Sunday, January 9, 2011

சோழர் களப்பிரர் பார்ப்பனீயம்


களப்பிரர் காலம் இருண்டகாலம் என்று சிலர் சொல்லி சென்றுவிட்டார்கள், அதை வைத்துக்கொண்டு இன்று பலர் களப்பிரர்கள் காலம் தான் பொற்காலம், சோழர் காலம் தான் பார்ப்பனீயத்திற்கு கொடி பிடித்தது என்று கிளம்பிவிட்டார்கள். களப்பிரர்களுக்கு பின் சாம்ராஜ்யமாக இருந்த பல்லவர்களையும் விட்டுவிட்டார்கள் அவர்கள் வடித்த அர்ஜுனன் தபசு என்ற சிற்ப குவியலையும் விட்டுவிட்டார்கள்.

எனென்றால் தமிழனை தமிழன் தானே காலை வாறிவிடவேண்டும், கிடைத்தான் ஒரு கேணைப்பயல் என்ற கணக்காக இராஜராஜனை சந்தியில் இழுத்துவிடுகிறார்கள் இதற்காக. பார்ப்பனர்கள் என்பவர்கள் அப்புறம் எப்பொழுது தான் வந்தார்கள் நமக்குள்ளே கேள்வி எழும். அதற்கும் விடை களப்பிரர்கள் பார்ப்பனர்களின் அடாவடிகளை நிறுத்தினார்கள் என்று சொல்லும் வேள்விக்குடி செப்பேட்டிலேயே இதற்கான பதில் இருக்கிறது.

வேள்விகுடி செப்பேட்டின் சாரம் இது தான். கி.பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னனிடம் ஒரு பார்ப்பனர் தன்னுடைய குறையாக களப்பிரர் காலத்தில் பிரம்மோதய நிலங்கள் எங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டுவிட்டன அவைகளை திரும்ப வழங்க ஆவன செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதை ஏற்று பாண்டிய மன்னன் பிரம்மோதய நிலங்களை திரும்பவும் பார்ப்பனர்களுக்கு வழங்குகிறார் என்று சொல்லுகிறது செப்பேடு.

அதாவது பார்ப்பனர்களை ஒழித்தார்கள் என்று சொல்லப்படும் களப்பிரர்கள் ஆண்டகாலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை, இந்த செப்பேடு எழுதப்பட்டது எட்டாம் நூற்றாண்டு. அதாவது 200 வருடங்களுக்கு முன் பிடுங்கப்பட்டது என்று கூறுகிறார். இறையிலி நிலங்கள் பிடுங்கப்பட்டன என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் அது இந்த செப்பேடு மட்டுமே. மேலும் சங்க காலத்திலேயே இந்த பிரம்மோதய நிலங்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அதாவது களப்பிரர் காலத்திற்கு முன்பாகவே அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது என்றால் அது சங்ககாலத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதைதான் களப்பிரர்கள் பிடுங்கிவிட்டனர் என்ற கூற்று உள்ளது. அப்படி என்றால் சங்ககாலத்தில் கொடுக்கப்பட்ட ஒரு நிலத்தை அதனால் உருவாகிய பிரச்சனைகள அனைத்தையும் இராஜராஜன் மேல் ஏன் திணிக்க வேண்டும்.



பூலாங்குறிச்சி கல்வெட்டில் இதே களப்பிர மன்னர்களில் ஒருவர் பிரம்மோதய கிழார்களை ஆதரித்ததாக கூற்றுகள் இருக்கின்றன. இவர்கள் கூறும் செப்பேடு 8ம் நூற்றாண்டு ஆனால் களப்பிரர்கள் காலமான சம காலத்தில் 5ம் நூற்றாண்டு கல்வெட்டில் களப்பிரர்கள் பிராமணர்களுக்கு பிரம்மோதய நிலங்கள் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது ஆனால் களப்பிரர்கள் நல்லவர்கள், இராஜராஜன் கெட்டவன். ஏன் மதுரையில் இருக்கும் உலகத்தியன் குளத்தின் அருகில் இருந்த ஆசிவகப்பள்ளியினுள் பெருமாள் கோயிலை கட்டியவர்கள் களப்பிரர்கள் ஆனால் இவர்கள் உத்தமர்கள்...

நான் களப்பிரரை கன்னடன் என்றோ தெலுங்கன் என்றோ குற்றம் சாட்டவில்லை, எருமையூரும் (இன்றைய மைசூர்) தமிழன் ஆண்ட ஒரு ஊரே பாரியின் நண்பன் கபிலன் பாரியின் மரணத்திற்கு பின் பாரியின் பெண்களான அங்கவை சங்கவை கூட்டிகொண்டு சென்று காவிரி நதியின் அருகில் 49 தலைமுறையாக வசிக்கும் தமிழ் மன்னர்களை சந்தித்தாக எழுதியுள்ளார்..

`இவர் யார்?` என்குவை ஆயின்,
இவரே ஊருடன் இரவலர்க்கு
அருளித் தேருடன் முல்லைக்கு
ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின்
கோமான் நெடுமாப் பாரி மகளிர்;
யானே தந்தை தோழன்;
இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள்
தோன்றிச் செம்புபுனைந்து
இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை
வந்த வேளிருள் வேளே!
விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன்
ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர இவரைக் கொண்மதி;
வான்கவித்து இருங்கடல் உடுத்தஇவ்
வையகத்து அருந்திறல் பொன்படு
மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

எருமையூர் என்று அழைக்கப்பட்டடு மைசூர் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்பாடலின் மூலமாக. மகிசம் என்பது எருமையை குறிக்கும் அதிலிருந்தே மைசூர் என்ற பெயர் வந்திருக்கலாம்.

சித்தன்ன வாசல் கல்வெட்டில் உள்ள ஒரு வரி மேலும் எருமையூரை பற்றி சொல்லும்.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் என்று சொல்லுபவர்களின் கூற்றான கர்நாடகவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னதை எடுத்துக்கொண்டால் கூட அவர்களும் தமிழர்களே.

இதே களப்பிரர் காலத்தில் தான் பல்லவர்களும் வட தமிழகத்தில் தோன்றி மேலே வர ஆரம்பித்தனர். இந்த பல்லவர்களின் நாணயங்களில் இருந்து மாமல்லபுரம் கோயில் வரை எங்கும் சமஸ்கிருதம் நிறைந்திருக்கிறது இதை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக இவர்கள் குற்றம் சாட்டுவது இராஜராஜனை. என்ன காரணம் என்றால் களப்பிரர் ஒழித்த பிரம்மோதய நிலங்களை இராஜராஜன் கொடுத்ததாக. ஏன் பல்லவன் நாணயத்திலிருந்து அனைத்திலும் வடமொழி வந்துவிட்டது. நரசிம்மன் என்று என்று சொல்லும் பொழுதே வைணவமும் தலைத்தோங்கிவிட்டது எனும்பொழுது எப்படி இவர்கள் இராஜராஜனை குற்றம் கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

பல்லவனும், களப்பிரர்களில் சில மன்னர் பிரம்மோதய நிலங்களை வழங்கியுள்ளனர் அவர்களும் பல நூற்றாண்டுகளாக செய்த வேலையை இராஜராஜனும் செய்திருக்க கூடாதா, பல்லவர்கள் தங்களை பரத்வாஜ குலத்தில் தோன்றியவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். மேலும் தெலுங்கையும் சமஸ்கிருதத்தையுமே ஆட்சிமொழியாக கொண்டு ஆட்சி புரிந்தனர் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இராஜராஜன் மேல் மட்டும் ஏன் இந்த காழ்புணர்ச்சி என்பது புரியாத புதிர் இல்லை.

அடுத்த குற்றசாட்டு இராஜராஜன் மேல் ஆதிக்க வாதி அடுத்த நாடுகளை அபகரித்தான் என்பது. முதலாம் சோழர்கள் ஆண்டபகுதிகள் குறுகி விஜயாலயச்சோழர்கள் ஆட்சியை ஆரம்பிக்கும் முன் குறுநில மன்னர்களாக இருந்தனர் ஏன் அடுத்த சாளுக்கிய இராட்டிரகூட மன்னர்களின் ஆக்கிரமிப்பினால் தானே. ஏன் கரிகாலன் காலத்து சோழ சாம்ராஜ்யம் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த விஜயாலயசோழர்களுக்கு வரகூடாதா அப்படி வந்தால் தவறா. மேலும் கரிகாலன் போல் கங்கைவரை செல்லவில்லை இராஜராஜன் ஆனால் அவன் கைப்பற்றிய பகுதிகளை பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும். கடாரம் வரை வென்றான் அதாவது கடற்கரையோர பகுதிகளை வென்றிருக்கிறான் எதற்காக கடல் வணிகத்தை பெருக்குவதற்காக ஏன் இருந்து இருக்க கூடாது.

தன் நாட்டில் விளையும் பொருள்களை வணிகம் செய்ய ஒரு சூமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையே அதற்காக செய்த போர்கள் இவர்களுக்கு ஆதிக்கத்தின் உச்சகட்டமாக தெரிகிறது. சரி போர் செய்து அடுத்த நாட்டை எக்காரணத்திற்காக பிடித்தாலும் அது ஆதிக்கமே என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இவர்களின் வாதத்தை. ஆனால் தமிழில் ஒரு கூற்று உண்டு "நிர்வாணமாக திரியும் ஒரு ஊரில் கோமணம் கட்டியவன் கோமாளி" அன்றைய ஆட்சிகாலத்தில் மற்ற அரசுகள் அடுத்தவர் மேல் படையெடுத்தது போல் இவரும் படைஎடுத்துவிட்டாரப்பா. நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்திருந்தால் இவர் கோமணம் கட்டியிருக்க மாட்டார் அம்மணமாகவே திரிந்து இருப்பார்.

அடுத்த குற்றசாட்டு தேவதாசி முறை தமிழிக்கியங்கள் அல்லது கல்வெட்டுகள் எதுவும் தேவதாசி என்று கூறுவதில்லை ஆனால் தேவரடியார்கள் என்று கூற்று உள்ளது. அடியார்கள் என்பது என்றும் தமிழகத்தில் மிக சிறந்த மனிதர்களை இன்று வரை குறிப்பிடும் ஓர் சொல். ஆனால் தாசி எனும் சொல்லும் விஜயநகர பேரரசில் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் முறை. இங்கிருந்த தேவரடியாரை தேவதாசி என்று மாற்றியவர்கள் ஏன் விஜயநகர பேரரசாக இருக்க கூடாது. அனைத்து இவர் தவறு என்று சொல்ல பிரம்பாலடித்தான் கோயிலின் அடிமையாக்கினான் என்று எத்தனை கூற்றுகள்.

பிரம்மராயரே ராஜராஜனின் தளபதி எனும் கூற்று பிரம்மராயன் இராணுவமந்திரியாகவே இருந்தான் ஒழிய மாதண்ட நாயகனாக எந்த படைக்கும் தலைமை தாங்கி சென்றதாக எந்த கூற்றும் இல்லை. சோழப்படையில் மாதண்டநாயகன் தான் படையின் தளபதி.

நான் இங்கு கூறியது அனைத்தும் இராஜராஜானை காப்பாற்றுவதற்காக அல்ல, ராஜராஜனும் தவறுகள் செய்துள்ளார் மறுக்க முடியாது. ஆனால் வரலாற்றை அவர் தேவைக்கு ஏற்றார்போல் வளைப்பது தான் இன்றைய பிரச்சனை. வரலாற்றின் மறுபக்கமும் வெளியில் தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்.

13 comments:

  1. தெளிவான விளக்கத்துடன் அறிதலுக்கு வேண்டிய ஒரு சிறந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. நன்றி சங்கர், தாங்கள் கூறியபடி Word Verificationஐ நீக்கிவிட்டேன்.

    ReplyDelete
  3. அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  4. ஆகா நிறைய தகவல்கள்.களப்பிரர் பற்றி சிங்கப்பூர் மணற்கேனி கட்டுரை போட்டிக்கு கட்டுரை அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  5. அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ளது. ஆயினும், இது எந்தத் தரப்பிற்கு எதிர்வாதமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை? பெரியார்திக காரங்களையா? வினவு காரங்களையா? ஆர் எஸ் எஸ் காரங்களையா?

    ReplyDelete
  6. நன்றி அமுதா கிருஷ்ணன் அவர்களே,,

    ReplyDelete
  7. நன்றி திருவாளர் யோவ். அவர்களே..

    நன்றி சொல்ல கூட முடியவில்லை.. இப்படி ஒரு பெயரை வைத்திருக்கும்பொழுது..

    ReplyDelete
  8. //அன்பரே, இக்கட்டுரை சொல்லும் தர்க்கம் சரியாக உள்ளது. ஆயினும், இது எந்தத் தரப்பிற்கு எதிர்வாதமாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை? பெரியார்திக காரங்களையா? வினவு காரங்களையா? ஆர் எஸ் எஸ் காரங்களையா?//

    பழமை பேசாதே என்று சொல்லுபவர்களுக்கும், நமது பழமையை அவர்கள் பார்வையில் நம் மீது திணிப்பவர்களுக்கும் திருவாளர் அனானி அவர்களே..

    ReplyDelete
  9. திரு. ஹரிஹரன் அவர்களே ! தங்களின் கட்டுரை பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமது கட்டுரையை தமிழ்ச்சரத்திலும் மீள்பதிவு செய்துள்ளோம். தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையாயின் எமக்கு அறியத்தரவும், நீக்க வழிவகை செய்கிறோம். நன்றிகள். மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நானும் பார்த்தேன், நன்றி..

    ReplyDelete
  11. மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
    (களப்பிரர்கள் காலம் கிபி 3-6)
    http://suraavali.blogspot.com/2010/08/iii-3-6.html

    ReplyDelete
  12. துல்லியமான ஆதாரப்பூர்வமான கருத்துக்கள் உண்மையைச்சொல்லும் ஆர்வமுள்ளவர் தாங்கள் மேலும் நிறைய வரலாற்றை எழுத வேண்டுகிறோம்.

    ReplyDelete
  13. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, அதைக் கொச்சைப்படுத்தி, தமிழரசர்களை வந்தேறிகளாக்கவேன்றே ஒரு கூட்டம் இயங்கி வருகிறது. அவர்களை எதிர்த்து, அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தத வேண்டியது, உங்களைப் போன்ற தமிழர்களின் கடமை. .

    ReplyDelete