Thursday, December 30, 2010

ஐந்து தலை நாகம் அருமையான ஒரு விளையாட்டு

Posted Image

கடந்த மே மாதம் 11ம் தேதி கர்நாடகவில் குக்கே என்ற ஊரில் உள்ள சுப்புரமணிய சுவாமி கோயில் ஐந்து தலை நாகம் வந்ததாகவும் அதை பார்த்ததாகவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பல பேர் அக்கம் பக்கம் ஊரில் இருந்தும் படை எடுத்தனர். எனக்கும் இதன் சம்பந்தமாக இமெயில் வந்தது நானும் பார்த்துவிட்டு இருக்கும் போலிருக்கு என்று நினைத்தேன். எனென்றால் அருகில் ஒருவர் நிற்பது போல் எல்லாம் படம் இருந்தது. சரி என்று வேலையை பார்க்க ஆரம்பித்தாகிவிட்டேன்.


ஆனால் நம்ம ஊரு மக்கள் எவ்வளவு பேர் படையெடுத்திருப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும் நமக்கு. நாம் யாரும் இது சாத்தியமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. சேசாங்க் எனும் பாம்பின் தலையில் தான் உலகமே இருக்கிறது என்று இந்த்துவ தத்துவத்தை நம்புபவர்கள் தானே நாம்..

Posted Image

Posted Image

Posted Image

இப்படி இருக்கும் பாம்பு எந்த தலையில் உள்ள மூளை செல்வதை கேட்டு நகரும். அதன் கண்களில் எந்த கண்ணில் தெரியும் காட்சியை வைத்து சுற்று உள்ளவற்றை உணரும் என்று கேள்விகள் எல்லாம் அப்புறம். ஆனால் இதை நம்பும் மக்களின் கண்மூடிதனமான மூளையை என்னவென்று சொல்வது அவர்களுக்கு மூளை இருக்கிறது என்றா இல்லை என்றா??

நேற்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் இதை பற்றி என்னிடம் கேட்டார். தெரியவில்லை நானும் அந்த போட்டோக்களை பார்த்தேன் நேரில் பார்த்தால் தான் தெரியும் என்றேன். அவருடை லேப்டாப்பை எடுத்து அவர் பாங்காங்க் சென்று வந்த படங்களை எடுத்தார் அங்கு ஒரு பாம்பு பண்ணையில் எடுக்கப்பட்ட படத்தை காட்டிவிட்டு அதன் பிறகு இந்த ஐந்து தலை நாகம் படத்தையும் அருகே வைத்து பார்த்தால் அப்படியே தெரிந்தது போலி படங்கள் என்று..

Posted Image

மேலே உள்ள படத்தில் பொதுவான மூன்று விசயங்களை கவனிக்கலாம், முதலில் இரும்பு படிகள், இரண்டாவதாக சுவற்றில் இருக்கும் வேலைப்பாடுகள், மூன்றாவதாக முத்தான கீழே இருக்கும் தண்ணீர் தொட்டியை மூடும் இரும்பு மூடி. இவை மூன்றும் ஒரே இடம் தான் படம் எடுக்கப்பட்ட இடம் என்பதை தெளிவாக சொல்லுகிறது. நம்ம மக்கள் எவ்வளவு விவரமாக ஒரு பண்ணையில் இருக்கும் பாம்பை போட்டோசாப் மூலமாக திருத்தி அமைத்து ஐந்து தலைநாகம் இருப்பதாக கதை கட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம் அந்த கோயிலுக்கு மக்கள் படையெடுத்து இருப்பார்கள், அந்த ஊரை நம்பி வாழ்ந்த மக்கள் பல வியாபரங்களை தொடங்கி நன்றாக காசு பார்த்து இருப்பார்கள்..

இந்த ஊரை பற்றி தெளிவாக விளக்கி ஒரு பதிவு, அதிலும் இந்த நாகத்தை பற்றி சொல்லி.. அட்ரா சக்கை

அசல் படங்கள் போலியாக உருவாக்கபட்ட படங்கள் வாழ்க கூகிள்..

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

இந்த படங்களில் இருந்து இன்னும் தெளிவாக தெரியும் என்ன விளையாட்டு என்று..

போட்டோசாப் மன்னர்களிடம் ஒரு வேண்டுகோள் இந்த மூளையை எதாவது ஆக்கபூர்வமான விசயத்துக்கு பயன்படுத்துங்கப்பா?? நாடாவது முன்னேறும்..

3 comments:

  1. Where is the shade of the snake.
    On the first picture the snake's body got shade from th sunlight.
    Where is the shadow for the head?
    It means photoshop done carelessly.

    ReplyDelete
  2. அய்யா ,
    எனக்கு முதலில் சந்தேகம் தோன்றியது ஆனால் நமது அண்ணாச்சி போஸ்ட் செய்திருப்பதால் நம்புவதுக்கு முன் அவரிடம் கேட்டால் உண்மை தெரியும் என்று கேட்டேன். தங்களுடைய விரிவான கட்டுரை மூலம் உண்மை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி...
    அந்தோணி சுதாகர்
    செபதையாபுரம்

    ReplyDelete
  3. அருமையான ஆராச்சி அழகு அண்னா.

    ReplyDelete