்களுக்கு
ReplyDeleteதெளிவான பதிவு வினவு இந்த பதிவை ஆய்வு செய்யாமல் எழுதியிருக்கிறார் என்கிறீர்களா?
சரி உங்களுடைய ஆய்வுகளையும் முழுமையாக கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்
எது சரியானது என்பதை காய்தல் உவத்தல் இல்லாமல் முடிவெடுப்போம்
நன்றி நண்பரே
நன்றி ஹைதர் அலி,
ReplyDeleteஅனைவரும் ஆய்வு செய்து தான் எழுதுகிறார்கள், வரலாற்றை ஆராயும்பொழுது சிகப்பு நிறக்கண்ணாடியுடன் சிலரும், கருப்பு நிறகண்ணாடியுடன் சிலரும் ஆய்வு செய்து அவர்களின் தற்கால கருத்துகளையும் கோர்த்து எழுதுவது. பிற்கால சந்ததிக்கு சரியாக நம் வரலாற்றை கொண்டு சேர்க்கும் பொழுது அனைத்தும் கட்டுகதைகளாகவே தெரியும்..